என்னை சிரிப்பால் சிதைத்தவளே 2

Advertisement

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer

அத்தியாயம் 2

என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

மணி மதியம் 1.30 ..... வசந்தி தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார்.

"வைதேகி.... இந்த ரோல லாஸ்ட்டா (last) லேடீஸ் டாய்லெட் இருக்கும். அங்க போய் டீசர்ட் ஷார்ட்ஸ் மாத்திக்கிட்டு கீழ வெயிட் பண்ணுமா. நான் வரேன்".

அவள் தலையை ஆட்டிவிட்டு டாய்லெட்டினை நோக்கி சென்றாள். ரெடியாகிவிட்டு கீழே சென்று காத்திருந்த சிறிது நேரத்திற்கெல்லாம் வசந்தி வந்துவிட்டார்.

அவர்கள் நேரே சென்ற இடம் பாஸ்கெட்பால் கோர்ட். அங்கு சுமார் முப்பது பேர்கிட்ட செலெக்ஷனிற்காக வந்திருந்தனர்.

"சரிமா... நீ போய் அவங்க கூட வெயிட் பண்ணு. ஷார்ப்பா 2 மணிக்கு கேம் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க… all the best…. for your game.” என்று கூறிவிட்டு அங்கிருந்த மற்ற ஆசிரியர்களுடன் இணைந்து கொண்டார்.

வைதேகி தன் முன்னால் இருந்த பாஸ்கெட்பால் கோர்ட்டினையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதிற்குள் ஏனென்று தெரியாத மகிழ்ச்சி பிரவாகமாக ஊற்றெடுத்து கொண்டிருந்தது. இத்தனை நேரமும் அவளுள் இருந்த பய உணர்வு இருந்த இடம் காணாமல் சென்று விட்டிருந்தது.

அவளுக்கு பாஸ்கெட்பால் என்றால் உயிர். அவள் விளையாட ஆரம்பித்து விட்டால் சுற்றி நடப்பது எதுவும் அவளுடைய கவனத்தில் பதியாது. அத்தனை ஈடுபாட்டுடன் விளையாடுவாள். அதன் மேல் ஒரு வெறித்தனமான காதல் என்று கூட சொல்லலாம்.
"வைதேகி.... வைதேகி..." என்று மைக்கில் அவளுடைய பெயர் ஒளித்து கொண்டிருந்தது.


அப்பொழுதுதான் அவள் தன்னுணர்வு பெற்று சுற்றி பார்த்தாள்.
அங்கிருந்த ஆசிரியர்கள் செலெக்ஷனிற்காக வந்திருந்த மாணவிகளை தனி தனி குழுவாக பிரித்து கொண்டிருந்தனர்.
“mam, I’m வைதேகி".


“They are your team members….go and join them.... (நீ அந்த டீம்ல போய் ஜாயின் பண்ணிக்கோ)” என்று அங்கிருந்த ஆசிரியர்களில் ஒருவர் வைதேகியிடம் கூறினார்.

ஒவ்வொரு குழுவிலும் ஐந்து பேர் என்று வந்திருந்தவர்களை பிரித்திருந்தனர். அந்த ஐந்து பேரிலும் (1-ball controller, 2-followers, 2- zero players) என்று பிரித்திருந்தனர். வைதேகி பாஸ்கெட்பாலில் பால் கண்ட்ரோலராக இருந்தாள்.

பாஸ்கெட்பால் கேம் ஆரம்பம் ஆனது. ஒவ்வொரு கேமும் நான்கு குவாட்டர்சினை கொண்டிருந்தது. முதல் இரண்டு குவாட்டர்சில் எதிர் அணியினர் இருந்த கூடையில் பந்தினை போட வேண்டும். அடுத்த இரண்டு குவாட்டர்சில் தன்னுடைய அணியில் இருந்த கூடையில் பந்தினை போட வேண்டும். ஒவ்வொரு குவாட்டர்ஸிற்கு இடையிலும் பத்து அல்லது பதினைந்து நிமிட இடைவெளி கொடுத்தனர்.

வீட்டிற்கு செல்லாமல் ஹாஸ்டெலில் தங்கியிருந்த சில மாணவர்கள் மற்றும் மாணவிகளும் விளையாட்டினை பார்க்க வந்திருந்தனர்.

கேம் ஆரம்பித்த நிமிடத்திலிருந்து முடியும் வரையும் அங்கிருந்த மாணவர்களின் கைதட்டலும், விசில் சத்தமும் காதினை கிழித்து கொண்டிருந்தது.

பாஸ்கெட்பால் கோர்ட்டினில் விளையாடி கொண்டிருந்தவர்களும் ஒருத்தருக்கொருத்தர் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று தங்களுடைய திறமைகளை காட்டி கொண்டிருந்தனர்.

ஒருவழியாக கேமும் முடிவு பெற்றது. அடுத்து வந்த அரை மணி நேரமும் விளையாட்டு மைதானத்தில் குழுமியிருந்த ஆசிரியர்கள் தங்களுக்குள் ஆலோசித்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில், அங்கிருந்த ஆசிரியர்களில் ஒருவர்....மைக்கிற்கு அருகில் சென்றார்.

“Hello students…..totally 30 members are participated for basketball game selection. From that, we are selected 10 members. 2-ball controller, 4-followers and 4-zero players. The names are…..” என்று அந்த கேமில் செலக்ட்டான பெயர்களை படிக்க ஆரம்பித்தார்.

வைதேகிக்கு அவர் பேசியதில் பாதி புரியவில்லை. தன் பக்கத்திலிருந்த பெண்ணிடம் தான் கேட்டு கொண்டிருந்தாள்.

ஆசிரியர் ஒவ்வொரு பேராக படிக்க ஆரம்பித்தார். அதில் பால் கண்ட்ரோலர்க்கு நேராக இவள் பெயரும் வந்தது.

ஆசிரியர் அனைத்து பெயர்களையும் படித்து முடித்தவுடன், செலக்ட் ஆகாதவர்கள் வருத்தமாகவும், செலக்ட் ஆனவர்கள் துள்ளி குதித்தும் அவரவர் மனநிலயை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர்.

வைதேகி அவர்களை போல் எதுவும் செய்யவில்லை. ஏனெனில் அவளுக்கு இங்கு வரும்போதே தெரியும் தான் செலக்ட் ஆகி விடுவோம் என்று. அது அவளுடைய உலகம்....அதில் எப்படி வெற்றிபெறாமல் இருப்பாள். அதனால் அவளுக்கு அதனை பற்றியெல்லாம் எதுவும் கவலை இருக்கவில்லை

அவளுடைய கவலையெல்லாம் இனி தான் சென்னையில் எப்படி இருக்க போகிறோம் என்பதிலேயே இருந்தது. அதுவும் அவளுடைய மனம்..... என்ன இங்க ஆவுன்னா இங்கிலீஷிலேயே பேசிக்குராங்களே....என்று திரும்பவும் அவளை விட்டு சென்ற பயம் பிடித்துகொண்டது.

அதன் பிறகு ஆசிரியர்கள், செலக்ட் ஆனவர்களை ஷேர்மனிடம் (chairman) கூட்டி சென்றனர்.

அதன்பிறகு வேலைகள் மளமள வென்று நடந்தது. அவர்கள் தங்குவதற்கு ஹாஸ்டல், எந்த டிபார்ட்மென்ட் சூஸ் பண்ணுகிறார்கள் முதற்கொண்டு அனைத்தும் முடிந்துவிட்டது.
ஆம் முடிந்தேவிட்டது....


வைதேகி தான் கொண்டு வந்திருந்த பாக்கினுடன்(Bag) ஹாஸ்டெல்லில் அவளுக்கென்று கொடுத்திருந்த ரூமில் இருந்தாள்.

வைதேகி B.E (EEE)…. ஆம்.... அவளுடைய 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு EEE கொடுத்திருந்தனர். இன்னும் ஒரு வாரத்தில் காலேஜ் ஆரம்பிக்க போகின்றது என்றும் கூறி இருந்தனர்.

இவை அனைத்தையும் தன் மனதினில் மறுபடியும் ஓட்டி கொண்டிருந்தவள்...... தன்னால் இங்கு தங்க முடியாது என்று முடிவெடுத்து....தன் அன்னைக்கு போனில் அழைத்தாள்.
“அம்மா..... என்னால இங்க இருக்க முடியும்னு தோணலமா.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு ....நான் அங்க கிளம்பி வரேன்...” என்று அழ ஆரம்பித்து விட்டாள்.


மறுமுனையில் இருந்த ஜெயந்திக்கு, வைதேகி பேசுவது ஒன்றுமே புரியவில்லை....

அவரே ஒரு முடிவெடுத்து "வைதேகி... என்னமா.... ஏன் அழுவுற.... செலக்ட் ஆகலனா பரவால விடுமா.... நம்ம ஊர்ல இருக்குற காலேஜ்ல சேந்துக்கோ" என்று கூறியவரின் மனம் தன் மகள் அழுவதை கண்டு பதறி கொண்டிருந்தது.

வைதேகி அழுகையினுடே.." அது இல்லமா செலெக்ட்லான் ஆகிட்டேன். இங்க தனியா இருக்க போறத நெனச்சா ரொம்ப பயமா இருக்குமா.... அதான்.."

“இதுக்கு போயா அழகுற..... ஸ்கூல் படிக்கும் போது உன்னுடைய விளையாட்டுகாக வெளி ஊர்லாம் போயிருக்க மாதிரி நெனச்சிக்கோ….. அதுமட்டும் இல்லமா, நா… நீ போனதுக்கு அப்புறம் நம்ம ஊர்ல நெறைய பேர்கிட்ட விசாரிச்சேன். அந்த காலேஜ்ல கிடைக்கறதுலான் ரொம்ப கஷ்டம்னு சொன்னாங்க…..
அதனால இத வேஸ்ட் பண்ணிடாதடா.... கடவுள் கொடுத்த வரமா ஏத்துக்கோ”


இதை அனைத்தையும் கேட்ட வைதேகியின் உள்ளம் கொஞ்சம் தெளிவுற்றிருந்தது. எனினும் அவளின் மனதின் ஓரம்.... காலையில் தன்னுடன் பேசிய அன்னையா இது.... என்று நினைத்து கொண்டது.
"சரிமா..... எனக்கு டிரஸ்லாம் வேணும்... என்ன பண்றது....அங்க வரட்டுமா"


வைதேகி அடுத்து பேசிய வார்த்தையிலிருந்தே.... அவள் அங்கு தங்க சம்மதித்து விட்டாள் என்று அறிந்த திருப்தியுடன், “வேணாம்மா நம்ம பக்கத்து வீட்டு வனஜா அக்கா... அவங்க பையன பாக்க சென்னைக்கு ரெண்டு நாள்ல போவாங்கலாம்... அவங்ககிட்ட கொடுத்து விடுறேன்” என்று கூறிவிட்டு... இன்னும் சற்று நேரம் அவளுடன் போன் பேசிவிட்டு வைத்தார்.

வைதேகி, கவிதாவிடமும் தான் சேர்ந்த விஷயத்தை கூறினாள்.
அவளுக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சி.


நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது... மாலையானால் பயிற்சியும் எடுத்து கொண்டிருந்தாள். தான் காலேஜ் போக வேண்டிய நாளும் வந்தது.

விடிந்தால் காலேஜ்......



என்னை சிரிப்பால் சிதைத்தவள்

தொடரும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top