என்னுள் சங்கீதமாய் நீ 8

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 8



தங்கள் “காதல் தெரிந்தவுடன்” இவர்கள் தன்னிடம் தானே கேட்டிருக்க வேண்டும்…?

அதை விட்டு.. இவர்கள் எப்படி பார்ம் ஹவுஸிற்கு சென்று ஆகாஷிடம் பேசலாம்…? என நடந்த எல்லாவற்றையும் விசாரித்து தெரிந்து கொண்டு கோவமாகவே ஆச்சார்யாவை பார்க்க வந்தாள் ஹர்ஷினி.

“ஹர்ஷினி மேம் வந்திருக்காங்க…!” ஆச்சார்யாவின் கார்ட்ஸ் சொல்லவும்

இப்போத்தானே வீட்ல இருந்து வந்தோம்., ஏன் வீட்ல பேசாம இங்க ஹோட்டல்ல…? என யோசித்தவாறே.. வர சொல்லவும் உள்ளே வந்த ஹர்ஷினி எடுத்த எடுப்பிலே

“எங்க வீடு எப்படி இருக்கு..?” என தைரியமாக நேரடியாகவே கேட்டு விட்டாள்.

அவள் தீடிரென்று கேட்கவும் ஓரு நொடி புரியாமல் யோசித்த ஆச்சார்யா...!

பின்பே அவர்கள் இருவரும் வாங்கிய "பார்ம் ஹவுசை" பற்றி தான் கேட்கிறாள் என புரிந்தவுடன்..,

அவளின் தைரியத்தை கண்டு முதலில் மெலிதாக பிரமித்தாலும்..! பின் “என் பேத்தியாச்சே..!” என உள்ளுக்குள் மெச்சியவர்

வெளியே சாதாரணமாக "ம்ம் ரொம்ப நல்லாயிருக்கு”

"அப்படி இருக்க முடியாதே…? உங்களுக்கு புடிக்காதது ஏதாவது இருக்கணுமே..?" என

பார்ம் ஹவுசை கேட்பது போல்.. மறைமுகமாக “ஜெய் ஆகாஷ” பற்றி ஹர்ஷினி கேட்கவும் புரிந்து கொண்ட ஆச்சார்யா

"என் பேத்தி செலெக்ஷன்.. எனக்கு பிடிக்காமல் போகுமா என்ன…? ஆனா...?" என இழுக்கவும்

"அதானே பார்த்தேன்…! அடுத்து அவர் எங்கு வருவார்..!" என புரிந்ததால் கடுப்பானாள் ஹர்ஷினி

"சில விஷயங்கள் தவிர…" மிகுந்த வெறுப்போடு ஆச்சார்யா சொல்லவும்...

"சில விஷயம் இல்ல…, ஒரு விஷயம் மட்டும் தானே..?" அழுத்தமாக ஹர்ஷினி

"ஆமா.., ஒரு விஷயம் மட்டும் தான்.., அதை விட்டுட்டா போதும்.." ஆச்சார்யாவும் நேரடியாகவே கேட்கவும்

கொதித்து போன ஹர்ஷினி "யார் சொன்னாலும்ம்….! அதை கண்டிப்பா விட முடியாதே…?" மிக உறுதியான குரலில்

"அப்படி சொல்ல முடியாதே…? நமக்கு உயிரான ஒரு ஒன்னு..!” நமக்கு வேணும்ன்னு நினைச்சா… கண்டிப்பா விட்டுடலாம்.. அதுக்கு யாரும்ம்ம்….! சொல்லணும்ன்னு தேவையில்ல ஹர்ஷினி.." ஆச்சார்யாவும் மிகவும் உறுதியாகவே சொன்னார்.

"என்ன மீறி அப்படி விட யாராலுமே...! முடியாதே..?" அவளின் அழுத்தத்தில் "ஆகாஷுமே டான்ஸை விட நினைத்தாலும்...? நான் விட.. விடமாட்டேன்" என்ற பொருளே இருந்தது

அதை புரிந்து கொண்ட ஆச்சார்யா.., "நமக்கு புடிச்சவங்களுக்காக.. நாம சிலதை விடறதுல என்ன தப்பு ஹர்ஷினி...? ஏன் எனக்காக நீ விடலை..?"

அதனால தான்… "அப்படி விட்டதனால நான் அனுபவிச்ச அந்த கொடுமையான வலியை எப்படி என் ஜெய்க்கும் நான் கொடுப்பேன்..? அது இந்த ஜென்மத்துல மட்டுமில்ல…? எந்த ஜென்மத்திலும் நடக்காது…?

சோ.. இனிமேல் இதை பத்தி நீங்க எப்பவுமே பேச கூடாது..? ஏன் நினைக்கவே கூடாது…!" கோவத்தில் கத்தியே விட்டாள் ஹர்ஷினி.

ரிலாக்ஸ் ஹர்ஷி...! பொறுமையா பேசலாம்...

"பொறுமையா பேச ஒண்ணுமில்ல.." ஆத்திரம் குறையாமல் ஹர்ஷினி சொல்லவும்

"பேச இருக்கா..? இல்லையான்னு..? நான்.. நீ.. மட்டுமே முடிவு பண்ண முடியாதே ஹர்ஷினி…?" ஆச்சார்யா அர்த்தம் பொதிந்த பார்வையுடன் கேட்கவும்

"உங்க வெறுப்புக்குக்காக.. உங்க பேத்தி டான்ஸை விட்ட மாதிரி..., ஜெய்யும் டான்ஸை விடணும்ன்னு எந்த அவசியமும் இல்ல..? அவருக்கு நீங்க யாராவும் இருந்தாத்தானே கேக்க முடியும்…?"

"சோ.. நீங்க நினைக்கறது எப்பவும் நடக்காது...? நான் நடக்கவும் விட மாட்டேன்.." உறுதியுடன் சொல்லிவிட்டு ஹர்ஷினி கிளம்பவும்.

அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்ட ஆச்சார்யாக்கு மனதுக்குள் எல்லையில்லா வருத்தமே..., அப்போ நான்...?

"ஹர்ஷினி உன்கிட்ட ஒன்னு கேட்கணும்…? ஆனா எனக்கு கண்டிப்பா பதில் வேணாம்.." இறுக்கமான முகத்துடனும் ஆச்சார்யா சொல்லவும்

ஹர்ஷினி கோவம் குறையாமல் நின்றபடி கேள்வியாக அவரை பார்த்தாள்.

"9 வருஷ காதல் ஹர்ஷி...

எங்க கிட்ட சொல்லாம உன்னால எப்படி இருக்க முடிஞ்சது..?

தெரிஞ்சப்போ.. என் பேத்தியா இப்படின்னு...? என்னால நம்பவே முடியல.." மிகுந்த வேதனையான குரலில் ஆச்சார்யா கேட்கவும்

அவரின் கேள்வியில் அவரின் வேதனையை புரிந்து கொண்ட ஹர்ஷினி கலங்கி போய் நின்று விட்டாள்.

"தான் செய்தது மிக பெரிய தவறு தானே…? தங்கள் காதல் அவருக்கு தெரிந்தவுடன் அவரின் மனம் என்ன பாடுபடும்" என யோசிக்காமல் போனோமே...?

ஆகாஷ பற்றி மட்டும் யோசித்த நான்.., அவரை பற்றி நினைக்கவே இல்லையே…?

"தாத்தா…" தவிப்பாக கூப்பிடவும்

"நீ கிளம்பு ஹர்ஷினி..!" கண்டிப்பான குரல் ஆச்சார்யாவிடம்

அவரின் கண்டிப்பை மீறி எதுவும் சொல்ல முடியாமல் வெளியே வந்துவிட்டாலும்..!

"என்ன பதில் சொல்லிட முடியும் தன்னால் அவருக்கு…?" என ஹர்ஷினிக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாகவே இருந்தது.



………………………………………………………………………………………….



“தேவி டான்ஸ் அகாடமி 50 வது ஆண்டு விழா... இன்விடேஷன் கார்ட்…. நீங்க தான் முக்கியமான சீப் கெஸ்ட்…! கண்டிப்பா வரணும்…" சுபத்ரா கொடுக்கவும்

எதுவும் பேசாமல் இறுக்கமான முகத்துடன் வாங்கி கொண்ட ஆச்சார்யா எழுந்து தன் அறைக்கு செல்லவும்….

"அப்பா..." சந்திரன் பதட்டத்துடன் கூப்பிட ....

"க்கும்..." அடைத்த தொண்டையை செறுமியபடி "5 நிமிஷம்.." என்றவர்., ரூமிற்கு சென்று விட்டார்.

"ஏன் சுபத்ரா...?" ஆற்றாமையுடன் இந்திரன் கேட்கவும்...

"ஏன் கூடாது...?" சுபத்ராவிடமிருந்து கோவமாகவே வந்தது பதில்....

"அத்தை ப்ளீஸ்.." ஹர்ஷினி கெஞ்சும் முகத்துடன் சுபத்ராவை பார்க்கவும்...

"இல்ல ஹர்ஷி... அவர் கண்டிப்பா வரணும்.. அப்பதான் எங்க அம்மா மனசு சாந்தி அடையும்.." சொல்லும் போதே தோண்டை அடைத்து கண்ணீர் வர பார்க்கவும் வேகமாக சமாளித்து கொண்ட சுபத்ரா

"அவர் மட்டுமல்ல.... நீங்க எல்லோரும் தான் கண்டிப்பா வரணும்..." என்றவர்

"ஹர்ஷி.. நீ என்னோடயே இன்னிக்கு சென்னை கிளம்பு...?" எனவும்

இல்லை அத்தை... கொஞ்சம் அவசர வேலை.... உங்களோட அபி.. ஹாசினி... வருவாங்க.

அவங்க கிட்ட பங்க்ஷன் அரேஞ்சமென்ட்ஸ் பிளான் எல்லாம் கொடுத்துட்டேன்....!

அவங்க பாத்துப்பாங்க... அதோட நானும் 2 நாள்லே வந்துருவேன்....

ஓகே.. சீக்கிரம் வந்துரு ஹர்ஷி.. அபி., ஹாசினி நாம கிளம்பலாமா...?

"என்ன அவசரம் சுபா...? காலையில் தானே வந்த... பொறுமையா ஈவினிங் கிளம்பலாம்." கண்டிப்புடன் ரேணுகா சொல்லவும்

சுபத்ரா ஓகே என்றுவிடவும்.., எல்லோரும் பொதுவான குடும்ப விஷயங்களை பற்றி., பங்க்ஷன் ஏற்பாட்டை பற்றி பேச ஆரம்பித்துவிட்டாலும்

உள்ளுக்குள் எல்லோருக்குமே தற்பொழுது "ஆச்சார்யா என்ன மனநிலையில் இருப்பார்" என்பதே யோசனையாக இருந்தது, சுபத்ரா, ஹர்ஷினி உட்பட..

அதுவும் ஹர்ஷினிக்கு வருத்தமாகவே இருந்தது. நேற்று தான் நான் ஆகாஷ பற்றி பேசினேன்... இன்று இந்த பிரச்னை வேறு...!

கண்டிப்பாக வெளியே காட்டி கொள்ளாவிட்டாலும் ஆச்சார்யா மிகுந்த "மன அழுத்தத்துக்கு உள்ளாவார்" என புரிந்ததாலே..!

அவரை விட்டு செல்ல மனதில்லாமல்..., சுபத்ராவிடம் இரண்டு நாள் கழித்து வருவதாக சொல்லிவிட்டாள் தான் என்றாலும்..?

எங்கள் பக்கம் எங்களுக்கான சில நியாமான காரணங்கள், கோவங்கள் இருப்பது போல்…!

அவர் பக்கமும் அவருக்கென ஒரு சில காரணங்களும், அளவில்லா வேதனைகளும் இருக்க தானே செய்கிறது

அது தெரிந்தாலும்…! ஏன் நன்றாக புரிந்தாலும்…!

“என்ன பண்றோம் நானும் அத்தையும் அவரை…!” என மனதுக்குள் மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் ஆச்சார்யாவை பற்றி யோசித்து கொண்டிருந்தாள் ஹர்ஷினி



………………………………………………………………..



அங்கு ஆச்சார்யாவிற்கோ இன்விடேஷன் கார்டை பார்க்கும் போது தேவியின் நினைவுகளே…!

தேவி “ஆச்சார்யாவின் காதல் மனைவி..”

முறையாக நடனம் பயின்ற தேவியின் “நடன அரங்கேற்றத்தின் போதுதான் முதன் முதலாக தேவியை பார்த்த ஆச்சார்யா..! பார்த்த நொடியில் இருந்தே அவரை காதலிக்கவும்..!” தொடங்கி விட்டார்.

பின்னர் தன் “பெற்றோரின் அனுமதியுடனே” தேவியின் கரம் பிடித்தார்.

தேவியின் மீது அளவில்லா காதலை கொண்டவர் ஆச்சார்யா.

அதே போல் தேவியும் அவரின் உண்மையான காதலை புரிந்துகொண்டு அதே அளவு ஆச்சார்யா மீதும் காதல் கொண்டு வாழ்ந்தவர்.

திருமணத்திற்கு பிறகு “தேவி நடன அரங்கேற்றம் செய்ய கூடாது” என்ற நிபந்தையுடனே ஆச்சார்யாவின் பெற்றோர்கள் திருமணம் செய்தனர்.

ஆனாலும் தேவிக்கு நடனத்தின் மீது இருந்த அளவில்லா பற்று புரிந்ததாலே “தேவி டான்ஸ் அகாடமி” ஆரம்பித்து கொடுத்தார் ஆச்சார்யா.., தன் பெற்றோரின் எதிப்பையும் மீறி .

ஆனால் அதே நடனத்தாலே தன் "செல்ல மகள் சுபத்ராவின் வாழ்க்கையில் வந்த பிரச்சனைகளும்…? அதை தொடர்ந்து தேவியின் முடிவும்…?" தான் நடனத்தின் மீதான “வெறுப்பிற்கு” காரணமாக அமைந்தது.

அதோடு முடியாமல்…? அதை தொடர்ந்து சுபத்ரா “டான்ஸை விட முடியாது” என்றது மட்டுமல்லாமல்

“திருமணமே செய்யாமல்” தனியாகவே நின்று விட்டது இன்னும் பாதித்தது ஆச்சார்யாவை.

தன் “செல்ல பேத்தி” தன் காதல் மனைவியின் “மறு உருவம்” தன் மேல் உயிராய் இருந்த ஹர்ஷினி..

அதே டான்ஸ்க்காக தன்னிடம் சண்டை போட்டு “விலகி இருப்பதும்” இன்னும் இன்னும் வெறுப்பை தான் கூட்டியது ஆச்சார்யாவிற்கு.

இப்பொழுது "ஜெய் ஆகாஷும் அதே டான்ஸ் தான்" என்னும் போது சொல்லவும் வேண்டுமா ஆச்சார்யாவின் மனநிலையை...?

………………………………………………….



“ஜெய் ஆகாஷும் தான் சீப் கெஸ்ட்..!” தெரியும் இல்ல ஹர்ஷி

அதனால நீ சீக்கிரம் ஆகாஷ் வீட்டுக்கு போய் “பெர்சனலா” அவனோட குடும்பத்துக்கும் இன்விடேஷண் கொடுத்துடு சரியா…? என சுபத்ரா சென்னை கிளம்புமுன் ஹர்ஷினியிடம் சொல்லி சொல்லவும்

“ஜெய் அன்று பேசிய பேச்சை’ நினைத்து கோவத்தில் கொதித்து கொண்டிருந்த ஹர்ஷினி

தாரணியிடம் விசாரித்து “ஆகாஷ் வீட்டில் இல்லை” என தெரிந்த பிறகே…! ஆகாஷ் வீட்டிற்கு சென்று இன்விடேஷண் கொடுத்து விட்டு வந்தாள்.

………………………………………………………….



ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 8 போஸ்ட் பண்ணிட்டேன்... படிச்சுட்டு உங்க கம்மெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரண்ட்ஸ் .. இந்த டைம் உங்க கம்மெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்ண முடியுமான்னு தெரியல.. இன் அம்மா ஹோம்.. thank யூ ப்ரண்ட்ஸ்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top