என்னுள் சங்கீதமாய் நீ 10

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 10



நீங்க மேடையில் சொன்னதுக்கு என்ன அர்த்தம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..? அதுவும் இல்லாம எங்ககிட்ட சம்மதமும் கேட்காம நீங்க இப்படி பப்லிக்ல சொன்னதும் தப்பு.., என்று டின்னெர் சாப்பிடும் போது சந்திரன், இந்திரன் உடன் இருக்க ஆச்சார்யா கொஞ்சம் கோவமாக கேட்கவும்.,

கண்டிப்பா கேட்டிருக்கணும்.. தப்பு தான் ஒத்துக்கறேன்.., ஆனா "டான்ஸை தவிர.., உங்களுக்கு என்கிட்ட பிடிக்காதது வேற எதாவது இருக்கா..?" ஆகாஷ் பொறுமையாக பேசவும், நிதானமான ஆச்சார்யா,

இல்லை தான்., ஆனா இது எப்படி சாத்தியம் ..? டான்ஸ்..? ஹர்ஷினி..?

ம்ம் டான்ஸ்..? "ஹர்ஷினிக்காக என்னால டான்ஸை விட முடியும்..", கண்டிப்பா கொஞ்சம் வருத்தமா இருக்கும் தான்..,என்று சொல்லும் போதே மனது மிகவும் வலித்தது ஆகாஷிற்கு.,

எத்தனை போராட்டம். கஷ்டம் எல்லாம் கடந்து, மேலும் மேலும் உயரும் நிலையில் இப்படி ஒரு முடிவு..? என்பது தனக்கு வாழ் நாள் முழுவதுக்குமான மிக பெரிய ஆறாத ரணமே.,!

ஆனால் ஹர்ஷினி..! அவள் இல்லாமல்.., ஏன் அப்படி யோசிக்க கூட முடியாதே...!

கண்டிப்பா ஹர்ஷினி ஒத்துக்க மாட்டா..? ஆச்சார்யா உறுதியாக சொல்லவும்

ஒத்துக்க மாட்டா தான்., ஆனா நானும் இந்த முறை எக்காரணத்தை முன்னிட்டும் “என் முடிவுல இருந்து பின் வாங்கறதா இல்ல.,” ஆகாஷின் குரல் மிக உறுதியுடன் ஒலித்தது.,

உங்க வீட்ல எப்படி..? சந்திரன் கேள்வியாக இழுக்கவும்

சொல்லிட்டேன்.., டைம் கேட்டிருக்காங்க.., சொன்ன ஆகாஷின் குரலில் கொஞ்சம் வருத்தம் தெரிந்தது.

"அம்மாக்கு.." உங்க விஷயம் தெரிஞ்சு கொஞ்சம் பெரிய பிரச்னை ஆகிருச்சி, தாரணி ஹர்ஷினியிடம் சொல்லவும்

பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்ல ஹர்ஷினிக்கு., வீட்டில் சொல்லாமல் கண்டிப்பாக மேடையில் சொல்லிருக்க மாட்டான்..,

ஆனா ஏன் இப்படி..? என்ன அவசரம்..?

அம்மா அண்ணாவை எப்பவும் போல பொண்ணு பாக்க கூப்பிடவும் அண்ணா பொறுமையா தான் “வேண்டாம்” சொன்னாங்க..,

ஆனா இந்த டைம் அம்மாக்கு ரொம்ப கோவம் வந்துருச்சி., எப்பவும் இப்படியே சொல்ற இன்னிக்கு கண்டிப்பா பொண்ணு பாக்க போயே ஆகணும்ன்னு சொல்லி சண்டை போடவும் தான் டென்ஷனான அண்ணா சொல்லிட்டாங்க..,

அண்ணா சொல்லிட்டதும் நல்லதா போச்சு., இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீங்க ரெண்டு பெரும் உங்க கல்யாணத்தை தள்ளி போட முடியும்.,

அம்மாக்கு கொஞ்சம் வருத்தம் தான்., ஆனா கண்டிப்பா ஒத்துக்குவாங்க., அதனால நீங்க பீல் பண்ணாதீங்க.., ஹர்ஷினியின் முகம் என்னவோ போல் இருக்கவும் தாரணி ஆறுதலாக சொன்னாள்.

ஹர்ஷினிக்கு புரிந்தது “டென்ஷனில் எல்லாம் இல்லை., சொல்ல வேண்டும் என்ற முடிவோடுதான் சொல்லிருக்கிறான்” என்று, அதனால் எதுவும் சொல்லாமல் அமைதியாக தலையை மட்டும் ஆட்டினாள்.

அக்கா.. “மேனகா அத்தை.,” கூப்புடுறாங்க.., அபி சொல்லவும் நான் வரேன்னு சொல்லு என்றவள்

தாரணியிடம் “அண்ணா.,” உனக்காக வெயிட் பன்றாங்க பாரு.. நீங்க போய் முதல சாப்புடுங்க., பாப்பாவை ஹாசினி பாத்துப்பா..,

அதனால நீ பொறுமையா சாப்புடு., சரியா..? நான் இதோ வரேன்., என்றவள் செர்வரிடம் அவர்களை கவனிக்கும் படி சொல்லி விட்டே சென்றாள்.,

என்னடி என்னவோ போல இருக்க..? ஏதாவது பிரச்சனையா..? ரேணுகா, மாலதி, உடன் இருக்க மேனகா கவலையாக கேட்கவும்., கொஞ்சம் "டயர்டு தான் அத்தை.."

இல்லை., வேற ஏதோ இருக்கு..? ரேணுகா மகளை அறிந்தவராக கேட்க, மாலதியும் ஆமா., சொல்லு ஹர்ஷினி.., என்றார் வற்புறுத்தலாக.,

“ம்மா, சித்தி” என்ன இருக்க போகுது., அதெல்லாம் ஒண்ணுமில்ல., வாங்க முதல்ல சாப்புடுங்க.., அத்தை., எங்க மாமா..?

அவர்.. அங்க தெரிஞ்சவங்க கிட்ட பேசிட்டுருக்கார்.., நிஜமாவே ஒண்ணுமில்லயே ஹர்ஷி..? சந்தேகமாக மேனகா விடாமல் கேட்கவும்

அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை., நீங்க மூணுபேறும் பர்ஸ்ட் சாப்புடுங்க.., வெய்ட்டரை கூப்பிட்டு மூவருக்கும் உணவு கொண்டு வர செய்தவள் “நீங்க ஆரம்பிங்க..,” நான் இதோ வந்துடுறேன்.., என்றவள் வேகமாக சுபாவின் ரூமிற்கு வந்துவிட்டாள்.

மூவரும் தன் பேச்சை நம்பவில்லை., என புரிய தான் செய்தது ஹர்ஷினிக்கு., ஆனால் என்ன செய்ய..? என்ன முயன்றும் முகத்தை நார்மலாக வைக்க முடியவில்லையே.,!

அங்கு டின்னெர் டேபிளில் “ஆச்சார்யா, சந்திரன், இந்திரன் உடன் ஆகாஷ் தீவிரமாக பேசி கொண்டிருப்பதையும்.,” கவனித்தே இருந்தாள்., என்ன பேசுவார்கள்..? என்றும் உறுதியாக தெரியும் தான்.,

"தாத்தாவின்..," மேல் எந்தளவு கோவமோ., அதை விட அதிகமாக வருத்தமும், ஆற்றாமையே., எங்களுடைய உண்மையான காதலை புரிந்து கொண்டு., "எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் எங்களை சேர்த்து வைப்பார்.," என்று மனதில் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் உடைந்து விட்டது ஹர்ஷினிக்கு.,

எனக்காக.., எங்களுடைய காதலுக்காக.., ஆகாஷ் டான்ஸை விட முடுவெடுத்து விட்டான்..! என்று உறுதியாகிவிட்டது. இனி மேல் தான்.., நான் இன்னும்.. இன்னும்.. உறுதியாக இருக்க வேண்டும்..,

அவருடைய வெறுப்புக்காக ஆகாஷ் டான்ஸை விட வேண்டும் என்று நிர்பந்திப்பது, அதுவும் தன்னை வைத்தே நிர்பந்திப்பது.., என்பது ஏற்று கொள்ளவே முடியாதது..,

அவனுடைய இத்தனை வருட உழைப்பை, சாதனையை, மிக பெரிய அங்கீகாரத்தை "ஒன்றுமே இல்லாமல் செய்வது" என்பது மன்னிக்கவே முடியாத ஒன்றும் கூட..,

இதற்காகவா இத்தனை போராட்டம்..?

என்னுடைய காதலால் "ஜெயின் நிலை உயர்ந்தது.," என்பதுதான என்னுடைய காதலுக்கு.., கிடைத்த மிக பெரிய வெற்றியாக., கர்வமாக இருக்குமே தவிர, “இந்த முடிவு என்பது கண்டிப்பாக எங்கள் காதலை கவுரவிக்காது..!”

ஜெய் எங்களுடைய காதலுக்காக., இந்த முடிவை எடுக்கும் போது..! நான் எப்படி அமைதியாக இருக்க முடியும்.?

அதுவும் தன்னை., "தன் காதலை வைத்து தானே..?" அவனுக்கான அடையாளத்தை அவனிடமிருந்து பறிக்க எண்ணுகிறார்கள்., அதுவே இல்லை என்றால்..? என கோவத்தில், இயலாமையில் விபரீதமாக யோசித்தாள் ஹர்ஷினி..,!

ஹர்ஷினி என்னாச்சு உனக்கு.., ஏன் இங்க வந்து உக்காந்திருக்க..?

அதுவரை என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்த ஹர்ஷினி., சுபத்ரா வந்து கேட்கவும் சும்மா தான் அத்தை.., என்றாள்.

இல்ல “அண்ணி..” நீ எதோ சரியில்ல சொல்ராங்க.., உன் முகமும் எப்படியோதான் இருக்கு.., ஆராய்ச்சியாக அவளின் முகத்தை பார்த்தவாறே சுபத்ரா விடாமல் கேட்கவும்

கொஞ்சம் டயர்ட் தான் அத்தை .., வேற ஒண்ணுமில்ல..,

சரி வா சாப்பிட போலாம்.., கெஸ்ட் எல்லாம் கிளம்பிட்டாங்க.., தாரணி வேற உன்கிட்ட சொல்லிட்டு போகணும்ன்னு வெயிட் பண்ணிட்டுருக்கா.., என்று கூறியவாறே அவளை கையோடே அழைத்து வந்தார்.

வந்திருந்த கெஸ்ட் எல்லாம் கிளம்பியிருக்க இவர்கள் குடும்பமும், ஆகாஷ், தாரணி குடும்பம் மட்டுமே இருந்தது.

“அக்கா.. எங்க போன..? செம பசி.., வா சாப்பிடலாம்., உனக்காகத்தான் வெயிட்டிங்., ஹாசினி சொல்லவும்

ஏய்.., பொய் சொல்லாத..,? அப்பவே கார்த்திக் உனக்கு செடிக்கு அந்த பக்கம் ஊட்டிவிட்டது எந்த கணக்கு..? என அபி சத்தமாக சொல்ல சுற்றியிருந்த அனைவரும் சிரிக்கவும் ஹாசினிக்கு வெட்கம், கோவம் ஒன்றாக வந்தது.,

கார்த்திக்., போன் பேசுவது போல் வேகமாக அங்கிருந்து செல்லவும் “மச்சான்..” ரிங்கே வரலை.., நக்கலாக அபி சத்தமாக சொல்லவும்

ரேணுகா அதட்டலாக ஷ்.. சும்மா இரு அபி.., தாத்தா வரார் பாரு.., ஆச்சார்யா, இந்திரன், சந்திரன் உடன் ஆகாஷும் வந்து கொண்டிருந்தான்.

பக்கத்தில் வரும் போதே அவளின் முகத்தில் இருந்த கோவத்தை கண்டு கொண்ட ஆகாஷ் “இவ கோவத்துல எந்த பிரச்சனையும் பண்ணாம இருக்கணும்.,” என நினைத்தவாறே வந்தான்,

எங்க போன ஹர்ஷினி..? ஆச்சார்யா கேட்கவும், ஹர்ஷினி அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு பக்கமாக பார்த்தபடி நின்றாள்.

"ஹர்ஷினி..," என்று மேனகா, ரேணுகா இருவரும் ஒரே குரலாக அதட்டினார்கள்..,

தாத்தா., உன்னைத்தான் கேட்குறாரு ஹர்ஷினி..? என்று ரேணுகா கொஞ்சம் கடுமையாக சொன்ன பிறகும்.,ஹர்ஷினி பதில் சொல்லாமல் தான் நின்றாள்.

ஆச்சார்யா, ஆகாஷ பார்த்த பிறகு என்ன முயன்றும் தன் முகத்தில் தோன்றும் அதிக படியான கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை ஹர்ஷினியால்.

அவள் அப்படி நிற்கவும் கோவமான ஆகாஷ் “இது என்ன உதாசீனம்..?" என்றே முறைத்து பார்த்தான்.

அவளின் முகத்தில் இருந்தே அவளின் கோவத்தை புரிந்து கொண்ட ஆச்சார்யா., முதல்ல போய் சாப்புடு ஹர்ஷினி.., சுபா, அபி, ஹாசினி நீங்களும் போய் சாப்ட்டு வாங்க, டைம் ஆச்சு கிளம்பலாம்., என்று பிரச்சனை ஆரம்பிக்கும் முன்னே கிளம்பிட பார்த்தார்.

அப்பொழுதும் ஹர்ஷினி அசையாமலே கோபத்துடன் நிற்கவும்.,

சுபத்ரா யோசனையாக என்ன ஆச்சு ஹர்ஷி..? ஏதாவது பிரச்சனையா..? என ஆச்சார்யாவை சந்தேகமாக பார்த்தவாறே கேட்கவும்..,

நீங்க முதல்ல போய் சாப்புட்டு வாங்க., வீட்ல போய் பேசிக்கலாம்., என்று இந்திரன் கொஞ்சம் அவசரமாக சொன்னார்.

அப்போ வீட்ல போய் பேசறதுக்கு என்னமோ இருக்கு அப்படித்தானே..? இவர்கள் கண்டிப்பாக ஏதோ செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட சுபத்ரா முறைப்புடன் கேட்கவும்,

சொல்றதை முதல்ல செய்ங்க.., போய் சாப்புட்டு வாங்க., அப்பறம் பேசிக்கலாம் என்று ஆச்சார்யா சொல்லும் போதே

ஏன் இப்போ பேசினா என்ன..? என்று தன் கோவத்தை அடக்க முடியாமல் ஆச்சார்யாவை பார்த்து நேராகவே கேட்டு பிரச்சனையை ஆரம்பித்து விட்டாள் ஹர்ஷினி.

ஏன் இவ்வளவு கோவம்,,? என்ன ஆச்சு..? என்று எல்லோரும் அவளின் கோவத்தில் என்னமோ? ஏதோ? என்று புரியாமல் பார்த்து கொண்டு நின்றனர் தாராணி உட்பட .,

இது பேசும் இடமும் இல்லை, அதற்கான நிதானமும் ஹர்ஷினியிடம் இல்லை என்று புரிந்து கொண்ட ஆச்சார்யா பொறுமையுடன் “வீட்ல போய் பேசிக்கலாம் ஹர்ஷினி.,” என்றார்.

எனக்கு இங்கேயே., இப்பவே தான் பேசணும்., "விட்டேனா பார் உங்களை..," என்ற பிடிவாதத்துடன் ஹர்ஷினி நிற்கவும்.,

என்ன தான் ஆச்சு ஹர்ஷி..? சொல்லேன்., அவளின் நிதானமில்லா கோவத்தை உணர்ந்து சுபத்ரா கவலையுடன் கேட்கவும்,

அவர் கிட்ட கேளுங்க அத்தை..? அவர் செஞ்சிருக்குற நல்ல வேலையை..? நெஞ்சை நிமித்திக்கிட்டு சொல்லுவார், என்று கோவத்தில் கத்தவே செய்தாள் ஹர்ஷினி.

கோவத்தில் மூக்கு விடைக்க, கண் எல்லாம் கலங்கி, சிவந்த முகத்துடன் ஆங்காரமாக நின்ற ஹர்ஷினியை பார்த்த அனைவரும் அவளின் அதீத கோவத்தில் "இருவருக்கும் ஏதாவது பெரிய பிரச்சனையோ..," என்று பயந்து போயே நின்றனர்.,

ஆகாஷ் அவளின் கோவத்தை எதிர்பார்த்தே இருந்தான் தான்., ஆனால் இங்கேயே இப்படி நடந்து கொள்வாள் , என்று நினைக்கவில்லை., இப்போ நான் பேசினா., கண்டிப்பாக இன்னும் அதிகமா தான் கோவப்படுவா., என்று தெரிந்ததால் முடிந்தவரை அமைதியாக இருக்க முயன்றான்.

என்னடி ஆச்சு..,? ஏன் இவ்ளோ கோவம்..? ரேணுகா மகளின் கையை பிடித்து கலங்கிய குரலில் கேட்கவும், “ம்மா..” என்னை யாரும் எதுவும் கேக்காதீங்க., அவரை கேளுங்கன்னு தானே சொல்றேன்..,

என்னப்பா.., பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்..? மேனகா கவலையாக ஆச்சார்யாவிடம் கேட்கவும்..,

இப்போ எதுவும் பேச வேண்டாம்., எல்லாரும் கிளம்புங்க, வீட்ல போய் பேசிக்கலாம்.., தம்பி நாம அப்பறம் பேசலாம் என்று ஆச்சார்யா ஆகாஷிடம் சொல்லி கொண்டிருக்கும் போதே

அவர்கிட்ட பேச இன்னும் என்ன இருக்கு..? அதான் எல்லாம் சாதிச்சிட்டேங்களே..?

அவரோட இத்தனை வருஷ உழைப்பை, போராட்டத்தை, கஷ்டத்தை ஒண்ணுமே இல்லாம பண்ண..! உங்களுக்கு எப்படி மனசு வந்தது..?

நீங்க யார் முதல்ல அவருக்கு..? சொல்லுங்க..?

இப்படி நடந்து விட கூடாதென்று தானே இத்தனை வருடம் போராடினேன்., ஆனால் முடிவில் எல்லாமே ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே..! என்று கோவம் , ஆற்றாமை, இயலாமையை தாங்க முடியாமல் வெடித்து கொண்டிருந்தாள் ஹர்ஷினி.

ஹர்ஷினியின் பேச்சால் ஆச்சார்யாவின் முகத்தில் தோன்றும் வேதனைய பார்த்த ஆகாஷ்., இதற்கு மேலும் இவளை விட்டால் ஆகாது., என்ற முடிவுடன் வேகமாக அவளின் அருகில் வந்தவன்,

இதுக்கு அப்பறம் “ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது.., புரிஞ்சுதா” என்று விரல் நீட்டி கடுமையாக எச்சரித்து விட்டு அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டு ஆச்சார்யாவிடம் வந்தவன்,

"நான் இதோ வந்துறேன்.," என்று விட்டு ஹர்ஷினியுடன் வேகமாக அங்கிருந்து செல்லவும்.,

அங்கிருந்த "அனைவரும் உச்ச கட்ட அதிர்ச்சியில்.!" நின்று விட்டனர். அதுவும் “சுபத்ரா பிரமை பிடித்தே..! நின்றுவிட்டார்.,

அப்போ “அக்காதான் அந்த பொண்ணா..?” என்று அதிர்ச்சியில் ஹாசினி சத்தமாகவே சொல்லவும், ஆச்சார்யா “ஆமாம்.,” என்றுவிட்டார்.


..........................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்னுள் சங்கீதமாய் நீ 10 போஸ்ட் பண்ணிட்டேன். படிச்சுட்டு உங்க மேலான கருத்துக்களை ஷேர் பண்ணுங்கப்பா... thank you ப்ரண்ட்ஸ்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top