என்னில் நிறைந்தவளே - 7

Advertisement

muthu pandi

Well-Known Member
என்னில் – 7

மீட்டிங் முடிந்து தனது அலுவலகம் வந்த தேவி மிகவும் கோவமுடன் காணப்பட்டாள் அவளை நெருங்கி ஏதேனும் கேட்கவே ராகவி பயந்தாள் ஏனெனில் அவள் கோவமாக இருக்கும் போது ஏதாவது கேட்டால் இது கூட தெரியாம எதுக்கு வேலைக்கு வரிங்க என்று தாறுமாறாக திட்டி தீர்த்து விடுவாள் அதற்கு பயந்தே ராகவி வெளியே நின்றிருந்தாள்

அவள் வெளியே நிற்பதை பார்த்துவிட்டு அனிதா “ஏன் ராகவி வெளியே நிற்கிறாய் ஏதாவது கேட்க வேணும் என்றால் உள்ளே போக வேண்டியது தான”

ராகவி “இல்லை மேடம் தேவி மேடம் செம கோவத்தில் இருக்காங்க இப்ப சைட்டுக்கு வேற போகணும் அதான் எப்படி சொல்றது என்று தெரியவில்லை வெளியே நிற்கிறேன்”

அனிதா “எதுக்கு கோவமா இருக்கா அந்த மீட்டிங் வெற்றிதான நமக்கு தான ஆர்டர் கிடைத்தது இல்லை வேற யார்க்கவது போய்விட்டதா”

ராகவி “நமக்கு தான் மேடம் கிடைத்தது”

அனிதா “அப்புறம் எதுக்கு கோவமா இருக்கா”

ராகவி “அருண் கன்ஸ்ட்ரக்ஷன் JMD அருண் இருக்காரு இல்ல மேடம்”

அனிதா “அவன் இருக்கிறது தான் பிரச்சனையே சரி அவன் என்ன செய்தான்”

அவங்களுக்கு இந்த டெண்டர் கிடைக்கவில்லை என்கின்ற கோவத்தில் மேடம் ஒரு பொண்ணா இருக்கறதால அந்த கம்பனி MDய மடக்கி இந்த டெண்டரை வாங்கிடதா கேவலமா நிறைய பேசிட்டான் அதனால மேடம் செம்ம கோவமா அங்க இருந்து கிளம்பி வந்துட்டாங்க”

சரி நீங்க போய் வேலைய பாருங்க நான் அவ கிட்ட பேசி கொள்கிறேன்

ராகவி சென்றதும் அனிதா அறையில் நுழைந்தாள் அங்கே தேவி கடுமையான கோவத்துடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்

அனிதா “என்ன ஆச்சு தேவி இவ்ளோ கோவமா இருக்க”

தேவி “எல்லாம் தெரிந்து கொண்டுதான உள்ளே வந்திருப்பாய் அப்பறம் எதுக்கு என்னை கேட்கிறாய்”

அனிதா “எவ்வளவு கோவமா இருந்தாலும் தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை எப்படிதான் தெரிந்து வைத்திருக்களோ நமக்கு தான் கோவமாக இருந்தால் எதிரில் நடப்பதே தெரிய மாட்டேன்குது என மனதில் நினைத்து பின் தேவியிடம் தெரியும் இருந்தாலும் நீயா சொன்ன உன்னுடைய கோவம் குறையும் அதற்கு கேட்டேன்”

தேவி “அந்த அருணுக்கு எவ்ளோ திமிர் இருந்தா என்னைபார்த்து இப்படி பேசுவான்”

அனிதா “என்னை கேட்டால் அவன் அப்படி பேசும் பொழுது அங்கயே நீ அவனை நாலு அரைவிட்டு இருக்கணும். இப்படி பேச அவனுக்கு கேவலமா இல்ல”

தேவி “அது இருந்தால் அவன் ஏன் பேச போறான் அதுவும் அவனை ஏதாவது செய்திருந்தால் அதையே காரணம் காட்டி நமக்கு இந்த டெண்டரை கிடைக்க விடாமல் செய்திருப்பான். அவன் பேசறதை கேட்டு நான் ஏதாவது செய்வேன்னு இப்படி பண்ணிருக்கான் அதுவும் இல்லாமல் சாக்கடை மேல் கல்லை போட்டால் அது நம் மேலேதான் தெளிக்கும் அவனிடம் சண்டை போடுவது அதுபோல்தான். என்னை தோற்கடிக்க முடியவில்லை என்று இப்படி சீப் ஆ பிகேவ் செய்கிறான்”

அனிதா “அது உனக்கே தெரியுது அப்பறம் எதுக்கு கோவமா இருக்க விடு தேவி இதை மனதில் வைக்காம தூக்கி போடு நாம் தொழில் ஆரம்பித்த போது எவ்வளவு கஷ்டப்பட்டோம் அதை நினைத்துகோ இது பெரியதா தெரியாது”

தேவி “ஆமா அனிதா, இவனை நினைத்து கொவபடுவதை விட இப்ப next ப்ராஜெக்ட் ரொம்ப முக்கியம் அதை பார்க்கணும் and தேங்க்ஸ் அனிதா இப்பதான் மனசு நல்லா இருக்கு”

அடி வாங்குவ தேவி எதுக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லற, வெளியே ராகவி உனக்கு பயந்துகிட்டு நிற்கிறாள் கூப்பிட்டு என்ன என்று கேளு

இங்கே தேவி தனது வேளைகளில் தன்னை ஆள்த்திக்கொள்ள அங்கே அவளுடைய பாட்டியும், தாத்தாவும் இவளை பற்றி விவாதித்து கொண்டிருந்தனர்

பாட்டி “அண்ணா வரவர தேவி செய்யறது எதுவும் நல்லாயில்லை நீங்க என்ன என்று கேட்க மாட்டிங்களா”

தாத்தா "என்னை என்ன கேட்க சொல்கிறாய் நாயகி(பாட்டி பேரு paa)"

அவளுடைய திருமணம் பத்தி பேசுங்க அண்ணா

நீ அதை பற்றி பேசினாயா அவளிடம் என்ன சொன்னாள்

சொல்லறா சொரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு, அட போ ணா(அண்ணா) பேசினதுக்கு ஒன்னும் சொல்லாம அவ பாட்டுக்கு எழுந்து போய்விட்டாள்

தாத்தா “அவளுடைய மனதை பற்றியும் நாம நினைக்கணும் அவளே பழையதை மறந்துவிட்டு இப்பதான் கொஞ்சம் நல்லா இருக்க நாம இப்ப கல்யாண பேச்சை எடுத்தோம் என்றால் சரியாக வராது கொஞ்ச நாள் பொறு பேசுவோம்”

பாட்டி “போங்க அண்ணா இப்படி சொல்லியே முழுசா இரண்டு வருடம் போய்விட்டது. இவளை முதலில் ஒருத்தன் கையில் பிடித்து கொடுக்கணும் அப்பொழுதுதான் எனக்கு நிம்மதி”

தாத்தா “சரி நாயகி நான் அவகிட்ட இதை பத்தி பேசுறேன்.முதலில் என்ன சொல்லகிறாள் என்று பார்ப்போம்”

பாட்டி “பேசறது மட்டும் போதாது திருமணத்திற்கு ஒத்துக்க வைக்கணும்”

தாத்தா “முயற்சி பண்றேன் என்றார்”


நிறைவாள்.............

Hai friends படித்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லிவிட்டு போங்க paa அப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கும்
nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top