என்னில் நிறைந்தவளே - 16

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் - 16

தேவி தருணிடம் தனது மனதில் உள்ளவைகளை கொட்ட ஆரம்பித்தாள்

விஜய் உனக்கு ஒன்னு தெரியுமா உன்னால் நான் நிறைய disturb ஆகிறேன் நீ எதுக்கு என்மேல் இவ்வளவு அக்கறை காட்டுற எதுக்கு எனக்கு உன் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்ற feel குடுக்கற

நீ என்னை காதலிக்கிறாயா

தருண் இந்த நேரடிதாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்ன செய்வது என்று தேவியின் முகம் பார்த்தான்

ஆனால் தேவியோ அவனில் பதிலை எதிர்பார்க்காது தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாள் தருணும் அதை செவி மடுத்தான்

என்மீதான உனது அக்கறை,என்னிடம் நீ எடுத்துகொள்ளும் உரிமை, என்னை பார்க்கும்போது உன் கண்களில் தெரியும் நேசம்,அனைவரிடமும் பழகும் முறை, பெண்களில் கண்களை பார்த்து பேசும் உனது இயல்பு என்னை தடுமாற செய்கிறது. என் மனம் உன் பக்கம் சாய துடங்கிவிட்டது. ஆனால் நீ என்னை காதலிப்பதாக மட்டும் என்னிடம் சொல்லிவிடதே என்னால் உன் கண்களை பார்த்து உன்னை விரும்பவில்லை என்று சொல்ல முடியாது அதே நேரம் உன்னை வேண்டாம் என்று விலகவும் முடியாது.

இவற்றை ௯றியதும் தருண் “அடி பாவி என்னை எப்படி எல்லாம் கவனித்து இருக்கிறாள் இது தெரியாமல் நான் என்னடா இவள் நம்மை பார்க்கவே மாட்டேன் என்கிறாள் என feel பண்ணிடு இருக்கேன். ஏன் என்னை ஏற்க முடியாமல் தடுமாறுகிறாள் என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது அதை ஒதுக்கி தன் கவனத்தை அவளில் புறம் திருப்பினான்”

ஏற்கனவே ஒருவன் என்னை காதலிக்கிறேன் என்று கூறி செய்த துரோகத்தின் வலியே என்னிடம் மீதம் உள்ளது நீயும் அதையே செய்தால் நான் என்ன நிலையில் இருப்பேன் எனக்கே தெரியவில்லை.

தேவி ௯றியதைகேட்டு தருண் அதிர்ந்தான் என்ன சொல்கிறாள் இவள் இவளுக்கு ஒருவன் துரோகம் இழைத்தானா.இப்படி பட்ட பெண்ணை எவனாவது விட்டு கொடுப்பானா என தோன்றியது இருந்தும் அவனுடைய மனதின் ஓரம் அவன் மகிழ்ந்தான் எதற்கு என்றால் அவன் விட்டு சென்றதால் தான் தனக்கு தேவி கிடைத்தால் அதற்காக

தேவி மீண்டும் ஏதோ பேச அதை தன்னுள் வாங்க முற்கொண்டன்

உனக்கு தெரியுமா விஜய் எங்க அம்மாவிற்கு என்னை பிடிக்காது முதலில் அக்கா பிறந்துவிட்டதால் இரண்டாவது பையன் வேண்டும் என்று இருந்தார்காலம் நானும் பெண்ணாக பிறக்க எனது அம்மா என்னை பார்க்க மாட்டேன் சொல்லிவிட்டார்கள்.

நான் பிறந்து சிறிது நாட்களிலே அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் கர்பபையை எடுக்கவேண்டியதாக போய்விட்டது நான் பிறந்த நேரம்தான் இப்படி ஆகிவிட்டது என்று என்னை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்

என்னுடைய அக்காவிடமும் நான் ராசி இல்லாதவள் அவளிடம் சேராதே என்று சொல்லியே வளர்த்தனர் அவளும் என்னிடம் பேசமாட்டாள் அப்பாவும் அம்மா என்ன சொல்கின்றாகளோ அதைதான் கேட்பார்கள் இதனால் எனது பாட்டி என்னை தான் வளர்த்து கொள்வதாக சொல்லி என்னை ஊருக்கு ௯ட்டி சென்று விட்டார்.

எனக்கு பெயர் கூட எங்க தாத்தாதான் வைத்தார்கள் என்னுடைய தாத்தாவிற்கு பொன்னியின் செல்வன் ரொம்ப பிடிக்கும் அதில் வருகிற ராஜகுமாரி வானதி மாதிரி நான் வாழ வேண்டும் என எனக்கு அந்த பேரை வைத்தார்

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பொழுது நிறைய ஏங்கியிருக்கேன் அம்மா,அப்பா பாசத்திற்காக ஸ்கூல்ல எல்லோரும் அவங்க
அம்மா,அப்பா பற்றி பேசுவாங்க அதையெல்லாம் கேட்டுவிட்டு அமைதியா வந்திடுவேன் அப்பொழுது எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா ஏன் அவங்க கூட நான் இல்லை என அப்பொழுதெல்லாம் எனக்கு என்று யாரும் இல்லை என்கிற உணர்வு வரும். பாட்டி என்மேல் பாசமா இருப்பாங்கதான் ஆனா நிறைய விசியங்களை பாட்டியிடம் சொல்ல முடியாம தவித்திருக்கேன்.

பாட்டியிடம் ஏன் நான் அப்பா,அம்மா விடம் இல்லாமல் உங்களிடம் இருக்கேன் என்று கேட்டதிற்கு அவங்க அப்பா வேலைக்கு போய்விடுவாங்க உன்னுடைய அம்மாவிற்கு அக்காவை பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறதால் நான் உன்னை பார்த்து கொள்கிறேன் என்று சொல்வாங்க

எனக்கு நன்றாக விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு உண்மையை தெரிந்த பொழுது ரொம்ப அழுதேன்,வருத்தபட்டேன். ஏன் நான் அம்மா,அப்பா கிட்ட போறேன் என்னை பார்த்தால் அம்மா மனம் மாறி ஏற்று கொள்வார்கள் என்று கூட நம்பினேன் தெரியுமா.

நான் அம்மாவிடம் செல்ல அடம் பிடிக்கவும் தாத்தா வந்து என்னை கூட்டி சென்றார் அம்மாவை பார்க்க ஆனால் அம்மா என்னை பார்க்கவே மாட்டேன் இவள் எனது குலத்தை தழைக்க விடாமல் செய்தவள் இவள் வந்து பிறந்த நேரம்தான் ஆண் குழந்தையை பேற்க வழியில்லாமல் செய்து விட்டாள்.

எனக்கும் இவளுக்கும் எந்த உறவும் இல்லை எனக்கு ஒரே ஒரு பொண்ணுதான் என்று கண்முன்னாடியே சொன்னங்க அப்போது எப்படி இருந்தது தெரியுமா இப்பொழுதே நான் இறந்திட கூடாதா என்றிருந்தது

தேவி அதை சொல்லி முடிக்கவில்லை அவள் தருணின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.தேவி செத்திடனும் என்று சொன்னது அவனின் மனதை பாதித்தது அந்த சிறுவயதில் சாக நினைத்திருக்கிறாள் என்றால் அவளுடைய மனம் எவ்வளவு காயபட்டிருக்கும் என எண்ணினான்.

தேவியோ தருணுடைய அணைப்பில் இருப்பதை கூட உணராது அவளுடைய சிறு வயதில் நடந்ததை சொல்லிகொண்டிருந்தாள் அவனோ உன்னை எங்கும் விடமாட்டேன் என அணைப்பை மேலும் இறுக்கினான்.தேவி தொடர்ந்தாள்

அம்மா அப்படி சொன்னவுடன் அப்பொழுது செத்திடனும் என்று தோன்றியதுதான் ஆனால் மறு நொடியே நான் எதற்கு சாக வேண்டும் எந்த பெண்ணை வேண்டாம் என சொன்னார்களோ அவர்கள் முன்பே நன்றாக வாழ்ந்து கட்ட வேண்டும் என தோன்றியது.பிறக்காத ஒருவனிற்காக ஏன் அப்படியே என் அம்மா மீண்டும் கரு உற்றிருந்தாலும் பையன் பிறந்திருப்பான என்றே தெரியாது

அப்படி ஒரு நிலையில் என்னை தண்டித்தது என்ன நியாயம் என தருணிடம் கேட்டாள் ஏதோ அவனுக்கு அதற்கான பதில் தெரியும் என்பது போல.ஆனால் அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை அவனுடைய கண்கள் கலங்கி ஒருதுளி கண்ணீர் தேவியின் தோள்களில் விழுந்தது. நீ எதுவும் சொல்ல வேண்டாம் வானதி நான் உன்னை என் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்கிறேன்.

அவளோ இவனிடம் இருந்து விலகி அமர்ந்தது “அதன் பின் என்ன செய்தேன் தெரியுமா விஜய்” நானே ஹஸ்டேல் சேர்ந்து படிக்கிறேன் கூறி அங்க தங்கி படிக்க ஆரம்பித்தேன்.

10th நல்ல மார்க் எடுத்ததினால் இலவசமா பள்ளியில் 11,12 படித்தேன். அதன்பின் கல்லூரியில் படித்து கொண்டே பார்ட் டைம் வேலை பார்த்தேன். தாத்தா என்னிடம் கேட்டாங்க ஏன் மா நாங்க உன்னை பார்த்து கொள்ளமாட்டோமா நீ ஏன் பார்ட் டைம் வேலைக்கு போக வேண்டும்

நீங்க பார்த்து கொள்ளலாம் தாத்தா ஆனா வேண்டாம் நான் என்னுடைய சொந்த முயற்சியில் படிக்க நினைக்கிறேன் என்று சொன்னேன்

தாத்தா “ஏன் தாத்தா மேல் நம்பிக்கை இல்லையா தேவி, உன்னை பார்த்து கொள்வேன் என்று”

தேவி “அப்படி இல்லை தாத்தா எந்த பொண்ணை அவங்க பார்த்து கொள்ளமாட்டேன் அவள் வேண்டாம் சொன்னார்களோ அவங்க முன்னாடி எந்த உதவியும் இல்லாமல் நான் நன்றாக வாழ்ந்து காட்டவேண்டும் தாத்தா அதனால் என் போக்கில் என்னை விடுங்கள்”

அதன்பிறகு படித்து கொண்டே ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியில் பார்ட் டைம் வேலை பார்த்தேன். படிப்பை முடித்து ஒரு வருடம் வேலைக்கு சென்றேன் அதன்பின் வங்கியில் லோன் வாங்கி இந்த கம்பனியை ஆரம்பித்தேன்

இதையெல்லாம் ஒரு வைராக்கியதோட செய்த நான் இரண்டு இடத்தில் தவறு செய்துவிட்டேன்

ஒன்று நான் படித்து முடித்ததும் அப்பா வந்து இதுவரை உனக்கு நான் ஒன்றும் செய்ததது இல்லை இனிமேல் உன்னை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறிய போது அதை நம்பி எனக்கும் இனி தாய்,தந்தை அன்பு கிடைக்கும் என்று அவர் கூட சென்றது

இரண்டாவது அவனுடைய மிரட்டலுக்கு அடிபணிந்து அவன் காதலை ஏற்றுகொண்டது.

அவள் காதல் என்று சொன்னவுடன் தருண் அவளை தன்பக்கம் திருப்பினான். ஆனால் அவளோ அவன்மீதே மயங்கி சரிந்தாள்.


நிறைவாள்..............

Hai friends next update போட்டுவிட்டேன் படித்து எப்படி இருக்கு என்று சொல்லிவிட்டு போங்க paa அப்பொழுதான் நான் எப்படி எழுதுகின்றேன் என நான் அறிந்து கொள்ள முடியும் so படித்துவிட்டு அப்படியே போகாம ஒரு like ஒரு comment போட்டுவிட்டு போங்க friends
 

banumathi jayaraman

Well-Known Member
வானதி தேவி ரொம்பவே
பாவம்ப்பா, நளினி டியர்
இவளோட அம்மா-ல்லாம்
என்ன ஜென்மமோ?
சுமதியைப் போன்றவர்கள்
தாய்மைக்கே களங்கம்
உண்டாக்குறாங்களே?
வானதியின் அப்பாவும்
அக்காவும் அம்மா பேச்சைக்
கேட்டு வானதியை இப்படி
ஒதுக்கிட்டாங்களே?
 
Last edited:

Saroja

Well-Known Member
இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்
ஆண் பிள்ளைகளுக்கு ஒரு மாதிரி
பெண் குழந்தைகளுக்கு ஒரு மாதிரி
செய்வது
ஆனால் பிள்ளையாக கூட
நினைக்காத தாய் ராட்சசி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top