என்னில் நிறைந்தவளே - 14

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 14

அடுத்த நாள் அலுவலகம் வந்தவுடன் தருணும், ரமேஷ் தேவியை பார்க்க சென்றனர். அங்கு தேவியும் அனிதாவும் அடுத்த டெண்டர் பற்றி ஆலோசித்து கொண்டிருந்தனர்.

தருண் உள்ளே நுழையும் போதே கவனித்துவிட்டான் தேவியின் முகம் சரியில்லை என இருந்தும் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தான்

இவர்கள் வந்ததை பார்த்து அனிதா “என்ன தருண் நீங்களும் ரமேசும் ஒன்றாக வந்திருக்கீங்க ஏதாவது பிரச்சனையா”

தருண் “ரொம்ப முக்கியமானது, ரமேஷ் சொல்லுவான்”
தேவி என்ன என்று ஒற்றை புருவம் உயர்த்தி தருணை பார்த்தாள்

அவள் அவ்வாறு செய்யவும் தருணின் பார்வை ரசனையுடன் தேவியை வருடியது

ரமேஷ் “தருண் தேவியை சைட் அடிப்பதை பார்த்து என்ன சொல்ல வந்தா என்ன பண்றான் என்று மனதில் திட்டினான் பின் இவன் இப்போதைக்கு சொல்ல மாட்டன் என்று அறிந்து தானாகவே முன் வந்து மேம் கணக்கு வழக்குகளில் நிறைய குளறுபடிகள் உள்ளது அதுவும் இந்த ஆறு மாதங்களாக அதிகமாக நடந்துள்ளது”

அனிதா “என்ன சொல்றிங்க ரமேஷ் அப்படி நடக்க வாய்ப்பில்லை சீப் அக்கோடன்ட் முருகன் நம்பிக்கை ஆனவர் நாங்க தொழில் ஆரம்பிக்கும் போதே இருந்து இருக்கார்”

தருண் “ரமேஷ் சொல்வது உண்மைதான் நானும் ஒரு முறை சரிபார்த்தேன், என்னோட கணிப்பு படி இது வானதிக்கு முன்னாடியே தெரியும் அதனால் புதியதாக அக்கோடன்ட் தேர்ந்தெடுத்து இருக்கா”

அனிதா “என்ன தேவி தருண் சொல்வது போல் உனக்கு முன்பே தெரியுமா, அப்படி தெரியும் என்றால் அவரை வேலையை விட்டு நீக்கி இருக்கலாம் ஏன் இன்னும் அவரை வைத்திருக்கிறாய்”

தேவி “mr.விஜய் கணிப்பு சரிதான் எனக்கு மூன்று மாதம் முன்பே தெரியும் அதனால்தான் உன்னிடம் புதியதாக ஒருவரை தேர்ந்தெடுக்க சொன்னேன்”

அனிதா “அவரை வேலை விட்டு எடுக்க வேண்டியதுதானா”

தருண் “அது நமக்குதான் லாஸ் அவர்கிட்ட இருந்து அவர் கையாண்ட பணத்தை முதலில் வாங்கணும் இப்ப அவரை வேலைவிட்டு எடுத்தால் நாம்ம அதை செய்ய முடியாது”

தேவி “ரமேசை நோக்கி உங்களையும் கூடவே இன்னொருத்தரையும் எதற்கு தேர்வு செய்தோம் என்று இப்ப உங்களுக்கு தெரிந்திருக்கும் எனக்கு முழு விவரமும் வேண்டும் எங்க எவ்வளவு பணம் கையாடபட்டு உள்ளது என்று அதை முதலில் தயார் செய்து கொண்டுவாங்க.

ரமேஷ், அனிதா இருவரும் சென்றவுடன் தருண் தேவியை நெருங்கி என்ன ஆனது வானதி ஏன் ஒரு மாதிரி இருக்க உடல்நிலை சரியில்லையா இல்லை ஏதாவது பிரச்சனையா

தேவி மனதில் என்னுடைய சிறு அசைவை கூட தெரிந்து வைத்திருக்கிறான்.பாட்டி,அனிதாக்கு கூட தெரியவில்லை என்னுடைய மாறுதல் ஆனா இவன் வந்த உடனே கண்டுபிடித்துவிட்டான் என்று நினைத்து அவனுக்கு பதில் சொல்லாமல் தனது வேலையை தொடர்ந்தாள்

தேவி பதில் சொல்லாமல் தனது வேலையை தொடர்வது கண்டு தருண் அவளின் மிக அருகில் நின்று அவளின் கண்ணை பார்த்து கேட்டான். கேள்வி கேட்டால் பதில் சொல்லனும் அதை விட்டு நீ பாட்டுக்கு உன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருக்கிறாய் என இன்னும் அவளை நெருங்கி நின்றான்.

அவன் நெருங்கி அருகில் நிற்கவும் தேவி ஒரு வித அவஸ்தையாக உணர்ந்தாள் அதுவும் அவனின் பார்வை வார்த்தையில் உள்ள அழுத்தம் தேவியை எதோ செய்ய வாய் திறந்து வயிறு வலிக்கிறது என்றாள்

முதலில் ஒன்றும் புரியாது நின்றவன் பின்பு புரிந்து எப்பவும் மாதம் மாதம் இப்படிதான் வலிக்குமா

தேவி ஆம் என்று தலை ஆட்டினாள்
தருண் “சரி கிளம்பு போகலாம்”
தேவி “எங்கே என்று பார்வையால் வினவினாள்”

தருண் இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இப்பொழுது மட்டும் கண்களால் பேசுவாள் நான் பார்த்தால் ஏதாவது வேலை கொடுத்து அனுப்பி விட்றது என மனதில் நினைத்துகொண்டு பின் அவளின் பார்வை உணர்ந்து ஆஸ்பிட்டலுக்கு என்றான்

தேவி அசையாது நிற்கவும் அவளின் கையை பிடித்து இழுத்து சென்றான் அறையின் வெளியே வந்ததும் தேவி “நானே வரேன் என்று அவன் பிடித்திருந்த கையை விலக்கிவிட்டு அவனுடன் சென்றாள்”

மருத்துவமனையில் மருத்துவரை பார்த்துவிட்டு வெளியே தேவியை அங்குள்ள இருக்கையில் தேவியை அமர சொல்லிவிட்டு மருத்து வாங்க சென்றான்

அவன் திரும்பி வரும்போது தேவியுடன் இரு பெண்கள் நின்று பேசிகொண்டிருக்கவும் விரைவாக தேவியை அணுகினான். அவர்கள் தேவியை கேவலமாக பேச தேவி பதிலுக்கு பேசாமல் அமைதியாக கண்ணில் ஒரு வெறுமையை சுமந்து நிற்பதை கண்டான் அவளின் கண்களில் உள்ள வெறுமை அவனை தாக்க உனக்கு நான் இருக்கிறேன் என்னும் விதமாக அவளின் கையில் தனது கையை கோர்த்து நின்றான்.

அவர்கள் இருவரில் ஒருவர் இளமையாகவும் கூடவே கருதரித்தும் இன்னொருவர் நடுத்தர வயதை உடையரகவும் இருந்தனர்

தருண் வந்து தேவியின் அருகில் நின்றதோடு அவளின் கைகோர்க்கவும் அந்த நடுத்தர வயதை உடையவர் என்னடி இவ புருஷன் கிடைக்கவில்லை என்று இவனை பிடித்துகொண்டாயா இவன் யார் புருஷன் உன்னோட ஒருத்தி இருப்பாளே அவள் பெயர் என்ன அனிதா தானே அவளுடைய புருஷனா என்று தருணை காட்டி கூறினார்

தேவி அதிர்ந்து சிலையாக நின்றாள் கண்கள் மட்டுமே எல்லையில்லா வேதனையை பிரதிபலித்தது அதனை தருணும் கண்டுகொண்டான் உடனே தேவியை கை இறுக பற்றி வா வானதி என்று அழைத்து வந்துவிட்டான்

காரில் தேவியின் வீட்டிற்கு செல்லும்போது தருணும் எதுவும் கேட்டகவில்லை தேவியுன் அமைதியாக கண்மூடி அமர்ந்திருந்தாள் மூடியிருந்த கண்களின் வழியே கண்ணீர் வழித்து கொண்டிருந்தது.

அவளின் வேதனை மற்றும் கண்ணீரை கண்ட தருணின் மனம் அவளை அணைத்து ஆறுதல் படுத்த எண்ணியது அவனின் கைகளோ தானாகவே உயர்ந்தது அவளின் கண்ணீரை துடைக்க இருந்தும் சிரமப்பட்டு தன்னை கட்டுபடுத்தி கொண்டான்

தேவியை அவளின் வீட்டில் விட்டுவிட்டு அவளின் பாட்டியிடம் தன்னை அறிமுக படுத்திகொண்டன் தேவி அறைக்கு சென்றுவிட்டதை பார்த்து விட்டு என்ன பா நீதான் அனிதா சொன்ன தருண் விஜய்யா

தருண் “ஆமாம் பாட்டி எனக்கு வானதியை ரொம்ப பிடித்திருக்கு அவளை எனக்கு திருமணம் செய்து தருவிங்களா என நேரடியாகவே கேட்டான்”

பாட்டி “அவளை பற்றி உனக்கு அனைத்தும் தெரியுமா தெரிந்துதான் இந்த முடிவை எடுத்து இருக்கியா”

அவர் அவ்வாறு கேட்டு கொண்டிருக்கும்போது தேவியின் தாத்தா அங்கு வந்தார் அவர் வந்ததும் பாட்டி அவரை பார்த்து என்ன அண்ணே இந்த நேரத்திற்கு வந்திருக்கீங்க

தாத்தா “அதுவா நம்ம தேவி ஆஸ்பிட்டல் போயிருக்கா போல அங்க அவளுடைய அம்மாவும்,அக்காவும் செக்கப் செய்ய வந்திருக்காங்க தேவிய பார்த்து நல்ல நாலு கேள்வி கேட்டேன் அவள் இன்னும் திருந்தவில்லை இப்ப கூட எவனோ ஒருத்தன கூட்டிக்கிட்டு சுத்திகிட்டு இருக்கா என்று சொல்லிடு இருந்தா அதுதான் தேவிக்கு என்ன என்று பார்க்க வந்தேன்”

பாட்டி “அதுதான பார்த்தேன் அவளுங்க சும்மாவே இருக்க மாட்டாங்களா எப்ப பாரு இவளை எதாவது சொல்லிகிட்டே இருக்காங்க இவதான் அவங்க யாரும் வேண்டாம் என்று ஒதுங்கி போறாதான அப்புறம் எதுக்கு சும்மா வழிய வந்து சண்டை போடுறாங்கள்”

இவர்கள் பேசிகொண்டிருந்ததை கேட்டுகொண்டிருந்த தருணின் மனதில் அப்ப ஆஸ்பிட்டலில் பார்த்த இரண்டு பெரும் தேவியின் அம்மா, அக்காவா என்று நினைத்தான். பின் அவங்க ஏன் வானதியை இப்படி பேச வேண்டும்

தாத்தா “அதை விடு மா தேவிக்கு என்ன ஆச்சு எதுக்கு ஆஸ்பிட்டல் போன”
பாட்டி “பாருங்க அண்ணா இந்த தம்பி வந்ததும் நா எதுவும் கண்டுகொள்ளவில்லை”

அப்பொழுதுதான் தாத்தா தருணை கவனித்தார். பாட்டியிடம் யார் என்று கேட்டார் பாட்டி சொன்ன உடன் அவரும் பாட்டி கேட்ட அதே கேள்வியையே தருணை பார்த்து கேட்டார்

தருண் “எனக்கு எதுவும் தெரியாது அப்படியே தெரியவந்தாலும் எனக்கு அவளுடைய இறந்தகாலம் வேண்டாம்”

தாத்தா “இல்லை பா அவள் அன்புக்காக நிறைய ஏங்கி இருக்கா அவளுக்கு கணவனாகவரவர் அவளிடம் நிறைய அன்பு செலுத்தனும் அனுசரணையா இருக்கணும் அப்பொழுதுதான் அவளின் மனதின் காயங்கள் ஆறும் அதுக்காக அவளை பற்றி அனைத்தும் நீ தெரிந்து கொள்ளவேண்டும்

நீ அவளிடம் காதலை சொல்லி அவள் ஏற்று கொண்ட பிறகு அவளை பற்றி தெரிந்து நீ விட்டு சென்றால் அவள் தாங்க மாட்டாள். ஆனா ஒன்று சொல்கிறேன் நடந்த நிகழ்வுகளில் தேவியோட தவறு எதுவுமில்லை இருந்தும் என்ன நடந்தது என்று நீ தெரிந்து கொள்ளவேண்டும்”

தருண் “தாத்தா எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் அப்படி தெரிந்துதான் காதல் வரும் என்றால் அது உண்மையாக இருக்காது. எனக்கு தெரியும் என்னுடைய வானதி மீது எந்த தவறும் இருக்காது என்று அவள் எதை செய்தாலும் அதில் ஒரு நேர்மை இருக்கும் அதுவும் இல்லாமல் யாரையும் கஷ்டபடுத்த கூடாது என நினைப்பவள் என நான் வந்த இந்த சில மாதங்களிலே தெரிந்து கொண்டேன்

எனக்கு வானதியை நீங்க திருமணம் செய்து கொடுத்தால் அவளை கைகளில் வைத்து தாங்குவேன்.அவளுக்கு ஒரு துன்பமும் வராமல் பார்த்து கொள்வேன்

அவன் சொன்னதை கேட்ட இருவரும் மிகவும் ஆனந்தம் அடைந்தனர் தேவிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையபோகிறது என்று பின் தருணிற்கு தங்கள் ஆசிகளை வழங்கினர்


நிறைவாள்..................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top