என்னில் நிறைந்தவளே - 11

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 11

தருண் வேளையில் சேர்ந்து ஒரு வாரம் கடந்த நிலையில் தருண் தனது அறையில் இந்த வாரம் நடந்ததை பற்றி நினைத்துக்கொண்டிருந்தான்

அவனுக்கு தேவியை நேரில் பார்க்கும் வரை எந்தவித உணர்வும் தோன்றவில்லை அவன் அம்மா சொன்னதற்காக வந்தான் ஆனால் தேவியை நேரில் பார்த்த பொழுது அவனில் ஏதோ ஒரு உணர்வு தோன்றுவதை உணரத்தான் அதிலும் அவளுடைய கண்கள் அவனை மிகவும் கவர்ந்தன

அவளின் எதற்கும் பணியாத துணிச்சல், என்ன பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் அவனை மிகவும் கவர்ந்தது.

அவன் தனது வாழ்வில் சந்தித்த பெண்களில் மிகவும் வித்தியாசமாக காணப்படுவதாக அவனுக்கு தோன்றியது. அவளின் செயல்களை அவன் மனம் மிகவும் ரசித்தது. அப்போது அவன் மனதில் அம்மா தனக்கு சரியாய் பெண்ணைதான் தேர்ந்தெடுத்திருக்காங்க என்று தோன்றியது

இந்த ஒரு வாரத்தில் எத்தனை முறை என்ன பொண்ணுடா இவ என்று நினைத்திருப்பான் அந்த தருணங்களில் ஒன்று அவன் கண்முன்னே தோன்றியது.

முதல்நாள் அலுவலகத்தில் சேர்ந்ததும் ராகவியிடம் தான் பொறுப்புகள் என்ன என்பதை தெரிந்துகொண்டான். அதை தொடர்ந்து செயலாற்றி வந்தான்

ஒருநாள் தேவி,ராகவி மற்றும் தருண் முவரும் வேலை நடக்கும் சைட்டிற்கு சென்றிருந்தனர் அங்கே தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்ணிடம் ஒருவன் தவறாக நடந்து கொள்ள முயல்வதை பார்த்த தேவி அவனை அறைந்ததொடு மட்டுமல்லாமல் வேலையைவிட்டு நீக்கிவிட்டு அவனுக்கு வேறு எங்கேயும் வேலை கிடைக்காதவாறு செய்துவிட்டாள் அதை நினைக்கும்போது இப்பொழுது கூட அவனுக்கு தோன்றியது என்ன பொண்ணுடா இவள் என்று

இது போன்று அவளின் செயல்களை கண்டு மிகவும் ஆச்சர்யபட்டுள்ளான் அதே நேரத்தில் அவளின் செயல்களை ரசிக்கவும் ஆரம்பித்திருந்தான்

அவளின் கூறிய பார்வை எதிரில் இருப்பவர்களை எளிதில் எடை போட்டுவிடும். அவளின் ஒரு சீரிய பார்வையே என்னிடம் இருந்து தள்ளியே இரு என்று சொல்லுவது போல் உணர்ந்தான்

இவ்வாறு நடந்ததை நினைத்து கொண்டு அமர்ந்திருந்த தருணை கலைத்தான் ரமேஷ்

ரமேஷும்,தருணுடன்தான் தங்கியிருக்கிறான் அன்று வேளையில் சேர்வதாக சொல்லிவிட்டு வெளியே வந்த ரமேஷ் யோசனையுடன் நின்றிருந்தான். அவனில் யோசனையை கலைத்து என்ன வென்று தருண் வினவினான்

ரமேஷ் “ஒரு நாள்தான் கொடுத்திருக்காங்க அதுக்குள்ள எப்படி தங்க இடம் பார்கிறது என்று யோசித்து கொண்டிருந்தேன்”

தருண் “நான் தனியாத்தான் இங்க பக்கத்தில் உள்ள பிளாட்டில் தங்கி இருக்கேன் நீ என்கூட வந்து தங்கிகோ

ரமேஷ் தயங்கவும் தருண் நானும் தனியாத்தான் இருக்கணும் நீ வந்தா எனக்கும் உதவியா இருக்கும் என்று கூறினான்

ரமேசும் சரி என்று அவனுடன் தங்கி கொண்டான் அவர்கள் வசிக்கும் இடம் கம்பனிக்கு அருகில் இருந்தது

தினமும் இருவரும் ஒன்றாகவே பைக்கில் அலுவலகம் வருவர் பின் ரமேஷ் மாலையில் பைக்கில் வீட்டிற்கு வந்துவிடுவான். தருணை மலையில் தேவியே drop செய்துவிடுவாள்

ரமேஷ் கூப்பிட்டதும் தனது நினைவில் இருந்து ரமேசை நோக்கி என்ன என்றான்.

ரமேஷ் “என்ன பாஸ் காலையிலே கனவா வேலைக்கு கிளம்புகிற idea இல்லையா. இன்னைக்கு ஏதோ மீட்டிங் இருகிறதா சொன்னிங்க அதுவும் மேடம் வேற எல்லாத்திற்கும் உங்களையே கூப்பிடுறாங்க. இந்த ஒரு வாரத்தில் மேடம் கிட்ட நல்ல பேர் வாங்கிட்டிங்க”

அவன் சொன்னதும் தருணின் முகம் புன்னகை பூத்தது ராகவி இன்னும் நான்கு நாட்களில் விடைபெருவதால் தேவியின் அனைத்து வேலைகளையும் அவனே கவனிக்கும் படி ஆனது.

இருவரும் அன்று அலுவலகம் சென்று இறங்குவதற்குள் தேவியின் கார் இவர்களை கடந்து சென்றது அதை கண்ட ரமேஷ் போச்சு இன்னைக்கு நாம மாட்டினோம் அவ்வளவுதான் என்றான்.

யாரவது லேட்டாக வந்ததை தேவி பார்த்தால் அவர்களை திட்டியதோடு அவர்களுக்கு நேரத்தை பற்றி இலவச அறிவுரை வழங்கப்படும் அதற்கு ரமேஷ் பயந்தான்

அவள் தனது அறையை அடையும் முன்பே தருணும்,ரமேஷ்வும் வேகமாக படிகளில் ஏறி தங்கள் இடத்தை அடைந்தனர். பின் மீட்டிங்கிற்கு அவளை அழைக்கவே உள்ளே சென்றான். அழைக்க சென்றவன் விழி எடுக்காமல் அவளையே பார்த்து நின்றான்

இன்று அவள் வெள்ளை நிற சேலையில் பச்சை வண்ண எம்ராய்டரி பூ போட்ட சேலை அணிந்து அதற்கு ஏற்றாற்போல் அணிகலன்களும் அணிந்திருந்தாள் அவளின் பளிங்கு நெற்றியில் இருந்த ஒற்றை கல்வைத்த போட்டு, கண்ணில் இட்டிருந்த மை பளபளப்பான கன்னம் ஆரஞ்சு சுலை போன்ற உதடு இவை அனைத்தும் அவனை இம்சித்தது, விரித்து விட பட்டிருந்த ௯ந்தல் அதில் சிறிதாக வெட்டபட்டு நெற்றியில் வந்து விழுந்த முடி அவளை மிக அழகாக காட்டியது

தேவி யாரோ தன்முன் நிற்பதை உணர்ந்து கணினியில் இருந்து திரும்பி பார்க்க அங்கு தருண் நின்று இவளை ரசித்து கொண்டிருக்க அவனது பார்வை தன்மீதே நிலைத்திருப்பதை கண்டு mr.விஜய் என்றாள்

அவளில் அழைப்பில் தன்னுணர்வு பெற்றவன் மேம் மீட்டிங்கிற்கு டைம் ஆகிவிட்டது என்றான்

அவள் எதுவும் பேசாமல் எழுந்து கான்பரன்ஸ் ஹாலை நோக்கி சென்றாள் அவள் பின்னே தருணும் சென்றான்

இவர்கள் வருவதற்கு முன்பாகவே அனிதா மற்றும் சிவில் இன்ஜினியர்கள், ஆர்கிடெக் மற்றும் இன்டிரியர் டிசைனர் அமர்ந்திருந்தனர்

இவள் உள்ளே நுழைந்ததும் அனைவரும் வணக்கம் தெரிவிக்க ஏற்று கொண்டவள் தனது தோழியை பார்த்து புன்னகை புரிந்தாள் பின் பேச ஆரம்பித்தாள்

இங்க சென்னையில் xxx பேங்க் ஒரு regional ஆபிஸ் கட்டபோகின்றது பற்றி கேள்வி பட்டிருப்பீங்க. அதற்கு நம்ம கம்பனியையும் டெண்டர் அனுப்ப சொல்லி கேட்டு இருக்காங்க அதுக்கான பிளான் மொத்தமும் 15 நாட்களுக்குள் எனக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து கொடுக்கணும்

நீங்க டீமா சேர்ந்து அதை ரெடிபண்ணுங்க ஒவ்வொன்னுக்கும் எவ்ளோ அமொண்ட் தேவைப்படும் என்று தனிதனியா ரெடி பண்ணுக

இவள் பேசிக்கொண்டிருக்கும் போது தருண் அவளையேதான் பார்த்து கொண்டிருந்தான் அவளின் மேனரிசம், முகபாவனை, முன்னால் வந்து கண்களை மறைக்கும் முடிகளை காதோரம் ஒதுக்குவது போன்ற செயல்களை ரசித்து கொண்டிருந்தான். அவள் முடியை காதின் ஓரம் ஒதுக்கும்போது அவளின் கையை விலக்கிவிட்டு தான் அதை செய்ய மாட்டோமா என்று அவனுக்கு அவனின் மனம் ஏங்கியது.

மொத்தத்தில் அவன் மீட்டிங்கை கவனிக்காமல் தேவியை கவனித்து கொண்டிருந்தான் அந்த மீட்டிங்கில் என்ன நடந்தது என அவனை கேட்டால் அவனுக்கு ஒன்றுமே தெரியாது அந்த அளவுக்கு தேவியை பார்வையால் வருடிகொண்டிருந்தான்

இவன் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதை அனிதா கண்டுகொண்டாள். அனிதா மனதில் என்ன இவன் தேவியை இப்படி பார்க்கிறான் என்றே தோன்றியது

மீட்டிங் முடிந்ததும் கேட்கலாம் என்றிருந்தால் அதற்குள் வேறு முக்கிய வேலை வந்துவிட கேட்க மறந்து சென்றுவிட்டாள்.

நிறைவாள்.................

Hai friends next epiயும் போட்டுவிட்டேன் படித்துவிட்டு எப்படி இருக்கு என்று ஒரு ரெண்டு வரத்தை சொல்லிவிட்டு போங்க அப்பதான் என் மனசு சந்தோஷபடும் ok வா friends?
 
muthu pandi

Well-Known Member

nice
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top