எனது பார்வையல் விஷ்வதுளசி

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
சஞ்சனாவின் மகேஸ் ன் விஷ்வதுளசி எனது பார்வையில். எழுத்தாளர் தனது முதல் கதை என்று பதிவு செய்துள்ளார். அழகான குடும்பம் அதில் சண்டை பிரிவு, காதல் , திருமணம் என்று ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை.

விஸ்வநாதன் என்ற பெயர் சொல்லும் மனிதரின் அன்பு மனைவி பார்வதி அவர்களின் மூன்று ஆண்மக்கள் ஒரு பெண் கோதை. மகள் கோதையின் கணவர் சிவராமன் அவரின் சிறுதடுமாற்றத்தால் மாமனாருடன் சண்டை போட்டு தப்பாக நினைத்து ஊரைவிட்டு மனைவி மகனுடன் வெளியேறுகிறார்.

மகளை பிரிந்த பெற்றோர் வருத்தத்தில் இருக்கின்றனர். கோதை அப்பாவிடம் கணவரை மன்னிப்பு கேட்க சொல்கிறார், ஆனாலும் அண்ணியின் கட்டாயத்தால் கணவருடன் செல்லும் கோதையும் 24
வருட பிரிவை எண்ணி வருந்துகிறார். இந்நிலையில் கோதையின் மகன் வினயக்காக தங்கை துளசி தாத்தா வீட்டிற்கு வந்து சமாதானம் செய்ய வருகிறாள். அதே நேரம் அவர்களின் பெற்றோரும் மன்னிப்பு கேட்க வருகிறார்கள். சில நெருடல்களுடன் குடும்பம் ஒன்று சேருகிறது. பாட்டி பார்வதி உடல்நிலை காரணமாக விஷ்வா மற்றும் துளசியின் திருமணம் அவசரமாக நடைபெறுகிறது. அந்த திருமணத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டார்களா, குடும்பம் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையை காப்பாற்றினரா என்பதை யதார்த்தமாக தந்துள்ளார். முதல் கதையை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள் மகி.
 
Mahes06

Writers Team
Tamil Novel Writer

நன்றி சித்ரா சிஸ் அறிமுக எழுத்தாளர் ஆனா எனக்கு உங்கள் ஆதரவை தந்ததற்கு வாசிக்கும் பழக்கம் மட்டும் உண்டு எனக்கு பேச்சு மிக சரளமாக வரும் ஆனால் எழுத்து என்று வரும் போது தடுமாற்றம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை எழுதுங்க என்று சொல்லி நான் எழுத முதல் காரணம் இந்த தளத்தின் எழுத்தாளர் மகேஸ்வரி ரவி சிஸ் அதுக்கு ஊக்கம் கொடுத்து நான் பண்ணின பண்ணிட்டு இருக்கும் தவறுகளை திருத்திக் கொடுத்தது நம் தள வாசகி சீத்தா வேலு சிஸ் இவங்க இரண்டு பேருக்கும் மீண்டும் என் நன்றி களை சொல்ல ஆசைபடுறேன் நிச்சயம் அடுத்த கதைகளை இன்னும் நல்லா கொடுக்க முயற்சி பண்றேன் சிஸ் உங்க வாழ்த்துகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் சிஸ்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top