உன் நிழல் நான் தாெட ep7

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
.உன் நிழல் நான் தொட
-- செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 7

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ?

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ?-மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?

சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமே!
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தே னுரைத் தனனே;-மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க
கச்ச முண்டோடா-மனமே?
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!

தெளிவு ஒன்றே மனிதனை எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெறச் செய்கின்றது. எப்பொழுது அவன் குழப்பத்தில் தவிக்கின்றனாே அப்பொழுது அவனால் சரியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை.

ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி எதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னா, ஜஸ்வந்த் தன்னிடம் காதலை கூறியதை எற்றுக்காெள்ள முடியவில்லை. கடந்த ஏழு வருடங்களில் ரத்னா தன் விளையாட்டு தாேழனாக இருந்த ஜஸ்வந்தை மறக்கவில்லை. அதே சமயம் அவனை நினதை்துக்காெண்டும் இருக்கவில்லை. ரூபாவின் நினைவு வரும்பாேது எல்லாம் ஜஸ்வந்த் நினைவும் வந்து பாேகும். அதற்கு மேல் ரத்னா யாேசித்து பார்த்ததில்லை. திடிரென்று தன்னை காதலிப்பதாக கூறவும் தன் மூளையே செயலற்று இருக்க.

ரத்னாவின் பதிலுக்காக காத்திருந்த ஜஸ்வந்த் ரத்னாவின் உணர்ச்சியற்ற வெளிரிய முகத்தை பார்த்து பயத்தில் இருந்த ரத்னாவை சமாதனப்படுத்தும் முன் ரத்னா கையில் இருந்த அஜீத் பாேன் ஒலிக்கும் ஓசையில் சுய உணர்வு பெற்ற ரத்னா என்ன செய்வது. இது யாராக இருக்கும் என யாேசித்து காெண்டிருக்க, பாேன் எழுப்பிய இசையில் ரத்னாவிடம் வந்த அவள் சாேர்ந்த முகத்தை பார்த்து அஜீத் ஏதே பிரச்சனை என்பதை அறிந்து ரத்னாவை திசை திருப்ப என்னி

"ரத்னா பாேன் அடிக்குது கேக்கலயா?"

"பாத்தேன் Unknown Numberனு வந்துச்சு அதான் என்ன செய்யனு தெரியல."

"ஒரு வேளை உன் அக்கா வா இருந்தா எடுத்து பேச வேண்டியது தானா." அஜீத்தின் பேச்சை கேட்ட ஜஸ்வந்த் ரத்னா எப்பாே பாேன் வாங்குன, ரூபா கிட்ட எப்புடி ரத்னா நம்பர் கிடைச்சுது என யாேசித்துக் காெண்டிருக்க

"ப்ளிஸ் அஜீத் எனக்கு இப்பாே தனியா இருக்கனும் பாேல இருக்கு. நான் ஹாஸ்டல்க்கு பாேறேன்." என்று வெளியேற முயற்சி செய்ய ரத்னாவின் கைகளை பற்றிய ஜஸ்வந்த்

"ரத்னா எனக்கான பதில சாெல்லிட்டு பாே." ரத்னா ஜஸ்வந்த் கையிலிருந்து விடுபட முயற்சி செய்து காெண்டே

"ப்ளீஸ் கைய விடுங்க எல்லாரும் பாக்குறாங்க. நான் குழப்பமா இருக்கும் பாேது எதுவும் பேசமாட்டேன். நான் கொஞ்சம் யோசிச்சுட்டு உங்க கிட்ட பேசுறேன்."

"ரத்னா இதுல நீ யோசிக்க என்ன இருக்கு. நீ என்ன மேரேஜ் பண்ணிட்டேனா எப்பவுமே உங்க அக்கா கூட இருக்கலாம். உனக்கு புடிச்ச எல்லாமே உனக்கு கிடைக்கும்." தன் கையை விடாமல் பேசிக் கொண்டே செல்ல பொறுமை இழந்த ரத்னா

"ஜஸ்வந்த் நான் யாேசிக்கிறேன்னு சாென்னது உங்க காதல பத்தி இல்ல. நீங்க சாென்ன விஷயத்த உங்க மனசு கஷ்டபடம எப்படி வேண்டானு சாெல்றதுனு."

"நீ என்ன வேணான்னு சொல்றதுக்கு என்கிட்ட என்ன குறை இருக்கு. அப்படி என்ன மறுக்கிற இருக்கிற ஒரே ஒரு காரணத்தை சொல்லு." அதற்குமேல் சும்மா இருக்க முடியாத அஜீத் ஜஸ்வந்த் கையிலிருந்து ரத்னாவின் கைகளை பிரித்து எடுக்க அஜீத்தை பார்த்து முறைத்துவிட்டு

"நீ எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் வராத வெளியே போடா ரஸ்கல்."

"வார்த்தையை அளந்து பேசுங்கள். அஜீத் என்னுடைய ஃப்ரெண்ட்."

"இவன் உனக்கு ஃப்ரெண்டா? அப்பனா நான் உனக்கு யாரு?"

"உங்கள நானும் இத்தனை வருஷமா பிரண்டாதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா அது இந்த நிமிஷம் இல்லாம போயிடுச்சு. நீங்க உங்களை மறுக்க ஒரு காரணம் கேட்டீங்க. இப்ப நான் அதை சொல்றேன் எனக்கு காதல்னா சுத்தமா பிடிக்காது. எங்க அக்கா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப சந்தோஷமா தான் இருக்கா. ஆனா எங்க வீட்ல யாருமே சந்தோசமா இல்ல. ஏற்கனவே கஷ்டத்துல இருக்குற அவங்கள என்னால கஷ்டப்படுத்த முடியாது. அதுமட்டுமில்லாமல் உங்கள பத்தி மட்டுமே நீங்க யோசிக்கிறீங்க, என்னால அப்படி என்ன பத்தி மட்டும் யோசிக்க முடியாது. எனக்கு இந்த உலகத்தை ரொம்ப முக்கியமான விஷயம் என்ன என்னோட குடும்பம் மட்டும் தான் வேற எதுவும் எனக்கு முக்கியமில்லை."

"அப்போ நீ என்ன வேண்டாம்னு என்று முடிவு பண்ணிட்டியா"
"என் குடும்பத்தை கஷ்டப்படுகிறான் எதுவும் யாரும் எனக்கு தேவையில்லை."

"ஓகே ரத்னா ஒருவேளை உங்க வீட்டில உள்ளவர்களே உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதம் சொன்னா என்ன பண்ணுவ?"

"அப்படி முடிவு பண்ணா எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்லை. என்னோட முடிவு எப்பவும் என்னுடைய குடும்பம்தான்." ரத்னாவின் பதிலால் ஏற்பட்ட கோபத்தை ஜஸ்வந்த் கட்டுப்படுத்த கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, ரத்னா அஜீத்திடம்

"நான் கிளம்புகிறேன் அஜித், நாளைக்கு பாக்கலாம்." ரத்னா சென்ற திசையை பார்த்துக்கொண்டு அஜித் நின்றுகொண்டிருக்க, அவனின் சட்டையை பிடித்து தன் புறம் திருப்பிய ஜஸ்வந்த்

"நீ ஒழுங்கு மரியாதையா ரத்னா கிட்ட இருந்து தள்ளி இரு. இன்னும் ஒரு தடவை நீ ரத்னா கிட்ட க்ளோஸ் இருக்கிறதா நான் பார்த்தா அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது." தன் சட்டையை பற்றியிருந்த ஜஸ்வந்த் கையை தட்டிவிட்டு

"இதையே நானும் உங்ககிட்ட சொல்லலாம். இன்னும் ஒரு தடவை ரத்னாவை நீங்க தொந்தரவு பண்ணுனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது. பார்த்து நடந்துக்கோங்க, ஏன்னா இது என்னுடைய ஊர்." என்று ஜஸ்வந்தை எச்சரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்

ரத்னா ஹாஸ்டலுக்கு வந்தவுடன் மீண்டும் அஜித்தின் போன் ஒலி எழுப்ப அதை கவனித்த ரத்னா அழைப்பை ஏற்க

"ஹலோ யார் பேசுறீங்க? இது ரத்னாவா? சீக்கிரம் சொல்லுங்க." என்று எதிர்புறம் இருந்து கேட்ட குரலை உள்வாங்கிய ரத்னா அது தன் அக்காவின் குரல் என்பதை புரிந்து கொண்டு மெல்லிய குரலில் பாட

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
கண்ண னழகு முழிதில்லை;
நண்ணு முகவடிவு கானில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.

தான் சொல்லிக்கொடுத்த பாடலை பாடும் பாெண் நிச்சயமாக தன் தங்கையாக தான் இருக்கவேண்டும் என்பதை புரிந்து கொண்ட ரூபா

"எப்படி இருக்க ரத்னா? நான் உன்கிட்ட பேசணும்னு இவ்வளவு முயற்சி பண்ணனேன் தெரியுமா. ஆனா நீ ஒரு தடவை கூட இந்த அக்கா கூட பேசணும்னு ஆசைப்படவில்லை."

"எனக்கு உன் கூட பேசணும் ரொம்ப ஆசையா இருந்திந்துச்சு, ஆனா என்னால உன்ன மாதிரி பெரியப்பா வேண்டாம்னு முடிவு பண்ண முடியல."

"குட்டிமா உனக்கு இன்னும் அக்கா மேல கோபம் போகலையா."

"இப்ப மட்டும் இல்ல எப்பவும் கோபம் போகாது."

"அப்புறம் எதுக்கு எனக்கு பேஸ்புக்ல ரிக்வெஸ்ட் கொடுத்த? உன் நம்பரா அனுப்புன?"

"எனக்கு உன்ன பத்தி தெரிஞ்சுக்கணும் தோணிச்சு. நீ எப்படி இருக்க, எங்க இருக்கனு. யார் கிட்ட நான் கேட்டு தெரிஞ்சுக்க முடியும். அதனால்தான் ரிக்வெஸ்ட் கொடுத்தேன்."

"அப்படினா பழைய மாதிரி என்கிட்ட நீ பேச மாட்டியா."

"பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்குக்கா. உன் மடியில படுத்து தூங்கணும். நீ பாடிய பாட்டு கேட்டு ரசிக்கனும்."

"இப்போ அதையெல்லாம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்."

"உண்மையிலேயே உனக்கு என் கூட பேசணும்னு ஆசையா இருந்துச்சுன்னா சீக்கிரமே பெரியப்பா கூட சமாதானமாகிடு அக்கா."

"அப்பா கிட்ட பேச நான் முயற்சி பண்ணலன்னு நீ நினைக்கிறாய."

"பேச முயற்சி பண்ணியிருப்ப. ஒருதடவை பெரியப்பா கிட்ட மன்னிப்பு கேளுங்க."

"அப்பாகிட்ட நான் எதுக்கு மன்னிப்பு கேக்கனும். நான் பண்ணதுல என்ன தப்பு இருக்கு."

"சரிக்கா நீங்க பண்ணது எந்த தப்பும் இல்லை. ஆனா மன்னிப்பு கேட்ட நீங்க ஒன்னு தாழ்ந்து பாேயிட மாட்டிங்க. அப்புறம் எனக்கு இன்னொரு தடவை போன் பண்ணாதீங்க இது என்னோட போன் இல்ல. என் பிரண்டு போன்."

"கோவப்படாத ரத்னா. பேஸ்புக்ல உன்னோட டீடெயில்ஸ் பார்த்தேன். நீ கோயம்புத்தூர் காலேஜ்லையா படிக்கிற." தமக்கையின் கேள்விக்கு படித்துவிட்டு பதில் அளித்துவிட்டு சிறுது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து போனை அருகிலிருந்த மேசையின் மீது வைக்க அது தவறி விழுந்து உடைந்துவிட்டது. அதன் பிறகு ரத்னாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சிறுவயதிலிருந்தே பெற்றோருக்கு பிடிக்காததை செய்யாத ரத்னாவிற்கு பெற்றோருக்கு பிடிக்காது என்று தெரிந்தும் ரூபா விடம் பேசியதால் ஏனோ மனது பாரமாக இருப்பது போல் உணர்ந்தாள். அதேசமயம் அஜித் தன்னை நம்பி கொடுத்த போனை உடைத்த எண்ணி வருந்தினாள் ரத்னா. எனவே ஹாஸ்டலில் இருந்த போனின் மூலம் வீட்டிற்கு அழைத்தாள். மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டதும்

"ஹலோ ரத்னா எப்படி இருக்க?" என்று பெரியப்பாவின் குரலை கேட்டதும் முதலில் தயங்கிய ரத்னா "பெரியப்பா நல்லா இருக்கீங்களா? நான் நல்லா இருக்கேன்."

"என்னாச்சும்மா உங்க குரலில் ஏதோ மாதிரி இருக்கு." தன் குரலின் வித்தியாசத்தை பெரியப்பா உணர்ந்து கொண்டதை வைத்தேன் அவரின் பாசத்தை புரிந்து கொண்ட ரத்னா

"என்ன மன்னிச்சிடுங்க பெரியப்பா நான் உங்களுக்கு பிடிக்காத செஞ்சுட்டேன்."

"நீங்க எப்பவும் இந்த பெரியப்பாவுக்கு பிடிக்காததை செய்யமாட்ட."

"இல்ல பெரியப்பா உங்களுக்கு ரூபா அக்காகிட்ட பேசினா பிடிக்காது தானே. நான் இன்னைக்கு ரூபா அக்காகிட்ட போன்ல பேசினேன். என்ன மன்னிச்சிடுங்க பெரியப்பா."

"ரூபா மேல நான் கோவமா இருக்கறது உண்மைதான். அதுக்காக நீ ரூபா கிட்ட பேச கூடாதுன்னு நான் எப்பவும் சொன்னது இல்ல. அதனால கவலைப்படாமல் உன் படிப்பை பாரு சரியா. வேற எதுவும் இருக்கா?

"இன்னும் ஒன்னு உங்ககிட்ட சொல்லணும்."

"சொல்லுமா"

"என்னோட ப்ரெண்ட் போன்ல இருந்து தான் அக்கா கிட்ட பேசினேன். அந்த போன் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு."

"உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா. ஒரு பொருளை ஒருத்தன் கிட்ட இருந்து வாங்குனா அதை பத்திரமாக அவங்ககிட்ட திருப்பிக் கொடுக்கணும் அப்பத்தான் அவங்க இன்னொரு தடவை நமக்கு உதவி பண்ண நினைப்பாங்க. கைல தான் ஏடிஎம் கார்டு இருக்குதானே நாளைக்கு புது போன் வாங்கி உன் பிரண்டு கிட்ட கொடுத்திடு அப்படியே உனக்கும் ஒரு போன் வாங்கிக்க."

"எனக்கு போன் வேண்டாம் பெரியப்பா."

"உனக்கு வேண்டாம் ஆனால் எங்களுக்கு உங்க கூட எப்ப பேசறது தோன்றினாலும் ஹாஸ்டலுக்கு போன் பண்ணிட்டு காத்திருக்க முடியல. அதனால போன் வாங்கி உன் கையிலேயே வச்சுக்கோங்க. சரியா."

"சரி பெரியப்பா." பெரியப்பாவிடம் பேசிய பின்பு மனது லேசானது போல இருந்த ரத்னா உணர்ந்தாள். அடுத்த நாள் அஜித்திடம் மனிப்பு கேட்டு, மறுத்த அஜீத்தை அழைத்துக்கொண்டு சென்று உடைத்த போன் மாதிரி ஒன்றை வாங்கி கொடுத்துவிட்டு தனக்கானதை தேர்வு செய்ய சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, அவரிடம் வந்த அஜீத்

"ரத்னா உனக்கு அதுக்கப்புறம் எந்த பிரச்சினையும் இல்லையே?"

"என்ன பிரச்சினை. ஜஸ்வந்த் பத்தி சொல்றியா, நான் அதை அப்போவே மறந்துட்டேன்."

"நீ மறந்துட்ட. ஆனால் ஜஸ்வந்த் இத மறந்து இருக்கணும் தானே."

"அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. சரி அதை விடு இந்த போன் எப்படி இருக்கு." ரத்னா எடுத்த பட்டன் பாேனை பார்த்து

"இந்த போனா? வேற ஏதாவது நல்ல போன எடு."

"இந்த போன்ல தான் எனக்கு பிடிச்ச கேம் இருக்கும். அதன் நான் இதையே எடுத்துக்கிறேன்."

"புது போன் வாங்கி யாராவது கேம் விளையாடுவாங்கலா."

"நான் விளையாடுவேன்."

"இந்த போன் வாங்கு. அதுல வேண்ணும்ன உனக்கு புடிச்ச மாதிரி நிறைய கேம் டவுன்லோட் பண்ணி வச்சிக்கலாம்."ஒருவழியாக போன் வாங்கிவிட்டு வெளியேற ரத்னாவை ஒருவன் பின் தொடர்வதை அறிந்த அஜீத்

"ரத்னா வா நான் உன்ன ஹாஸ்டெல்ல விடுறேன்"

"வேண்டா அஜீத் நான் பஸ்ல பாேயிடுறேன்."

"ஓகே இந்த சிம் காட் உன் பாேன்ல பாேட்டுக்காே. நீ ரீச் ஆனதும் கால் பண்ணு."

"சரி பாய்."

அதன் பின் வந்த நாள்களில் வேறு வேறு நபர்களால் ரத்னா கண்கனிக்கப்படுவதை அறிந்த அஜீத் ரத்னாவை தனியே அனுப்புவதில்லை. தானாே பிரபுவாே அல்லது ஸ்டெல்லா யாருடனவது இருக்கும்படி கவனித்துக்காெண்டான்.

இதற்கு இடையே தினமும் இரவில் தாமதமாக தந்தை வருவதை கவனித்த அஜீத் தாயிடம் கேட்க

"புதுச இன்னாெரு சூப்பர் மார்கெட் ஆரம்பிக்கபாேறாங்க. அதன் அப்பாக்கு வேலை அதிகம். எல்லாத்தையும் ஒரே ஆளா பாத்துக்க வேண்டியதா இருக்கு." என கனவரின் கஷ்டங்களை மகனிடம் பகர்ந்து காெண்டார். அன்று இரவு தாமதமாக வீடு வந்த கனவரிடம் மைதிலி

"நீங்க மட்டுமா ஏன் கஷ்டபடுனும். வேலை பாத்துக்க கூடுதலா ஆள் பாேடலாமே."

"எவ்வளவு ஆள் இருந்தாலும் சில வேலைய நாம தான் பாக்கனும்."

தந்தையின் சாேர்ந்த தாேற்றத்தை பார்த்த அஜீத் அடுத்த நாள் கல்லூரி முடிந்ததும் நேராக தந்தையின் சூப்பர் மார்கெட் செல்ல

"என்ன அஜீத் எதுக்கு இப்பாே கடைக்கு வந்துருக்க. என்ன விஷயம்."

"எனக்கு உங்க கடையில வேலை வேணும்.""என்ன வேலையா? ஒழுங்க வீட்டுல பாேய் படிக்கிற வழிய பாரு."

"நான் ஒன்னும் படிப்ப விட்டுட்டு வேலைக்கு வரேன் சாெல்லல. காலேஜ் முடிஞ்சதும் தான் வேலை பார்க்க வரேன்."

"இப்பாே அதுக்கு என்ன அவசியம். வீட்டுக்கு பாே."

"அவசியம் தான். நீங்க தான சாென்னீங்க சின்ன வயசுல இருந்து யாராேட தயவும் இல்லாம சுயமா சம்பாதிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்னு. நான் உங்க பையன் எனக்கும் உங்க குணம் காெஞ்சம் இருக்கும் தான. ஒருவேளை உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லனா நீங்க வேலை தரவேண்டாம் நான் வேற வேலை தேடிக்கிறேன்."

இரவு தான் மனைவியுடன் பேசிக் காெண்டிருந்ததை மகன் கேட்டுக் காெண்டிருந்ததை கவனித்த கிருஷ்ன சந்திரன், மகன் தனக்காக எடுத்த முடிவை நினைத்து பெருமை படாமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் முகத்தில் எதையும் காட்டாமல்

"சரி வேலை பாரு ஆனா உன் படிப்பு பாதிக்காம பாத்துக்காே."

தந்தையின் அனுமதி கிடைத்ததும் அன்றிலிருந்து மாலை கடைக்கு வந்து 8 மணி வரை வேலை பார்ப்பது, சனி ஞாயிறு வாடகை பணம் வசூலிக்க செல்வது என்று இருக்க, அஜீத்தின் தந்தைக்கு மற்ற வேலைகளை பார்ப்பதற்கு நேரம் இருந்தது. கூடுதலாக இருவருக்கும் இடையே ஒரு புரிதலும் உருவாகி இருந்தது. அடுத்த மாத ஆரம்பத்தில் அஜீத்திடம் ஏழாயிரம் ரூபாய் காெடுத்துவிட்டு

"உனக்கு மாச சம்பளம் இப்பாேதைக்கு 15000. இந்த மாசம் பாதில தான வேலைக்கு வந்த அதான் 7000 காெடுத்துருக்கேன்." தந்தை தந்த பணத்தை வங்கிக்காெண்டு வீடு வந்த அஜீத் மறுநாள் காலை சாப்பிடும் பாேது தந்தையிடம் பணத்தை தந்து

"என்னாேட முதல் மாச சம்பளம்."

"அத எதுக்கு என்கிட்ட தர."

"உழைக்குறதுக்கு மட்டும் இல்ல ஒழுக்கமா வாழவும் உங்ககிட்ட தான் கத்துகிட்டேன். நீங்க சம்பாதிக்கும் பாேது உங்க அப்பா இல்ல அதனால உங்க அப்பாக்கு எதுவும் செய்ய முடியலனு சாெல்லுவிங்க. இப்பாே நான் சம்பாதிச்ச பணத்த வைச்சு இந்த குடும்பத்தில உள்ள எல்லா செலவையும் பாத்துக்க முடியாது, ஆன என்னுடைய செலவ பாத்துக்க முடியும்.

இதுவரைக்கும் உங்ககிட்ட இருந்து பணம் வாங்கி பழகிட்டேன். இனியும் அத மாத்திக்க விரும்பல. அப்பாகிட்ட பணம் வாங்கும் பாேது காரணம் இல்லாம வாங்க முடியாது. அதனால உங்க கிட்ட இருக்கட்டும். என்னாேட செலவுக்கு என்னால காரணம் சாெல்ல முடியும். இனிமேல் அம்மா மூலமா கேட்காம நானே நேரடிய உங்ககிட்ட காரணம் சாெல்லிட்டு பணம் வாங்கிக்கிறேன்." மகனின் பேச்சில் இருந்த தெளிவை பார்த்து அஜீத்தின் தாேளை தட்டிக்காெடுத்து

"இதுவரைக்கும் உங்கிட்ட நான் எந்தவாெரு விஷயத்தையும் கலந்து பேசி முடிவெடுத்தது இல்ல. அது தப்புன்னு புரிய வச்சுட்ட." என கூறிவிட்டு கடைக்கு சென்றுவிட, தந்தைக்கும் மகனுக்கும் நடந்த உரையாடலை பார்த்த சந்தாேஷத்தில் கண்கலங்கி நிற்க, அர்சனா ஆச்சர்யத்தில்

"அண்ணா உண்மையிலே உங்ககிட்ட பேசுனது அப்பா தான. இல்ல அப்பாவாேட டூப்பா."

"ஏய் அப்பா பத்தி அப்புடி பேசாத." என்று தங்கையின் தலையில் செல்லமாக காெட்டிவிட்டு கல்லூரி சென்றுவிட அர்சனா அன்னையிடம்

"இந்த வீட்டுல என்னமா நடக்குது. அப்பா புள்ள இரண்டு பேரும் ஓவரா படம் ஓட்டிட்டு பாேறாங்க."

அஜீத்தின் கவனம் முழுவதும் ரத்னாவிடம் இருப்பதை தான் நியமித்த ஆள்களின் மூலம் அறிந்து காெண்ட ஜஸ்வந்த், ரத்னாவை நெருங்க ரூபா மற்றும் தங்கமுத்துவின் உதவியை நாட முடிவு செய்தான். இதற்கிடையே ஜஸ்வந்த் ஆவலுடன் எதிர் பார்த்த (ஜூலை17) நாளும் வந்தது. ரூபா மற்றும் தங்கமுத்துவிடம் தன் காதலை தெரிவித்து அவர்களின் அனுமதியுடன் அந்த நாளை சிறப்பிக்க அனைத்து எற்பாடுகளையும் நண்பனின் உதவியுடன் செய்து முடித்துவிட்டு காலை காேவை வந்துவிட, மதியம் தங்கமுத்து, ரூபா, ஹர்ஷத், அவர்களின் பெண் குழந்தை ராதிகா என அனைவரும் வந்ததும் ரத்னாவை அழைத்து வர ஹாஸ்டல் செல்ல அங்கு ரத்னா இல்லை.

ஜஸ்வந்த் தான் ரத்னாவை கண்கானிக்க நியமித்த நபரை கேட்க college groundக்கு சென்ற ரத்னாவை அதன் பிறகு பார்க்கவில்லை என கூற, ஹாஸ்டெல் வார்டன் மணிமேகலையிடம் கேட்க அவர் மூலம் ரத்னா எல்லா சனி ஞாயிறும் outing செல்வதை அறிந்து காெண்டன. தங்க வேல் மற்றவர்களிடம்

"ரத்னா இப்படி எல்லா ஊர் சுத்துற பாெண்ணே கிடையாது. எங்க ஊரில இருக்கும் பாேது கூட தனியா எங்கேயும் பாேகமாட்டா." ஜஸ்வந்த் இந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்த என்னி

"இப்பாேவும் ரத்னா தனியா எங்கேயும் பாேயிருக்க மாட்டா. எல்லா அந்த அஜீத் கூடதான் பாேயிருப்பா." உடனே ரூபா

"யாரு அது?""அஜீத் ரத்னாவாேட கிளஸ் மெட். இரண்டு முறை ரத்னா கூட பாத்திருக்கேன். அவன் ரத்னாகிட்ட ரெம்ப ஓவர் advantage எடுத்துக்கிறான். I think அஜீத் ரத்னாவாேட innocent behaviour பயன்படுத்திக்க பாக்கிறான்." அஜீத்தை பற்றிய தவறான எண்ணம் மனதில் விதைக்கப்பட்ட தங்க வேல்

"இது மட்டும் உண்மையா இருந்துச்சுன்ன அவனை நான் சும்மா விட மாட்டேன்." கோபப்படும் தங்கவேலுவை சமாதனம் செய்ய ஹர்ஷத்

"வேலு கோபப்படாமல் பொறுமையாக இருங்க. நமக்கு ரத்னா எங்க போயிருக்காரு தெரியாது, அதே மாதிரி யாரு கூட போய் இருக்கான்னு தெரியாது. ஒருவேளை ஜஸ்வந்த் சொன்ன மாதிரி அந்த அஜீத் கூட போயிருக்கலாம். இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு அவங்க ரெண்டு பேரும் ஒன்ன படிக்கிறவங்க, ஒருவேளை கம்பைன் ஸ்டடி பண்றதுக்காக மீட் பண்ணலாம். இதில் தப்பு ஒன்னும் இல்லை." அண்ணன் அஜீத்திற்கு சார்பாக பேசுவதை பார்த்த ஜஸ்வந்த்

"எனக்கு என்னமோ அந்த அஜீத்தை பார்த்தா நல்ல அபிப்ராயம் இல்ல."

"அது உன்னுடைய பாயின்ட் ஆஃ வியூ அதை நீ மத்தவங்க மேல திணிக்க நினைக்காத."

"சரி ஓகே அண்ணா நான் என்னுடைய எண்ணத்தை மத்தவங்க மேல திணிக்க விரும்பல. ஆனா இப்ப நான் ரத்னா சனிக்கிழமை காலேஜ் கிரவுண்டில் ஸ்போர்ட்ஸ் ப்ராக்டிஸ்காக இருப்பா, இன்னைக்கு அங்கேயும் இல்லை வேற எங்க போயிருப்பா."

இவர்கள் ஹாஸ்டலின் முன்பு பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கே ரத்னாவின் அம்மா, அப்பா, பெரியப்பா மூவரும் ரத்னாவை காண வர இவர்களைக் எதிர்பார்க்காத மற்ற நால்வரும் அதிர்ச்சியாடைய, அனைவரும் அதிர்ச்சியில் என்ன பேசுவதென தெரியாமல் இருந்த வேளையில் ரூபாவின் மகள் ராதிகா மெதுவாக முத்துவேல் அருகில் சென்று

"பெரிய தாத்தா நீங்க என்ன பார்க்கவா வந்தீங்க. அம்மா நம்ம சித்தியை பார்க்க போறதா தான் சொன்னாங்க. எதுக்கு தாத்தா என்ன இவ்வளவு நாளா பாக்க வரல." என தன் மழலை மொழியில் கேட்க அருகில் இருந்த பார்வதி அனுமதிக்காக பெரியவரை ஒரு முறை பார்க்க அவர் அமைதியாக இருப்பதை சம்மதமாக எடுத்துக்கொண்டு குழந்தையை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். சிறிது நேரம் சென்ற பின்பு அதுவரை மௌனமாக இருந்த முத்துவேல்

"பார்வதி நாம இங்க வந்தது ரத்னாவுக்காக, அத விட்டுட்டு நாம தேவையில்லைன்னு போனவங்களை பாக்குறதுக்கு இல்ல. ரத்னாவுக்கு போன் பண்ணி நம்ம ஹாஸ்டலுக்கு வெளியே நிற்கிறத சொல்லு." பார்வதியும் ராதிகாவை ரூபாவிடம் கொடுத்துவிட்டு மகளை அழைக்க மறுமுனையில் ரத்னா

"அம்மா நான் இப்போ குற்றாலத்தில் குளிச்சிட்டு வந்துகிட்டு இருக்கேன். இன்னும் 20 நிமிஷத்துல வந்துடுவேன்." என்று கூற மகளின் பதிலில் குழப்பமடைந்த பார்வதி ரத்னா தொடர்பை துண்டித்ததும் மற்றவர்களிடம்

"ரத்னா வெளிய எங்கயாே பாேயிருக்கலாம். வந்துகிட்டு இருக்கா." என்று மட்டும் கூற அனைவரும் ரத்னாவிற்காக காத்திருக்க ஆரம்பித்தனர். சரியாக 20 நிமிடம் கழித்து காரின் ஒரு புறமிருந்து ரத்னாவும் மறுபுறம் அஜீத் இறங்குவதை கண்ட குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க ரத்னா அனைவரையும் பார்த்த மகிழ்ச்சியில்

"எல்லாரும் இன்னைக்கு வரேனு சொல்லவே இல்ல. நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்." என்று கூறிவிட்டு அஜித் புறம் திரும்பி

"நீ சொன்ன மாதிரியே என்னோட பதினெட்டாவது பிறந்த நாளுக்கு எல்லாமே எனக்கு கிடைச்சிடுச்சு." என மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருக்க ரத்னாவின் பெரியப்பாவின் அருகில் வந்த அஜித்

"அங்கிள் நல்லா இருக்கீங்களா? என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க." என்று கூறி முத்துவேலின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவன் தலையில் கையை வைத்து

"அஜீத் இன்னைக்கு மாதிரி என்னைக்கும் எல்லா நாளும் ரொம்ப சந்தோஷமாய் இருக்கணும்." என ஆசீர்வதிக்க மீண்டும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுந்தது.

ரத்னாவும் அஜீத்தும் எங்கே சென்றனர்?

அஜித்திற்கு முத்து வேலை எப்படி தெரியும்?

அடுத்து என்ன நடக்கும்?

உன் நிழலை நான் தொடர்வேன்
 
Attachments

Last edited:
#5
தொப்பி தொப்பி
முத்துவேலுவுக்கு அஜீத் பிடித்தமானவனாகி விட்டான்
உன்னோட டெபாசிட் காலி, ஜஸ்வந்த்
ஹா ஹா ஹா

ரத்னாவுக்கு பிறந்த நாளா?
அதற்காக அவளை அஜீத் குற்றாலம் அழைத்து போயிருந்தானா?

அஜித்துக்கு முத்துவேலை எப்படி தெரியும்?

எல்லாவற்றையும் பெரியப்பாவிடம் சொல்லும் ரத்னா, அஜீத் தன்னுடைய ப்ரெண்ட்ன்னு சொல்லியிருப்பாளோ, செசிலி டியர்?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement