உன் நிழல் நான் தாெட ep 13

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
உன் நிழல் நான் தொட
-- செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 13

விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு


பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி

முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் ங்கிப்பின்

வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று

ரத்னாவிடமிருந்து இப்படி ஒரு கதறலை எதிர்பார்க்காத அஜீத் முதலில் அதிர்ச்சியும், கவலையும் மேலிட அசையாமல் நின்றது ஒரு சில வினாடிகளே. அதன்பிறகு விரைந்து சென்று ரத்னாவை சமாதானம் செய்து உணவருந்த செய்து, ரத்னாவை கட்டிலில் உறங்க சொல்லிவிட்டு வெளியேற, அதுவரை சொன்னதையே செய்துகொண்டிருந்த ரத்னா,

"அஜீத் அத்தான் என்னை தனியா விட்டுட்டு போகாதே." கூறிவிட்டு கண்களை மூடிக்கொள்ள, அருகில் வந்த அஜீத் மெல்ல தலையை கோதி

"நான் எங்கேயும் போகல உன் கூடவே தான் இருப்பேன்."

கட்டிலின் மறுபுறம் அமர்ந்திருந்த அஜீத் தூக்கம் வராமல் போக அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது. அஜீத்திற்கு முதல் வருடத்தில் இருந்தே ரத்னாவின் மீது இனம்புரியாத ஒரு ஈர்ப்பு தோன்றியது உண்மையே.

அதனாலே ரத்னாவை தோழியாக மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைத்தான். தோழியாக மாறிய ரத்னா தன் உறவென்று தெரிந்த பின் ஏனோ ரத்னாவுக்கு அனைத்தும் தானாகவே இருக்கவேண்டுமென ஒரு எண்ணம் தோன்றியதும் உண்மை.

ஆனால் எந்த காரணத்திற்காகவும் ரத்னாவை தன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண்ணாக மாற்ற நினைத்ததில்லை. பழகிய சில மாதங்களிலேயே ரத்னாவை பற்றி முழுவதும் புரிந்து கொண்ட அஜீத் தன் மனதில் தோன்றிய உணர்வுகளை ரத்னாவிடம் கூறுவது சரியில்லை என்பதை புரிந்து கொண்டான்.

ரத்னா எப்பொழுதும் தெளிந்த நீரோடை போல அதில் ஒரு சிறு கல் கூட குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்பதை அறிந்த அஜீத், அனைவரிடமும் நன்மதிப்பை சம்பாதிக்க ஆரம்பித்தான். அதன் மூலம் ரத்னாவை தன் வாழ்வில் காெண்டு வர நினைத்தான்.

அனைத்தும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது அந்த நபரை சந்திக்கும் வரை. யாரை தன் வாழ்க்கை துணையாக மாற்ற வேண்டும் என நினைத்தானோ, அவளையே மற்றொருவன் மனைவியாக மாற்றும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டான்.

இப்பொழுது அனைத்தையும் நினைத்துப் பார்க்கும் பொழுது அன்று சரியாக தெரிந்து அனைத்தும் இன்று தவறாகவேபட்டது. எது ரத்னாவிற்கு மகிழ்ச்சியை தரும் என்ன நினைத்தானோ, அதுவே ரத்னாவின் நிம்மதியை அழித்து விட்டது என்பதே அவன் மனதை வாள்கொண்டு அறுத்தது.

பழைய நினைவுகளில் உழன்று கொண்டிருந்த அஜித் எப்பொழுது உறங்கினானாே அவன் அறியவில்லை. விழித்துப் பார்க்கும் பொழுது தன் அருகில் ரத்னா இல்லை என்றவுடன் பதறி வீடு முழுவதும் தேட ரத்னா எங்குமில்லை.

வெளிக்கதவு திறந்து இருப்பதை பார்த்தா அஜீத் அவசரமாக வெளியில் சென்று தேட, பலன் என்னமோ பூஜ்ஜியம். ஹிந்தி தெரிந்த தனக்கே டெல்லியில் ரஜின்தார் நகரைவிட்டு வெளியிடங்களுக்கு சென்றால் திணறலாக இருக்க, ரத்னாவுக்கு மொழியும் தெரியாது. அதேசமயம் ரத்னா தற்போது இருக்கும் மனநிலையில் எங்கு சென்று இருப்பாள் என்பதே பெரும் கவலையை காெடுக்க ரஜின்தார் நகர் முழுவதும் தன் தேடுதல் பணியைத் தொடர்ந்தான்.

இரண்டு மணி நேர தேடுதலுக்கு பின் ஒருவேளை வீட்டிற்கு வந்திருப்பாளோ என்ற எண்ணத்தில் வீடு செல்ல, தன் எண்ணத்தை பொய்யாகாமல் ரத்னா நின்றுகொண்டிருந்தாள், கூடவே ரோஜாவும் நின்று கொண்டிருந்தார்.

ரோஜா ஒரு திருநங்கை. வயது நாற்பதை எட்டியிருக்கலாம். டெல்லி வந்த புதிதில் தான் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து அகாடமிக்கு செல்லும் வழியில் அஜீத் தினமும் பார்த்திருக்கிறான்.

ஒரு நாள் பேருந்தில் ஒரு பெண்மணியின் நகை காணாமல் போனதற்காக ரோஜாவை குற்றம் சுமற்ற, அவருக்காக அஜீத் பரிந்து பேசினான். காணாமல் சென்றதாக கூறப்பட்ட நகை கீழே அருந்து கிடப்பதை எடுத்து அவர் கையில் தந்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி சென்றவன், இப்பொழுதுதான் மீண்டும் ராேஜாவை பார்க்கின்றான்.

"ரத்னா நீ எங்க போயிருந்த, இப்படிதான் எங்கேயும் சொல்லாம போவியா? உன்ன காணாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? எங்க போயிருந்த ரத்னா?" எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க அருகிலிருந்த ரோஜா

"தம்பி பாப்பா இரண்டு தெரு தள்ளி நடந்து வந்துக்கிட்டு இருந்தாங்க. கேட்டா எதுவும் பதில் சொல்லல. அதுதான் உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தேன்."

"ரத்னா எனக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? அப்புறம் என்னோட வீட்டு அட்ரஸ்?"

"நமக்கு உதவி பண்ணவங்கள உயிர் இருக்க வரைக்கும் மறக்க கூடாது. ரெண்டு மூணு தடவை நான் உங்கள இந்த வீட்டுக்குள்ள வராதா பார்த்து இருக்கேன். அப்புறம் இந்த பொண்ண நீங்க ஆட்டோவுல நேத்து கூட்டிக்கிட்டு வந்தடையும் பார்த்தேன்."

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல அக்கா."

"இருக்கட்டும் பா இனி பத்திரமா பாத்துக்கோ."

"அக்கா நீங்க என்ன பண்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா."

"என்ன வேலை கிடைக்குதோ அதை செஞ்சுக்கிட்டு இருக்கேன்."

"உங்களுக்கு பிரச்சினை இல்லன்னா நீங்க எங்க கூட தங்க முடியுமா." ரத்னாவை சிறுது நேரம் காணாமல் அஜீத்தின் மனம் பயத்தில் பல வித கற்பனைகள் செய்ய ஆரமித்தது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் அனைத்தும் கண் முன் வர, மீண்டும் ரத்னாவை பார்க்கும் வரை அவன் உயிர் அவனிடம் இல்லை.

இனியும் ரத்னாவை தனியே விட்டு செல்ல முடியாது என்பதற்காகவே ராேஜாவை தங்களுடன் தங்க கூறினான். சில முறை மட்டும் பார்த்த அவரிடம் எந்த நம்பிக்கையில் தங்களுடன் தங்க கேட்டான் என்று அஜீத்தே அறியவில்லை.

ரத்னாவின் ஒரு முறை பார்த்த ரோஜா எந்த கேள்வியும் கேட்காமல் சரி என்று விட அதன் பிறகு ரோஜாவும் அந்த வீட்டின் ஒரு உறுப்பினராக மாறிப்போனார்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல அகடமி சென்று படிப்பது மாலை அருகில் இருக்கும் சில குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது போன்ற வேலைகளையும் அஜீத் செய்துகொண்டிருந்தான். கையில் பணம் இருந்தாலும் அதை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

ரோஜாவும் காலையில் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது, அதன்பிறகு ரத்னா உடன் அமர்ந்து பேசுவது என்பதை அவர் வழக்கமாக மாற்றிக்கொண்டார்.

முதலில் தனக்குள் இறுகி இருந்த ரத்னா சிறிது சிறிதாக தன் கூட்டை விட்டு வெளியில் வர ஆரம்பித்தாள். தனக்கு ஏற்பட்டது அனைத்தும் புரிந்தபின் தன்னிடம் சேர்ந்த நிம்மதியையும், பாதுகாப்பான உணர்வையும் அடைந்தாள் என்பதே உண்மை இருந்தாலும் அஜீத்திடம்,

"என் மேல இறக்கப்பட்டு எனக்கு வாழ்க்கை கொடுத்தீங்களா அத்தான்."

"நான் உன்மேல இறக்கப்பட்டதாவும், உனக்கு வாழ்க்கை கொடுத்ததாகவும் யாரு சொன்னா."

"யாரு சொல்லணும் இப்போ நாம இருக்கிற நிலையே எனக்கு சொல்லுது."

"நிலைமை உனக்கு தப்பா சொல்லுது. போய் சாப்பிட்டு தூங்கு."

"அத்தான் நான் உங்களுக்கு வேண்டாம், நான் வீட்டுக்கு போறேன்."

"சரி உனக்கு நான் வேண்டாம். வீட்டுக்கு போய் என்ன பண்ண போறே."

"என்னமோ செஞ்சுட்டுப் போறேன். என்ன எங்க ஊர்ல கொண்டு போய்விடுங்கள்."

"நான் வாழ்க்கையில ஒரு தப்பு பண்ணிட்டேன். தெரியாமத்தான் அந்த தப்ப பண்ணுனேன், தெரிஞ்சே மறுபடி என்னால அதை பண்ண முடியாது."

"நீங்க என்ன வேண்டாம்னுசொன்னது எனக்கு நிச்சயமா கஷ்டமா இல்லை. இப்ப நான் உங்க கூட இருந்தா ஸ்டெல்லா உங்க வாழ்க்கையில வர முடியாது."

"ஸ்டெல்லா என்னோட வாழ்க்கையில ஏன் வரணும்."

"நீங்களும் ஸ்டெல்லாவும் லவ் பண்றீங்க தானே."

"புல்ஷிட் நான் லவ் பண்றேன் உன்கிட்ட யாரு சொன்னா."

"நான் பார்த்தேன் நீ அன்னைக்கு ஸ்டெல்லா கைய புடிச்சு பேசிக்கிட்டு இருந்தது, அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோவையும் பார்த்தேன். அதனாலதான நீங்க என்ன வேண்டாம்னு சொன்னீங்க."

"ரத்னா நீ எந்த காலத்துல இருக்க, கைய புடிச்சா காதலாகிடுமா, போட்டோல ஒன்னு இருந்தா அதுக்கு பேரு லவ்வா. ஏன் இதுவரைக்கும் நான் உன் கைய புடிச்சதே இல்லையா, அது மாதிரி உன் கூட நான் போட்டோ எடுத்ததே கிடையாதா."

"அப்படியா அப்படின்னா நீங்க ஸ்டெல்லாவை லவ் பண்ணலையா."

"பண்ணல போதுமா, உனக்கு இருக்க சின்ன மூளையை குழப்பி என்னையும் குழப்பாம இரு. ரத்னா இது நம்ம வாழ்க்கை இத யாராலும் மாத்த முடியாது. எனக்கு நீதான், உனக்கு நான் தான்."

"ம்ம்ம்ம"

"உன்கிட்ட இதை யாரு சொன்னா?"

"யாருனு எல்லாம் எனக்கு தெரியாது.நீங்க என்கிட்ட பேசுறதுக்கு முந்தின நாள் என்னோட வாட்ஸ்சப்புக்கு போட்டோ வந்துச்சு, அத பாத்து நானா யோசிச்சு கண்டுபிடிச்சேன்."

"நீ கண்டுபிடிச்சத தயவுசெய்து வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதே தாயே."

அப்போதைக்கு ரத்னாவை சமாதானம் செய்துவிட்டு டியூஷன் பிள்ளைகளை கவனித்து அனுப்பி விட்டு வர, மனம் மட்டும் யார் இதை இவ்வாறு ரத்னாவிடம் கூறியிருப்பார்கள் என்பதையே நினைத்துக் கொண்டிருந்தது.

இதைப்பற்றி மற்றொருநாள் ரத்னாவிடம் கேட்கும் பொழுதும் அது யாரென்று தெரியவில்லை என்று பதில் வர அதைப்பற்றி மேலும் ரத்னாவிடம் கேட்க அஜீத் விரும்பவில்லை. பிரபுவிடம் இதைப் பற்றி கூறியபொழுது

"அப்படின்னா நீ ஸ்டெல்லாவை லவ் பண்றதால ரத்னாவை வேண்டாம்னு சொல்லலையா."

"நான் ஸ்டெல்லாவ லவ் பண்றேன்னு உன்கிட்ட எப்போ சொன்னேன்."

"நீ சாெல்லல என்னோட வாட்ஸ்அப்கு ஒரு போட்டோ வந்துச்சு, அதைப்பற்றி கேட்க உனக்கு போன் பண்ணேன் நீ போன் எடுக்கல, ரத்னா கிட்ட கேட்கும்போது ரத்னா தான் என்கிட்ட சொன்னா."

"நான் இந்த உண்மையை மறைத்து தான் ரத்னாவை ஜஸ்வந்த்தை கல்யாணம் பண்ணிக்க சொன்னாதா நீங்க நினைச்சிங்களா."

"ஆமா அப்படின்னா நீ வேற எதுவும் உண்மைய எங்க கிட்ட இருந்து மறைக்கிறியா."

"வேற எதுவும் இல்லடா போன வை."

பிரபுவிடம் பேசிய பின்பு மனம் மேலும் குழப்பமடைய, அனைத்தையும் ஒருவேளை ஜஸ்வந்த் தான் செய்து இருப்பானோ? என்ற குழப்பத்தையே விடையாக மாற்றிக் கொண்டான். இனி எந்த பிரச்சனையும் இல்லாம ரத்னாவை பாத்துக்கணும் என்று மனதுக்குள் தீர்மானம் எடுத்துக்கொண்டான்.

காெஞ்சம் தன் சந்தேக பார்வையை ஜஸ்வந்தை விட்டு திருப்பி இருந்தாலும் பின்னர் நடைபெற இருக்கும் பிரச்சனையை தவிர்திருக்கலாம். அஜீத்தின் முதல் தவறு ரத்னாவின் மனதை காயப்படுத்தியது, இப்பாெழுது தன் மனதில் எழுந்த சந்தேகத்தை சரியான முறையில் ஆராயாமல் தவறு வீடும் தவறு ரத்னாவின் உயிரையும் தங்கள் வாழ்வையும் பாதிக்கப் போகிறது என்று அஜித் அறிந்திருக்கவில்லை.

அறிந்திருந்தால்......?

அதேநேரம் அஜித்தை சந்தித்து அவன் வாயாலே ரத்னாவை மறுக்கும் படி செய்த நபர்

"நம்ம திட்டம் படி எல்லா நடந்துச்சு, பட் கடைசியில அந்த ரத்னா தப்பிச்சுட்ட." என காெலை வெறி கண்களில் மின்ன கூற, அருகில் இருந்த மற்றொரு நபர்

"எங்க போய்ட போறா, நம்மள பத்தி எல்லாம் தெரிஞ்ச ஜஸ்வந்த்தையே இந்த உலகத்தை விட்டு அனுப்பியாச்சு. இந்த ரத்னா எல்லாம் நமக்கு கால் தூசி மாதிரி."

"ஒருவேளை அஜித்துக்கு நம்ம மேல சந்தேகம் வந்துருச்சுன்னா."

"ரத்னா நடந்த எல்லாத்தையும் சொன்னா கூட நம்ம மேல அவனுக்கு சந்தேகம் வராது, அவனுக்கும் ரத்னாவுக்கும் சந்தேகம் வந்தாலும் அது முழுக்க ஜஸ்வந்த் மேலதான் இருக்கும்."

"சந்தேகம் வராத வரை ஓகே. ஒருவேளை வந்துடா காதலிச்சவன் கூட அவன் காதலிய சேர்த்து வச்சுடலாம்." எனக்கூறிவிட்டு பயங்கர சிரிப்பு ஒன்று சிரிக்க மற்றொரு நபரும் அதில் இணைந்துகொண்டார்.

உன் நிழலை நான் தொடர்வேன்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement