உன்மேல் காதல் தானா என்னுயிரே 16.1

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: ஹாப்பி ஃப்ரைடே...:giggle::giggle::giggle: எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு... நானா இப்படி அடுத்தடுத்த நாள்ல எபியோட வரேன்னு...:LOL::LOL::LOL: இதுவரைக்கும் கொடுத்த ஆதரவை இன்னும் வரவிருக்கும் எபிக்கும் கொடுப்பீங்கங்கிற நம்பிக்கைல இதோ அடுத்த எபியோட முதல் பார்ட்...:giggle::giggle::giggle: நாளைக்கே அடுத்த பார்ட்டுடன் வரேன் பிரெண்ட்ஸ்...:love::love::love:

ei4YN3J67464.jpg
காதல் 16.1

தன் வேலைகளுக்கு தொல்லை கொடுப்பது போல ஒலித்த அலைபேசி சத்தத்தில், முதலில் சலிப்புடன் அதை எடுத்துப் பார்க்க, அதிலிருந்த ‘அன்னோன் நம்பர்’ அவன் புருவங்களை சுருக்கச் செய்தது. மற்ற சமயங்களில் இது போன்ற அழைப்பை ஏற்காதவனிற்கு, இப்போது ஏனோ ஆபத்து என்று மனதில் பட, சற்றும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றிருந்தான்.

“ஹலோ சஞ்சு… ஹா…ன்… மிஸ்டர்.சஞ்சய்… கால் எடுக்க மாட்டீங்கன்னு நெனச்சேன்…” என்று கிண்டலாக ஆரம்பித்தாள் ஷ்ரேயா.

சஞ்ஜயோ அதையெல்லாம் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், “எதுக்கு இப்போ கால் பண்ணிருக்க..?” என்று நேராக விஷயத்திற்கு வந்தான்.

“ஹ்ம்ம் இது தான் உன்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயம்… பாரு ப்ளா ப்ளான்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணாம டைரக்ட்டா விஷயத்துக்கு வந்துட்ட…” என்று அப்போதும் அவள் அழைத்ததற்கான காரணத்தைக் கூறாமல் அவனை அலைகழித்தாள்.

சஞ்சயோ அவளின் பதிலில் பல்லைக் கடித்துக் கொண்டிருக்க, “ச்சு ச்சு… இப்போ கோபத்துல உன் முகம் அப்படியே ரெட்டிஷா ஆகிருக்கும்ல… ப்ச் அத நேர்ல பாக்க முடியாம போயிடுச்சே… ஹ்ம்ம் பரவால, இனி அடிக்கடி உன் முகம் மாறுமே அப்போ பாத்துக்குறேன்… அப்பறம் இப்போ எதுக்கு உனக்கு கால் பண்ணேனா, நீ யாருக்காக எஸ்கார்ட்லாம் வச்சு பாதுகாக்கனும்னு நெனைக்குறியோ, அவங்களுக்கு தன்னோட உயிர் மேல ஆசை இல்ல போலயே… தனியா ***** ஹோட்டல்ல உக்கார்ந்துட்டு யாரையோ எதிர்பார்த்து காத்திட்டு இருக்காங்க போல…” என்று அவனை பதற வைத்துவிட்டே விஷயத்திற்கு வந்தாள்.

‘ப்ச் தனியா போகாதன்னு சொன்னாலும் கேக்காம போயிருக்கா…’ என்று மனதிற்குள் அவளைத் திட்டிக் கொண்டிருக்க, “என்ன சார், இன்னமும் லைன்ல இருக்கீங்க… இந்நேரம் பறந்து போய் அவங்கள காப்பாத்த வேணாமா… நான் வேற ரொம்ப ஹாப்பி மூட்ல இருக்கேனா, சோ சட்டுன்னு யாருக்கும் தெரியாம அவள கொலை பண்ற மூட்ல இல்ல… சீக்கிரம் இங்க வாங்க பாஸ்… நீங்க சொன்ன கேம்ம விளையாடுவோம்…” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

அடுத்த நிமிடம் லோகேஷிற்கு அழைப்பு விடுத்து அவனைத் திட்டியவன், இனியும் தாமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்து தன்னறையிலிருந்து வெளியேறினான்.

சஞ்சீவின் அறையைக் கடக்கும்போது, ஒரு நொடி நிதானித்து, அவனைக் காண, அவனோ மருந்தின் உபயத்தால் நித்திரையில் இருந்தான். இதற்காக அவனை எழுப்ப வேண்டாம், வந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து வெளியே சென்று விட்டான். சஞ்சீவிடம் சொல்லிவிட்டே சென்றிருக்கலாம் என்று பின்னர் வருந்துவான் என்று அவனிற்கு தெரியவில்லை.

*****

ரஞ்சு, அவள் கையில் வைத்திருந்த முகவரிக்கு செல்லலாம் என்று திட்டமிட்டுக் கொண்டே, அந்த உணவகத்தை விட்டு வெளியே வந்தாள். பாதையில் கவனமில்லாமல் மனதில் பலவற்றை உருப்போட்டுக் கொண்டே வந்தவள், தனக்கு பின்னால் அதிவேகத்துடன் வரும் ஸ்போர்ட்ஸ் காரையும் கவனிக்கத் தவறினாள்.

ரஞ்சுவை இடித்துவிடும் நோக்கில் அவளை நோக்கி வந்து கொண்டிருந்த மகிழுந்தை கவனித்த சஞ்சய், வேகமாக அவளை தன்னை நோக்கி இழுத்திருக்க, தன் இலக்கு விலக்கப் பட்டதால், அதன் பாதையில் சர்ரென்று வழுக்கிக் கொண்டு போனது அந்த மகிழுந்து.

ரஞ்சுவிற்கு நடந்த சம்பவம் அதிர்ச்சி தான். அந்த மகிழுந்திற்கும் அவளிற்கும் சிறிதளவே இடைவெளி இருந்தபோது தான் தனக்கு பின்னே வாகனம் வருவதை, அதுவும் அதீத வேகத்தில் வருவதை உணர்ந்தாள். சட்டென்று என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருந்தவளை, யாரோ கைப்பிடித்து இழுக்க, அந்த இழுப்பிற்கு சென்றிருந்தாள்.

இப்போது கூட யார் தன்னைக் காப்பாற்றியது என்று உணராமல், அவனின் கைகளில் நடுங்கிக் கொண்டு நின்றிருந்தாள். அவளின் பயத்தை உணர்ந்த சஞ்சயோ, மெல்ல அவளை அவன் மகிழுந்து நிற்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றான்.

அந்த இடைவேளையில் சுயத்தை அடைந்தவள், தன்னைக் காப்பாற்றியவன் சஞ்சய் என்பதை அப்போது தான் பார்த்தாள்.

மகிழுந்தில் அவளை அமருமாறு கண்களாலேயே பணித்தவன், சுற்றி வந்து ஏறிக் கொண்டான்.

இன்னமும் குழப்பத்திலிருந்து வெளிவராதவளின் தோற்றத்தைக் கண்டு பெருமூச்சு விட்டவாறே, “இன்னைக்கு காலைல தான தனியா போகாதன்னு சொன்னேன்… அதையும் மீறி தனியா வந்துருக்கன்னா என்ன அர்த்தம்… மத்தவங்க உன் நல்லதுக்குன்னு சொல்ற எதையும் கேக்க கூடாதுன்னு முடிவுல இருக்கீயா..? நான் மட்டும் சரியான நேரத்துல வரலைனா என்ன ஆகுறது..?” என்று கோபத்தை அடக்கியபடி வினவினான்.

ரஞ்சுவைப் பொறுத்தவரை சற்று முன்னர் நிகழ்ந்தது எதிர்பாராமல் நடந்த சம்பவமே. இவளிற்காக பல மணி நேரங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று அவளிற்கு தெரியாதே. அப்படி இருக்கும் போது, சஞ்சய் இப்படிக் கூறியதைக் கேட்டவள் குழம்பித் தான் போனாள்.

“நான் தனியா வந்ததுக்கும் இப்போ நடந்ததுக்கும் என்ன சம்பந்தம்..?”என்று குழப்பத்துடன் அவள் வினவ, ஏதோ யோசனையில் இருந்தவனும், “அது உனக்காக பிளான் பண்ண ஆக்சிடெண்ட்…” என்று கூறியிருந்தான்.

அவன் கூறியதைக் கேட்டவளிற்கு அதிர்ச்சியாக இருக்க, மீண்டும் ஒருமுறை நிகழவிருந்த சம்பவத்தை எண்ணி நெஞ்சம் பதைப்பதைத்தது.

அவளின் முகத்தைக் கண்டவனிற்கு அப்போது தான் அவன் கூறியது நினைவிற்கு வர, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

“என்ன எதுக்கு.. ஆக்சிடெண்ட்… யாரு…” என்று திக்கியபடி அவள் பேச, அவளின் கைகளில் தட்டிக் கொடுத்தவன், “ரிலாக்ஸ் சனா… அதான் ஒன்னும் ஆகலல…” என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

மேலும் மேலும் அவள் அதிலேயே உழல்வதைக் கண்டவன், ‘சாஃப்டா சொன்னாலாம் கேட்டுக்க மாட்டா… வழக்கம் போல நம்ம ஸ்லாங்லயே சொல்ல வேண்டியது தான்…’ என்று நினைத்தவன், “இன்னும் எவ்ளோ நேரத்துக்கு இப்படி நடந்ததையே நெனச்சுட்டு இருக்கப் போற… ஆமா, அப்படி என்ன விஷயத்துக்கு இந்த நேரத்துல இங்க தனியா வந்த..?” என்று கடுமையாக வினவினான்.

அவனின் அழுத்தமான குரலிலேயே அந்த சம்பவத்திலிருந்து வெளியே வந்தவள், அவன் அடுத்து கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று முழித்துக் கொண்டிருந்தாள்.

‘இவ முழியே சரியில்லயே… எதையோ எல்லாருக்கிட்ட இருந்தும் மறைச்சுருக்கா போலயே…’ என்று அவளை சரியாக கணித்தவன், கைகளை கட்டிக்கொண்டு இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து அவளைத் துளைக்கும் பார்வை பார்த்தான்.

‘அச்சோ இவரு பாக்குற பார்வையில நானே உண்மைய சொல்லிடுவேன் போலயே…’ என்று ரஞ்சு நினைக்க, அவளின் மனமோ, ‘இப்போ அவரு கிட்ட உண்மைய சொன்னா தான் என்ன… எப்படியோ ஒரு நாள் எல்லாருக்கும் தெரிய தான போகுது… நீ என்ன தப்பா பண்ண போற…’ என்று கூற, அவளும் சஞ்சயிடம் சொல்லிவிடுவது என்ற முடிவிற்கு வந்தாள்.

அவளின் பாவனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “என்ன மேடம், ஒரு வழியா என்ன நம்பி உண்மைய சொல்லலாம்னு முடிவுக்கு வந்துட்டீங்களா..?” என்று கேலியாக வினவினான்.

‘இவருக்கு எப்படி மனசுல நெனைக்கிறது எல்லாம் தெரியுதோ…’ என்று மனதிற்குள் நினைத்தவள், எங்கு அதையும் கண்டுபிடித்துவிடுவானோ என்று அவள் தனியே வந்ததற்கான காரணத்தைக் கூறத் துவங்கினாள்.

அவள் கூறியதை பொறுமையாகக் கேட்டவன், “இப்போ உன்ன விட்டுட்டு போனவங்கள சந்திச்சு என்ன பண்ண போற சனா..?” என்று வினவினான் சஞ்சய்.

அதற்கான பதிலைத் தானே அவளும் யோசித்துக் கொண்டிருக்கிறாள். “தெரியல…” என்று சோகமாக பதில் கூறினாள்.

ஒரு பெருமூச்சுடன், “சரி இப்போ எங்க கிளம்பிட்ட அந்த வீட்டுக்கா..?” என்றான். அவளோ பதில் கூறாமல், மண்டையை மட்டும் ஆட்டினாள்.

“ஓ… மேடமுக்கு மணி பாக்க தெரியுமா..? இல்ல லேட்டா தான் வருவேன்னு உன் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வந்துருக்கியா..?” என்று கடுப்பாக கேட்டதும் தான், தன் தோழிகளின் நினைவே வந்தது.

“இவளுக்காக அங்க அவங்க ரெண்டு பேரும் அங்க தவிச்சுட்டு இருக்காங்க… மேடம் ரொம்ப கூலா நகர்வலம் போய்ட்டு இருக்காங்க…” என்று அவன் முணுமுணுத்தாலும் அது ரஞ்சுவிற்கு கேட்கவே செய்தது.

தான் செய்யவிருந்த காரியத்தை எண்ணி உதட்டைக் கடித்து அமைதியாக இருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன், “என்ன மேடம் இப்போயாச்சும் ஹாஸ்டல் போலாம்னு நெனப்பு இருக்கா… இல்ல வேற எங்கயாவது சுத்தனுமா..?” என்றான்.

‘என்னது சுத்துறேனா… நான் என்ன வேலைவெட்டி இல்லாம பொழுது போகாம சுத்திட்டு இருக்கேனா… சும்மா சும்மா திட்டுறது…’ என்று மனதிற்குள் சிலுப்பிக் கொண்டவள், வெளியே அதை அப்படியே சொல்ல முடியாமல், “ஹாஸ்டல் போலாம்…” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

அவளின் கோபம் புரிந்தாலும், நடக்கவிருந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்தவனாக, அவளிடம் இலகிப் போக விரும்பவில்லை சஞ்சய்.

அந்த மகிழுந்து பயணம் அமைதியில் கழிய, நேராக சென்று அவளின் விடுதி இருக்கும் தெருவில் நிறுத்தினான்.

“இனி நீயே போயிடுவியா…” என்று அவன் வினவ, அப்போதும் மொழிகள் இன்றி மௌனமாக தலையசைத்தாள்.

அவள் இறங்கி செல்லும் நிமிடம், “நாளைக்கு நீ போக நெனச்ச இடத்துக்கு போகலாம்… ஆனா, உன் பிரெண்ட்ஸ் கிட்ட எங்க போறன்னு சொல்லிட்டு தான் வரணும் புரிஞ்சுதா… நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு ரெடியா இரு…” என்று கூறினான்.

அவ்வளவு நேரம் கூம்பியிருந்த முகம் பொலிவு பெற லேசான சிரிப்புடன் மீண்டும் தலையசைத்துவிட்டு சென்றாள். அவள் செல்வதையே பார்த்தவனின் மனம், ‘இதுக்கு பேரு லவ் இல்லயாமா…’ என்று கூறுவதை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

*****

சற்று நேரத்திற்கு முன்பு, தனக்கு அலைபேசியில் வந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரேயா வெற்றி சிரிப்பு சிரிக்க, அவளின் அருகில் நின்றிருந்த ரிஷிக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை.

“ஷ்ரேயா, எதுக்கு இப்போ இந்த போட்டோவ பாத்து இப்படி சிரிக்கிற..?” என்று எரிச்சலுடனே வினவினான் ரிஷி. பின்னே, தான் ஒன்று திட்டமிட, நடப்பதோ வேறாக இருந்ததே.

‘ச்சே இப்போ என்ன வேலை பாத்துட்டு இருக்கேன்… விட்டா, என் செலவுல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடுவா போல…’ என்று கொதித்துக் கொண்டிருந்தான் ரிஷி.

அவளோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “இந்த ஒரு போட்டோ போதும் அண்ணன் – தம்பிக்கு இடையில சண்டைய மூட்டி விடுறதுக்கு…” என்று வன்மமாகக் கூறினாள்.

மீண்டும் அதிலிருந்த சஞ்சயை நோக்கி, “அன்னைக்கு என்ன சொன்ன, உன் தம்பி தான் எல்லாமேன்னு சொன்ன தான… உன் தம்பிய வச்சே இந்த தடவ உன்ன தோக்கடிக்குறேன்…” என்று அவனிடம் பேசுவதைப் போல பேச, ரிஷிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

“இந்த போட்டோவால எப்படி சண்டை வரும்…” என்றவன் மீண்டும் அந்த புகைப்படத்தைக் கண்டான்.

சற்று முன்னர், அந்த மகிழுந்து இடிப்பதிலிருந்து காக்க ரஞ்சுவை இழுத்த சஞ்சயும், அவனின் இழுப்பிற்கு அவனிடமே சரணடைந்த ரஞ்சுவும் அந்த புகைப்படத்தில் அழகாக விழுந்திருந்தனர். நடந்த சம்பவத்தை அறியாதவர் பார்த்தால், இருவரும் ஒருவரையொருவர் அணைத்திருப்பதைப் போலவே தோன்றும்.

“என்னோட ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட், தம்பிய போட்டோ பிடிச்சு அண்ணனுக்கு அனுப்பி வச்சேன்… ஆனா, அவன் தம்பிய மட்டும் பாத்து பாசத்துல வந்துட்டான்… அண்ணனுக்கு சமமா, தம்பிக்கும் பாசம் இருக்கான்னு பாக்க வேணாம்… அதுக்கு தான் இது…” என்று கிண்டலாகக் கூறியவள், “அவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா, நம்மளால அவனுங்கள ஜெயிக்க முடியாது… அதான் ரெண்டு பேரையும் பிரிக்க போறேன்…” என்றாள் அழுத்தமான குரலில்.

“இந்த போட்டோ பாத்தவொடனே சந்தேகம் வந்து பிரிஞ்சுடுவாங்களா…” என்று அப்போதும் சந்தேகத்துடனே ரிஷி வினவ, “நான் எதுக்கு இருக்கேன்…” என்று கோணலாக சிரித்தவள், “சஞ்சய தான் என்னால ஈஸியா அணுக முடியாது… ஆனா சஞ்சீவ்… ஹ்ம்ம் அவன் அன்புக்கு அடிமை… அவன ஈஸியா நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம்…” என்று திட்டமிட்டாள்.

“ஓகே அப்போ நம்ம ஆளுங்க மூலமா இந்த போட்டோ அவனுக்கு கிடைக்க ஏற்பாடு பண்றேன்…” என்று ரிஷி கூற, “ஹுஹும்… என் ஜீவ நேர்ல பாத்து எவ்ளோ நாளாச்சு… நானே போய் குடுத்துட்டு வரேன்…” என்றாள்.

அவளின் முகத்தைக் கண்ட ரிஷி, “அப்படி என்ன அவன் உனக்கு ஸ்பெஷல்..?” என்று லேசான பொறாமையுடன் கேட்க, அவளோ அது காதிலேயே விழாதவாறு அங்கிருந்து சென்றாள்.

அவளின் மனமோ அந்த கேள்வியிலேயே நின்றது. ‘ஆமா அவன் எனக்கு ஸ்பெஷல் தான்…’ என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

தொடரும்...
 

monies

Well-Known Member
Ahaaan en jeev ahhhhh mkum
Pndrathellam pillathanam adeiii
Nee seirathu unake repeat agam irunda sari ha ha
Lovely update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top