இருளில் ஒரு ஒளியாய் -4

Advertisement

Chandrika krishnan

Writers Team
Tamil Novel Writer
இருளில் ஒரு ஒளியாய் -4

அவன் என் அருகில் வர ஆரம்பித்தபொழுது, அகி என்னை அவசரமாக அழைத்தான்.

அதுதான் சாக்கென எழுந்து அகி அருகே சென்று நின்றுகொண்டேன்.

"பாரு லது, அத்தைக்கு ஏற்கனவே இது மாறி வந்துருக்கா? பொறுமையா யோசிச்சு சொல்லு? " என் அம்மா பற்றி அவன் கேட்கவும், மனம் அம்மாவிடம் ஓடியது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, வழக்கம் போல பக்கத்து வீட்டு வாண்டுகளுடன் டிக் டாக் செய்து கொண்டிருந்தேன்.

"ஏன் டி.. பொழுது சாஞ்சா இதே வேலையா போச்சு உனக்கு? எல்லாம் நான் கொடுக்கற செல்லம்.. ஒழுங்கா ஆட்டம் போடாம உள்ள வந்து கொஞ்ச ஹெல்ப் பண்ணு " அம்மா சமையல்கட்டில் இருந்தபடி கத்த,

நான் செல்போனோடு அம்மா அருகே சென்று சிரித்தேன்.

என்னை கோபமாக உறுத்து விழித்து அம்மா கண்களை உருட்ட, பக்கென சிரித்துவிட்டேன்.

"என்னடி இளிப்பு வேண்டி கெடக்கு? " கேட்டுக்கொண்டே கொமட்டில் ஒரு குத்து விட,

"இதை பாருமோவ் " என்றபடி போனை அம்மாவிடம் நீட்ட,

"கண்ண கண்ண உருட்டாத முண்டக்கண்ணி அம்மா.. அம்மா.. கண்ண கண்ண உருட்டாத பாளயத்து அம்மா.. " என்ற பாட்டு பின்னணியில் ஒலிக்க, அம்மாவின் பேஸ் ரியாக்ஷன் திரையில் கண்ணை உருட்டியது.

"அடி பாவி? உன்ன... " என்றபடி சட்டுவத்தை தூக்கி கொண்டு அம்மா அடிக்க துரத்த, விழுந்தடித்துக்கொண்டு மச்சிற்க்கு ஓடினேன்.

பாதி படியில் அம்மா மூச்சுவாங்க நெஞ்சை பிடித்து கொண்டு நின்றுவிட்டார்.

கீழே எட்டிப்பார்த்த நான், பதறியபடி ஓடிவர, "பிடுச்சுட்டேன்ல " என்று சொல்லி என்னை அணைத்துக்கொண்டார் அம்மா.

ஆனாலும் அவர் முகத்தில் இதோ வலி இருப்பது போல எனக்கு தோன்றியது.

அம்மாவிடம் துருவி துருவி கேட்டபொழுதும், சிரித்து பேச்சை மாற்றிவிட்டார்.

அப்பொழுதே அம்மாவிற்கு உடல் நலன் குன்றி தான் உள்ளது. நான் தான் சரியாக அம்மாவை கவனித்துக்கொள்ளவில்லை போல.

எனக்கு அழுகையாக வருவதுபோல இருந்தது. மனம் பாரமாக இருந்தது.

இதுபோல் சோகங்களை சுமந்து பழக்கமில்லை.

துக்கமானாலும் சிரித்தே ஏற்றுக்கொள்வேன்.

அப்பா இறந்தபொழுதும் அப்படித்தான்.
இதுதான் விதி என்றானபிறகு, அழுது கரைவது நியாயமில்லை. அதுமட்டும் இல்லை.. நானோ அம்மாவோ வருந்துவது அப்பாவிற்கு பிடிக்காது.

கண்களில் வந்த நீரை உள்ளுக்கிழித்துக்கொண்டேன்.

"அகி.. "

"சொல்லு லதா..? "

"வந்து... "

"என்ன லது பயமா இருக்கா? ஒன்னும் ஆகுது டா.. அம்மாவும் அப்பாவும் நாளைக்கு வந்துருவாங்க.. அத்தைய நல்லா ஆனதும் வீட்டுக்கு நாம கூட்டிட்டு போயிரலாம் "

"ச்ச்ஹ்... அதுலா இல்லடா.. அகி. பசிக்குது.. கேன்டீன் எங்க இருக்குனு கேக்க வந்தேன்? உனக்கும் வேணுமா சொல்லு, நான் போய் வாங்கிட்டு வரேன் "

நான் சொன்னதும், அகி சில நொடிகள் நம்பவே முடியாதவன் போல என்னை பார்த்தான் .

"ஏய்.. லதா.. ஆர் யூ பைன்? " அதிர்ந்து அவன் வினவ,

"எனக்கென்ன வந்துச்சு.. நல்லா தான் இருக்கேன்.. சரி சொல்லு உனக்கு வேணுமா வேண்டாமா? "

"எனக்கு ஏதும் வேண்டாம்.. நீ சாப்பிட்டு வா.. நான் இங்க இருக்கேன் "

"ஓகேடா.. டாக்டர் கூப்டா எனக்கு கால் பண்ணு.. ஒடனே வரேன் " சொல்லிவிட்டு நான் திரும்பி நடக்க, அவன் என்னை பார்ப்பதை என்னால் உணரமுடிந்தது.

வழக்கம் போல உதடுகள்

"காலையில் தினமும் கண்விழித்தாலே கைகொடு தேவதை அம்மா.. அன்பென்றாலே அம்மா. என் தாய் போல் ஆகிடுமா "

என்று பாட தொடங்க, என்னையும் மீறி இரு சொட்டு நீர் கன்னத்தை தாண்டியது.

கேன்டீனில் சோழா பூரி ஆர்டர் கொடுத்துவிட்டு நான் காத்திருக்க, தீடிரென என்னை சூழ்ந்தது மீடியா லைட்.

"சொல்லுங்க மேடம்? நீங்களும் தீனாவும் எத்தனை வருஷமா பழகறீங்க? "

"உங்கள்ள யார் முதல காதல சொன்னது? "

"தீனாவும் நீங்களும் இப்படி அறிமுகம் ஆனீங்க? "

"உங்க காதல் திருமணத்துல முடியுமா?"

"தீனா தேஜுக்கூட பழகறது இப்போ தான் உங்களுக்கு தெரியுமா? "

"தீனா தேஜு பற்றி கிசுகிசு பத்தி என்ன நினைக்கறீங்க? "

"இன்னிக்கு தீனா ஹாஸ்பிடல் வந்தது உங்க அம்மாவிற்காகவா இல்லை தேஜுக்காகவா? உங்களுடைய கருத்து என்ன? "

"உங்களுக்கும் தீனாவிற்கும் ஒரு குழந்தை இருக்கறதா சொல்றாங்காலே..உண்மையா? "

மைக் பிடித்த ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கேள்வியால் துளைக்க, "ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் " என்று கத்தினேன்.

"யோவ்.. என்னையா சொல்றீங்க.. அவர் ஒரு மியூசிக் டைரக்டர் அவ்ளோதான்.. நான் அவரோடு பேன்.. அவ்ளோதான்.. எங்களுக்குள்ள காதலும் இல்ல.. கத்திரிகாயும் இல்லை.. "
கத்திவிட்டு நான் எழ முற்பட,

"தீனாவிற்கு கத்திரிக்காய் தான் பிடிக்குமா மேடம்? " என்று ஒரு மைக் கேட்டானே பார்க்கலாம்,

வந்த கடுப்பில் மைக்கை பிடுங்கி அவன் வாய்க்குள் துணித்துவிட்டேன்.

அப்போதும் அசராமல், "நீங்க அவர் பேனு சொல்றீங்க? உங்களுக்குள்ள எப்படி தொர்பு ஏற்பட்டுச்சுனு சொல்ல முடியுமா? " என்று கேட்டது இன்னொரு மைக்.

"ஆமா நான் பேன்.. அதுவும் பஜாஜ் பேன்.. காத்துவாங்க வந்தாரு.. அப்படியே தொடர்பு ஆகிருச்சு.. " நக்கலாக நான் சொல்லி சிரிக்க,

"ஓஹோஹ்.. பீச்ல மீட் பண்ணோம்னு சொல்லுங்க " என்றது இளித்தபடி அந்த மைக்.

"ஐயோ.. " என்று தலையில் அடித்துக்கொண்டு நான் விலகி செல்ல, கூட்டத்தில் பின்னே நின்ற தீனா மீது முட்டிக்கொண்டேன்.

சூழ்ந்திருக்கும் ஆபத்தான மிருகங்கள் நினைவு வர, அவசரமாக நான் விலகுவதற்குள், எங்களை ஜோடியாக படம் பிடிக்க தொடங்கினர் அந்த லைம் லைட் பைத்தியங்கள்.

என் காதருகே குனிந்த தீனா, என்னை நன்கு அணைத்து, கிசுகிசுப்பான குரலில்..

"இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்..
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கொர் ஜென்மம் வேண்டும்..
என்ன சொல்ல போகிறாய்? "
என்று சிரித்துக்கொண்டே பாட,

என் முகம் ஆத்திரத்தில் சிவந்தது.

நேராக மைக்குகள் பக்கம் திரும்பிய நான் " ஹி இஸ் அ ரோக்.. இந்தாளு என்னை பின்தொடர்ந்து தொல்லை தாறாரு.. அபார்ட் பரம் அ மியூசிக் டைரக்டர் ஹி இஸ் அ பொறுக்கி " என்றுவிட்டு சவாலாக அவனை பார்க்க, அவன் கண்களில் அத்தனை பாவம்.

கோவம், ஏமாற்றம், தவிப்பு, ரோஷம், ஏக்கம் எல்லாம் கலந்த அந்த பார்வை என்னை பயமுறுத்த அவனை உதறிவிட்டு விடுவிடுவென வேகமாக உள்ளே வந்துவிட்டேன்.

நான் உள் நுழையும்போதே என் எதிரே வந்தான் அகி.

அவன் முகத்தில் அத்தனை கலவரம்.

"என்ன அகி? "

"ஏய்ய்ய்.. லூசு என்னன்மோ பேசிக்கிறாங்க டி.. உன்னையும் தீனாவையுயும் வெச்சு? என்னடி நடக்குது இங்க? " பதறி அவன் வினவ,

சாவதானமாக அவனை அழைத்துக்கொண்டு சென்று, நடந்ததை அவனுக்கு விளக்கினேன்.

சந்தேகமாக என்னை பார்த்தான்.

"நம்பலாமா லது உன்னையா? இல்லை வழக்கம் போல விளையாடுறியா? "

"ஏய்ய்ய் உன் மேல ப்ரோமிஸ் டா "

"அடியே..காண்டுல பொய் சத்தியம் ஏதும் பண்ணிராத டி.. அப்பறம் நான் செத்துருவேன்.. " உண்மையிலேயே பயந்துபோய் அவன் கேட்க,
எனக்கு சிரிப்பு வந்தது.

"சரி விடறா.. செத்துபாத்துட்டு அனுபவம் எப்படி இருக்குனு சொல்லு வந்து.. ஓகே வா? "

நான் விளையாடுவது புரிந்து அவனுக்கு கோவம் வந்துவிட்டது.

"கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்ல லதா உங்கிட்ட? "

"சோ.. என்ன பண்ண சொல்ற? நானும் வேணா ஒரு பெட்ல அட்மிட் ஆகிறவா? யார் அங்கே.. உடனே ஒரு பஞ்சணையை இங்கே நிறுவுங்கள்.. அரசிளங்குமாரி ஆஸ்பத்திரி படுக்கையில் வீழ்வதா? என்ன ஒரு அசிங்கம்.. " ராஜதோரணையில் நான் பேச சிரித்து விட்டான் அகி.

"ஆனாலும்.. அத்தை சொன்ன மாறி.. உனக்கு வாலு ரொம்ப நீளம் லதா "

"அடப்பாவி.. இத்தன நாள் கால் இருக்குணுல நெனச்சேன். வாலுன்னு சொல்லவே இல்ல.. " வடிவேலு வெர்சனில் நான் சொல்ல, போதும்பா சாமி என்று கையெடுத்து கும்பிட்டான் அகி.

காத்திருப்போர் பகுதியில் இருந்த டிவியில் தலைப்பு செய்திகளில் என் படம் பேருடன் வந்தது.

அதிர்ந்து நானும் அகியும் பார்க்க,

"ஊடலால் காதலர்கள் சண்டை.. பிரபல இசை அமைப்பாளரின் ரகசிய காதலி.. பகிரங்கமாக இன்று பொதுவெளியில் தீனதயாளனை பொறுக்கி என ஏசுகிறார்.. கேள்விகேட்ட நம் செய்தியாளரின் வாயில் மைக்கை திணித்த தீனாவின் காதலி.. "

என்று இனிமையான குரலில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.

முத்தாய்ப்பாக நானும் தீனாவும் அணைத்தபடி நிற்கும் புகைப்படம்.

என் மூளை வேலை நிறுத்தம் செய்ய தொடங்கியது.
 

chitra ganesan

Well-Known Member
காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை ஆகிவிட்டதே.
மீடியாவில் விழுந்து விட்டால் சேதாரம் இல்லாமல் இருக்காது.
இங்கு லது வாழ்வில் சேதாரம் ஆக தீனா இருப்பானா இல்லை அவள் வாழ்க்கையின் ஆதாரமாக வருவானா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top