இதயத்தில் காதல் பூத்தது உன்னால் teaser 2

Advertisement

Pooja Soundarya

Well-Known Member
always thing different னு எங்க தாத்தா சொல்லுவாரு அதான்:p:pஎதோ ஒரு வித்தியாசத்தை கொண்டு வரணும் இல்ல. அதுக்காகத்தான்.
Nalla kondu vanthe ma mila
 

Nasreen

Well-Known Member
HI friends 2 ஜோடின்னு சொன்னேன். மூணு ஆகுமோ! இல்ல அந்த ஜோடியா வேறயா இன்னொரு கதைல கொண்டு வரலாமான்னு நானே கொஞ்சம் குழப்பத்துலதான் இருக்கேன். Lets's see


View attachment 7491


சென்னை மாநகரத்தின் பிரபலமான கல்லூரி அது. அங்கே படிப்பவர்கள் எல்லாம் அரிசியல்வாதிகளின் மக்களும், தொழிலதிபர்களின் மக்களும் மட்டுமே! பணத்துக்கு எந்த குறையும் இல்லையோ! வசதிக்கும் அவ்வளவு குறைகள் இல்லை.



காலேஜ் என்றாலே! மாணவர்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கும், சயன்ஸ், எஞ்சினியரிங், ஆட்ஸ் என்று பிரச்சினை தனியாக ஓட, சீனியர் ஜூனியர் பிரச்சினை, ஜாதி பிரச்சினை. காதல் விவகாரம், எக்ஸாம் டென்ஷன், அரியர்ஸ் இன்னும் ஏதேதோ.....



ஆனால் இங்கு எல்லோரும் பணம் படைத்தவர்கள் என்பதால் ஒரு வித்தியாசமான பிரச்சினை.



தொழிலதிபர்களின் பசங்களோ! "நீங்கள் வெறும் ஆறு வருடங்கள்தான் பதவியில் இருப்பீர்கள். அதன்பின் உங்களை அடையாளம் கூட தெரியாது. நாங்கள் அவ்வாறல்ல பரம்பரை பணக்காரர்களும் இருக்கிறோம். அது மட்டுமா? நீங்க தேர்தல்ல வெற்றி பெற நாங்க கொடுக்குற பெட்டி நிறைய பணம்தான் தேவைப்படுகிறது. அதனால நாங்கதான் உசத்தி" என்று பீத்திக்கொள்ள



"போங்கடா... அவன இவன காக்க புடிச்சியாவது அடிமட்ட தொண்டனா இருந்து மேல வந்தாலும், இல்ல ஒரேயடியா எம்.எல்.ஏ, எம்.பி, ஏன் சீ.எம் ஏ…யானாலும் நம்ம ஆளுற வர்க்கம்டா.... நம்ம கேட்ட உடனே! நீ பொட்டிய ஒன்னும் சும்மா கொடுக்கல. நாங்க ஜெய்ச்சி பதவில உக்காந்ததும் அத சாக்கா வச்சி, அரசாங்க டெண்டரையெல்லாம் கைப்பற்றி கொடுத்ததை விட காசு பாக்குறீங்களேடா லம்பாடி........."



இப்படியே! இரண்டு குழுவாக பிரிந்து காலம்காலமாக அடித்துக்கொள்ள காலேஜ் நிர்வாகமே! இவர்களை பிரித்து வைத்தது. .



A, B என்று வகுப்பை பிரித்தால் அதற்கும் சண்டை பிடிக்க ஆரம்பித்திருக்க, A for அரசியல் B for பிஸ்னஸ் என்று சொன்ன பிறகுதான் அடங்கினர் இளசுகள்.



எல்லாம் பணக்கார பசங்களாகிப் போக இவர்களை கேள்வி கூட யாரும் கேட்க முடியவில்லை. விரிவுரையாளர் பாடம் நடத்தும் பொழுது மற்ற வேலைகளில் இருப்பவர்கள்தான் அதிகம்.



கம்பளைண்ட் பண்ணி பிரயோஜனமும் இல்லை. பெற்றோர்கள் வந்தால் இவர்களை விட தொல்லை.



வழுக்க மண்டை முதல்வருக்குத்தான் பிராணம் ஏர்ரில் ஏறி இறங்கும். அந்த டென்ஷனை குறைக்க, இன்ஹேலரை கையேடு வைத்திருப்பார். அந்த ஏசி போட்ட அறையிலும் வியர்க்கும் வியப்பான மனிதன் இவர் மட்டும்தான். மண்டையை துடைக்க, ஒரு கைக்குட்டை, வழுக்கையை மறைக்க விக். அது வேறு வியர்வையில் வழுக்க அதை சரி செய்ய ஒரு நேரம் போகும். சோடாபுட்டி கண்ணாடி அத தவிர ஆளு கோட் சூட் இல்லாம காலேஜில் நடமாட மாட்டார்.


View attachment 7492


"ஏன் டா... கால தட்டி விட்ட?" கிருஷ்ணா அர்ஜுனனை முறைக்க,



"அவன் எதுக்குடா என் நண்பனை தள்ளி விட்டான்?" அர்ஜுன் கிருஷ்ணாவை முறைக்க,

View attachment 7493

"எதுக்கு அஜ்ஜு இந்த சாக்கடை கிட்டயெல்லாம் சரிக்கி சமமா பேசிகிட்டு இருக்க? வா போலாம்" விழி அர்ஜுனின் கையை பிடித்து இழுத்தவாறு கிருஷ்ணாவை முறைக்க,



கிருஷ்ணாவின் பார்வை அகல்விழியின் பக்கம் செல்லும் பொழுதே! எங்கிருந்தோ வந்த மாலினி "அத ஒரு சாக்கடை சொல்லக் கூடாது" என்று சொல்ல முகம் மாறினாள் விழி.



"ஏய்...." என்று அர்ஜுன் கத்த



"ஏய்..." என்று அவனுக்கு குறைவில்லாமல் கத்தினான் கிருஷ்ணா.



"ஆஹா.... இங்க ஒரு சம்பவம் நடக்க போகுதுடா..." என்று கேன்டீன் உரிமையாளர் கடையை மூடும் வேளையில் இறங்க, மணி அடித்து காலேஜ் ஆரம்பமாகப் போவதை தெரிவிக்க, இரண்டு இளம் சிங்கங்களையும் அடியாலும், அல்லைக்கையும் இழுத்துச்சென்றனர்.



"என்ன இருந்தாலும் அகல் நீ நடுவுல பேசி இருக்கக் கூடாது" செல்லும் அவர்களை பார்த்தவாறு அர்ஜுன் கோபமாக சொல்ல

View attachment 7494

"உன்ன பேசினா... நான் பேசுவேன்" விழி முகத்தை திருப்ப,



"இங்க பாரு விழி கோபத்துல அவன் உன்ன அடிச்சிட்டானு வை. அப்பொறம் சண்டை பெருசாகும்"



"எனக்காக நீ சண்டை போட மாட்டியா?" அதற்கும் விழி முறிக்கொள்ள,

View attachment 7495

"உனக்காக சண்டை போடலாம். ஆனா உன்னால சண்டை போட்டு, ஒரு பொண்ணால அவன் கூட சண்டை ஆகிருச்சுனு யாரும் சொல்லிட கூடாதில்ல. புரிஞ்சிக்க"



"ஆமா சிஸ்டர் அர்ஜுன் சொல்றது சரிதான்"



"ஆனாலும் அவன் ஆளுக்கு ரொம்பதான் வாய் நீளுது. அவள ஏதாச்சும் பண்ணனும் அஜ்ஜு..."



"நாம ஒன்னும் பண்ண வேண்டியதில்லை. இந்நேரம் அவனே! அவளுக்கு காரியம் பண்ணி இருப்பான்" விகாஷ் சிரிக்க,



"என்ன டா... சொல்லுற?" விழி கண்ணை உருட்ட



"ஐடியல் கபல்னு காலேஜ்ல பேசப்படுற மிஸ்டர் டான் அண்ட் மிஸ் வாரணம் ஆயிரம் ஒட்டாத கம்மாம்.



"புரியல"



"ரெண்டு பேர் வீட்டுலையும் கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் க்ரிஷ்க்கு இஷ்டமில்லையாம். சாரு யான மேல கடுப்பாதான் எப்போவும் இருக்காராம் நம்பத்தகுந்த வட்டாரம் சொன்னாங்க"



"ஹாஹாஹா பாவம் டா.. அவ. ஒருத்தன லவ் பண்ண வைக்க அவன் பின்னாடி ரொம்ப அலைய வேண்டி இருக்கும் போலயே!" தனக்கும் சேர்த்து விழி சொல்லிக்கொள்ள இவர்களின் சம்பாஷணையை அர்ஜுன் கேட்டுக்கொண்டிருந்தானே! தவிர பதில் எதுவும் சொல்லவில்லை.

:love::love::love::love::love:
Nalla irukku teaser
Ippadiyellam sandai poda readiya iruķkanga
Ithellam Padikka padikka college life knabagam varuthu, ..
Ok
Seekeramae epi varum??
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nalla irukku teaser
Ippadiyellam sandai poda readiya iruķkanga
Ithellam Padikka padikka college life knabagam varuthu, ..
Ok
Seekeramae epi varum??
எழுத ஆரம்பிச்சேட்டேன். மத்த கதாபாத்திரங்களை கோர்க்கும் fix பண்ணிட்டேன்னா epi வரும்.:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top