அவளே என் தோழனின் வசந்தம்-4-அ

Advertisement

surthi

Well-Known Member
வசந்தம்-4



இன்று

அந்த காலை வேலையில் அந்த ரம்யமான நேரத்தில் தமிழகத்தின் தென்கோடியாம் முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரி அம்மாவட்டத்தில் தக்கலை என்னும் ஊரில் அதாவது ரப்பர் மரங்களும் அதற்குரிய தொழிற்சாலைகளும் முந்திரி எஸ்டேட்டும் அதற்குரிய தொழிற்சாலைகளும் என முந்திரி மற்றும் ரப்பர் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றை முக்கியத் தொழிலாகக் கொண்ட அவ்வூரில் அந்த ஏக்கர் கணக்கான முந்திரி எஸ்டேட்களும் ரப்பர் எஸ்டேட்களும் அதில் வேலை செய்பவர்கள் அவர்களுக்கான வீடு மருத்துவம் பள்ளி கல்லூரி முதலியவும் கொண்டு ஏக்கர் கணக்கான நிலத்தை அக்காலத்திலேயே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அந்தக் கட்டடங்களும் என பார்க்க சிறு நகரமாக தோன்றிய அவ்விடத்தில் அந்த காலை நேரத்தில்அந்த எஸ்டேட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு என இருக்கும் குடியிருப்பில்ஒரு சிறு வீட்டில் ஒற்றைப் படுக்கை அறை கொண்ட அவ்வீட்டில் அவள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அவள் மகன் தன் வேலைக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டு மதிய உணவிற்கு சமைத்துக்கொண்டும் தன் மகனை பிளே ஸ்கூல் இருக்கு தயாராக்கி உட்காரவைத்துவிட்டு மற்றவைகளை சீக்கிரமாக முடிக்கஎத்தனித்தாள் இதையெல்லாம் விட அவளுக்கு பெரிய வேலை அவள் மகனை தயார்படுத்தி உட்கார வைப்பது தான் அது முடிந்து விட்டது அதனால் மற்றவைசட்டவிரைவாக முடித்துவிடலாம் என்று வேகமாக செய்ய ஆரம்பித்தாள் காலை மணி ஒன்பது இருக்கும் தன் வேலைகளை முடித்துக்கொண்டு மகனையும் அழைத்துக்கொண்டு வீட்டின் கதவை பூட்டிவிட்டு சாவி தன் கையில் வைத்து கொண்டு மகனின் கையை பிடித்த நடக்க ஆரம்பித்தாள் பத்து நிமிடத்தில் அவள் தன் மகனை தான் வேலை பார்க்கும் இடத்திலேயே உள்ளஸ்கூல் லோடு இணைந்திருந்த ப்ளே ஸ்கூலில் மகனை விட்டு விட்டு தன் மருத்துவமனையை நோக்கி சென்றாள் அவள் மருத்துவமனையில் தன் வேலை இடத்துக்குவந்து அமரவும் அவளை நோக்கி அவள் தோழி/சகோதரி அந்த ஹாஸ்பிடலின் முழு பொறுப்பையும் பார்த்துக் கொள்ளும் ஜோசபின் மனைவி மேரி அதுமட்டுமின்றி தன் மாமியாரின் சொல்லிற்கு இணங்க அநாமிகாவிற்கும் அங்கு பைனான்ஸ் பகுதியில் வேலை வாங்கிக் கொடுத்தவள். அவள் அநாமிகாவை நோக்கி வருவதற்கும் சரியாக இருந்தது.



என்ன அநாமிகா மாதவ ஸ்கூல்ல விட்டுட்டு வந்துட்டியா-மேரி

ஆமாம் மேரி அக்கா அவனை விட்டுட்டு இப்பதான் வரேன் அதான் லேட்டாயிடுச்சு சாரி -அநாமிகா

பரவால்ல அநாமிகா அதனால் என்ன பத்து நிமிஷம் தான் லேட் ஆச்சு ஆமாம் மாஸ்டர் இன்னைக்கு என்ன குறும்பு பண்ணாரு ஸ்கூலுக்கு போகாம இருக்க-மேரி

நல்ல வேளை கேட்டீங்க மேரி அக்கா இன்னிக்கு எனக்கு பயமாயிடுச்சு சார் அழகா தூங்கி எழுந்திச்ச உடனேபரண்மேலேஏறி அட்டைப்பெட்டிக்கு நடுவுல படுத்து இருந்தாரு முதலில் என்னால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை அதோடு பரண் மேலே ஏறுவான் என்று நான் கற்பனை கூட பண்ணி பார்க்கவில்லை எப்போதும் போல கட்டில் அடியில் இருக்கானா இல்ல பாத்ரூமில் இருக்கானா இல்ல பீரோல ஏதாவது ஒரு ஸேல்ஃப்ல மறைந்து இருக்கானா அப்படின்னு பார்க்கும் போது தீடிரென்று தும்மல் சத்தம் கேட்டு அது எங்கேருந்து வருது அப்படின்னு தேடி பார்த்தா பரண் மேலே சரியா வைச்சுருந்த அட்டைப்பெட்டி சாஞ்சு அதிலிருந்த பொருள்களெல்லாம் சிறிது கீழே சிதறி கிடந்தது அப்பறம் தான் பரண் மேலே கூர்ந்து கவனித்தால் சாரோட பிஞ்சுகால் தெரிஞ்சுது அதுக்கப்புறம் அவனை எப்படியோ கெஞ்சி மிரட்டி எல்லாம் செஞ்சு கீழே இறங்க வைத்து ஸ்கூலுக்கு கிளப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது-அநா

இதைக் கேட்டவுடன் மேரி சிரிப்பை அடக்க முடியவில்லை பின் சிரிக்காமல் என்ன செய்வாள் தினம் தினம் இப்படி ஏதாவது ஒன்றை செய்து எல்லோரையும் கலங்கடிக்கும் அவனை என்ன தான் செய்வது என நினைத்து மேரி சிரித்துக் கொண்டிருக்கும் போதே ஜோசப் அங்கு வந்தான்.

என்ன மேரி எதுக்கு பேய் மாதிரிசிரிக்கிற-ஜோசப்

அவன் இப்படி கேட்டவுடன் மேரி அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் மேரி முறைத்தவுடன் ஜோசப் அவளிடம் பம்முவது போல நடித்த படியே அது ஒன்னும் இல்லப்பா நோயாளிகள் எல்லாம் உன்னை பார்த்து பயப்படறாங்க வேணுமென்றால் நீயே பாரேன் என்று அவளிடம் காலையிலேயே வம்பிழுத்தான் இதுதான் ஜோசப்

ஜோசப்பும் இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவன் தான் என்று கூறினால் எவரும் நம்பமாட்டார் அந்த அளவிற்கு மிகவும் ஜாலியான பேர்வழி அவன் இத்தனைக்கும் அந்த ஹாஸ்பிடலின் மொத்தப் பொறுப்பும் ஜோசப் இடம் தான் உள்ளது அதாவது அந்த மருத்துவமனையின் டீன் என்று கூட சொல்லலாம் அவனின் வயது வெறும் 35 தான் ஆனால் பார்ப்பதற்கு வயது தெரியாது மிகவும் இளமையானவனாக தான் இருப்பான் அதற்காக உடற்பயிற்சி எல்லாம் செய்து தன் உடலை வலிமையாக வைத்துள்ளான் என்று கூறினாலோ அல்லது நினைத்தானோ அது தவறு அவனுக்கு முதலில் ஒழுங்காக தூங்கி எழுவதற்கோ சரியாக சாப்பிடுவதற்கோ கூட நேரம் இருக்காது அப்படியே இருந்தாலும் அவன் உடற்பயிற்சி எல்லாம் செய்ய மாட்டான் ஏன் வீட்டில் ஒரு துரும்பை கூட அசைக்க மாட்டான் அவன் வேலைகளைக்கூட வேறு ஒருவர் தான் செய்து தர வேண்டியிருக்கும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் அவன் ஒரு சோம்பேறி ஆனால் அதே நேரத்தில் தொழில் பக்தி மிகவும் உள்ளவன் ஆதலால் தான் இந்த மருத்துவத் தொழிலில் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளான்அதுமட்டுமின்றி அவனின் சோம்பேறித்தனம் எல்லாம் அவன் வீட்டுக்குள் மட்டும் தான் வெளியிடங்களில் மற்றவருக்கு உதவி செய்வதில் இவனுக்கு வல்லவன் இவனே.



மேரி இவளைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இவளும் அந்த மருத்துவமனையில் ஒரு டாக்டர் தான் ஆனால் ஜோசப் மற்றும் அவள் மகன் கிறிஸ்டோபர் தவிர மற்றவர்களிடம் மிகவும் அன்பாக அதே நேரத்தில் அமைதியாகவும் பழகக்கூடியவள்ஜோசப் இடம் மட்டும் கொஞ்சம் காரசாரமாக நடந்து கொள்வாள் அப்படி நடக்கவில்லை எனில் இருவரும் அவளை தூக்கி சாப்பிட்டு விடுவர் அதோடு இவளின் முகத்திற்கு மட்டுமே இருவரும் அடங்குவர் அதிலும் ஜோசப் சில நேரம் மேலே செய்தது போல் ஏதாவது செய்து அவளிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வான் ஆனாலும் ஒரு சில நேரங்களில் மேரி ஜோசஃபின் இந்த அலட்டல்களை மனதிற்குள் ரசித்ததுண்டு ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாள் காரணம் ஜோசஃபின் அடாவடி அதிகமாகிவிடும் என்று தான் ஆனால் இருவரும் அப்படி ஒரு அன்னியோனமான தம்பதிகள்தான் அதுவும் இந்த வயதில் இத்தனைக்கும் இவர்கள் இருவருக்கும் மரியம் தான் அதாவது ஜோசபின் தாய் தான் திருமணம் செய்து வைத்தார் மேரி ஓர் அனாதை ஸ்காலர்ஷிப்பில் படித்து டாக்டர் பட்டம் பெற்றவள்ஜோசபின் தாய் மரியம் இளம் விதவை அதாவது ஜோசபின் தந்தை மடா குடிகாரன் குடித்து குடித்தே திருமணமான மூன்றாவது வருடத்தில் இறந்து விட்டான் அதன்பின் மரியம் தான் கூலி வேலைக்கு சென்று ஜோசஃபை நன்றாக படிக்க வைத்தார் ஜோசஃபும் அந்த சிறு வயதிலேயே தாயின் கஷ்டத்தை புரிந்து கொண்டு நன்றாக படித்து ஸ்காலர்ஷிப் மூலமாக டாக்டர் பட்டம் பெற்ற ஹாஸ்பிட்டலில் வேலை பார்த்துக்கொண்டே மேலே படித்து இந்நிலைக்கு வந்தான் ஒருநிலைக்கு வந்து சிறிது காலம் இருக்காது மரியம் மேரியை கூட்டி வந்து இவள் தான் உன் வாழ்க்கை துணை என்று கூறிய போது மறு பேச்சு பேசாது அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் அவளை மேலும் படிக்க வைத்து நன்றாக பார்த்துக் கொண்டான்.

மரியம் அவரும் மிகவும் நல்லவர் என்று தான் கூற வேண்டும் பின் ஒரு அனாதையை அதுவும் தன் மகனுக்கு நிகராகபடித்தவளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் அவருக்கு எவ்வளவு பெரிய மனது இருக்க வேண்டும் அதோடு மட்டுமன்றி அநாமிகா அனாதரவாக வயிற்றில் குழந்தையோடு வந்து நின்று திக்குத் தெரியாத காட்டில் திருதிருவென குழந்தை போல் முழித்த அவளை தீயவர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்து வந்ததோடு அல்லாமல் தான் யார் என்றேஅவளுக்கே தெரியாதுஎன்று கூறியபோது அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மகளாக பாவித்து அவளுக்கு எல்லாம் செய்தவர் அவளுக்கு இருப்பிடமும் கொடுத்து அவளின் பிரசவத்திற்கும் துணையாக இருந்து ஒரு தாயாய் அவளை நன்றாக பார்த்துக் கொண்டார் அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர் அவர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top