அனல் மேலே பனிதுளியானாய் 3

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii frds&SIS's..second epiku comments kudutha anaivarukum en nandrigal...next three days konjam busy so ippove third epi pottuten...next epi Monday or Tuesday day kodukiren...padithuvittu comments kodukka marandhudadhinga....happy reading:):):)

அத்தியாயம் – 3
குற்றம் செய்யாத ஒருவர் தண்டிக்கப்படுவதே
உலகின் நியதியாக மாறிவருகிறது...
இதைத்தடுக்கும் வழி தான் தெரியவில்லை.......
குற்றம் குறைய வேண்டும் என்றால்....
நான் கோழை இல்லை என்று
நாம் என்று உணர்கிறோமோ......
அன்று இவ்வுலகத்தில் குற்றம்
குறைய வாய்ப்பு இருக்கிறது.....

இருவரும் மேலதிகாரி சொன்ன இடத்திற்கு சென்று இறங்கியவர்கள்... அந்த அப்பார்ட்மெண்ட்டை சுற்றி ஒருமுறைப் பார்த்தனர்.... ஏனோ தெரியவில்லை அந்த இடம் ஆதியை ஈர்த்தது... தனது அம்மா, தங்கை வந்துவிட்டால் இந்த அப்பார்ட்மெண்டிற்கு குடிப்பெயர வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்....

ஏனென்றால், அமைதியான இடம், சுற்றி மரம், பார்க் என அனைத்தும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.....
இருவரும் சம்பவம் நடந்த வீட்டிற்கு செல்ல, அங்கே இவர்களுக்கு முன்னே போட்டோ கிராஃபர் மற்றும் ஃபாரன்சிக் ஆபிசர்ஸ் என தஙகள் வேலையை செய்து கொண்டிருந்தனர்....

உள்ளே சென்றுப்பார்க்க, டெட்பாடியை கீழே இறக்கி வைத்திருந்தனர், அச்சிறுப்பெண்ணின் முகத்தை பார்த்த இருவருக்கும் இரக்கம் தான் எழுந்தது.....

அங்கே இருந்த கான்ஸ்டபிளிடம் “முதல்ல யார் டெட்பாடியைப் பார்த்தது” என்று ஆதி கேட்க,
“அதோ அங்க போன் பேசுறரே அவர்தான் பார்த்ததாக சொன்னார் சார்...” அவர் சொல்ல.....

“அவர இங்க கூப்பிடுங்க” என்று அந்த அறையை சுற்றிப்பார்த்தான்.... எதாவது எவிடன்ஸ் கிடைக்குமா என்று...... மிகவும் நேர்த்தியாக இருந்தது அறை, டெடிபியர் பொம்மைகள் அழகாக அடிக்கிவைக்கப்பட்டு..... கண்ணன் ராதை இருக்கும் போட்டோ பெரியதாக மாட்டப்பட்டிருந்தது..... லைட் ப்ரவுன் மற்றும் வெள்ளை நிறம் கலந்த திரைசீலை என அழகாக இருந்தது...

“ஹலோ சார், ஐ அம் டாக்டர்.ஹரிஷ்வர்தன், XXX ஹாஸ்பிட்டலில் வொர்க் செய்கிறேன்....” என்று கைக்குலுக்க...... பதிலுக்கு “ஹலோ அம் ஆதிரன்...ஆதிரன் I.P.S., கைக்குலுக்கிவிட்டு......”
“இந்தப் பொண்ண உங்களுக்கு எப்படி தெரியும்..... எப்போ டெட்பாடியைப் பார்த்திங்க....”. என்று கேட்க....

“என் பக்கத்து வீட்டுப்பொண்ணு சார்... நேம் வினிஷா, அவபாட்டியும் அவ மட்டும்தான் சார்..... அவங்க அப்பா, அம்மா ஏதோ ஒரு ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டதா சொன்னாள்... இதெல்லாம், ஸ்டடிஸ்ல ஏதாவது டவுட் கேட்க வரும்போது சொன்னது..... 12th எக்ஸாம் எழுதியிருக்கா சார்....” என்று சொல்லும்போது லேசாக அவனின் கண்கள் கலங்கியது......

“ஒகே, இப்போ அவங்கப் பாட்டி எங்க இருக்காங்க”

“அவங்க அதிர்ச்சியில் மயங்கி விழுந்துட்டாங்க சார்..... அதான் நான் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவங்களை எங்க ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைத்தேன்.......” என்று சொல்ல....

“ஒகே... நீங்கப் போகலாம்”, என்று அவனை அனுப்பிவைத்த ஆதிக்கு..... அவனைப் பிடிக்கவில்லை..... ஏனென்றும் தெரியவில்லை......

“விஷ்வா..... பாடியை போஸ்மார்ட்டம் செய்ய அனுப்பிவிட்டு, ரிப்போர்ட் வாங்கிட்டு வந்திடு..... நான் போய் அந்தப் பொண்ணோட கண்டிஷன் எப்படியிருக்குன்னுமப் பார்த்துட்டு இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு வர்ரேன் ஒகே....” என்று கிளம்பிவிட்டான்.......

XXX ஹாஸ்ப்பிட்டலில், சில்ரன்ஸ் செக்சஷனில், ஒரு குழந்தையிடம் ஊசிப்போடப் போராடிக்கொண்டிருந்தாள் இளா.... “என் புஜ்ஜிக்குட்டில்ல, இந்த ஊசிப்போட்டாதான் உன் உடம்பு சரியாகும்..... சரியானதான் சாக்கி நிறைய சாப்பிட முடியும்..... உனக்கு ஆண்ட்டி சாக்லேட் வாங்கித் தருவேனா.....” என்று பேரம் பேச,

அக்குழந்தையோ, “நண்டு ததவ ஊச்சிப் போத்த மோதும் இதான் ஆன்ட்டி சொன்ன..... ஆனா நீ கொதுக்காமலே ஊச்சிப் போத்துத்த..... போ.... நீ சாக்கி கையில கொதுத்தா தான் பாப்பா ஊச்சிப் போத்துப்பேன்.....” என்று கைகளைக் கட்டிக்கொண்டு விடாப்பிடியாக நிற்க.......

இளா மனதில் “ம்ம்ம்.... ஆனாலும் இந்த பாப்பா இவ்ளோ உஷார இருக்கக்கூடாது” என்று நினைத்துக் கொண்டு தனக்கென்று வாங்கி.... வெள்ளைக்கோர்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த அல்பென்லீப் லாலீபாப் ஒன்றைத் தூக்கி மனதே இல்லாமல் அக்குழந்தையிடம் கொடுத்து...... ஊசியைப்போட்டாள்.....

இதைப்பார்த்த ரேஷ்மி அடக்கமாட்டாமல் சிரிக்க..... சிரித்தவளைக் கண்டு.... முறைத்துக்கொண்டே தன் கேபினை நோக்கிச்சென்றாள்.... இளா....

காரணம், இளாவின் அம்மா சீதா, இவளின் சிறவயதில் கடைக்கு மற்றும் போகும் இடமெல்லாம் லாலீபாப்பை வாங்கி தந்துவிடுவார்.... வாங்கி தந்தால் மட்டுமே அழாமல் இருப்பாள் என்று..... ஆனால் பெரியவள் ஆன போதும் அது தொடரவே.... சீதா எவ்வளோவோ சொல்லிப்பார்த்துவிட்டார்.... அவளும் விட்டப்பாடில்லை..... ஒரு நாள் காலேஜிற்கு சென்று மாலை வந்தவள்..... ரூமில் உட்கார்ந்து லாலீபாப் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.... சீதா பார்த்துவிட்டு, லாலீபாப்பை அவள் வாயிலிருந்துப் புடுங்கி ஜன்னல் வழியே தூக்கிப்போட்டுவிட்டு.... வாய் மேலே ஒன்றுப் போட்டார்.... அன்றிலிருந்து அவருக்கு தெரியாமல் வாங்கி வைத்துக்கொண்டு சாப்பிடுவாள்..... ரேஷ்மிக்கு மட்டுமே இது தேரியும்....

ஆதி வண்டியைவிட்டு இறங்கி ஹாஸ்பிட்டலின் உள்ளே நுழைந்தான்...... ரிசப்ஷனில் விசாரித்துவிட்டு... அவர் தங்கியிருந்த அறையை நோக்கி சென்றான்... அவன் அறையை அடையவும் ஒரு நர்ஸ் மெளியே வரவும் சியாக இருந்தது......

“சிஸ்டர் நான் அவங்களப் பார்க்கலாமா” என்று அவன் கேட்க....

“நீங்க....”

“நான் போலீஸ், ஒரு கேஸ் விஷயமா அவங்கள விசாரிக்கணும்....”

“பார்க்க முடியும் சார், பட் அவங்களாள இப்போ பேசமுடியாது.... ஷீ இஸ் அன்கான்ஷீயஸ்...” என்று நர்ஸ் சொல்ல....

“ஒகே... இவங்களப்பார்த்த டாக்டர் எங்க இருக்காங்க....” என்று கேட்க...

“அவங்களோட கேபின்ல இருப்பாங்க சார்....”

“அவங்க கேபின் எங்க இருக்குன்னு சொல்லுங்க.... நான் போய் பார்த்துக்கிறேன்....”

“நேராப் போய் லெஃப்ட் திரும்பினிங்கன்னா அவங்க கேபின் வரும் சார்....”

“தங்யூ... சிஸ்டர்...” என்று சொல்லிவிட்டு கேபினை நோக்கி சென்றவன், கதவைத்தட்ட.... அது திறந்தப்பாடில்லை.... கதவை திறந்து உள்ளேப் பார்த்தவன்... அங்கே இருந்தவளைக் கண்டு முதலில் அதிர்ந்து... பின் அவளின் செய்கையில் சிரித்துக் கொண்டான்......

விஷ்வா டெட்பாடியை ஆம்புலன்சில் அனுப்பிவிட்டு.... தனது மேலதிகாரியிடம் நேரில் கண்டு விவரத்தை சொல்ல கிளம்பியவன்..... பார்க்கிங் ஏரியாவிற்கு சென்றான்.... அங்கே ஒருப்பெண் ரொம்ப நேரமாக தனது ஸ்கூட்டியை உயிர்ப்பிக்க முயறச்சி செய்துக்கொண்டிருந்தாள்.... அவளைப் பார்த்துக்கொண்டே வண்டியில் ஏறப்போனவன்.... என்ன நினைத்தானோ அவளின் அருகில் சென்று.....

“எனி ஹெல்ப் மிஸ்.....” என்று கேட்க
தனது அருகில் குரல் கேட்க நிமிர்ந்துப் பார்த்தவள்..... எதிரில் நின்றவனைக் கண்டு அதிர்ச்சியானாலும் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் தன்னைச்சுற்றிப் பறப்பதைப்போன்ற சந்தோஷம்....

-தொடரும்
 
Last edited by a moderator:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top