E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
Fantastic mani
நன்றி லக்ஷ்மி:)
கடைசியாக கருத்து போடுவதற்கு இணைந்தாலும் ரொம்ப ஆழமான கருத்துக்கள்
எதிர்கருத்து உள்ளவர்களும் ஆமோதிக்கும் மாதிரி கருத்துக்கள் உங்களுடையது...வர்ஷி பற்றி உங்களுடைய பார்வையில் வரும் கருத்துக்கள் ரொம்பவே பிடிக்கும்.
 

Manimegalai

Well-Known Member
நன்றி அருணா சிஸ்:)
எங்க உங்க லைக் மட்டும் பாராட்டுதான் கிடைக்குது...கதை கருத்துக்கள் போடுறேமே அதில் இணையலாமே சிஸ்.....முன்பே கேட்ட கேள்வி:Dநீங்க பதிலும் சொல்லீட்டீங்க:D
 

ThangaMalar

Well-Known Member
Hi Malli,

ஜாதி முல்லை....
கற்பின் இலக்கணம்
இயற்கையின் கையில்!

ஒட்டுறவில் மலர்ந்த முல்லை!
கட்டுறவில் வளர்ந்த கிள்ளை!

உறவின் மொழி அறியா தங்கை!
மரபின் வழி அறியா மங்கை!

தனக்கென்று ஓர் கனவு!
அதற்கென்று ஓர் நனவு!
எதற்கென்று ஓர் நினைவு!
எப்படியோ வாழ்ந்து வந்த விந்தை!

அறியாத வயதில்
புரியாத நடப்பில்
தெரியாத தவிப்பில்
பழகிவிட்ட போதை!
மாற்றிவிட்ட பாதை!

கம்பீரமாய் வந்தவன்,
காதலின் நாயகன்!
கடமையாய் வந்தவன்,
கணவனாய் ஆனவன்!

மரபில் வாழ்ந்தவன்
மணாளனாய் மாயவன்!
உறவில் உய்ர்ந்தவன்
உயிராய் ஆண்டவன்!

முல்லை மலர
எல்லை ஆனான்!

உறவுக்காய் அவன்!
அவனுக்காய் அவள்!
காத்திருந்த காதல்!
தனிமையின் தேடல்!
தவிப்பினில் ஊடல்!
மறுப்பினில் மீறல்!
வெறுப்பினில் குமுறல்!
காட்டிய பாதை
நாடிய பேதை,
தேடிய போதை!

அழிவின் ஆரம்பம்
அன்பின் தொடக்கம்
பண்பின் விளக்கம்
நட்பின் இணக்கம்
பிரிவில் முடக்கம்!

காதலின் பிரிவு,
அன்பின் செரிவு!
ஊடலின் முடிவு,
தேடலின் தெளிவு!

காலத்தின் மாற்றம்,
கோலத்தின் தோற்றம்!

எண்ணத்தில் அவள் மாற்றம்,
மன்னனவன் தடுமாற்றம்!

சேர்ந்திட்ட வாழ்வில்
வீழ்ந்திட்ட மனதில்
காதலின் ஆர்பாட்டம்
மலரவள் போராட்டம்!

உணர்த்த முடியா அவன்
உணர முடியா அவள்
காலத்தின் கையில்
உணர்வின் பிடியில்
உறவுகளின் ஆர்பரிப்பு!
உள்ளங்களின் பரிதவிப்பு!

ஏன் என்ற கேள்வி.....?
எதற்கு என்ற கேள்வி.....?
அலையாய் பொங்க
அமைதியாய் அடங்க
காலமகளின் மாற்றமும் காரணமோ...?

புரிய வந்த சொந்தம்!
மலர வந்த பந்தம்!
உணர வைத்த சொந்தம்!
ஆயுட்கால பந்தம்!

உயிர்த்திட்ட காதல்,
உயிருட்டிய தாய்மை
தாய்மையின் பொறுப்பில்
தனிமையின் விடுதலை!

தாயாய் மலர்ந்த முல்லை!
சேயாய் வளர்ந்த கிள்ளை!
சங்கீத வாழ்வின் எல்லை!
சங்கமமாய் வந்த பிள்ளை!

உன் காதல் மன்னன் உன்னை,
பூவாய் மலர வைத்த அன்பன்!
உன் காதல் கண்ணன் உன்னை
தாயாய் மலர வைத்த கள்வன்!
உன் காதல் அன்பன் உன்னை
பெண்ணாய் மிளிர வைத்த மன்னன்!

சங்கீத ஜாதி முல்லை!
இங்கித வாழ்வின் எல்லை!


வாழ்த்துக்கள் மல்லி, நன்றி.

உங்கள் கதைகளை சில நாட்களாகத்தான் படிக்கின்றேன். எல்லாம் மிக மிக எதார்த்தமான எளிய வாழ்வின் நிகழ்வுகளின் தொகுப்பு. நன்று.
சூப்பர் கவிதை மித்ரா.. அசத்தல்..

ஆனா ஒரு டவுட்டு...
மற்ற கதைகள் Ok..

SJM um எதார்த்தம்... ம்... எளிமை.. ம்ம்!
Lamborghini car... Porsche car..
IPL.. Hollywood.. வைர கீரிடம்..
நீச்சல் குளம் in bed room..
ரொம்ப எளிமை.... :cool:
 

banumathi jayaraman

Well-Known Member
SINGLE message a varala
so splitted message


Oru dedication to all our friends who read SJM
Ithai VARSHINI solratha mathiri eluthirukken
thank you my dear friends
yaaraiyavathu vitruntha mannikavum
add pannidalam sollunga

@Lalithaganesan
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64 @selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan


நீல கண்ணழகி
நீங்கள் விரும்பும் பெண்ணழகி
என் எண்ணவோட்டம்
அதுவே இந்த கருத்தோட்டம்

இதுகாறும் என் கதை படிக்கயிங்கு
பூந்தோட்டமாய் வந்தோரை
என் சொல்லோட்டத்தால்
நினைவு கூறவந்தேன்

நூறை தொட்டிங்கே முடிந்தாலும்
நூறு தடவை படிக்கும் மக்கள்
அனுதினமும் நான் வந்தாலும்
அலுக்காது என்பரிங்கே

ஒரு நண்பி சொன்னதிது
ஓராண்டு ஈராண்டாய்
ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு தினமும் கேக்கும்
ஒரே ஒரு கேள்வி இது
ஒவ்வொரு கணமும் பார்க்க
உன்னோட போனில் என்னருக்கு
ஒரு தடவை வாங்கின கணினி
ஒரு நிமிடம் கேட்டாலும் இன்று வரை
கிடைக்கவில்லை என்பதே
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64
@selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan

@Lalithaganesan

நிழலாக நானும்
நிஜங்களாக நீங்களும் இருக்க
நிழல் பிரியுமோ நிஜங்களை

இன்றென்ன கேள்வியோ கேக்க என
என்னையே ஆவலாக வர வைக்கும்

மலரவளும்
அவர்தம் கூடவே வகுப்பின்
முதல்வரான அவரின் டார்லிங்கும்


காதலால் என் கணவன் கசிந்துருகும் போது
ஆதலால் நான் வந்தேன் என வந்த ரதிமா


கவிதையாய் கருத்துரையாய்
என்னை பற்றி
மாத்தி மாத்தி தந்த
பாத்திமா



எந்த கேள்வி கேட்டாலும்
குறுக்கே கேட்டாலும்
மறுக்காமல் அலுக்காமல்
பதில் கூறும் உமா @Sundaramuma



என்னவனின் அம்பஸிடராகி
என்னையே திட்டி வேலை வாங்கும்

மணிமேகலை


ஒரு வார்த்தை சொன்னாலும்
துண்டு துண்டாய் சொல்லாமல்
நச்சென்று சொல்லி
பச்சென்று ஒட்டி கொள்ளும் ஹேமா


கேள்விகளுக்கு பதிலும்
கேள்விகளே பதிலுமாயும்
கேக்க மட்டுமல்லாமல்
படிக்கச் கருத்துரையும்
தந்த ஜோஹர்


கருத்துக்களோடு
கடி ஜோக்குகளும்
மட்டுமல்ல
கருத்தான கட்டுரையும்
தரும் முருகு அண்ணா


அருமை கவிதையினை
ஒரேயொரு எபியில்
தந்த அழகி அரசி


எல்லா எபியிலும்
எக்ஸாம் இருந்ததில்
என்னை படித்து
செல்லும் சிண்ட்டு


செல்லம் பல போட்டு
சேர்த்து ஒரு டியரும் போட்டு
படிக்கும் போதே பாசம் கொட்டும்

பானுமா


கடைசியில் சேர்ந்தாலும்
களை கட்ட சேர்ந்த

மைதிலி, லட்சுமி, லலிதா


மதுவாக ஒரு எபி வந்து
மறு எபி காணாமல்
போன @madhusram


பாரபட்சமின்றி பங்கிட்டு
அனைவருக்கும் லைக் போடும்

அருணா மா


முதலிலிருந்தே வந்தாலும்
கடைசி சில எபியில்
பாயிண்ட் பாயிண்ட்டாக
பாய்ந்து சொல்லும்

உமா மனோஜ்


எபி எங்கே என கேட்டு
காணாமல் போகும்

செல்விக்கா


கடைசி எபி வந்தாலும்
கருத்து சில கூறிய ரேகா

அருமை, மிகவும் அருமை, மீரா டியர்
உங்களைப் பாராட்ட
, எனக்கு வார்த்தைகளே,
கிடைக்கவில்லை, மீரா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64 @selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan @Lalithaganesan


எல்லோரும் தலைவனுக்காய்
எடுத்துரைக்க இருக்கும் போது
எனக்காக எடுத்துரைத்த
மக்கள் சிலருண்டு
கட்டுரையோ உரைநடையோ
கருத்தானவற்றுக்கு நடுநிலையாய்
சிந்திக்க வைக்கும் ஸ்மைலியால்
பாராட்டும் மலர்


கூட சேர்ந்து கருத்துரை தரும் adithirth

சிற்றுரையோ பேருரையோ
கட்டுரையை தந்த சிந்து


பல எபியில் பகுதி நேர
கருத்து சொல்லி
சில எபிகளாக
சிரித்து செல்லும் ansa

ஓராயிரம் கேள்வியுடன்
இங்கே விவாதம் நடந்தாலும்
ஒரே ஒரு வார்த்தையில்
செல்லும் சில அன்பர்கள் SASI and
@sameera.alima @vijivenkat
@vidhyanarayan

மேலும் மனக்குரலாம்
தனிக்குரலை கொடுத்ததுமல்லாமல்
கவிதையிலே எம்மை வார்த்த மீரா

மொத்தத்தில் பல கதை கொடுத்தாலும்
இக்கதையே பெருங்கதையாய்
என் கதையை அழகாக
எடுத்துரைத்து என்றென்றும்
உம் மனதில் எம்மை
என் தலை(வனை)யை நிக்க வைத்த

மல்லிகாவே

உன் சார்பாக மட்டுமல்லாமல்
என் குடும்பம் சார்பாகவும்

எல்லோருக்கும்
என் தலை வணக்கம்
என் தலை(வனின்)யின் வணக்கம்
எம் குடும்பத்தின் குறையில்லா
பிரியங்களும்
சைட்டில்முடிந்தாலும்
எமை சைட்டடிக்க
வாங்கும் கதைநூல்
மூலம் தொடருவோம்
இப்போது செல்கின்றோம்
என் குடும்ப நேரமிது
தப்பாமல் வந்திடுவீர்
IPL இன் போது
ஆதரவு தந்திடுவீர்
சென்று வருகிறேன்
நூலாக நீங்கள் படிக்கையிலே
அருமை, மிகவும் அருமை, மீரா டியர்
உங்களைப் பாராட்ட
, எனக்கு வார்த்தைகளே,
கிடைக்கவில்லை, மீரா செல்லம்
எனவே
நீங்களும், உங்கள் குடும்பமும்,
என்றென்றும் நீடூழி வாழ்க
, முன்னேற்றப்
பாதையில்
, என்றென்றும் வளர்க, என,
மனமார வாழ்த்துகிறேன், மீரா செல்லம்
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் கவிதை மித்ரா.. அசத்தல்..

ஆனா ஒரு டவுட்டு...
மற்ற கதைகள் Ok..

SJM um எதார்த்தம்... ம்... எளிமை.. ம்ம்!
Lamborghini car... Porsche car..
IPL.. Hollywood.. வைர கீரிடம்..
நீச்சல் குளம் in bed room..
ரொம்ப எளிமை.... :cool:
இல்லை மலர் மல்லியோட கதைகள் இப்பதான் படிக்கிறாங்க..
வெற்றி
ஹரி
கடைசியில் வருவது மல்லி சிஸ் மற்ற கதைகளும் அடக்கம்.:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top