E89 Sangeetha Jaathi Mullai 1

Advertisement

S

semao

Guest
அஸ்வினின் லொல்லழகு
அவன் பதில் அழகோஅழகு

அண்ணியின் நகை அழகு
அண்ணனின் காதல் அழகு
குழந்தைகளின் பாசம் அழகோஅழகு

சஞ்சயின் பாசமும் அழகு
தலைவியின் கோபம் அழகு
தலைவனின் சிரிப்பழகு
இருவரின் புரிதல் அழகோஅழகு

ஆக மொத்தம்
பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு
 

ThangaMalar

Well-Known Member
அஸ்வினின் லொல்லழகு
அவன் பதில் அழகோஅழகு

அண்ணியின் நகை அழகு
அண்ணனின் காதல் அழகு
குழந்தைகளின் பாசம் அழகோஅழகு

சஞ்சயின் பாசமும் அழகு
தலைவியின் கோபம் அழகு
தலைவனின் சிரிப்பழகு
இருவரின் புரிதல் அழகோஅழகு

ஆக மொத்தம்
பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு
தமிழ் அழகு..
எழுத்தழகு..
உன் கவிதையோ அழகோ அழகு..
 

Manimegalai

Well-Known Member
வர்ஷினி கிட்ட ??? .... அவ கூட அஸ்வின் கிளோஸ் ..... கதை இவ்வளோ போய்டுச்சு....
இன்னும் வர்ஷினி அண்ட் ஐஸ்வர்யா பேசிக்களை......
ஐஸ் வர்ஷி கட்டாயம் பேசனுமா சிஸ்?????
 

Joher

Well-Known Member
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ
 

ThangaMalar

Well-Known Member
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்

வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ

உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்

நீளமான கண்களே நீண்டுவந்து தீண்டுதே
பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம்
 

Joher

Well-Known Member
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது
விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது
நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்ப துன்பம் செய்குவதோ
ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ
உறவின் உயிரே உயிரே என்னைப் பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ
உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ
உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்
பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்
பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன
பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன
 

MythiliManivannan

Well-Known Member
அரிதாரம் பூசும் அன்னை விதையாக
பலதாரம் கொண்ட தந்தை வேராக
இட்ட விதை மலரும் முன் விட்டு செல்ல
மறுதாயோ (கமலா) தளிர் வளர மண்ணாக நீராக ..
நீர் கடத்தும் தண்டுகளாக தமையன்கள் மாற..
பெரு தண்டின் துணைவியோ (ஷாலினி) ஊட்டமாக
மலரவளை காக்க காம்பாக தாஸும் இருக்க

அரும்பிய மொட்டை
மலரும் முன்னே தாக்கிய தடியையே (அஸ்வின்)
தன் நம்பிக்கையால்..
பாதுகாக்கும் பந்தலாக்கினாள்

தகிக்கும் சூரியனாய்
மன்னவனோ தானிருக்க
மொட்டை கண்ட பின்
தான் மலர செய்த
சூரியகாந்தியை (ஐஸ்) விட்டு
வாச மொட்டின் பின்வந்து
தன் தீண்டலில் கருகுமோ
மொட்டென்று எண்ணி
கதிர் சுருக்கி
தன் இதம் பெருக்கி
மாலையின் மஞ்சள் வெயிலிதமாக
மாறியதன் பின்னணியே
மலர் மீது கொண்ட காதலோ

சுட்டெரிக்கும் சூரியனே
சுகம் தரும் தண்ணிலவாக மாறினாலும்
மலரவளோ மலர மறுப்பதென்ன
நிலவாக மாறிய சூரியனோ
தன் குளிரணைப்பால்
மலர வைப்பானோ
முல்லை வாசம் வீச வைப்பானோ
காத்திருக்கிறோம் விண்மீன்களாய்
வாசத்தை முகிரும் கண்மீன்களாய்.... .

--------------(மல்லிகாவின் கண்மணிகள்)
பின்னீட்டிங்க மலர்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top