E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
உழைப்பே உயர்வு தரும்{திருப்பதி பெருமாளுக்கு எவ்வளவு கஷ்டம்}

ஒரு சேல்ஸ் செமினாரில் பயிற்சியாளர் கூட்டத்தினை பார்த்து,
"நாட்டில் மிகவும் பணக்கார கோவில் எது...?" ன்னு கேட்டார்....
எல்லாரும் ஒரே குரலில் திருப்பதி வெங்கடாசலபதி னு சொன்னாங்க....

"ஏன்.... பதில் தெரியுமா"...ன்னு கேட்டார் பயிற்சியாளர்.....
ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னாங்க.....
அவுங்க பதில்ல திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார்.....

"எத்தனையோ இடங்களில் பெருமாள் கோவில் உள்ளது.... ஆனால், திருப்பதில மட்டும்தான் சாமி இரவு 12 மணிவரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார்..... மீண்டும் காலைல 3 மணிக்கு எழுந்து தரிசனம் குடுக்கறார்.... பகலில் ஓய்வு கூட எடுப்பதில்லை...மற்ற, கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள்... பகலில் ஓய்வு உண்டு.... ஆகையால் கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா..... என்று கேட்டார்....
 

murugesanlaxmi

Well-Known Member
வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்........???
இதற்கான விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.
'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.
'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.
'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.

கள்வர் பயம் இல்லை.
அதிக வரிகள் விதிப்பதில்லை.
முறையாக நீதி செலுத்தப்படுகிறது.
நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.
இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய்.
உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.
'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.
'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.
'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.
'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய்.

உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.
அதையே செய்.
என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.
நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார்.

சரி என்றான் மன்னன்.
ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார்.
அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.
அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.
'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'
'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா.....???'
'இல்லை'
'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்.....???

இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்.......???'
விழித்தான் அரசன்.
ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய்.
இப்போது இது எனதில்லை.
நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய்.
அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.
நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும்.
இந்த உலகம் எனதல்ல.
இந்த உடல் எனதல்ல.
எனக்கு அளிக்கப்பட்டது.
இந்த உயிர் எனதல்ல.
எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.
இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.

 

murugesanlaxmi

Well-Known Member
உத்திரபிரதேச தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க தலைவரே... ஒரு நல்ல செய்தி இருக்கு!"

"
சொல்லுய்யா..."

"
தாய்லாந்துல எலெக்சன் அறிவிச்சிருக்காங்களாம்!"
 

Adhirith

Well-Known Member
hi friend MM,
ஹா ஹா mm திரும்பவும்
800933747-4cd95d7aaf.jpg
கொடுத்துடீங்க


பாய்ந்துவர இருந்த தண்ணீரை அப்படியே மடக்கி திசை மாத்திட்டீங்க.....

மாஸ் ஹீரோ ட்ரண்டில் படைச்சு இருக்கீங்கன்னு நினச்சேன் இதுவரை சான்ஸே இல்ல இங்கேயும் மாஸ் ஹீரோயின் கொன்னுட்டீங்க .......அதுவும் உங்கள் லைன் படி செய்யும் செயலின் திண்மையே நேர்மை
ஏ கிளாஸ் வரி இப்ப நீங்கதான் மாஸ் ........


அஸ்வின் பணம் என்னடா பணம் பணம் குணம் தானாடா நிரந்தரம் அவனுக்கும் புரிந்தது வாழ்வின் நிதர்சனம்...

பிரமாண்டத்துக்கு முன்னாள் தூசு தும்பு எதுவுமே கண்ணுக்குமுன்னால் தெரியாது ஐஸ்ஸுக்கும் அப்படியே வர்ஷி பார்த்து....... இன்னும் சரியாக முழுதாக உணரவில்லை வர்ஷ் தான் அவனுக்கு மிக அதிகம் என்று இனி காண்பாள்.....

ஆடி மாத பொன்னி நதி அவள்...
பாய்ந்து வரும் பிரமாண்டமான வெள்ளப் பெருக்கு
தூசு,தும்பு எல்லாவற்றையும் தன்னுடனே
அடித்துக் கொண்டு சென்று விடும்....


அதிகம் தான்.....மிக அதிகம் தான்
மாய நதி ,ஜீவ நதி யாக
மல்லியின் மந்திரத்தில்
மாறும் நாள் ,அதிக தொலைவில் இல்லை.....
 

malar02

Well-Known Member
hi friend MM,
ஒரு நீண்ட அனலைசேஷன் சரியா என்று பாருங்கள் எனக்கு தோன்றிய வரை

இனி வரும் எபிக்களுக்கு பெரிதாக சொல்வதற்கு எதுவும் எனக்கு இருக்கும் என்று தோணவில்லை
போன எபியிலேஏ சரி பண்ணி இருக்கலாம் ஈஸ் ஆனால் அவனுக்கு தான் குடும்பத்தில் வாழ்ந்திருந்தாலும் எதுவுமே கற்று கொள்ளவில்லையே எப்பவும் மண்டை கர்வம்ஆண் தனக்கே எல்லாம் தெரியும் என்று என்று வாழ்க்கையின் விடுகதைகள் நுணுக்கங்கள் எல்லாம் சரி பண்ண தெரியாதவன் பணம் சம்பாதித்து என்ன ??என்னத்த குடும்பம் நடத்த போறான் தோசை ஊற்ற தான் லாயக்கு
அவளைத்தான் மண்டை காய வைத்துவிடடாய அவளை பார்த்த்தில் இருந்து இவன் புத்திக்கு இவன் ஐஸ் தான் புடிச்சு இருக்கனும் அவள் தான் எல்லவற்றிற்கும் தலை ஆட்டுவாள் இவன் திமிரை ரசிப்பாள்....
இவள் அப்படியா இவளே சுயம்பு இவனென்ன அவளுக்கு சுண்ணடைக்காய் அவள் உன்மேல் வைத்த காதலினால் நீ தப்பித்து வருகிறாய்
அவனை யார் குடும்பத்தை விட்டு வர சொன்னது அவளே அதை தான் தேடிகொண்டிருந்தாள்..... எல்லாத்தையும் சொதப்பிட்டு இப்ப அவ் மேல் பழி போடறன்.... இவனை நம்பி ரஞ்சனி இருந்திருந்தால் அவ் வாழ்க்கையும் அவ்வ்ளவுதான்
எல்லோரும் நட்பு ..உறவு இவன் மேல் வைத்த அன்பினால் கஷ்ட்டம் தான் படடார்கள் படுகிறார்கள்
அவளை தேடி மெண்டல் டார்ச்சர் கொடுத்து அடைந்து அவளுக்கு நீ தேடி கொடுத்தது கெட்ட பெயர் அவள் எதை கண்டு பயந்தாலோ அதை வழங்கிவிட்டாய் ஆணகள் செய்யும் பல தவறுகளில் இதுதான் மிக பெரிசு பெண்களுக்கு குடும்பத்தில் மனதை குன்ற செய்துவிட்டு அது கென்ன இப்போ என்று மேம்போக்காக போவது
அவள் ஒரு வெறுப்பில் தான் இப்படி பேசுகிறாள் உன்னை விட்டு விடுவாளா..... கொன்னுடுவா..... உன்னை அவள் தான் வழி நடத்த போகிறாள் அதன் முன்னோட்டமே இவையல்லாம்
உன்னால் யாரும் வீழ்ந்ததாக இருக்க கூடாது என்று உன்னை கண்ட நாள் முதல் பாடு பட்டு வருபவள் அன்று இவளுக்காவும் இவன் தனி பட குழப்பத்திற்காகவும் குடும்பத்தில் மனதை கஷ்ட்ட படுத்தி சிங்கப்பூர் ஓடிய அப்பயெல்லாம் குடும்பம் தெரியவில்லை இப்பதான் அவள் சொல்லும் பொது தான் வந்துடுச்சு ஞானமே
 

malar02

Well-Known Member
போன ஏபிலேயே இவன்....
சிம்பிளா சரி நீ இப்படி சொல்றியா நான் இப்படி நினைத்தேன் நாம் எல்லோரும் போய்விட்டு அங்கிருந்து நாம் மட்டும் தனியாக வேறு எங்காவது போகலாம் உனக்கு பிடித்த இடத்திற்கு என்று சொல் எப்படி செய்யலாம் என்று விஷயத்தை அவள் புறம் அவளை மையப்படுத்தி இருந்தால் விஷயம் ஒழுங்காகி இருக்கும் நிறைய ஆண்கள் செய்யும் தவறு இப்படியானவைகள் தான் பெண்களை கெடடவர்களாக உருவாக்க படுத்திவிடுவது.......
தன் தங்கையிடம் அவள் அண்ணனிடம் பேசுகிறாள் நடுவே நீ நுழையாதே என்று சொல்லிவிட்டு பின்னாடி வந்து சொன்னதை கைவிட்டு இவன் தங்கைக்காக பேசினால் இப்படித்தான் போகும் வாழ்கை ......
இந்த பத்துசரி தாத்தவும் சரி மற்ற்வர்கள் கணவனாகவே இருக்கட்டும் அண்ணியாக இருக்கட்டும் அவர்கள் வேறு வீட்டில் இருந்து வந்தவர்கள் அவர்கள் முன் தங்கையை கீழ் இறக்கி பேசலாமா அப்ப தங்கை என்ற உணர்வு இல்லாமல் தானே இருக்கிறார்கள் ஈஸ் இப்படி செய்வானா என்று யோசித்து இருக்கவேண்டும்
சின்ன விடைகள் தான் நுணுக்கங்கள் தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top