E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
உமா,super..
suddena oru thought...
நம்ம கைகுள்ள தான் இருக்கிறாள்...
தன்னை தான் காதல் பண்ணியாகணும்...
இன்று இல்லை என்றாலும்,
என்றாவது ஒரு நாள்....
அப்படி என்ற கர்வத்தில் இருப்பனோ....
:p:D
super apt
 

banumathi jayaraman

Well-Known Member
Hi mam

அருமையான ஒருவரி தன் தங்கையின் வாழ்க்கையை சரி செய்யப்போய் தன் வாழ்க்கையை ஊசலாடவிட்டுவிட்டார் ஈஸ்வர்,ரஞ்சனிக்குள் பத்து மீது இப்போதுதான் உரிமையுணர்வு வந்துள்ளது இனி விரைவில் அவர்களுக்குள் எல்லாம் சரியாகும்,ஆனால் வர்ஷினி பாவம்தான் அதைவிட இப்போ ஈஸ்வர் பாவமாகத்தோன்றுகின்றது,வாழ்க்கையின் ஓட்டத்தில் எவராலுமே நிலையான மனநிலையுடன் இருக்கமுடியாது,அதுவும் குடும்பத்திற்குள் மிகவும் குறைவு,அன்பினை சிலர் வாயாலும் சிலர் மௌனமாயும் சிலர் செய்கையாலும் உணர்த்துவார்கள்,வேலை இருந்தால் என்னை மறந்துவிடுவாயா என வர்ஷினி கேட்கும் இடம் வர்ஷினி ஒரு வளர்ந்த குழந்தைக்கு என்றே காட்டுகின்றது,எங்கு வளரந்தாலும் மனிதர்களுக்கென்று சில அடிப்படை உணர்வு ஒன்று இருக்கின்றதல்லவா,அதைக்கூட வர்ஷினியால் யோசிக்கமுடியாதா,ஏனென்றால் பணப்பிரச்சனையை ஈஸ்வர்தான் தீர்த்து வைக்கவேண்டும் என்று தெரியுமல்லவா,அதற்காக ஈஸ்வர் வேலையே கதியென்று இருந்தது சரி என்று சொல்லவில்லை ஒரு இக்கட்டான சூழ்நிலை அதைக்கூட புரிந்து கொள்ளமுடியாத பெண்ணா,ஈஸ்வர் எல்லாவற்றுக்கும் சரியான காரணங்களை விளக்கமாக கூறியும் புரியவில்லையே,எனக்கு இது வேணும் அதன்படி நீ செய்ய வேண்டும் என்று கூறி திருமணம் செய்து அதன்படியே வழுவாமல் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் என்ன செய்வது ,ஈஸ்வர் ஒன்றும் இயந்திரமனிதன் அல்லவே, இருவருக்கும் மிகவும் காரசாரமான வாக்குவாதம் இப்போது ,கோபத்தில் தங்களை உணராமல் வார்த்தைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்,இதையிட்டுத்தான் அவர்களின் பிரிவா,வர்ஷினிக்குத் தெரியும் தன் மேல் உள்ள ஈர்பினால் ஈஸ்வர் திருமணம் செய்வதற்கு எவ்வளவு காலம் காத்திருந்தது அதன்பின் மணமுடித்தது என்று ,அப்படிச்செய்தவன் ஒரு தவிர்க்க முடியாத சூழலில் அப்படி நடந்து கொண்டார் என்றால் ஒரு சாதரண மனிதனால் உணர்ந்துகொள்ள முடியும்,ஏன் வர்ஷினியல் உணர்ந்துகொள்ள முடியவில்லை, உறவுகளுக்குள் சண்டை சமாதானம் எல்லாமே இயற்கையாக நடப்பதுதான் ,எனக்குதோன்றுகின்றது வர்ஷினி பிறந்ததில் இருந்தே தனிமை & ஒருவித பாதுகாப்பின்மையுடன் வளர்ந்ததால் ,அது கவனிக்கப்படாமல் இருந்ததால் ,அது ஒருவித மனநோயாக மாறுகின்றதோ என்று,இனியாவது ஈஸ்வர் வர்ஷினி மேல் இன்னும் கூடுதல் கவனமெடுத்து இன்னும் பொறுமையாக அவரை கையாள வேண்டும்,ஈஸ்வரால்தான் வர்ஷினியின் உணர்வுகளை வெளிக்கொண்டுவரமுடியும்,காதல் சொன்ன பெண்ணை ஈஸ்வர் நோகடித்தார், இப்போ கட்டினவள் ஈஸ்வரை நோகடிக்கின்றார்,இதுதான் "தன்வினை தன்னைச்சுடும்"

நன்றி
Aravin22
rombavae arumaiyaana padhivu, thank you, Aravin dear
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த update படித்த உடன் ஐயோ அப்படிங்கிற உணர்வு தான் வருது......வர்ஷு வளர்ந்த சூழ்நிலை இப்படி அவள் நடந்து கொள்ள காரணம் என்று புரியுது.....ஆனாலும் இவள் இந்த அளவுக்கு எல்லோரையும் பேச வேண்டாமேனு இருக்கு....ஆரம்பத்தில் ரொம்ப அழகா எல்லோர் மனதையும் புரிந்து கொள்ளும் பெண்ணாக பார்த்து விட்டு இப்போ அந்த வயதிற்கேற்ப முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்வது போல் உள்ளது...

விஸ்வா அவளை அவளுக்காகவே நேசிக்கிறான் ..ஆனால் அதை புரிய வைக்காமல் தப்பு பண்ணிட்டன் .....ஆனால் இப்போ இந்த நிலைமையில் பார்க்கும் எனக்கு விஸ்வா பார்த்தால் தான் பாவமா இருக்கு.....வர்ஷி மேல எனக்கு எரிச்சல் தான் வருது ....
superb, you are correct Vijivenkat dear
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pons, GF ellarun enga poiteenga??? Konjam kalakkunga pa... time pass aaga vendama till Malli gives update
உண்மையை சொல்லவா...சும்மாவே ஆங்கிலம் என்றால் காத்தூரம் ஓடுவேன்..பெரிய பெரிய பத்தியாக....வாய்பபே இல்லை...சும்மா விருப்பம் மட்டும் தான்
 

sindu

Well-Known Member
உண்மையை சொல்லவா...சும்மாவே ஆங்கிலம் என்றால் காத்தூரம் ஓடுவேன்..பெரிய பெரிய பத்தியாக....வாய்பபே இல்லை...சும்மா விருப்பம் மட்டும் தான்
will try to write in tamil pa.

Neega tamil-a podunga...
 

banumathi jayaraman

Well-Known Member
இருப்பதிலேயே மலரின் நிலை பாவப்பட்ட நிலை ...பெற்றோர்
எப்போதும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கனவுகள் கற்பனைகள் ஏராளமா இருக்கும்..பாவம் அவரின் எந்த ஒரு கனவும் நிறைவேறலை..அவரின் குழந்தைகள் இரண்டுபேரின் வாழ்கையும்பார்த்து தவிர்ப்பது நிச்சயம் பாவம் தான்!!!!!!

சிறு வயதில் இருந்தே தனிமை,தனிமை...அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் தற்போது மனபிழற்சியா அமைந்துவிட்டது வர்ஷ்னிக்கு...ஒன்று கத்தி ஆர்பாட்டம் செய்து வெளிபடுத்துவர் அல்ல தற்கொலை முயற்சி செய்வர்..அதில் வர்ஷு இப்போ தான் ஈஸ் இடம் கத்த ஆரம்பிச்சு இருக்கா..அப்படியே கத்தட்டும் .அப்படியாவது அவளின் உணர்வுகள் வெளியாகிறதே!!!!!!!!!!!!!

எல்லோரின் பேச்சை கேட்காத பட்சத்தில் கவுன்சிளிங்க்ல மட்டும் பொறுமையா கேட்பா என என்ன நிச்சயம்??

வர்ஷு நிலை மோசம் என்றால் ஈஷின் நிலை படுமோசம்...
ஏன் எதற்கு எதனால் என்ற அவளின் உட்ச பட்ச கோபம் தெரியாத ஈஷின் நிலை பரிதாபம்,பாவம் தான்...எப்போதும் சாதாரணமா கண்ட மனிதர்களின் நிலை தற்போது வர்ஷுக்கு இல்லை..இதை அறியாத ஈஷ் அவளை சாதாரண பெண்ணாக பார்க்கிறான்..அவனுக்கு தெரியலை அவள் அசாதாரணம்
என்று !!!!!!!

இவன் வளர்ந்த சூழ்நிலை முழுக்க அவனை திமிருக்கு உள்ளாக்கியது..வர்ஷு வளர்ந்த சூழ்நிலை முழுக்க பிடிவாதத்திற்கு உள்ளாக்கி இருக்கு..இவர்களின் திருமண பந்தம் கேள்விக்குறிதான்!!!
இரண்டு பேரும் ஒருத்தர்க்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை..யாராவது ஒருத்தர் இறங்கனும்..நம்ம தல தான் இறங்கி வருவார்..ஏற்கனவே பேசுற பேச்சில் மண்டியிட்டு உட்கார்ந்தாச்சு...வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா..விட்டுத்தள்ளு தல..பிசாசு வேணாமுன்னு சொன்னே.. அதுக்கு பிசாசுக்கு தலைவியா இல்லே செலக்ட் பண்ணிடே!!!!!!

எப்படி மல்லி இப்படி கற்பனை செய்றிங்க??முரண்பட்ட இவங்களை
எப்படி சேர்க்கப்போறீங்க என்ற ஆவல் தான் மிக அதிகமா இருக்கு..
Yes Umamanoj dear, superb pa, I agreed with you
rombavae arumaiyaaga comment pottu irukkeengalae,
I like you and love you very much Uma dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top