E100 Sageetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
கதைகள் இயல்பான பேச்சு தமிழில் இருக்கணும் ப்ரோ ....
கதை வெற்றிக்கு வெகு முக்கியம்னு நான் நின்னைக்கிறது இது தான் .....
அந்தந்த மாவட்ட பேச்சு வழக்கு இருக்கலாம் ....உரையாடல் நெருக்கமா உணர் வைக்கணும் ......
இன்னும் நிறைய இருக்கு ... நாளைக்கு பார்க்கலாம்

சகோதரி இந்த வட்டபேச்சு என்றீர்களே அந்த இடத்தில் ஒரு சின்ன விளக்கம் NSன் தொடுவானம் திருநெல்வெளி தமிழ் என்னால் நாவல் படிக்க முடியாவில்லை சகோதரி. நாவல் என்பது எல்லோரும் படிக்கும் தமிழ் இருந்தால் வெற்றி அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் சகோதரி
 
malar02

Well-Known Member
ஒரு முறை சீல்சியில் ஒரு கட்டுரை படித்தேன். நாவல் எழுதுவது எப்படி? என்று. உடனே எனக்கு வெற்றி பெறும் நாவல் எழுதுவது எப்படி? என்று தோன்றியது. இதற்கு ஏதேனும் விதிமுறை இருக்கா?, எப்படி தெரிந்து கொள்வது என நினைத்தேன். வெற்றி பெறும் நாவலில் உள்ள அம்சங்களை கவனிந்தேன்.

என்னை பொருந்தவரை நாவல்கள் இருவகைப்படும். நல்ல நாவல்கள், வெற்றி பெரும் நாவல்கள் என இரு வகை. சில நேரங்களில் நல்ல நாவல்கள் வெற்றி பெறுவதில்லை. அதேபோல் வெற்றி பெறும் நாவல்கள் நல்ல நாவலாக இருப்பது இல்லை. நல்ல நாவலுக்கு ஒரே இலக்கணம் எழுதும் ஆசிரியரின் மனதை தாக்கி பின் வாசிக்கும் வாசகன் மனதை தாக்கும் எழுத்து உள்ள நாவல்கள் அனைத்தும் நல்ல நாவல்கள். உணர்வு, உரிமை, உயிரில் எழுச்சி, மனதில் தாக்கம் எற்படுத்தும் எழுத்து உள்ள நாவல்கள் அனைத்தும் நல்ல நாவல்கள். அதற்கு வெற்றி, தோல்வி கிடையாது. ஒரு சமயம் ஒரு சகோதரியின் கடிதத்தில், விற்காத நாவலை பாதுகாக்க முடியவில்லை, அது மழையில் நனைந்து அழித்தபோது ஒரு கஷ்டமான மகிழ்ச்சி வந்தது என சொன்னார். அதை படித்தபோது நாவல் ரசிகனான எனக்கு மிகுந்த வருத்தம் வந்தது. சரி, வெற்றி பெறும் நாவலில் என்ன இருக்கும் என யோசித்து, பின் நாவல் படிக்கும் போது கவனித்தேன் அப்படி கவனித்ததில் சில, ஆனால் இருக்கு இன்னும் பல.

வியாபர வெற்றி பெறும் நாவலுக்கு இலக்கணம் என்ன?, நிறைய, நிறைய ரொம்ப நிறைய உள்ளது. வெற்றி பெற்ற நாவலில் நான் கவனித்த முறையில் கொஞ்சம் மிக கொஞ்சம் சொல்லுகிறேன் ப்ரெண்ட்ஸ் {யாரும் கட்டைய தூக்க கூடாது, மீ பாவம், இது ஒரு ஜாலிக்கு மட்டுமே}

1.நாவலுக்கு பெயர் முக்கியம். ஒரு வார்த்தை பெயர் சரியில்லை. இரு வார்த்தைகள் அல்லது மூன்று வார்த்தைகள் பெயர் அல்லது பாடல் வரிகள் தான் சரியான பெயர்.{ ரமணி அம்மா காலத்தில் நந்தினி, லாவண்யா, சாந்தினி என்று பல ஒரு வார்த்தை பெயர் வைத்தார். அன்று அவருக்கு விளம்பரம், வியாபரம் இருந்தது, இன்று அந்த டிரண்டு முடித்து விட்டது }, நாவல் பெயரே பாதி வெற்றிக்கு உத்தரவாதம். நாவல் சிறப்பாக இருந்தும் நாவல் பெயரால் படிக்கமால் விட்டு பின் படித்து என்னை திட்டிக்கொண்டு இருந்து இருக்கிறேன்.

2.மகிழ்ச்சியான முடிவுகள் உள்ள நாவல்கள் சிறப்பான வெற்றி பெறுகிறது.

3.ஹீரோ – ஹீரோயின் இருவருமே வலிமையான பாத்திரங்களாக இருக்க வேண்டும்.

4.முடிவை நோக்கி நாவல் போகும் போது ஹீரோயின் ஹீரோவிடம் சரண்டர் ஆக வேண்டும். ஹீரோ ஹீரோயினிடம் காதலில் சரண்டர் ஆக வேண்டும்.

5.ஹீரோ இருக்கும் இடத்திற்கு ஹீரோயினோ, அல்லது ஹீரோயின் இருக்கும் இடத்துக்கு ஹீரோவோ வரவேண்டும் {அது ஊர், ஆபீஸ் என்பது போல்}. உறவுமுறை ஹீரோ ஹீரோயினை வாசகன் விரும்பவில்லை {காரணம் தெரியவில்லை}

6.துணை ஹீரோ,ஹீரோயின் அல்லது உதவி பாத்திரங்கள் ஹீரோ – ஹீரோயினை விட அவர்ளுக்கு குறைந்த உரையாடல் அல்லது கவரும் தன்மை குறைவாக இருக்க வேண்டும். அவர்கள் காமெடிக்கு மட்டுமே உதவுவார்கள். அல்லது எடுபுடி வேலை மட்டுமே. முக்கியமாக வாசகனின் கவனத்தை ஹீரோ – ஹீரோயினை தவிர அதிகம் கவர கூடாது.

7.ஹீரோயின் காலேஜ் படிக்கும் பெண்ணாக இருக்ககூடாது, அப்படி இருந்தால் விரைவாக வெளியில் வந்து வேலை அல்லது தொழில் செய்யவேண்டும்

8.உறவுகள் இருக்கவேண்டும், அது குறைவாக இருக்க வேண்டும் {அப்பா, அம்மா, அத்தை, மாமா, தம்பி, சில இடங்களில் மட்டுமே வரும் அக்கா, குட்டி செல்ல குழந்தைகள் அதுவும் ஹீரோயினினால் ரசிக்கும் குழந்தைகள்}

9.பாத்திரங்கள் குறைவாக இருக்கவேண்டும். வரும் பாத்திரங்களுக்கு எல்லாம் பெயர் தரகூடாது {சில சமயம் அவன், அவள், அவர் அது என்றே முடித்துவிடவேண்டும்}

1௦.முக்கியமாக உரையாடல், இழுவை போலும் இருக்க கூடாது, அதேசமயம் டக், டக் என்றும் முடித்துவிட கூடாது. நகைச்சுவையுடன் சில கருத்துகள் இருப்பது போல் இல்லாமல் இருக்கவேண்டும். உரையாடலுக்கு முன்னும், பின்னும் அது தொடர்பான பொது கருத்து உள்ள வரிகள் கவர்வது போல் இருக்கவேண்டும்.

11.ஒவ்வொரு பதிவு முடிவின் போது அடுத்த பதிவுக்கு ஒரு எதிர்பார்ப்பை துண்ட வேண்டும், அது பாசிட்டிவாக இருக்க வேண்டும் {உதராணமாக அவன்{அவள்] விடியாது என நினைத்து போனான்{ள்}, ஆனால் விதி அவனுக்கு விடியலுடன் காத்துக்கொண்டு இருந்தது என இருந்தால் நல்லது. தோல்வியடையும் நாவலில் நான் கவனித்தது, விதி சிரித்தது அவளுக்கு இன்னும் கொடுமை இருக்கிறது போல் வந்த பதிவு நாவல் வாசகனை கவரவில்லை}

12.நாவல் படிக்கு வாசகர்கள் பலர் நடுத்தரம், அதனால் அவர்களுக்கு பழகிய இடம், பொருள், அவர்கள் கேட்ட இடம் பொருள் மட்டுமே அவர்களுக்கு உடனே புரிகிறது. அது உடனடி வெற்றிக்கு வழி. புதிய இடம் பொருள் புரிந்து கொள்வதுக்குள் நாவல் முடிவடைத்துவிடுகிறது.

  1. நாவல் நடைபெறும் இடம், இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் கதை நடக்கு இடம் குக்கிராமமாகவும், அல்லது ஹைசிட்டியாகவும் இருக்கவில்லை. இரண்டும் கலந்த ஒரு கற்பனை இடமாகவே இருக்கிறது. சில நேரங்களில் தேவை பட்டது கிடைக்கும். சில நேரங்களில் அத்தியவசியமாக எல்லா இடத்திலும் கிடைப்பது கூட கிடைக்காது.

  1. 1 உரையாடலில் வார்த்தை பிரயோகம் கவனமா இருக்கவேண்டும். தமிழ் அறிவை நாவலில் காட்டினால் கதையில் கவனம் சிதறும்..
    வார்த்தைக்கு வார்த்தை பொருள் அறிய முயற்சி செஞ்சா, நாவல் இண்ட்ரெஸ்டிங்கா இருக்காது. தமிழ் வாழவேண்டும், அதே சமயம் நீங்கள் வெற்றி பெறவேண்டும். வெற்றி பெற்ற பின் நீங்கள் சொல்வது சபையில் கேட்கும்{ ஏப்போதும் வெற்றியின் ஒசைக்கு அதிக சக்தி}

  1. அதிக சோகம் கண்டிப்பாக கூடாவே கூடாது. காதல் சுகசோகம் இருக்கலாம். அதுவும் கூட இரண்டு பதிவுக்கு மேல் போககூடாது.

16.ஹீரோவுக்கு தெரியாமல் ஹீரோயின் விரும்பவேண்டும். அல்லது ஹீரோயினுக்கு தெரியாமல் ஹீரோ விரும்பவேண்டும். அது அதிதீவிரகாதலாக இருந்தால் நல்லது.

  1. ஹீரோ பிஸ்நெஸ்மேனாக இருக்க வேண்டும். அதிக பணக்காரனாக இருக்கவேண்டும். கண்டிப்பாக ஏழை, தொழிலாளியாக இருக்க கூடாது.

18.இருவரும் அழகனவராக இருக்கவேண்டும். எந்த உடல் குறைபாடு இருக்க கூடாது. அப்படி இருந்தால் அது வெற்றியை பாதிக்குது.

19.புதிய கருத்துகள் சொல்லும் முன் உங்களுக்கு ஒரு அடிதளம் வேண்டும். அதன்பிறகு நீங்கள் எந்த கட்டிடம் வேணுமானலும் கட்டலாம். அதனால் முதல் நாவலில் புதிய கருத்து, புதுமை கருத்து என்று மாட்டிகொள்ளாதீர்கள். சேப்பாக தப்பித்து ஒரு பெயர் பெற்ற பின் அதன் பின் விளையாடுங்கள். மிக சிலரே அந்த பரீச்சையில் வெற்றி பெறுகிறார்கள். என்ன செய்வது அரைந்த மாவுதான், நீங்கள் புதிய கவர்ந்த பலகாரம் சுட்டு தப்பித்துக்கொள்ளுங்கள். பலர் தோல்வி அடைந்த இடம் இதுதான்.

2௦.இந்த குறிப்புகள் படிக்கும் போது இப்படி நாவல் வந்தால் அது அரைந்த மாவுப்போல் தான் இருக்கும் அல்லது ஒரு பார்மூலாப்போல் தான் இருக்கும் என்று உங்களுக்கு தோணும். இங்கு உங்களுக்கு என் ரமணி அம்மாவை பற்றி சொல்லுகிறேன்.ஏன் ஏனில் இங்கு நாவல் எழுதும் அனைவரும் அவர் நாவலை படிக்காமல் ஒருவர் கூட இருக்கமுடியாது. ஏன், சிலர் பல எழுத்தாளர் நாவலை படிக்காமல் இருப்பார்கள். ஆனால் ரமணியம்மா நாவல் படிக்காமல் இருக்க சான்சேஇல்லை. அவர் அவர்தங்கைக்கு எழுதிய கடிதத்தை ஒருவர் பார்த்து, அதில் வியந்து அவரை நாவல் எழுத துண்டி பின் நாவல் எழுதி வெற்றி கண்டவர். அவருடைய நாவல்கள் அனைத்தும் ஒரே மூலகதைதான். இருப்பினும் அனைத்தும் வெற்றி. அவர் நாவலை பற்றி விமர்ச்சிப்பவர்கள் கூட அவர் வெற்றியை விமர்ச்சிக்க முடியாது. அப்படிபட்ட வெற்றிக்கு சொந்தக்காரர். அதனால் தான் சொல்கிறேன். எனக்கு ஒன்று மட்டும் தெரியும், நாவல் வெற்றியோ, தோல்வியோ, ஆனால் நாவல் எழுதும் அந்த கைகளுக்கு உள்ள வலி. அந்த வலியை உணர்ந்ததனால் இந்த சின்ன குறிப்புகள்

இன்னும் சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இதுவே உங்களை பயமுறுத்தபோகிறது என நிறுத்திக்கொள்கிறேன். {பிளிஸ், அந்த கட்டையை கீழே போடுங்கள் ப்ரெண்ட்ஸ்}

இது தான் சரி என்று சொல்லவில்லை, இது கூட சரிதான் என்று சொல்கிறேன். இப்படி எதுவும் கடைபிடிக்காமல் சில நாவல் வெற்றி பெறுகிறதே. அது எப்படி என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. எப்போதும் எதிலும் சில விதிமீறல்கள் உண்டு. அந்த விதிமீறல்களே அந்த நாவல் {எப்படி தப்பிச்சேன் பார்த்திர்களா, அப்பா}

ஆனால் விதிமீறல்கள் வாழ்க்கை ஆகாது. இன்னும் பேசாலாம் உங்கள் மனத்தை காயப்படுத்தாமல்.
அன்புடன் V.முருகேசன்

ஹா ஹா சூப்பர் ப்ரோஉங்களை அடிச்சுக்க ஆளே இல்லை என்பது போல் இங்கு ஓவியாக்கு விழுந்த ஒட்டு போல் எல்லா ஓட்டையும் அள்ளணும்னு முடிவோடு இருப்பது தெரிகிறது ஆனாலும் நீங்க காக்டெயில் கமெண்ட்ஸ் &விமர்சனம் கொடுப்பதில் உங்களை பாராட்டி தான் ஆகணும்.... மிக கவனம் கூடிய அழகு.....எடிட் செய்வதில் உங்க பொண்ணு கூட பாராட்டி இருந்தாள் .......பெண் எழுத்தாளர்களை பற்றி மட்டுமே குறிப்புகள் கொடுப்பதில் ஆகட்டும் அவர்களுடைய இடங்களில் உங்களுடைய ஆக்கிரமிப்பும் சூப்பர்.......பெண்கள் எல்லாம் வெள்ளந்திகள் இரக்க சுபாவம் கொண்டவர்கள் போகட்டும் பிழைத்து என்றும் மனம் கொண்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பீர்கள் .....கிரேட்வருங்காலத்தில் புனை(பெண் ) பெயரில் கதை எழுதி முடிசூடாமன்னன் ஆகும் குறிக்கோள் ஏதாவது இருக்கோ அப்படி ஏதாவது இருக்குமானால் இப்பொழுதே என் வாழ்த்துக்கள் but ((பெண்கள் இடத்தில பெண்களே பெண்களுக்கு ஒரு மறைமுக ........நீங்க பில் பண்ணிக்கோங்க ) நாகரிகமும் கல்வியும் பொது அறிவும் எவ்வ்ளவு வளர்ந்தாலும்வளர்த்து கொண்டது போல் பாவனையில் இருந்தாலும் இன்னுமும் பெண்கள் மாடுகளாகவும் ஆடுகளாகவும் இருக்கும் வரை நீங்கள் சொல்லும் பாணியில் உள்ள கதைகள் கண்டிப்பாக வெற்றி படியாய் நோக்கியே....... உங்கள் நீண்ட விமர்சனத்திற்கு கருத்து பரிமாறலுக்கு ஒரு வாசகியாய் என்னுடைய கிளாப்ஸ்
 
ஹா ஹா ஹா நன்றி நன்றி சகோதரி வக்கீல் அம்மாவே பாராட்டிய பின் என்ன. சகோதரி நான் கண்டிப்பாக நாவல் எழுதும் எண்ணம் துளி கூட கிடையாது. எற்கனேவே ரொம்ப ரொம்ப அதிகம் பேர் இருக்கிறார்கள் சகோதரி. நான் அம்பேள் ஆகிடுவேன். சும்மா ஒரு ஜாலி கடிதம் சகோதரி. உண்மையில் அப்ப அப்ப நம் இருப்பை காட்டவேண்டும் இல்லையா. தாங்க்ஸ் சகோதரி
 
malar02

Well-Known Member
ஹா ஹா ஹா நன்றி நன்றி சகோதரி வக்கீல் அம்மாவே பாராட்டிய பின் என்ன. சகோதரி நான் கண்டிப்பாக நாவல் எழுதும் எண்ணம் துளி கூட கிடையாது. எற்கனேவே ரொம்ப ரொம்ப அதிகம் பேர் இருக்கிறார்கள் சகோதரி. நான் அம்பேள் ஆகிடுவேன். சும்மா ஒரு ஜாலி கடிதம் சகோதரி. உண்மையில் அப்ப அப்ப நம் இருப்பை காட்டவேண்டும் இல்லையா.கண்டிப்பாய் கண்டிப்பாய் தாங்க்ஸ் சகோதரி
சூப்பர் ப்ரோ ஹட் ஒப் யூ
ப்ரோ நிறைய சகோதரிகள் கிடைத்துவிட்டார்கள் ஆன்லைனில் உங்களுக்கு நீங்கள் அவர்களுடன் நடத்தும் உரையடால்கள் ஹாஸ்யம் ஆதரவு எல்லாம் பார்த்துவிட்டேன் அதே ஆன்லைனில் உங்களுக்கு உங்கள் இனத்தை சேர்ந்த சகோதர்களுடன் கூடிய உங்கள் உரையாடல்கள் பாசங்கள் ,நட்பு பரிமாற்றம் , மற்றும் பல பார்க்க ஆவலாக உள்ளேன் நீங்கள் எந்த ஆண் ரைட்டர் வலைத்தளத்தில் கலந்துள்ளீர்கள் குறிப்பு கொடுங்கள் நாங்களும் இணைந்து கொள்கிறோம் உங்களுடன் அங்கு எங்களுக்கும் பல சகோதரர்கள் கிடைப்பார்கள் அல்லவா
 
Joher

Well-Known Member
சகோதரி இந்த வட்டபேச்சு என்றீர்களே அந்த இடத்தில் ஒரு சின்ன விளக்கம் NSன் தொடுவானம் திருநெல்வெளி தமிழ் என்னால் நாவல் படிக்க முடியாவில்லை சகோதரி. நாவல் என்பது எல்லோரும் படிக்கும் தமிழ் இருந்தால் வெற்றி அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் சகோதரி

yes....... பொதுவான பேச்சு வழக்கு.................
 
Manimegalai

Well-Known Member
சகோதரி இந்த வட்டபேச்சு என்றீர்களே அந்த இடத்தில் ஒரு சின்ன விளக்கம் NSன் தொடுவானம் திருநெல்வெளி தமிழ் என்னால் நாவல் படிக்க முடியாவில்லை சகோதரி. நாவல் என்பது எல்லோரும் படிக்கும் தமிழ் இருந்தால் வெற்றி அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் சகோதரி
என்னங்க அண்ணா ,
இப்படி சொல்லிட்டீங்க...
நம்ம வட்டார வழக்கு தமிழ் கேட்பது...
படிப்பது நல்லா இருக்குமே அண்ணா...
நான் ரொம்ப ரசிகை...
 
murugesanlaxmi

Well-Known Member
என்னங்க அண்ணா ,
இப்படி சொல்லிட்டீங்க...
நம்ம வட்டார வழக்கு தமிழ் கேட்பது...
படிப்பது நல்லா இருக்குமே அண்ணா...
நான் ரொம்ப ரசிகை...

சகோதரி ஒரு சிலரை தவிர பலர் பொது தமிழ் மட்டுமே விரும்புகிறார்கள் .{ ஒரு வேளை என் மணி சகோதரியை சுற்றி ஆங்கிலம் அதிகம் பேசுவதால் வட்டரதமிழ் பிடிக்குதோ, என் மனக்குரல்}
 
murugesanlaxmi

Well-Known Member
சூப்பர் ப்ரோ ஹட் ஒப் யூ
ப்ரோ நிறைய சகோதரிகள் கிடைத்துவிட்டார்கள் ஆன்லைனில் உங்களுக்கு நீங்கள் அவர்களுடன் நடத்தும் உரையடால்கள் ஹாஸ்யம் ஆதரவு எல்லாம் பார்த்துவிட்டேன் அதே ஆன்லைனில் உங்களுக்கு உங்கள் இனத்தை சேர்ந்த சகோதர்களுடன் கூடிய உங்கள் உரையாடல்கள் பாசங்கள் ,நட்பு பரிமாற்றம் , மற்றும் பல பார்க்க ஆவலாக உள்ளேன் நீங்கள் எந்த ஆண் ரைட்டர் வலைத்தளத்தில் கலந்துள்ளீர்கள் குறிப்பு கொடுங்கள் நாங்களும் இணைந்து கொள்கிறோம் உங்களுடன் அங்கு எங்களுக்கும் பல சகோதரர்கள் கிடைப்பார்கள் அல்லவா

சகோதரி நீங்கள் வேறு, எந்த ஆண் இப்போ நாவல் படிக்கிறாங்க.வாட்ஸ் ஆப்பை விட்டு வெளியில் வரமாட்டேன் என்கிறர்கள். நாவலுக்கு விமர்ச்சனம் எழுதும் என்னுடன் யார் பேசுகிறர்கள். மிக குறைந்த உறவு,அல்லது வேலை செய்யும் நண்பர்கள் மட்டுமே. இந்த நாவல் படிக்கும் ஆண்கள் என்னை போல், பழனியப்பன் போல் ஒரு சிலர் மட்டுமே.நாவல் விமர்ச்சனம் எழுத காரணம் முதலில் என்னிடம் யார் பேசினார்கள். வேறு போல் நினைத்தார்கள் . அவர்கள் மீது தவறு இல்லை. இங்கு போலிகள் அதிகம். பிறகு என் கடிதமும், என் விமர்ச்சனமும் இவன் உண்மை நாவல் வாசகன் என்று முகவரி தந்தது சகோதரி. அதேபோல் நான் இங்கு மற்றும் என் fb மட்டுமே. ஏனோ தெரியவில்லை ஆண் எழுத்தாளர் நாவல் பிடிக்கவில்லை. எதை தொட்டலும் இறுதி யில் காமத்தில் முடிகிறர்கள். நான் ஒன்றும் உத்தமன் இல்லை. ஆனால் இன்று அதை கடந்து விட்டேன். அதனால் மென்மை எழுத்தை மட்டும் படித்துகொண்டு இருக்கிறேன் என் உடன்பிறவாசகோதரிகளுடன்.
 
o god so sad paavam aan ezhuthaalarkal..... paavam intha pollatha paasathaithaan kadaka mudiyavilai silar appdithaan mukathirai podu konde alakiraarkal
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top