E100 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சகோதரி உண்மையில் முழுவதும் படிச்சிங்க, இன்னைக்கு சுவிஸ்ல் மழை கொட்டபோகிறது{ உங்களின் மனகுரல் ம் அண்ணனுக்காக முழுவதும் படிச்ச என்னையே கிண்டல் செய்கிறர். இதுக்குதான் மணி நீ எப்போதும் இவ்வளவு பெரிய கடிதம் படிக்க கூடாது } ஹ ஹா தாங்க்ஸ் சகோதரி
ஹா....ஹா...ஹா....
மேகலை செல்லத்தை, நன்றாகவே
தெரிந்து, புரிந்து வைத்திருக்கும்,
பாசமுள்ள அண்ணன், நீங்கள் தான்,
சகோதரரே
 

banumathi jayaraman

Well-Known Member
Yes yes முழுவதும் படித்தேன்...:)
மனக்குரல் 100 % சரி:D
குடும்ப நாவல் சந்தோஷம் மட்டுமே முக்கியம் சகோதரி. அதில் சிலர் குழப்பிகொள்கிறர்கள் என்று ஒரு ஜாலி கடிதம் தான் சகோதரி
நாவல்ஸ் படிக்கிறதே பொழுது போக்குக்கு தான்....... சந்தோசமோ துக்கமோ....... படிக்கிற மாதிரி இருந்தால் போதும்.....
ஹா....ஹா...ஹா......
 

Manimegalai

Well-Known Member
சில, பல, சொந்த பிரச்சனைகளால்,
நைட் தூக்கம் வராமல், நைட் 2 மணி
வரை fb பார்த்துட்டு, லேட்டா தூங்கி
லேட்டாத்தான் எழுந்தேன், பாத்திமா டியர்
(இந்த சீக்ரட்டை, வெளியில்
சொல்லிடாதீங்க பா
வீட்டில், டின் கட்டிடுவாங்க,
பாத்திமா செல்லம்)
உங்க நல்ல மனதுக்கு
எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிச்சிடுவீங்க...
கவலை படாதீங்க பானுமா..
ஆனால் ரொம்ப நேரம் இரவில் தூங்காகாம இருக்காதீங்க...
 

banumathi jayaraman

Well-Known Member
உங்க நல்ல மனதுக்கு
எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிச்சிடுவீங்க...
கவலை படாதீங்க பானுமா..
ஆனால் ரொம்ப நேரம் இரவில் தூங்காகாம இருக்காதீங்க...
மிகவும் நன்றி, மேகலை டியர்
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
ஹய்யோ, எப்படித்தான் இவ்வளவு அழகாக,
இப்படியெல்லாம் எழுதுறீங்களோ, சகோதரரே?
நீங்க எழுதிய, இந்த கமெண்ட்ஸ்ஸே/கருத்தே,
ஒரு மினி நாவல் போல இருக்கு, பிரதர்
கை வலிக்கலையா, சகோதரரே?
அம்மோ, என்னாலெல்லாம் இப்படி,
இவ்வளவெல்லாம் எழுத முடியாது
எழுதவும் தெரியாது
நானெல்லாம், ஆஞ்சேனேயர் பரம்பரை
குருவி பரம்பரையல்ல, சகோதரரே
கூடு கட்டத் தெரியாது, சகோதரரே


நன்றி சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
எப்பொழுதும் போலவே,
என்னைக் காப்பாற்றுவார்
என்ற நம்பிக்கையுடன்,
அவரைத்தான், அந்த தும்பிக்கையான்
விநாயகப் பெருமானைத்தான்,
நம்பியிருக்கிறேன், சகோதரரே
தங்களுடைய ஆறுதலான,
வார்த்தைக்கு மிகவும் நன்றி,
சகோதரரே
உண்மை சகோதரி கண்டிப்பாக நல்லது நடக்கும் சகோதரி. எப்போதும் கவலை வேண்டாம்
 

murugesanlaxmi

Well-Known Member
ஹா....ஹா...ஹா....
மேகலை செல்லத்தை, நன்றாகவே
தெரிந்து, புரிந்து வைத்திருக்கும்,
பாசமுள்ள அண்ணன், நீங்கள் தான்,
சகோதரரே




என் மலர் சகோதரி மணி சகோதரி இருவரும் பெரியது என்றால் தண்டிவிடுவார்கள் சகோதரி
 

fathima.ar

Well-Known Member
சில, பல, சொந்த பிரச்சனைகளால்,
நைட் தூக்கம் வராமல், நைட் 2 மணி
வரை fb பார்த்துட்டு, லேட்டா தூங்கி
லேட்டாத்தான் எழுந்தேன், பாத்திமா டியர்
(இந்த சீக்ரட்டை, வெளியில்
சொல்லிடாதீங்க பா
வீட்டில், டின் கட்டிடுவாங்க,
பாத்திமா செல்லம்)


இதுவும் கடந்து போகும்..
நன்மை உங்களை தேடி வரும்....

எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்கமாட்டோமா;)
 

Sundaramuma

Well-Known Member
ஒரு முறை சீல்சியில் ஒரு கட்டுரை படித்தேன். நாவல் எழுதுவது எப்படி? என்று. உடனே எனக்கு வெற்றி பெறும் நாவல் எழுதுவது எப்படி? என்று தோன்றியது. இதற்கு ஏதேனும் விதிமுறை இருக்கா?, எப்படி தெரிந்து கொள்வது என நினைத்தேன். வெற்றி பெறும் நாவலில் உள்ள அம்சங்களை கவனிந்தேன்.

என்னை பொருந்தவரை நாவல்கள் இருவகைப்படும். நல்ல நாவல்கள், வெற்றி பெரும் நாவல்கள் என இரு வகை. சில நேரங்களில் நல்ல நாவல்கள் வெற்றி பெறுவதில்லை. அதேபோல் வெற்றி பெறும் நாவல்கள் நல்ல நாவலாக இருப்பது இல்லை. நல்ல நாவலுக்கு ஒரே இலக்கணம் எழுதும் ஆசிரியரின் மனதை தாக்கி பின் வாசிக்கும் வாசகன் மனதை தாக்கும் எழுத்து உள்ள நாவல்கள் அனைத்தும் நல்ல நாவல்கள். உணர்வு, உரிமை, உயிரில் எழுச்சி, மனதில் தாக்கம் எற்படுத்தும் எழுத்து உள்ள நாவல்கள் அனைத்தும் நல்ல நாவல்கள். அதற்கு வெற்றி, தோல்வி கிடையாது. ஒரு சமயம் ஒரு சகோதரியின் கடிதத்தில், விற்காத நாவலை பாதுகாக்க முடியவில்லை, அது மழையில் நனைந்து அழித்தபோது ஒரு கஷ்டமான மகிழ்ச்சி வந்தது என சொன்னார். அதை படித்தபோது நாவல் ரசிகனான எனக்கு மிகுந்த வருத்தம் வந்தது. சரி, வெற்றி பெறும் நாவலில் என்ன இருக்கும் என யோசித்து, பின் நாவல் படிக்கும் போது கவனித்தேன் அப்படி கவனித்ததில் சில, ஆனால் இருக்கு இன்னும் பல.

வியாபர வெற்றி பெறும் நாவலுக்கு இலக்கணம் என்ன?, நிறைய, நிறைய ரொம்ப நிறைய உள்ளது. வெற்றி பெற்ற நாவலில் நான் கவனித்த முறையில் கொஞ்சம் மிக கொஞ்சம் சொல்லுகிறேன் ப்ரெண்ட்ஸ் {யாரும் கட்டைய தூக்க கூடாது, மீ பாவம், இது ஒரு ஜாலிக்கு மட்டுமே}


1.நாவலுக்கு பெயர் முக்கியம். ஒரு வார்த்தை பெயர் சரியில்லை. இரு வார்த்தைகள் அல்லது மூன்று வார்த்தைகள் பெயர் அல்லது பாடல் வரிகள் தான் சரியான பெயர்.{ ரமணி அம்மா காலத்தில் நந்தினி, லாவண்யா, சாந்தினி என்று பல ஒரு வார்த்தை பெயர் வைத்தார். அன்று அவருக்கு விளம்பரம், வியாபரம் இருந்தது, இன்று அந்த டிரண்டு முடித்து விட்டது }, நாவல் பெயரே பாதி வெற்றிக்கு உத்தரவாதம். நாவல் சிறப்பாக இருந்தும் நாவல் பெயரால் படிக்கமால் விட்டு பின் படித்து என்னை திட்டிக்கொண்டு இருந்து இருக்கிறேன்.

2.மகிழ்ச்சியான முடிவுகள் உள்ள நாவல்கள் சிறப்பான வெற்றி பெறுகிறது.

3.ஹீரோ – ஹீரோயின் இருவருமே வலிமையான பாத்திரங்களாக இருக்க வேண்டும்.

4.முடிவை நோக்கி நாவல் போகும் போது ஹீரோயின் ஹீரோவிடம் சரண்டர் ஆக வேண்டும். ஹீரோ ஹீரோயினிடம் காதலில் சரண்டர் ஆக வேண்டும்.

5.ஹீரோ இருக்கும் இடத்திற்கு ஹீரோயினோ, அல்லது ஹீரோயின் இருக்கும் இடத்துக்கு ஹீரோவோ வரவேண்டும் {அது ஊர், ஆபீஸ் என்பது போல்}. உறவுமுறை ஹீரோ ஹீரோயினை வாசகன் விரும்பவில்லை {காரணம் தெரியவில்லை}

6.துணை ஹீரோ,ஹீரோயின் அல்லது உதவி பாத்திரங்கள் ஹீரோ – ஹீரோயினை விட அவர்ளுக்கு குறைந்த உரையாடல் அல்லது கவரும் தன்மை குறைவாக இருக்க வேண்டும். அவர்கள் காமெடிக்கு மட்டுமே உதவுவார்கள். அல்லது எடுபுடி வேலை மட்டுமே. முக்கியமாக வாசகனின் கவனத்தை ஹீரோ – ஹீரோயினை தவிர அதிகம் கவர கூடாது.

7.ஹீரோயின் காலேஜ் படிக்கும் பெண்ணாக இருக்ககூடாது, அப்படி இருந்தால் விரைவாக வெளியில் வந்து வேலை அல்லது தொழில் செய்யவேண்டும்

8.உறவுகள் இருக்கவேண்டும், அது குறைவாக இருக்க வேண்டும் {அப்பா, அம்மா, அத்தை, மாமா, தம்பி, சில இடங்களில் மட்டுமே வரும் அக்கா, குட்டி செல்ல குழந்தைகள் அதுவும் ஹீரோயினினால் ரசிக்கும் குழந்தைகள்}

9.பாத்திரங்கள் குறைவாக இருக்கவேண்டும். வரும் பாத்திரங்களுக்கு எல்லாம் பெயர் தரகூடாது {சில சமயம் அவன், அவள், அவர் அது என்றே முடித்துவிடவேண்டும்}


1௦.முக்கியமாக உரையாடல், இழுவை போலும் இருக்க கூடாது, அதேசமயம் டக், டக் என்றும் முடித்துவிட கூடாது. நகைச்சுவையுடன் சில கருத்துகள் இருப்பது போல் இல்லாமல் இருக்கவேண்டும். உரையாடலுக்கு முன்னும், பின்னும் அது தொடர்பான பொது கருத்து உள்ள வரிகள் கவர்வது போல் இருக்கவேண்டும்.

11.ஒவ்வொரு பதிவு முடிவின் போது அடுத்த பதிவுக்கு ஒரு எதிர்பார்ப்பை துண்ட வேண்டும், அது பாசிட்டிவாக இருக்க வேண்டும் {உதராணமாக அவன்{அவள்] விடியாது என நினைத்து போனான்{ள்}, ஆனால் விதி அவனுக்கு விடியலுடன் காத்துக்கொண்டு இருந்தது என இருந்தால் நல்லது. தோல்வியடையும் நாவலில் நான் கவனித்தது, விதி சிரித்தது அவளுக்கு இன்னும் கொடுமை இருக்கிறது போல் வந்த பதிவு நாவல் வாசகனை கவரவில்லை}

12.நாவல் படிக்கு வாசகர்கள் பலர் நடுத்தரம், அதனால் அவர்களுக்கு பழகிய இடம், பொருள், அவர்கள் கேட்ட இடம் பொருள் மட்டுமே அவர்களுக்கு உடனே புரிகிறது. அது உடனடி வெற்றிக்கு வழி. புதிய இடம் பொருள் புரிந்து கொள்வதுக்குள் நாவல் முடிவடைத்துவிடுகிறது.

  1. நாவல் நடைபெறும் இடம், இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் கதை நடக்கு இடம் குக்கிராமமாகவும், அல்லது ஹைசிட்டியாகவும் இருக்கவில்லை. இரண்டும் கலந்த ஒரு கற்பனை இடமாகவே இருக்கிறது. சில நேரங்களில் தேவை பட்டது கிடைக்கும். சில நேரங்களில் அத்தியவசியமாக எல்லா இடத்திலும் கிடைப்பது கூட கிடைக்காது.

  1. 1 உரையாடலில் வார்த்தை பிரயோகம் கவனமா இருக்கவேண்டும். தமிழ் அறிவை நாவலில் காட்டினால் கதையில் கவனம் சிதறும்..
    வார்த்தைக்கு வார்த்தை பொருள் அறிய முயற்சி செஞ்சா, நாவல் இண்ட்ரெஸ்டிங்கா இருக்காது. தமிழ் வாழவேண்டும், அதே சமயம் நீங்கள் வெற்றி பெறவேண்டும். வெற்றி பெற்ற பின் நீங்கள் சொல்வது சபையில் கேட்கும்{ ஏப்போதும் வெற்றியின் ஒசைக்கு அதிக சக்தி}

  1. அதிக சோகம் கண்டிப்பாக கூடாவே கூடாது. காதல் சுகசோகம் இருக்கலாம். அதுவும் கூட இரண்டு பதிவுக்கு மேல் போககூடாது.

16.ஹீரோவுக்கு தெரியாமல் ஹீரோயின் விரும்பவேண்டும். அல்லது ஹீரோயினுக்கு தெரியாமல் ஹீரோ விரும்பவேண்டும். அது அதிதீவிரகாதலாக இருந்தால் நல்லது.

  1. ஹீரோ பிஸ்நெஸ்மேனாக இருக்க வேண்டும். அதிக பணக்காரனாக இருக்கவேண்டும். கண்டிப்பாக ஏழை, தொழிலாளியாக இருக்க கூடாது.

18.இருவரும் அழகனவராக இருக்கவேண்டும். எந்த உடல் குறைபாடு இருக்க கூடாது. அப்படி இருந்தால் அது வெற்றியை பாதிக்குது.

19.புதிய கருத்துகள் சொல்லும் முன் உங்களுக்கு ஒரு அடிதளம் வேண்டும். அதன்பிறகு நீங்கள் எந்த கட்டிடம் வேணுமானலும் கட்டலாம். அதனால் முதல் நாவலில் புதிய கருத்து, புதுமை கருத்து என்று மாட்டிகொள்ளாதீர்கள். சேப்பாக தப்பித்து ஒரு பெயர் பெற்ற பின் அதன் பின் விளையாடுங்கள். மிக சிலரே அந்த பரீச்சையில் வெற்றி பெறுகிறார்கள். என்ன செய்வது அரைந்த மாவுதான், நீங்கள் புதிய கவர்ந்த பலகாரம் சுட்டு தப்பித்துக்கொள்ளுங்கள். பலர் தோல்வி அடைந்த இடம் இதுதான்.

2௦.இந்த குறிப்புகள் படிக்கும் போது இப்படி நாவல் வந்தால் அது அரைந்த மாவுப்போல் தான் இருக்கும் அல்லது ஒரு பார்மூலாப்போல் தான் இருக்கும் என்று உங்களுக்கு தோணும். இங்கு உங்களுக்கு என் ரமணி அம்மாவை பற்றி சொல்லுகிறேன்.ஏன் ஏனில் இங்கு நாவல் எழுதும் அனைவரும் அவர் நாவலை படிக்காமல் ஒருவர் கூட இருக்கமுடியாது. ஏன், சிலர் பல எழுத்தாளர் நாவலை படிக்காமல் இருப்பார்கள். ஆனால் ரமணியம்மா நாவல் படிக்காமல் இருக்க சான்சேஇல்லை. அவர் அவர்தங்கைக்கு எழுதிய கடிதத்தை ஒருவர் பார்த்து, அதில் வியந்து அவரை நாவல் எழுத துண்டி பின் நாவல் எழுதி வெற்றி கண்டவர். அவருடைய நாவல்கள் அனைத்தும் ஒரே மூலகதைதான். இருப்பினும் அனைத்தும் வெற்றி. அவர் நாவலை பற்றி விமர்ச்சிப்பவர்கள் கூட அவர் வெற்றியை விமர்ச்சிக்க முடியாது. அப்படிபட்ட வெற்றிக்கு சொந்தக்காரர். அதனால் தான் சொல்கிறேன். எனக்கு ஒன்று மட்டும் தெரியும், நாவல் வெற்றியோ, தோல்வியோ, ஆனால் நாவல் எழுதும் அந்த கைகளுக்கு உள்ள வலி. அந்த வலியை உணர்ந்ததனால் இந்த சின்ன குறிப்புகள்


இன்னும் சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இதுவே உங்களை பயமுறுத்தபோகிறது என நிறுத்திக்கொள்கிறேன். {பிளிஸ், அந்த கட்டையை கீழே போடுங்கள் ப்ரெண்ட்ஸ்}

இது தான் சரி என்று சொல்லவில்லை, இது கூட சரிதான் என்று சொல்கிறேன். இப்படி எதுவும் கடைபிடிக்காமல் சில நாவல் வெற்றி பெறுகிறதே. அது எப்படி என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. எப்போதும் எதிலும் சில விதிமீறல்கள் உண்டு. அந்த விதிமீறல்களே அந்த நாவல் {எப்படி தப்பிச்சேன் பார்த்திர்களா, அப்பா}

ஆனால் விதிமீறல்கள் வாழ்க்கை ஆகாது. இன்னும் பேசாலாம் உங்கள் மனத்தை காயப்படுத்தாமல்.
அன்புடன் V.முருகேசன்



கதைகள் இயல்பான பேச்சு தமிழில் இருக்கணும் ப்ரோ ....
கதை வெற்றிக்கு வெகு முக்கியம்னு நான் நின்னைக்கிறது இது தான் .....
அந்தந்த மாவட்ட பேச்சு வழக்கு இருக்கலாம் ....உரையாடல் நெருக்கமா உணர் வைக்கணும் ......
இன்னும் நிறைய இருக்கு ... நாளைக்கு பார்க்கலாம்
 

Sundaramuma

Well-Known Member
சில, பல, சொந்த பிரச்சனைகளால்,
நைட் தூக்கம் வராமல், நைட் 2 மணி
வரை fb பார்த்துட்டு, லேட்டா தூங்கி
லேட்டாத்தான் எழுந்தேன், பாத்திமா டியர்
(இந்த சீக்ரட்டை, வெளியில்
சொல்லிடாதீங்க பா
வீட்டில், டின் கட்டிடுவாங்க,
பாத்திமா செல்லம்)
எல்லாம் நல்லதாகவே நடக்கும் ..பானு
நம்பிக்கை வைங்க....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top