yen mannavan nee thane da 2

Advertisement

Ambal

Well-Known Member
Thanks for your encouragement friends...hope you all like this part also...

yen mannavan nee thane da 2

டைனிங் காலில் இல்லாத மூளையை இருக்கு என்று நினைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டு இருந்தாள் வர்ஷினி.சமையல் அறையில் இருந்து வெளிவந்த கலைவாணி தனது இளைய மகளைக் கண்டு சிரித்துக்கொண்டே அவளது தலையில் ஒரு கொட்டு வைத்தார்.

"ஆ..ஆ...ஏன் ம்மா கொட்டுனீங்க நானே ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.."

"அதெல்லாம் மூளை உள்ளவங்க பண்றது.."என்றார் கலைவாணி.

"அம்மா...அப்போ எனக்கு மூளை இல்லனு சொல்றிங்கலா.."என்று கேட்டாள் மகள்.

"அப்போ இருக்குனு சொல்றியா..சரி சொல்லு அப்படி என்ன யோசிச்சுட்டு இருந்த.."என்றார் கலைவாணி.

"அக்கா பத்தி தான் ம்மா..இன்னைக்கி லாயர் அங்கிள் கிட்ட என்ன முடிவு சொல்லபோறானுதான் ஓரே யோசனை..உங்களுக்கு ஏதாவது தெரியுமா மா அவ என்ன முடிவு சொல்லுவானு.."

"இல்ல வர்ஷி தெரியாது..ஆனா கார்மெண்ட்ஸ்காக நல்ல முடிவு தான் எடுப்பானு நம்புறேன்.."என்றார் கலைவாணி கலக்கமாக.

"என்ன..என்ன முடுவு.."என்றபடி வந்தார் சகுந்தலா.அவரின் பின்னே நாய்க்குட்டி போல் வந்தான் அபினாஷ்.

"என்ன அண்ணி..என்ன ரகசியம் பேசுரீங்க நீங்களும் என் சின்ன மருமகளும்.."என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் சகுந்தலா.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி.."என்று மழுப்பினாள் கலைவாணி.அவருக்கு உள்ளுக்குள் பயம் இவர் பெரிய மகளிடம் தேவையில்லாமல் பேசி அவளை சங்கடபடுத்துவார் என்று அதனால் பேச்சை மாற்றும் பொருட்டு,

"அண்ணி வாங்க சாப்பிடலாம்,உங்களுக்கு சூடா இருந்தாதான பிடிக்கும்.."என்றார் கலைவாணி.

"ஆமா..ஆமா..சாப்பாடு எடுத்து வை.."என்றார் சகுந்தலா.

வர்ஷினியோ தனது அத்தை வந்த பின் தலையை நிமிர்த்தவே இல்லை,நிமிர்ந்தால் அவளையும் ஒரு வழியக்கிவிடுவார்.

அபினாஷோ இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல தனது சைட்டடிக்கும் வேலையை செய்துகொண்டு இருந்தான்.அவனது கண்கள் வர்ஷியை அங்குலம் அங்குலமாக ரசித்துக்கொண்டு இருந்தது.அவனது பார்வை கண்ட வர்ஷிக்கோ உடம்பு எரிய துவங்கியது.இதை கண்ட கலைவாணி மகளை ஒரு அதட்டு போட்டார்

"வர்ஷி சீக்கரம் கிளம்பு உனக்கு காலேஜூக்கு டையம் ஆகிடுச்சு..."என்று அதட்டிவிட்டு கண்களால் செய்கை காட்டினார்.அவரை ஒரு முறைத்துவிட்டு சென்றாள் வர்ஷி.போகும் சின்ன மகளை கண்ட கலைவாணி உள்ளுக்குள் நடுங்கினாலும் பெரியவள் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையும் இருந்தது..தனது இரு மகளில் ஒருவள் புயல் என்றால் மற்றொருவள் மழை சாரல்.பெரியவள் பற்றி நினைக்கும் போது அவரது கண்களில் தன்னால் நீர்கோர்க்கும்.பின் தன்னிலை பெற்றவர் அவள் வரும்முன் இவர்கள் சாப்பிட்டு கிளம்ப வேண்டும் என்று எண்ணி அவர்களை கவனிக்கத் தொடங்கினார் கலைவாணி.

மாடி அறையில் இருந்து இன்று நடக்கவிருக்கும் மீட்டிங் பற்றிய குறிப்பேட்டை பார்த்துக்கொண்டு படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தாள் திவ்யதாரிணி.அவளது முகத்தில் எப்போதும் ஒரு இறுக்கம் இருக்கும் தற்போழுது சற்று அதிகமாக காணப்பட்டது காரணம் தனது உயிருக்கு இணையான தாத்தா ராம் மோகன் இறந்ததால் என்று சொன்னால் அது மிகையாகாது.

அவள் வருவதைக் கண்ட கலைவாணிக்கு உடலில் ஒரு சிறு நடுக்கம் வந்தது,இருப்பினும் தன்னை சமன் செய்து கொண்டு இவர்கள் இருவரும் சாப்பிட்டு சென்றால் நல்லது என்று அவர்கள் இருவரையும் நோக்கினார் கலைவாணி.அவர்களோ தங்களது காரியத்தில் கண்ணாக இருந்தனர்.

"அம்மா.."என்று சற்று அழுத்தமாக கூறி அவர்கள் இருவரையும் கண்களால் காட்டினாள் திவ்யதாரணி.கலைவாணியோ அவளை இரஞ்சுதலாக பார்த்துக்கொண்டு நின்றார்.தன் தாயின் பார்வைக்கு கட்டுப்பட்டு உண்ண அமர்ந்தாள்.மாடியில் இருந்து இறங்கும் போதே திவ்யாவை பார்த்துவிட்டார் சகுந்தலா.நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் அவளைக் கண்டேலே உள்ளுகுள் நடுங்கத்தான் செய்யும் சகுந்தலாவுக்கு இருந்தும் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்.

தன்னை துச்சமாக நினைக்கும் திவ்யாவை கண்டால் சகுந்தலாவுக்கு எப்பொதுமே ஆகாது இருப்பினும் அவள் மூலம் சில காரியங்கள் ஆக வேண்டியுள்ளதால் பொருமை காப்பார் இருந்தும் அவளை சீண்டாமல் விட்டால் அது சகுந்தலா அல்லவே.அதே போல் இன்றும் தொடங்கினார்,

"என்ன மருமகளே..கார்மெண்ட்ஸ்க்கு கிளம்பிடியா...அபினாஷோட போ,கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க இரண்டு பேரும் தான கார்மெண்ட்ஸை பார்த்துக்கபோரிங்க.."என்று அவர் கூறிமுடிக்கும் முன் ஒரு கண்ணாடி டம்ளர் காலில் பட்டு தெரித்தது.

"ஏய்..." என்று சகுந்தலா சுதாரித்து எந்திரிக்கும் முன் அடுத்த கண்ணாடி டம்பளர் அவரது தலையை பதம் பார்க்க இருந்தது அதற்குள் அபினாஷ் தனது தாயை தன் பக்கம் இழுத்திருந்தான்.

"யாரு..யாருக்கு மருமக..இன்னொருவாட்டி உங்க வாயிலிருந்து மருமகனு வந்தது இன்னைக்கி உங்க தர்தல புள்ளையால நீங்க தப்பிச்சிங்க அடுத்தவாட்டி .."என்று விரல் நீட்டி எச்சரித்தவள் தனது தாயின் புறம் திரும்பி

"அம்மா..இதுக்கு தான் உங்ககிட்ட சொன்னேன் நான் சாப்பிடுர டையத்துல கண்டவங்களுக்கெல்லாம் உட்கார வைக்காதிங்கனு உங்களால பாருங்க இரண்டு கண்ணாடி டம்பளர் உடைஞ்சி போச்சி.."என்றாள் கண்களில் கொப்பளிக்கும் கோபத்துடன்.அதே கோபத்தோடு வெளியில் செல்ல எத்தனிக்கும் வேளையில் சகுந்தலா,

"ஏய் என்னடி திமிறா..இன்னும் மூணுமாசத்துல உன் திமிரை அடக்கி காட்டுறேன் பாரு..."என்று கர்ஜித்தார்.அவரை ஒரு இகழ்ச்சி பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள் திவ்யதாரணி.அவளை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே உள்ளே சென்றாள் சகுந்தலா,அவரின் பின்னே ஓடினான் அபினாஷ்.

அனைவரும் சென்ற பின்பு தனது ரூமில் இருந்து எட்டி பார்த்தாள் வர்ஷி அங்கு தனது தாயை தவிர யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்டு தனது தாயின் அருகில் சென்று தோள் தொட்டாள்,அதுவரை நடந்த நிகழ்வில் உழன்றுகொண்டு இருந்தவர் தனது மகளின் தீண்டலில் தன்னிலை பெற்றார் கலைவாணி.

அவரது கண்கள் கலங்கி இருந்தது மனமோ சகுந்தலாவின் கண்களில் தெரிந்த வன்மத்தில் நடுக்கம் கொண்டு இருந்தது.வர்ஷி அவரை அமரவைத்து குடிக்க தண்ணீர் கொடுத்து தேற்ற முயன்றால்,

"அம்மா..என்ன நீங்க கண்ணெல்லாம் கலங்கிட்டு .."என்றாள்

"வர்ஷி எனக்கு ரொம்ப பயமா இருக்குமா..அத்தை திவ்யாவை.."சொல்லமுடியாமல் தடுமாரினார்.

"அம்மா..என்ன ம்மா..அத்தை எல்லாம் ஒரு ஆளுனு நீங்க பயப்படுறிங்க..அக்காகிட்டல்லாம் யாரும் நெருங்க முடியாது,அவ நெருப்பு மாதிரி அவகிட்ட நெருங்குனா அத்தைக்குதான் ஆபத்து.."என்று தாய்க்கு தைரியம் ஊட்டினால்.கலைவாணி முகம் சற்று தெளிந்தாலும் அவரை இயல்பாக்கும் பொருட்டு வர்ஷி,

"ஓகே ம்மா..நீ ரொம்ப டிஸ்ரப் இருக்க நம்ம ஷாப்பிங் போலாம் வாங்க.."

"ஏன்டி இது தான் சாக்குனு காலேஜ் மட்டம்போட பாக்குறீயா..உதைபடுவ கிளம்புர வேலையை பாரு.."

"கலை பேக் டூத வார்ம்.."என்று அவரை கட்டிகொண்டு கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு சென்றாள்.அவளது செயலில் சற்று இறுக்கம் தளர்ந்தது போல உணர்ந்தார் கலைவாணி..

அதேசமயம் தனது அனைத்து கோபத்தையும் தனது காரில் காட்டிக்கொண்டு இருந்தாள் திவ்யா.அவளது மனமோ உலைகளம் போல் கொதித்துக்கொண்டு இருந்தது அதே கோபத்தோடு தனது கார்மெண்ட்ஸை நோக்கி சென்று கொண்டு இருந்தாள்.

கிருஷ்ணன் அவளுள் எரியும் நெருப்பை அணைப்பானா??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top