'நெஞ்சமெல்லாம் அலரே !!' - டீசர்

Advertisement

Rudraprarthana

Well-Known Member
neatea.jpg

ஒரு சின்ன டீசர் போன எபில யாராலையும் எழில் குழந்தை வேண்டாம் சொன்னதை ஏத்துக்க முடியலை... அதேபோல எதையும் பேச அலர் பயப்படறது சரியா படலைன்னு சொல்லி இருந்தீங்க சோ அவங்களோட பிளாஷ்பேக்ல நடந்ததை கொடுத்திருக்கேன் இதை படிச்சப்புறம் என்ன நினைக்குரிங்கன்னு சொல்லிட்டு போங்க டார்லிங்க்ஸ்...

"அமுலு இறங்கு" என்று எழில் கூறவும் பதிலளிக்காமல் அழுத்தமாய் அவனையே பார்த்துகொண்டிருந்தாள் அலர்விழி.

அவனோ வாகனத்தை நிறுத்திவிட்டு அவள் புறம் வந்து அவள் மடியில் இருந்த அவிரனை தூக்கி கொண்டு, "அமுலு உன்னை தான் சொல்றேன் இறங்கு" என்று மீண்டும் கூற..,

அவளோ துளிக்கூட அசையாமல் கூர்மையாக அவன் விழிகளில் ஊடுருவியவாறே, "இங்க எதுக்கு மாமா வந்திருக்கோம்" என்று எதிரில் தெரிந்த அநாதை ஆசிரமத்தை விழிகளால் சுட்டி காட்டி அலர் கேட்க..,

சில நொடிகள் கனத்த மௌனம் எழிலிடம்.., தன்னுனர்வுகளுடன் அவன் போராடிக்கொண்டிருப்பது அவளுக்கும் புரிபட படபடத்த நெஞ்சுடன் அவன் முகத்திலேயே விழிகளை நிலைக்க விட்டு அவன் பதிலுக்காக காத்திருக்க தொடங்கினாள்.

நொடிகள் பல நிமிடங்களை விழுங்கியும் அவிரனை தட்டி கொடுத்தவாறே அங்கிருந்த பலகையை வெறித்திருந்தான் அகனெழிலன்.

அவன் பார்வை மாற்றம் பெறாது வாய் திறவாது இருப்பதை கண்டவள்.., "சொல்லு மாமா எனக்கு பதில் வேணும் எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க" என்று இம்முறை வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி அலர் கேட்கவும்..,

பதிலின்றி அவள் இறங்க மாட்டாள் என்பது புரிபட தூங்கி கொண்டிருந்த அவிரனை பின்புறம் படுக்க வைத்தவன் அவன் பாதுகாப்பை உறுதி படுத்திவிட்டு மீண்டும் முன்புறம் வந்து அமர்ந்தான்.

அலரின் பார்வை இன்னும் அவன் மீதே படிந்திருக்க, அவள் முகம் பார்க்காது பின்புறம் படுத்திருந்த அவிரனை பார்த்தவாறு குரலை செருமியவன் "அவிரனுக்கு ஒரு துணை வேணும்ன்னு கேட்டியே அதுக்கு தான்" என்று கனத்த மனதோடு சில வார்த்தைகளையே கூற முடியாமல் அவன் முடிக்கும் முன் தன் கரத்தை அவன் கன்னத்தில் இடியாக இறக்கி இருந்தாள் அலர்விழி.

இதை எதிர்பார்த்தவனாக அவன் உயிர்பற்ற விழிகளுடன் அவளை பார்க்க,

அலர்விழியோ தீப்பிழம்பாக தகித்த விழிகளோடு "யாரை கேட்டு முடிவு பண்ணின.." என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க..,

எழிலிடமோ மீண்டும் கனத்த மௌனம்..!! ஆனால் உயிர்பற்ற விழிகளில் வலியுடன் பெரும் போராட்டம் அவனுக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்டவளின் மனம் நொறுங்கி போக.., தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவள் தன் அவசர செயலுக்காக தன்னையே நிந்தித்து கொண்டு நிமிர்ந்தவள் கலங்கிய விழிகளுடன் "சாரி மாமா" என்று கன்னத்தை வருட, அசைவில்லை அவனிடம்.

அவன் முகத்தை இருகரங்களாலும் பற்றிக்கொண்டு நெஞ்சம் கனக்க சில நிமிடங்கள் அவனை பார்த்திருந்தவள் மெல்லிய குரலில்.., "நான் யாருன்னு உனக்கு நியாபகம் இருக்கா மாமா..??" என்று விழிகளில் வலியுடன் தழுதழுத்த குரலில் அலர் கேட்க..,

அலர் கேட்க தொடங்கியதும் அவளிடம் இருந்து தலையை திருப்பி நேரே தெரிந்த பலகையை வெறிக்க தொடங்கியவனின் கரம் கார் ஸ்டேரிங்கை பலமாக பற்றியிருந்தாலும் அதில் நடுக்கம் அப்பட்டமாக வழிய கரங்களுக்கு அழுத்தம் கொடுத்து உணர்வுகளை கட்டுபடுத்தியவாறே, 'ஆம்' என்று தலை அசைக்க..,

அவன் கூறி முடிக்கும் முன்னமே "இல்லை நீ பொய் சொல்ற..." என்று ஆக்ரோஷமாக இறைந்தவள், அவன் சட்டையை பிடித்து, "உனக்கு நான் யாருன்னு தெரிஞ்சிருந்தா..? என்றவள் பொங்கிய அழுகையை இதழ் மடித்து உள்ளிழுத்தவாறே "என்.. என்னை இத்..தனை நாள் என்றவளுக்கு குரல் உடைபட பெருகிய கண்ணீரை துடைத்து கொண்டே.., "நாள் இல்லை வருஷ கணக்காச்சு மாமா..", என்றவள் ஆவேசத்தோடு அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தகொண்டே..,

"இல்லை, நீ என்னோட மாமாவே இல்லை உனக்கு நான் முக்கியம் இல்லை எனக்கு தெரியும், அப்படி இருந்திருந்தா எப்படி உன்னால இத்தனை நாள் இப்படி இருக்க முடியுது" என்றவள் முற்றிலுமாக உடைந்து போயிருக்க, "எப்பவும் எனக்கு என்ன வேணும்ன்னு நான் கேட்காமையே செய்ய தெரிஞ்ச உனக்கு இப்போ நான் வாய் விட்டு கேட்டும் அதை செய்ய மனசில்லாம என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்க.."என்று கண்ணீர் பெருக்கெடுக்க இருகரங்களாலும் அவன் நெஞ்சில் அறைந்தவள் ஒரு கட்டத்தில் அழுகை கதறலாக வெடிக்க அவன் நெஞ்சில் முகம் புதைத்து விம்மும் மனதோடு திக்கி திணறி,

"எப்படி, எப்படி உன்..னா..ல என்னை இத்தனை நாளா தள்ளி நிறுத்த முடிஞ்சது..??" என்று கேட்க அவள் தலையில் கரம் பதித்து வருடிய எழிலுக்குமே அவள் கண்ணீர் மனதை தைத்தாலும் இறுகிய முகத்தோடு கண்களில் தேங்கி நின்ற நீரோடு மெளனமாக அமர்ந்திருந்தான்.

"சரியா சொல்லனும்ன்னா ரெண்டு வருஷம் ஆச்சு மாமா..!! என்றவள் துடித்த இதழ்களை மடித்து தன்னை கட்டுபடுத்திக்கொண்டு "நீ என்னை பொண்டாட்டியா பார்த்து..!! அது உனக்கு நியாபகம் இருக்கா..???" என்று கதறிக்கொண்டே அவன் மடி சாய்ந்தவள்,

"உனக்கு குழந்தை தானே மாமா வேண்டாம்..!! நான் கூடவா வேண்டாம், ஏன் என்னை ஒதுக்குற உனக்கு என்னை பிடிக்கலையா" என்று அவனிடம் கேட்டு மீண்டும் தன் அறிவீனத்தை நிருபித்திருந்தாள் அலர்விழி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top