கொலுசொலி மயக்குதடி - 14

Advertisement

வாசுவின் பின்னால் அமர்ந்திருந்த நிலாவோ கோபத்தில் சக்தியை திட்டியவாறே வரவும்... வாசுவோ அவன் பேசிய வார்த்தைகளை மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.....

நிலா இறங்க வேண்டிய இடம் வரவும்... அவள் கீழே இறங்க.. அவளது முகத்தைக் கூடப் பார்க்காமல்... பாய் என்ற ஒற்றை வார்த்தையுடன் கிளம்பி விட்டான்....

எவ்வளவு அழகாக தொடங்கிய இன்றைய பொழுது சக்தியால் அழிந்து போனதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை....

அன்றைய வகுப்பில் மனம் ஒன்றாமல் போக கிளம்புவதாக சொல்லிக் கொண்டு வெளியே வந்தாள்....

வீட்டிற்கு போனாலும் தனியாக இருக்க முடியாது... வேற எங்கயாவது போலாம் என யோசித்தவாறு நடக்கத் தொடங்கினாள்....

வழியில் ஒரு பார்க்கை பார்க்க நேராக பார்க்கின் உள்ளே நடக்கத் தொடங்கினாள்... காலை நேரம் என்பதால் அங்கு யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருக்க.. நிழலாய் இருக்கும் ஒரு இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்..

அடுத்து என்ன செய்வது.. வாசு தன்னை கோபித்துக் கொண்டானா... அவனது பாராமும் நிலாவை என்னவோ செய்தது... கண்களை மூடி அமர்ந்து இருந்தவளின் சூடான விழிநீர் கன்னங்களில் உருண்டு ஓடியது...

வாசு தன்னை வெறுத்து விடுவானோ என்ற நினைப்பே அவளை நிலைகுலைய வைத்தது... அந்த நிமிடம் வாசுவின் மேலுள்ள காதலை அவள் உணர்ந்து கொண்டாள்.....

அவனை சந்தித்த நொடிகளில் இருந்து ஒவ்வொரு நிகழ்வாய் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள்.. அதை எல்லாம் நினைத்து இப்போது தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள்....

நீங்க நிஜமாகவே ஒரு பேபி தான் வாசு... எல்லோரும் காதலிக்கறவங்களை கல்யாணம் பண்ற பையனைத் தான் குழந்தை மாதிரி பார்த்துப்பாங்க... ஆனால் நான் அப்படி இல்ல... குழந்தை மனசு இருக்க ஒருத்தரை தான் மனசார காதலிக்கற... அதை நினைக்கும் போதே அவளின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தது...

முந்தைய நாளும் அவனின் அருகில் வெட்கப்பட்ட தருணங்கள் நினைவிற்கு வந்து இனித்தது... கொலுசை மாட்டியபோது அவனின் தொடுகை உயிரின் ஆழம் வரை தீண்டிச் சென்றதே.....

உடனே வாசுவை பார்க்கும் உத்வேகத்தை அடக்கியவள்... அதற்கு மேல் எது வந்தாலும் பார்க்கலாம் என்ற தைரியத்துடன் மனதில் இருந்த சஞ்சலங்கள் அடியோடு மறைந்தது....

வீட்டிற்கு கிளம்பியவள் நிலை கொள்ளாமல் எப்போது தான் மாலை ஆகும் என அங்குமிங்கும் குட்டி போட்ட பூனை போல நடக்கத் தொடங்கினாள்...

இதுவரை தோன்றாத உணர்வுகள் எல்லாம் கிளர்த்தெழ அந்த நிமிடம் அவள் உணர்வுக்குவியலின் பிடியில் அகப்பட்டாள்...

இதுக்கு மேல எப்படி வாசு ரூம்ல இருக்க முடியும் என நினைத்தவள்... மற்றொரு பெட்ரூமை சுத்தம் செய்து அங்கு அவளது பொருட்களை எல்லாம் மாற்றிக் கொண்டாள்...

இவள் ஒன்று நினைக்க இதைப் பார்க்கும் போது வாசு வேறுவிதமாக நினைப்பான் என நினைக்கவில்லை....

வீட்டிற்கு வந்த வாசு கதவு கூட லாக் செய்யப்படாமல் இருப்பதை நினைத்து யோசனையுடன் வந்தான்....

ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவன்... என்றும் இல்லாமல் இன்றோ அதிகப் படியான நிசப்சத்தில் வீடு ஆழ்ந்திருந்தது.

நிலா என அழைக்க இடம் கொடுக்காமல் ஏதோ ஒன்று தடுத்தது... எதிர்ப்புறம் இருந்து பூட்டியிருந்த அறை அவனது கன்னத்தில் அறைந்து சாத்தியிருந்ததை போல இருந்தது...

என்ன வெறுத்துட்ட இல்லையா நிலா... அதனால தானே வேற ரூம்க்கு போய்ட்ட.. நான் தான் உனக்கும் சக்திக்கும் இடையில் இருக்கிறேனா... வேணாம் நிலா நான் இனிமேல் உன்னோட வாழ்க்கையில் குறுக்கீடாக இருக்க மாட்டேன்...

சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலிக்க வாசு போய் கதவைத் திறந்தான்... அவனை முறைத்தபடியே சக்தி உள்ளே வந்து அமர்ந்தான்.....

சிவா... வெளியே வா.... சக்தி ஓங்கி குரல் கொடுக்க... படாரென கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.. அங்கு நின்றிருந்த வாசுவை நோக்கி அவளின் பார்வை சென்றது... பேரைக் கூட சொல்லல இல்லையா என்பது போல இருந்தது அவனின் பார்வை....

வாசுவின் மௌனமும்... சக்தியின் வருகையும் அவளிற்கு உள்ளுக்குள் குளிரைப் பரப்பியது...

அங்க என்ன பார்க்கற சிவா... உன்னோட திங்க்சை எல்லாம் பேக் பண்ணு... நாம நம்ம வீட்டிற்கு போகலாம்... தெனாவெட்டாய் வந்தது சக்தியின் வார்த்தைகள்....

ஏய்... அவள் சொல்லி முடிக்கும் முன்பே... இடைவெட்டிய சக்தி.. பார்த்த நாள்ல இருந்து ஏய்... ஏய்... னு தான் சொல்றே.. மச்சான்னு சொல்லு....

அதைக் கேட்ட மற்ற இருவரின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது...

யாருக்கு யாரு மச்சான்... ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்க... ஒழுங்கு மரியாதையாக கிளம்பிடு இல்லனா அவ்வளவு தான்...

நிலா பேசுவதற்கு இடையில் குறுக்கிட்ட வாசு.. உனக்கு ஏற்கனவே சக்தியை தெரியுமா நிலா....

உயிரைத் தேக்கி அவன் கேட்ட கேள்வியில் நிலா பதில் சொல்ல முடியாமல் அவனைப் பாவமாகப் பார்க்க.... இங்க வந்த பின்னாடியும் சக்தியை பார்த்துருக்க கரெக்ட் தானே....

வெய்ட் வாசு... நான் எல்லாத்தையும் உங்களுக்கு தெளிவாக சொல்றேன்... ப்ளீஸ் என்னை நம்புங்க....

நான் கேட்ட எதுக்கும் நீ பதிலே சொல்லல... ஆமா இல்லைனு மட்டும் சொல்லு நிலா...

ஆமா வாசு... ஆனால்.....

போதும்... அவளை கைநீட்டி தடுத்தவன் விறுவிறுவென உள்ளே போய் விட்டான்...

சிலையென அவள் சமைந்து நிற்க... அவளை நோக்கி வந்த சக்தி... உனக்கு வேற வழியே இல்லை... நாளைக்கு நான் திரும்ப வருவேன்... நம்ம வீட்டுக்கு போக ரெடியாக இரு....

அவளின் கன்னத்தில் தட்ட வர... வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்....

இட்ஸ் ஓகே... நாளைக்கு பார்க்கலாம்... அடுத்த நிமிடம் சக்தி அங்கிருந்து கிளம்பி விட்டான்.....

ஓய்ந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள்....

இதெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா என்று வாசு கண்களை மூடித்திறந்து பார்த்தான்... எதுவும் மாறாமல் அப்படியே இருக்க... கேட்ட எதையும் நம்ப முடியாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தான்....

ஏன் நிலா என்னோட வாழ்க்கையில் வந்த.. எல்லா சந்தோசத்தையும் காட்டிட்டு இப்போ என்கிட்ட இருந்து தூரமாக போய்ட்டியே...

உன்னை வெறுக்கற மாதிரி ஒரு நாள் கூட நடிக்க முடியல... இனிமேல் வாழற வரைக்கும் அதுபோல நடக்க முடியுமா...

வாசு எழுந்து வெளியே வர... நிலா எழுந்து வேகமாக அவனின் அருகில் போனாள்...

நான் பேச ஒரு வாய்ப்பு கூட கொடுக்க மாட்டீங்களா வாசு... அவ்வளவு தானா என் மேல உங்களுக்கு இருக்க பாசம் எல்லாம்...

அந்த சக்தி என்னை கூட்டிட்டு போக நினைக்கிறான்... நான் போய்ட்டா நீங்க சந்தோசமா இருப்பீங்களா... அப்புறமாக ஏன் எதுவும் சொல்லாம தடுக்காம அமைதியாக இருக்கீங்க....

அவள் பேசும் அனைத்தையும் உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்து இருந்தவன்... நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்.. எனக்காக எதும் இப்போ சமைக்க வேண்டாம்....

வேறு எதுவும் சொல்லவில்லை.. வேகமாக கிளம்பி போய் விட்டான்....

தனது உடைமைகள் இருந்த அறைக்குள் போனவள்... ஒரு வெள்ளை காதிதத்தை எடுத்து தனது கடந்த காலத்தையும்... ஏன் ஊரை விட்டு வந்தாள் என்பதையும்... இப்போது அவனின் மேல முளைத்த காதலையும் சுருக்கமாக எழுதி முடித்தாள்..

தான் மும்பை வந்தபோது அணிந்து வந்த போது சுடிதாரை எடுத்து தனியாக வைத்தாள்....

வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் அமைதியாக படுத்துக் கொண்டாள்.... இங்கு வந்ததில் இருந்து தன்னிடம் இருந்த ஒன்றான தூக்கமும் அவளின் அருகில் வராமல் தூரப்போக கண்களை மட்டும் மூடிக் கொண்டாள்...

மயக்குவாள்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

ஸோ வாசுதேவனைத்தான் நிலா @ சிவா லவ் பண்ணுறாள்
அப்போ சக்தி சரவணன் யாரு?
மச்சான்னு கூப்பிட சொல்லுறானே
சிவகாமி அத்தை பையனா?
வாசு வீட்டிலிருந்தும் சிவா வெளியேறப் போகிறாளா?
ஆனால் எங்கே போவாள்?
எங்கே போனாலும் வாசு வீடு மாதிரி பாதுகாப்பு கிடைக்குமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top