UUU 3 - 1

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
தன்னை சுற்றி வளர்ந்த பெண்களை எல்லாம் அருமையாகபார்ததுக்கொண்ட சரண் தன்னில் சரிபாதியாக மணந்த கீர்த்தியை இவ்வளவு அழ வைத்திருக்க வேண்டாம்..
 

Rudraprarthana

Well-Known Member
தன்னை சுற்றி வளர்ந்த பெண்களை எல்லாம் அருமையாகபார்ததுக்கொண்ட சரண் தன்னில் சரிபாதியாக மணந்த கீர்த்தியை இவ்வளவு அழ வைத்திருக்க வேண்டாம்..
கீர்த்தியையும் மதித்து நடந்தவன் தான் சரண் சாலாம்மா...மிக்க நன்றிகள் :love::love:
 

Priyaasai

Active Member
கடவுள் முன் கைகூப்பி நின்ற கீர்த்தியின் மனதில் வெறுமை மட்டுமே சூழ்ந்து இருக்கும் நிலையில் அவரிடம் என்ன வரம் கேட்பது, எதை குறித்து வேண்டுவது என்று கூட பிடிபடாமல் மெளனமாக கண்களை மூடி நின்றாள்.

அதன் பின் மணமக்களை அழைத்து சென்று அவர்களுக்கு பால் பழம் அளிக்க, எதிலும் மனம் ஒன்றாமல் கடனே என்று வளர்மதி அளித்ததை பெற்று சரண் உண்ண தொடங்க கூடி இருந்த அவன் அக்கா பெண்கள் கீர்த்திக்கு ஊட்ட சொல்லி ஆர்பரிக்க தொடங்கினர்.

திருமணத்திற்கு பின்பான இத்தகைய விடயங்களை தவிர்க்க முடியாது என்பதால் அவள் பால் கோபம் இருந்தாலும் அனைவர் முன்னிலையில் அதை வெளிப்படுத்தி சிறு பிள்ளைகளின் முன் காட்சிபொருளாக விரும்பாதவன் வேறு வழி இன்றி அருகே இருந்தவள் புறம் டம்ப்ளரை கொண்டு சென்று பாலோடு பழத்தை எடுத்து ஸ்பூனில் அவளுக்கு ஊட்ட, கீர்த்தியின் மனமோ சரணின் கோபத்தை எவ்வாறு எதிர் கொள்வது என்பதில் தொடங்கி அவனுடனான இனி வரும் காலம் எவ்வாறு அமையும் என்பதான பலவித சிந்தனையில் உழன்று கொண்டிருக்க தன் இதழ் அருகே நீட்டப்பட்ட அவன் கரத்தை கவனிக்க தவறியிருந்தாள்.

'கீர்த்தி' என்று அருகே இருந்த வைதேகி உரக்க அழைத்து அவளை உலுக்கவும்,

ஏதோ கனவில் இருந்து விழித்தவள் போல மலங்க மலங்க அவரை பார்த்தவள் "எ..என்ன" என்று கமறிய குரலில் கேட்க,

"தம்பி உனக்காக காத்திட்டு இருக்கிறது தெரியலையா..??" என்று வான்மதி கடியவும்

அவசர அவசரமாக சரண் புறம் திரும்பியவளுக்கு மீசை துடிக்க தீபிழம்பை ஒத்த விழிகளால் அவளை எரித்து கொண்டிருந்த சரணை கண்டதும் தூக்கி வாரி போட்டது. அவன் பார்வையில் மூச்சடைத்து போன பாவையவளின் இதயமோ இதயம் தாளம் தப்பி துடிக்க தொடங்கியிருந்தது.

இருக்காதா பின்னே..!! கடந்த சில மாதங்களாகவே தந்தையின் உண்மை முகம் தெரிய வந்ததில் ஏற்ப்பட மிதமிஞ்சிய அதிர்ச்சி, வலி, ஆற்றாமை அவளை ஆட்கொண்டிருந்த நிலையில் ப்ரீத்தியின் வார்த்தைகளில் தன்னையே வெறுத்து தான் சரணுக்கு ஏற்ற துணை இல்லை என்று அவளாகவே தப்பர்த்தம் கற்பித்து ப்ரீத்திக்கு விட்டு கொடுத்து சரணை இழந்த சோகம், வேதனை அவளை அரித்து தின்று உருக்குலைக்க செய்திருக்க அதற்கு மகுடம் சூட்டுவது போல உடன் பிறந்தவளின் துரோகம், அதிலும் சரணை அடைவதற்காக அவள் சென்ற எல்லை அதனால் சரணின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் இவள் ஆளாகிய பரிதாபம் என்று அனைத்து புறம் இருந்தும் அவளின் கழுத்தை பிடித்து நெருக்கிய நிலையில் மூச்சு விடவும் சிரமபட்டவளுக்கு எதையும் ஆராய்ந்து பேசும் நிலை எவ்வாறு அமையும்...!!

சரியாக சொல்லவேண்டுமானால் கழிவிரக்கத்தாலும் குற்ற உணர்வாலும் தத்தளித்து கொண்டிருந்தவளின் சிந்திக்கும் திறனே சிதைந்து போயிருக்கும் நிலையில் தன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முனைந்த தீபிகாவிடம் ஒரு மூச்சு அழுது தீர்த்தவளுக்கு என்ன முயன்றும் திருமண பந்தத்தில் இணைந்து சரணை எதிர்க்கொள்ளும் திடம் இல்லை., இப்போதும் தான் அவனுக்கு அவனது தூய காதலுக்கு பேரன்பிற்கு தகுதி இல்லாதவள் என்று திடமாக நம்பிக்கொண்டிருக்கிறாள்.

அதிலும் கடந்த இரு நாட்களாகவே தொடரும் சரணின் அச்சுறுத்தும் பார்வையில் திடமான முடிவும் எடுக்க முடியாமல் அல்லாடிக்கொண்டு இருந்தவளை தீபிகாவும் வளர்மதியும் தான் சமாதனாப்படுத்தி திருமணத்திற்கு தயார்படுத்தி இருந்தனர். அவர்கள் வார்த்தைக்காக தலை அசைத்த கீர்த்தியிடம் பெரும் குழப்பமே மிஞ்சிட எத்தனை கடவுளை வேண்டி கொண்டு திருமணத்திற்கு தயாராகி இருந்தாள் அப்படி இருந்தும் இன்றைய நாளின் விடியலே சரி இல்லையோ..?? தொடர்ந்து அவன் கோபத்திற்கு ஆளாகிறோமே என்று எண்ணியவளுக்கு வியர்வை பெருக்கெடுத்து பற்கள் தந்தியடிக்க,

"சா... சாரி மா..." என்றிட,

இத்தனை வருட காதலை தன் தூய நேசத்தை, அவளுக்கான காத்திருப்பை மதிக்காமல் நேற்று மற்றவர்கள் முன்னிலையில் தன்னை மணக்க மறுத்ததில் தொடங்கி இன்று தாலி கட்டிய பின்பும் தொடரும் அவளது உதாசீனம் சரணின் கோபத்தை பலமடங்காக பெருக்க அது நேரம் வரை அவள் புறம் நீட்டி இருந்த கரத்தை கீழே இறக்கியவன் பெரும் சத்தத்துடன் டம்ப்ளரை மேஜையில் வைக்க.., அதில் ஒரு கணம் மேஜையே அதிர்ந்து குலுங்கி அடங்கியது என்றால் கீர்த்தியின் உடலும் சேர்ந்தே நடுங்கி போனது.

அதுவே அவன் சினத்தின் அளவை எடுத்து காட்ட அவள் உடலில் குருதி வற்றிய நிலை..!!

'மாமா ப்ளீஸ்...' என்ற மனதினுள் அரற்றியவாறு பரிதாபமாக அவனை பார்த்தவளுக்கு அசாராதன சூழலில் நடைபெற்ற திருமணத்தாலும் அதை தொடர்ந்த சரணின் கோபத்தாலும் பெரும் குழப்ப நிலையில் இருந்தாள் கீர்த்தி. ஆனால் சரணோ விருட்டென்று நாற்காலியில் இருந்து எழுந்து மாலையை கழற்றி மேஜை மீது போட்டவன் அதே வேகத்தில் அறையில் இருந்து வெளியேறி விட்டான்.

புயல் வேகத்தில் அறையை விட்டு வெளியேறியவனின் முகத்தில் சினம் மண்டி கிடக்க அவன் மனமோ எரிமலையாக வெடித்து சிதறிக்கொண்டு இருக்க அதில் எப்போது கீர்த்தி சிக்கி சாம்பல் ஆக போகிறாளோ அவனே அறியான்..

விழித்திரையை மறைத்த கண்ணீருடன் கோபத்துடன் சரண் செல்வதை கண்ட கீர்த்திக்கு பயமும் பதட்டமும் வெகுவாக அதிகரிக்க தொடங்க அவள் உடல் அப்பட்டமாக நடுங்கியது.

அதை கண்ட அலர், 'என்ன கீர்த்தி இப்படி சொதப்புற என்ன ஆச்சு உனக்கு..??' என்றிட

கீர்த்தியிடம் பதிலில்லை.

தம்பி செல்வதை கண்ட வைதேகி கீர்த்தியிடம், "எத்தனை நாள் திட்டம்..?? இப்படி என் தம்பியை அவமானப்படுத்த தான் அவனுக்கு கழுத்தை நீட்டினியா...??" என்று இறைந்தவர்,

"ஏன் உன் அப்பன், அக்காலாம் என் தம்பி உயிரை குடிச்சது போதாதா..?? இப்போ உன் பங்குக்கு நீயும் அவன் கிட்ட மிச்சம் மீதி ஒட்டிட்டு இருக்க உயிரை எடுக்கற முடிவோட இருக்கியா..??" என்று தீக்கங்குகளாக வந்து விழுந்த அவர் வார்த்தைகளில் தம்பிக்கான நியாயம் இருந்தாலும் கீர்த்தியை காயபடுத்துவதில் மும்முரமாக இருந்தது.

'வைதேகி கல்யாண நாள் அதுவுமா என்ன பேசுற..?' என்று அபசகுண பேச்சை விரும்பாத வளர்மதி அவரை அடக்க முற்ப்பட,

"வேற என்ன சொல்லனும்ன்னு எதிர்பார்க்கிற வளர்" என்று தமக்கையை பார்த்த வைதேகி பின் கீர்த்தியின் புறம் திரும்பி,

"என் தம்பி மாதிரி ஒருத்தன் புருஷனா கிடைக்க இவ புண்ணியம் பண்ணி இருக்கணும் ஆனா நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் இவ அவனை தூக்கி எறியதுறதுலயும் மத்தவங்க முன்னாடி துச்சமா நடத்துறதுலயும் குறியா இருக்கா..!! எல்லாம் பணக்கொழுப்பு" என்று நொடித்தவர் மீண்டும் வளர்மதி புறம் திரும்பி,

"இல்லை நான் தெரியாம தான் கேட்கிறேன் புருஷன் பக்கத்துல உட்காந்து பால்பழம் கொடுக்கும் போது அதை கூட மதிக்காம கனவு என்ன வேண்டி கிடக்கு..?? ஒருவேளை அவசரப்பட்டு ஒன்னுமில்லாதவனுக்கு கழுத்தை நீடிட்டோமே கொஞ்சம் காத்திருந்தா பணக்காரனா பார்த்து கட்டிட்டு போகலாம்ன்னு எண்ணமா இவளுக்கு" என்று வைதேகி கேட்க,

பல வருடங்கள் காதலித்து இருந்தாலும் வளர்மதியை தவிர்த்து சரணின் உடன்பிறந்தோர், பெற்றோர் என்று யாரிடமும் கீர்த்திக்கு அறிமுகம் இல்லை ஆனால் பரிச்சயம் உண்டு ஆம் அவர்களை எல்லாம் புகைப்படத்தில் கண்டிருக்கிறாள் ஆனால் சரணின் தமக்கைகளை பற்றி குணநலன்களை பற்றி அவன் வாயிலாக கேட்டது தான்..!!

சரணின் மூத்த அக்கா வளர்மதி அன்பே உருவானார் என்பதை அவளே பல முறை உணர்ந்திருக்கிறாள் அடுத்து வைதேகி தப்பு என்று தெரிந்தால் யாரையும் கேள்வி கேட்க கூடியவர் மற்ற தமக்கைகளை விட சரண் மீதி அதிகமான பாசம் கொண்டிருப்பவர் என்று தெரியும். வான்மதியும், வெண்மதியும் வளர்மதியை போலவே அன்பானவர்கள் என்றாலும் எங்குமே தம்பியையும் குடும்பத்தையும் விட்டு கொடுக்காதவர்கள் என்று தெரிந்து வைத்திருந்தாள்.

ஆனால் திருமணம் ஆன சில மணி நேரங்களிலேயே வைதேகி இடம் இருந்து வெளிவந்த கடுமையான வார்த்தைகளில் கீர்த்தி மட்டுமின்றி சுற்றி இருந்த அனைவரின் முகத்திலும் பெரும் அதிர்ச்சி.


"சித்தி என்ன பேசுறீங்க, யாரை என்ன பேசுறதுன்னு ஒரு வரைமுறை வேண்டாம். கீர்த்தி அப்படி இல்லை" என்று அலர் அவளுக்கு பரிந்து பேச,

'எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறேன், நீ தலையிடாத அமுலு' என்று அலரை கடிந்தவருக்கு தானே பிரகாசத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டதன் வலியின் வீரியம் புரியும்.

ஆம் அன்று பிரகாசம் வீடு தேடி வந்து அவர்கள் தந்தையை பேசிய பேச்சாகட்டும் அவனிடம் பட்ட கடனுக்காக அவர் குடும்பத்து பெண்களை தறைக்குறைவாக பேசியதாகட்டும் எதையுமே அவர் மறக்கவில்லை. அதிலும் எந்த தவறும் செய்யாத அவர்கள் தந்தையின் உயிர் குற்ற உணர்வின் உச்சத்தில் பரிதாபகரமாக பறிபோனதில் பிரகாசம் மட்டுமின்றி அவரை சார்ந்த அத்தனை பேர் மீதும் அவருக்கு வெறுப்பு மட்டுமே...!!

அப்படி இருப்பவருக்கு அவர் மகள் மீதான நல்ல எண்ணம் எங்கிருந்து வரும்..??

அது மட்டுமா அன்று கீர்த்தி அவள் தந்தைக்காக தம்பியை துச்சமாக தூக்கி எறிந்து பேசியதை நேரில் கண்டவர் ஆயிற்றே வைதேகி..!!

சொல்லபோனால் அன்று அவன் வெளிநாட்டிற்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன் கூட கீர்த்தியை வேண்டாம் நம் குடும்பத்திற்க்கு சரி பட்டு வராது என்று தம்பியிடம் தன்னால் இயன்ற அளவு பேசிவிட்டார். ஆனால் சரண் தான் கீர்த்தியை தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைக்க முடியாது என்று மறுத்து வெளிநாட்டிற்கு சென்று விட்டான்.

திரும்ப வந்த போதாவது அவன் முடிவில் மாற்றம் இருந்திடாதா..?? என்ற வேண்டுதலுடனே சரணை அழைத்து கொண்டு சௌமியாவை பெண் பார்க்க சென்றார். அப்போதும் கீர்த்தியை முன்னிறுத்தி அவரிடம் அதை மறுத்தவன் இப்போது எண்ணியது போலவே கீர்த்தியை மணமுடித்திருக்க அதில் வைதேகிக்கு பெரிதாக விருப்பமில்லை.

தம்பிக்காக இத்திருமணத்தை ஏற்று இருந்தாரே தவிர கீர்த்தி மற்றும் அவள் குடும்பத்தினர் மீதான அவரது வெறுப்பு சற்றும் குறையவில்லை.

அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த கீர்த்தியிடம், "கேட்கிறது காதுல விழலை" என்று வைதேகி மீண்டும் கேட்க,

அதில் அவள் உடல் அதிர்ந்தாலும் நெஞ்சம் விம்ம அவனை பார்த்து கொண்டிருந்த கீர்த்திக்கு சரணின் புறக்கணிப்பும், மாற்றமும் இதயத்தில் தாள முடியா வலியை ஏற்படுத்த, இமையோரம் துளிர்க்க தான் செய்தது.

தன் மீது உயிராக இருந்தவனே இப்போது அவள் உயிரை கொய்யும் நிலைக்கு தள்ளிய காலத்தை நிந்தித்தவள் அதே சமயம் குற்றம் சாட்டும் பாவத்துடன் எதிரே கண்ணீருடன் நின்றிருந்த தீபிகாவை பார்க்கவும் தவறவில்லை.



ஹாய் செல்லகுட்டீஸ்...

இதோ "உயிரில் உறைந்த உறவே !!" மூன்றாம் பாகத்தின் முதல் அத்தியாயத்துடன் நான் வந்துட்டேன். இந்த மாத இறுதியில் தொடங்குவதாக இருந்தவள் உங்களின் அன்பில் முன்னதாகவே வந்துவிட்டேன். இப்போதைக்கு வாரம் ஒரு பதிவு தருகிறேன் நீங்கள் கதைக்கு அளிக்கும் கருத்துக்களை பொறுத்தே அது இரண்டு அல்லது மூன்று பதிவாக அதிகரிக்க கூடும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். நீங்க படிச்சிட்டு அமைதியா போயிட்டா கதையின் ஓட்டம் குறித்த உங்கள் பார்வை, எண்ணம் எனக்கு எப்படி தெரியும் அதனால ஒரு வரியில் என்றாலும் உங்கள் கருத்தை பதிவிடுங்கள் அதுவே எனக்கு கதையை விரைந்து எழுதும் உத்வேகத்தை அளிக்கும் என்று கூறி கொள்கிறேன்.

நன்றி


ருத்ரபிரார்த்தனா
Really nice.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top