Ramadan 2020- Prophet Yusuf- Day 15

Advertisement

fathima.ar

Well-Known Member
உள்ளே
சிறைவாசிகள் இருவர் கனவு கண்டார்கள் அதில் ஒருவர் நான் திராட்சை பழங்களில் இருந்து மதுரசம் பிழிவதை போல் கனவு கண்டேன் என்று கூறினார் மேலும் மற்றொருவர் நான் என் தலையில் ரொட்டியை சுமந்து கொண்டு போகும் பொழுது பறவைகள் அதை கொத்தி தின்பதை போல் கனவு கண்டேன் என்று கூறினார் இவ்வாறு கூறிவிட்டு அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லவராக மேலும் அறிவுஜீவியாகவே காண்கிறோம் ஆதலால் எங்களுக்கு இதன் விளக்கத்தை எங்களுக்கு கூறும் என்று கூறினார்கள்.

இதை கேட்ட நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ் எனக்கு அருளிய இந்த அறிவிலிருந்து நான் இதன் விளக்கத்தை உங்களுக்கு கூறுகிறேன் . என்று கூறி யார் மதுரசம் பிழிவதை போல் கனவு கண்டாயோ நீ மிக விரைவில் விடுதலையாகி உன்னுடைய முதலாளிக்கு மதுரசம் பிழிவாய் மற்றொருவன் சிலுவையில் அறையப்பட்டு இறப்பான். இறந்தபின் அவனின் உடலை பறவைகள் கொத்தி தின்னும். இதுவே உங்களுடைய கனவின் விளக்கம் என்று கூறினார் .

மேலும் விடுதலையாக இருக்கும் அந்த சிறை தோழரிடம் நீர் வெளியில் சென்றவுடன் என்னை பற்றி நாட்டின் மன்னனிடம் எடுத்துக்கூறும் என்று கோரிக்கை விடுத்தார் ஆனால் அவன் விடுதலை ஆனவுடன் ஷைத்தான் அவனை மறக்க செய்துவிட்டான் ஆதலால் மேலும் சில காலம் அவர் சிறையில் இருக்க நேரிட்டது

பிறகு சிறிது காலம் சென்ற பிறகு அந்நாட்டு மன்னன் ஓர் கனவு கண்டான் அதில் நல்ல கொழுத்த பசுக்களையும் மெலிந்த பசுக்களையும் மேய்வதை கண்டேன் அதில் ஏழு பசுமையான கதிர்களும் ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன் . என் பிரதானிகளே நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் தரகூடியவராக இருந்தால் இந்த கனவிற்கு விளக்கம் கொடுங்கள் என்று அந்த மன்னன் கேட்டான்..

அதற்கு அந்த பிரதானிகள் இது பொய்யான கனவு அதற்கு விளக்கம் கொடுக்க நான் அறிந்திருக்க வில்லை என்று கூறினார்கள். இந்த சம்பவத்தை அறிந்த சிறையில் இருந்து விடுதலையான மனிதர் யூசுபை நினைவு கூர்ந்து அவர் மன்னரிடம் நான் இந்த கனவிற்கு விடை கூறுகிறேன்.

ஆனால் என்னை நீங்கள் சிறைகூடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். அவ்வாறே அவரை அழைத்து செல்ல அங்கு நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் யுசுபே உண்மையாளரே. எனக்கு மேலும் ஒரு கனவிற்கு விளக்கம் தேவை என்று கூறினார்.

நபி யூசுப் அலைஹி வசல்லம் என்ன கனவு என்று கேட்க ஏழு கொழுத்த பசுவையும் மெலிந்த ஏழு பசுவையும் மேலும் பசுமையான ஏழு கதிரையும் காய்ந்த ஏழு கதிரையும் கனவில் கண்டால் அதன் பொருள் என்ன என்று கேட்டார்.
அதனை கேட்ட நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் முதல் ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வதை போல் செய்வீர்கள் அதில் உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பொருட்களை சேமித்து கொள்ளுங்கள். அதன் பிறகு கடுமையான பஞ்சம் ஏற்படும். அதில் உணவிற்கே கஷ்டம் வரும். அப்பொழுது சேமித்தவற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
பிறகு ஒரு ஆண்டு வரும். அதில் மழை பொழிந்துகொண்டே இருக்கும். அப்பொழுது அனைவரும் பழரசங்கள் பிழிந்தவர்களாக இருப்பார்கள் என்று விளக்கம் கொடுத்தார்கள் ,,


இவ்வாறே விளக்கத்தை அரசனிடம் கொண்டு சென்றார்கள். இந்த விளக்கத்தை கேட்ட அரசர் இவ்விளக்கம் கொடுத்தவரை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினான். இதனை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் கூறவந்த அந்த தூதுவனிடம்..

12:50. (“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.

12:51. (இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
இவ்வாறு நான் இதனை ஒத்துகொள்ள காரணம் நிச்சயமாக மறைவாக இருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும் நிச்சயமாக துரோகிகளின் சூழ்ச்சிக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான் என்பதை அவர் அறிந்து கொள்வதற்காகத்தான் என்று கூறினாள்.


மேலும் நான் யூசுபின் மீது மோகம்கொள்ளவில்லை என்று கூறி என் மனதை நான் தூய்மை படுத்தவில்லை. நிச்சயமாக ரட்சகன் அருள் புரிகின்றவர்களை அன்றி மனிதர்களுடைய மனம் பாவம் செய்ய தூண்டகூடியதாகவே இருக்கிறது நிச்சயமாக எனது ரட்சகன் மிக்க மன்னிப்பவன் மிக்க கிருபையுடையவன் என்று அந்த பெண் சுலைகா கூறினாள்

சிறைச்சாலையில் இருந்த நமது நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது அறிவாற்றலை அறிந்த அந்த அரசன் அவரை அழைத்துவாருங்கள் அவரை எனக்கு மட்டும் பிரத்யோகமானவராக அமர்த்தி விடுகிறேன் என்று கூறினார். அவரை அழைத்து வரப்பட்டு யுசுபிடம் நீர் இன்றிலிருந்து எங்களிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் உடையவராக ஆகிவிட்டீர் என்று கூறினான்

அதற்கு நபி யூசுப் அலைஹி வசல்லம் என்னை உங்களது நாட்டின் நிதியமைச்சராக ஆக்கிவிடுங்கள் என்று கோரினார். அதை பற்றி நன்கறிந்தவன் பாதுகாப்பவன் என்று கூறினார். அரசனும் அந்நாட்டு நிதியமைச்சராக நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை ஆக்கினான்

பிறகு சிறிது காலத்தில் பஞ்சம் தொடங்கிவிட்டது அனைவரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தார்கள். அப்பொழுது அரசவையில் சேமித்து வைக்கபட்ட பொருள்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள். அவரே கண்ஹானில் இருந்து யூசுபிடம் அவர்களது சகோதர்கள் வந்தபொழுது நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களை அறிந்து கொண்டார். இவர்கள்தான் நம்முடைய சகோதரர்கள் என்று. ஆனால் அவர்களுக்கு புலப்படவில்லை இவர்தான் யூசுப் என்று.

இவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார் செய்து அவர்களிடம் கொடுத்து நீங்கள் மறுமுறை வரும்பொழுது உங்கள் தந்தையிடம் இருக்கும் உங்களது சகோதரன் புன்யாமினையும் அழைத்து வாருங்கள் அவ்வாறு நீங்கள் வந்தால் மேலும் உங்களுக்கு தானியங்களை கொடுக்கிறேன் என்று வாக்களித்தார். அவ்வாறு நீங்கள் அழைத்து வரா விட்டால் நீங்கள் என்னை நெருங்க வேண்டாம். என்னிடம் இருந்து எந்த ஒரு பொருளும் தரப்பட மாட்டாது என்று கூறினார்

இதனை கேட்ட அவர்கள் கூறினார்கள் நிச்சயம் அவரை அழைத்துவர நாங்கள் முயற்சிக்கிறோம் என்று கூறிவிட்டு தங்கள் தந்தையிடம் வந்து தந்தையே எங்களுக்கு தானியம் அளப்பது நிறுத்தப்பட்டுவிட்டது நாங்கள் புன்யாமினை அழைத்து சென்று பாதுகாப்புடன் கொண்டுவருவோம் அவருடன் அதிக தானியங்களை நமக்காக வாங்கியும் வருவோம் என்று கூறினார்கள்

அவரது தந்தை நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் இவருடைய சகோதரர் யூசுபின் விசயத்தில் உங்களை நம்பியது போதும் இவரையும் நான் இழக்க தயாராக இல்லை என்று கூறினார் மேலும் பாதுகாப்பதில் அல்லாஹுவே மேலானவன் அவனையே நான் நம்புகிறேன் என்று கூறினார்.
தந்தையே! இனிமேல் நாங்கள் எதை தேடுவோம் நாங்கள் எங்கள் சகோதரன் புன்யாமினை அழைத்து சென்று நம் குடும்பத்திற்கு தேவையான தானியங்களை வாங்கி வருவோம். மேலும் எங்களது சகோதரனை பாதுகாப்புடன் அழைத்தும் வருவோம் என்று கூறினார்கள்.


உங்கள் யாவரையும் ஆபத்து சூழ்ந்த்திருந்தால் அன்றி இவரை பத்திரமாக திருப்பி கொண்டு வருவோம் என்று அல்லாஹ்வின் புறத்தில் எனக்கு சத்தியம் செய்யும் வரை நான் உங்களுடன் இவரை அனுப்ப மாட்டேன் .என்று கூறிவிட்டார் நபி யாகூப் அலைஹி வசல்லம்.
அவர்களும் அல்லாஹுவின் புறத்தில் சத்தியமும் செய்துவிட்டார்கள் நாம் உறுதிமொழி எடுத்ததை அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான் என்று கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தார் நபி யாகூப் அலைஹி வசல்லம் மேலும் அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துவிட்டேன் என்று கூறினார்.
மேலும் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். எனது மக்களே நீங்கள் எகிப்து நாட்டினுள் போகும்பொழுது வேறு வேறு வாசல் வழியாக உள்ளே நுழையுங்கள் அல்லாஹு தடுத்ததை தவிர வேறு எதையும் நான் உங்களிடம் கூறவில்லை என்று கூறினார்
அவ்வாறே அவர்கள் எகிப்தை அடைந்ததும் அவர்கள் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் புன்யாமினை காண்பித்தார்கள் அவர் புன்யாமினை தனிமையில் சந்தித்து நான் தான் உனது சகோதரன் யூசுப். இந்த செய்தியை நீ அவர்களிடம் கூற வேண்டாம் என்று வாக்குறுதி வாங்கினார். பிறகு அவர்களுக்கு தனித்தனியே தானிய முட்டைகள் வழங்கப்பட்டது.
புன்யாமினின் மூட்டையில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் குவளையை போட்டுவிட்டார் பிறகு சிறிது தூரம் சென்றவுடன் காவலாளிகள் அவர்களை அழைத்து நில்லுங்கள் மந்திரியின் முக்கியமான பொருள் காணாமல் போய்விட்டது அதனை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ஒரு ஒட்டகம் நிறைய தானியம் வழங்குவதாக அரசவையில் அறிவித்துவிட்டார்கள். நீங்கள் தான் கடைசியாக அங்கு வந்தீர்கள் நீங்கள்தான் எடுத்திருக்க கூடும் என்று அந்த காவலாளிகள் கூறினார்கள்.
அதற்கு புன்யாமீன் சகோதரர்கள் பத்துபேரும் நிச்சயமாக நாங்கள் இந்த நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை அவ்வாறு எங்களிடம் அந்த பொருள் இருந்தால் அவரை நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள் அவ்வாறே அவர்களது தானிய மூட்டைகளை சோதித்தார்கள் யாரிடமும் இல்லை இறுதியாக புன்யாமினின் மூட்டையை சோதிக்கையில் அதில் அந்த குவளையை கண்டதும் அதிர்ச்சியுற்றார்கள்.
பிறகு அந்த காவலாளிகள் நாங்கள் இவரை கைது செய்து அமைச்சரிடம் ஒப்படைக்க போகிறோம் என்று கூறினார்கள் அதற்கு அவர்கள் இவரின் தந்தை மிகவும் பலகீனமானவர் அவரிடம் இவருக்கு எந்த ஆபத்து வர விடமாட்டோம் என்று அல்லாஹுவின் மீது சத்தியம் செய்து கூட்டி வந்தோம். ஆனால் இப்பொழுது எங்களில் யாரேனும் நீங்கள் கைது செய்து இவரை விட்டு விடுங்கள் என்று கோரினார்கள் ஆனால் அவர்கள் இல்லை அவ்வாறு செய்தால் நாங்கள் அநியாயகாரர்களில் ஒருவராக மாறிவிடுவோம் ஆதலால் அந்த தவறை நாங்கள் செய்யமாட்டோம் என்று புன்யாமினை அழைத்து சென்று விட்டார்கள்.
அப்பொழுது அந்த பத்து சகோதரர்களும் என்ன செய்வது என்று அறியாமல் இருந்தார்கள் வேறு வழியில்லை தந்தையிடம் கூறிவிடுவோம் என்று கூறி புறபட்டார்கள் அங்கு தந்தையிடம் கூறியபொழுது அவர் அதனை ஏற்கவில்லை இவ்வாறுதான் நீங்கள் யூசுபை அழைத்து சென்றீர்கள் இப்பொழுது அவன் சகோதரனையும் இவ்வாறே செய்துவிட்டீர்கள் என்று அழ தொடங்கிவிட்டார்கள் நான் அல்லாஹுவின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கிறேன் அவனே எங்களை சேர்த்து வைக்க போதுமானவன்.
நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் அழுது அழுது அவருடைய பார்வை மங்கிவிட்டது அழுதுகொண்டே இருப்பதை கண்ட அவருடைய பத்து பிள்ளைகளும் தந்தையே நாங்கள் வேண்டுமென்றால் யூசுபை தேடி வருகிறோம் என்று கூறி மீண்டும் மிஸ்ரு நாட்டிற்கு சென்று அங்கு மீண்டும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் அமைச்சரே எங்களுடைய தந்தை மிகவும் வயதானவராக இருக்கிறார் எங்களுக்கு மேலும் நல்ல தானியங்கள் நீங்கள் கொடுத்தால் அதன் மூலம் எங்கள் தந்தையை நன்கு கவனித்து கொள்வோம் என்று கூறினார்கள் அப்பொழுது

நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் நீங்கள் உங்கள் சகோதரன் யூசுபை என்ன செய்தீர்கள் என்பது ஞாபகம் உள்ளதா என்று கேட்டார் அப்பொழுது அவருக்கு புலப்பட்டது அப்போ நீங்கள் தான் யூசுபோ என்று கேட்டார்கள். அதற்கு ஆம் நான்தான் யூசுப் இவர்தான் எனது சகோதரன் புன்யாமின் என்று கூறினார். அப்பொழுது அவர்கள் ஆச்சர்யபட்டு எப்படி நீ மந்திரியானாய் என்று கேட்டார்கள் ஆனால் நமது தந்தை நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் அல்லாஹ்தான் தான் நாடியவருக்கு அருளை பொழிகிறான் அவன்தான் என்னை உயர்த்தினான் என்று கூறினார்கள்
அப்பொழுது அந்த பத்து பேரும் தங்கள் குற்றங்களை ஒத்து கொண்டார்கள் மேலும் நம்மை யூசுப் பழிவாங்கிவிடுவாரோ என்றும் அஞ்சினார்கள்.. ஆனால் அவர் தனது சகோதரர்களை பார்த்து இன்று நான் உங்கள் எந்த பழிவாங்களும் நடத்தபோவதில்லை. அல்லாஹ் உங்களுடைய பாவத்தை மன்னிப்பான் என்று கூறினார். அப்பொழுது அந்த சகோதரர்கள் அவர்களது தந்தையை பற்றி ஞாபக படுத்தினார்கள். நமது தந்தை உங்கள் இருவரையும் நினைத்து அழுது அழுது அவருடைய கண்பார்வை மங்கிவிட்டது என்று கூறினார்கள்.
இதனை கேட்ட நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,

12:93. “என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).
அவர்கள் அந்த சட்டையை எடுத்து கொண்டு வந்தபொழுது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் இது யூசுபின் வாசனை வருகிறது. எங்கே எனது மகன் யூசுப்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அந்த சட்டையை முகத்தில் போட்டு ஆம். இது யூசுபின் சட்டைதான் என்று கூறி அவரின் முகத்தில் போர்த்தினார்கள்.
நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இழந்த பார்வை மீண்டும் வந்துவிட்டது. அப்பொழுது தன் பிள்ளைகளை பார்த்து கூறினார்கள்: ‘நான் உங்களிடம் கூறவில்லையா? அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்காததை எனக்கு அறிவிக்கிறான் என்று கூறினார். அதனை கேட்ட அந்த பத்து பிள்ளைகளும் தந்தையே! நாங்கள் தீங்கிழைத்துவிட்டோம். எனக்காக நீங்களும் இரட்சகனிடம் பாவமன்னிப்பு கேளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களும் என்னுடைய பிள்ளைகளே நிச்சயமாக உங்களுக்காக நானும் பாவ மன்னிப்பு தேடுவேன் என்று கூறினார்.
பிறகு அவர்கள் அனைவரும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது கோட்டைக்கு சென்றார்கள்.


அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.

12:100. இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்.
அதன்பிறகு சுலைஹா அம்மையாரை ஒரு நாள் நகர்வலம் வரும்போது கண்டு கொண்டார்கள். அல்லாஹ் சுலைஹா அம்மையாருக்கு இளமையை திரும்பக் கொடுத்தான். யூசுப் சுலைஹா ஆகிய இருவரும் இனிதே திருமணம் முடித்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.
தம் மாமனார் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தங்களுடன் தங்கள் மாளிகையிலேயே வாழ வேண்டும் என்ற சுலைகா அம்மையார் வேண்ட, எனக்கு ஆடம்பர பங்களா வேண்டாம் சிறு குடில் இருந்தால் போதுமானது என்று வேண்ட அவ்விதமே அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதில் 17 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அதன்பின் தம் அருமை மகன் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தம் பிரதிநிதியாய் நியமித்த விட்டு உயிர் நீத்தார்கள். அப்போது இவர்களின் வயது 147.
தம் தந்தையின் விருப்பப்படி பைத்துல் முகத்தஸிற்கு அவர்களின் உடலை அடக்க கொண்டு சென்றபோது அன்னாரின் சகோதரர் ஈசுவும் மறைந்து அங்கு அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்டார்கள். சகோதரர்கள் இருவரும் அங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள்.

தம் அறிவுரைக்கிணங்கி ஒரே இறைவழிபாட்டை மக்கள் மேற்கொள்ளாதது கண்டு வெறுப்படைந்த இவர்கள் தமக்கு இறப்பை வேண்ட அல்லாஹ் கி.மு.1792ல் தம்பக்கம் அழைத்துக் கொண்டான். இவர்களின் உடல் நீல நதியின் நடுவிலிருந்த மணல் திட்டில் அடக்கம் செய்யப்பட்டபோதிலும்> பின்னர் இவர்களின் இறுதி உரையின்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பனீ இஸ்ரவேலர்களை பாலஸ்தீனுக்கு அழைத்துச் சென்றபோது ஒரு கிழவியின் உதவியால் அதனைக் கண்டுபிடித்து பைத்துல் முகத்தஸில் நல்லடக்கம் செய்தனர்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top