Ramadan 2020- Prophet Hud - day 7

Advertisement

fathima.ar

Well-Known Member
நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது ‘ஆது’ சமூகத்தினர்

அவர்களுக்கு நபி ஹூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்த்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர். தங்களின் வலிமையை நினைத்து பெருமை கொன்டவர்களாக இருந்தனர். அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் வேறு எந்த நாட்டிலும் படைக்க படவில்லை.

ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம்தான் உபார் ஆகும். இது ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

ஆது சமுதாயத்தினரை நோக்கி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உபதேசம் செய்ததையும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களையும் வல்ல நாயன் தனது திருமறையில்,


ஹூது: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது:

நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.

ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிபடுங்கள்.

மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.

நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?


இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.

எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.

இதற்கு) அவர்கள்: “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.

இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை

மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”

இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. -அல்குர்ஆன் 26:124-139
எந்த சமுதாயம் இறைவனை நிராகரித்து இறை தூதரை நம்ப மறுத்ததோ,அவர்களுக்கு எச்சரிக்கபட்டது போல இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கினான்,

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று – இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:
–அல்குர்ஆன் 46:24 ஆத் கூட்டத்தார்கள் தங்களுக்கு வேதனை தரும் பேரழிவு கண்முன் கொண்டு வரப்படுவது அறியாமல், அதை மழை தர கூடிய மேக கூட்டங்களாக நினைத்தனர்.

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.

ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?

இப்பொழுது உபாரை சுற்றிலும் யாருமற்ற பாலைவனம் தான் உள்ளது.

ஆயிஷா (ரலியல்லலாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தம் அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர்களின் முகம் மாறி விடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும். எனவே, (ஒரு முறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்து கொண்டு), ‘இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்” (திருக்குர்ஆன் 46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம் எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். (புகாரி – 3206)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top