P7 எந்தன் காதல் நீதானே

Advertisement

Ramya Rajan

Well-Known Member
ஜெய் நன்றாக ஓரத்தில் தள்ளி உட்கார்ந்து கொண்டு வெண்ணிலாவை சீட்டில் படுத்துக்கொள்ள சொல்ல, அவள் வேண்டாம் என மறுக்க....

மற்றவர்கள் உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்தவன், அவளை இழுத்து சீட்டில் படுக்க வைத்தான். வெண்ணிலா எழுந்துகொள்ள நினைத்தாலும், எழுந்து கொள்ள முடியவில்லை.

சிறிது நேரம் போராடி பார்த்தவள், முடியாமல் விட்டு விட்டாள். அவன் மடியில் லேசாகத் தலை வைத்து படுத்திருந்தவள், சிறிது நேரத்தில் உறங்கி விட... ஜெய் அவளை நன்றாக படுக்க வைத்துக் கொண்டவன், அவனும் நன்றாக சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வந்தான்.

தன் மனம் விரும்பியவளையே மணந்து கொண்டதில், மனம் மகிழ்ச்சியில் திளைக்க, நொடிக்கொரு தரம் அவளைப் பார்ப்பதும், வெளியே பார்பதுமாக இருந்தான்.

**************************************************************************************************************

வெண்ணிலாவின் வீடு சென்று சேர இரவு பதினோரு மணி ஆகியிருக்க, அப்போதும் நெருங்கிய உறவினர்கள் சிலர் இருக்க, மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்.

“பாட்டி ரூம்ல இருக்காங்க, ரெண்டு பேரும் போய் ஆசிர்வாதம் வாங்கிக்கங்க.” என அன்பரசி சொல்ல, இருவரும் கற்பகம் இருந்த அறைக்குள் செல்ல, படுத்திருந்தவர் இவர்களைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தார்.

இருவரும் அவர் காலில் விழ, “நல்லாயிருங்க.” என்றவர், வெண்ணிலாவை அவர் அருகில் கட்டிலில் உட்கார வைத்துக் கொண்டு, “இன்னும் சின்ன பிள்ளை இல்லை. கல்யாணம் ஆகிடுச்சு, பொறுப்பா இருக்கணும். நம்ம வீடு போல அங்க எதிர்பார்க்க கூடாது. என்ன இருக்கோ அதை வச்சு இருக்கணும்.” என்றதும், ஜெய்க்கு கடுப்பாக இருக்க...

பாட்டிக்கு கொழுப்பை பார்த்தியா, நாங்க எதோ பச்சை தண்ணியை குடிச்சு உயிர் வாழற மாதிரி நக்கல் பண்ணுது என நினைத்தவன், அறைக்குள் இருந்து வெளியே சென்றுவிட... அதற்குள் மகேஸ்வரியும் அவர்களை உணவு உண்ண அழைத்தார்.

**************************************************************************************************************

அறை பெரிதாக இருந்தது. இதுவரை வந்தால்... ஹாலோடு சென்று விடுவான். இன்றுதான் அறைக்குள் வந்திருக்கிறான். மெத்தையில் மல்லிகை பூவை போடு வைத்திருந்தனர். பக்கத்தில் மேஜையில் பால், பழங்கள், இனிப்புகள் என இருக்க.. அவனுக்கே ஒருமாதிரி இருந்தது.

ஓய்வு அறைக்குள் சென்று முகல் கைகால் கழுவி வந்தவன், எடுத்து வந்திருந்த கைலியை மாற்றிவிட்டு, கட்டிலில் படுத்துக் கொண்டான்.

அங்கே வெண்ணிலாவை அறைக்குள் அனுப்புவதற்குள் மகேஸ்வரிக்கும், விமலாவுக்கும் மண்டை காய்ந்து விட்டது.

“எனக்கு பயமா இருக்கு. நான் போகலை...” என சொல்லிக் கொண்டு, உணவு மேஜையிலேயே உட்கார்ந்து விட்டாள்.

“இந்தக் காலத்தில இப்படியொரு பொண்ணு இதை வச்சிட்டு என்ன செய்ய?” என மகேஸ்வரி தலையில் அடித்துக்கொள்ள... ஜெய்யே அறைக்குள் இருந்து வெளியே வந்து விட்டான்.

“ரூமுக்கு போ டி...” என விமலா சொல்லிக் கொண்டிருந்தவர், ஜெய்யை பார்த்ததும், “இதோ அவனே வந்திட்டான். இனி அவன் பார்த்துப்பான். வா அக்கா...” என அவர் மகேஸ்வரியை அழைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் சென்று விட... வெண்ணிலா தவிப்புடன் நின்றாள்.

*************************************************************************************************************
 

banumathi jayaraman

Well-Known Member
அட ராமா
கல்யாணத்துக்கு பேசாமல் இருந்துட்டு இப்போ பர்ஸ்ட் நைட்டுக்கு மொடக்கடி பண்ணுறியே, வெண்ணிலா
உன்னோட பாட்டிக் கிழவிக்கு இது தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு நீயி யோசிச்சு பாரு

அந்த சூனியக்காரி கிழவியிடம் என்ன ஆசீர்வாதம் வணக்கம் வேண்டிக் கிடக்கு?
மூதேவி கற்பகம் எதையாவது சொல்லி ஜெய்யை வருத்தப்படுத்துறாளே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பாரு உங்கத்தான் உன்னை தேடி வந்தாச்சு :p:p:p
அனுப்பி வைக்குறதுக்கு பதில்லை வந்து கூட்டிட்டு போறாரே.....
அப்போ மாமா வீடு தான் பிடிச்சிருக்கோ....... மாமா பையன் இல்லையா???
இது தெரியாமல் அவன் உன்னை ரொம்ப லவ் பண்ணிட்டேன் போல......

பாட்டிக்கு 11 மணிக்கும் குத்தல் பேச்சு.......

கையில் மிதக்கும் கனவா நீ பாடிக்கிட்டே தூக்கிட்டு போகப்போறான் :p:p:p
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமை☺☺☺.பச்சை தண்ணிய குடிச்சிட்டு உயிர் வாழற மாதிரி நினைக்கிறது மட்டுமில்ல,
ஜெய் இங்கே இருந்து போறதுக்குள்ளே பாட்டி என்னென்ன பேசுமோ.
 
Last edited:

Sivaguru

Well-Known Member
Nilava thukitu poga jaiye vanthutan
Avanumthan evalavu neram parppan
Ana jai nee romba paavam nila nalla vachu seiya pora nalla anupavi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top