P4 எந்தன் காதல் நீதானே

Advertisement

Ramya Rajan

Well-Known Member
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி படித்துக் கொண்டிருந்தான். விடுதியில் தங்கித்தான் படித்தான். எல்லோரையும் போல கல்லூரி வாழ்க்கை என்பது அவனுக்கும் இனிமையானவையே.... உடன்படித்த தோழியின் பார்வை தன் மீது நட்பையும் தாண்டி ஆர்வமாக படிவத்தை உணர்ந்தான்.

மனதில் பட்டாம்பூச்சி பறப்பதை விட்டு, ஒருவிதமான சங்கடமே எழுந்தது. அதன் பிறகு அந்தப் பெண்ணைப் பார்ப்பதையும் தவிர்த்தான். அந்த முறை அத்தை வீட்டிற்கு சென்ற போது வீட்டில் கற்பகம் இல்லை. எப்போதும் கொடுக்க வந்ததை கொடுத்துவிட்டு உடனே கிளம்புபவன், இந்தமுறை அத்தை பரிமாற உணவு உண்டான். வெண்ணிலாவும் அவனோடு உணவு அருந்தினாள்.

*********************************************************************************************************************

வெண்ணிலாவுக்கு இங்கே அகல்யா ராதிகாவோடு நேரம் போனது. அகல்யா கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கிறாள். ராதிகா பள்ளி இறுதி. இருந்தாலும் இப்போது இருவருக்கும் விடுமுறை என்பதால்...மூவரும் சேர்ந்து இருந்தது வெண்ணிலாவுக்கு பல விஷயங்களை யோசிக்க விடாமல் செய்தது. சில நேரம் கவிதாவும் சேர்ந்து கொள்வாள்.

கவிதாவுக்கு எதையும் வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்த வீட்டில் அப்படியொரு திருமண பேச்சு வார்த்தை வந்தது போலவே காட்டிக்கொள்ள மாட்டார்கள். காமாக்ஷி மட்டும் “என்ன வரப்போற மாமியார் வீடு எப்படியிருக்குன்னு இப்பவே அடிக்கடி வந்து பார்த்துகிறியா?” என கேலியாக கேட்பது போல பேசினாலும், மற்றவர்கள் அது காதில் விழாதது போல இருப்பார்கள். ஆனால் வெண்ணிலா மட்டும் ஜெய் கவிதாவை திருமணம் செய்யப்போவதாக நினைத்துக் கொண்டிருந்தாள். அதனால் தான் உரிமையாக வந்து போகிறாள் என நினைத்திருந்தாள்.

***************************************************************************************************************

வெண்ணிலா வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று மாலை எல்லோரும் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஜெய் எதோ எடுக்க வீட்டுக்கு வந்தவன், எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பதைப் பார்த்து அங்கு வந்தான்.

அவனைப் பார்த்ததும் அமுதா அவனுக்கு டீ கொண்டு வந்து கொடுத்தார். அதை குடித்தபடி அங்கேயே நின்று விட்டவன், “என்ன மாநாடு இங்க?” என கேட்க,

“இல்லை நாம தண்ணி ஊத்தும் போது கூட இவ்வளவு பூ பூக்களையே, வெண்ணிலா ஊத்தும் போது மட்டும் பூக்குதே... அதுதான் வெண்ணிலாவை எல்லோரும் பாராட்டிட்டு இருக்காங்க.”

“ம்ம்.. உரம் கொண்டு வந்து வச்சது நானு. வெறும் தண்ணி ஊத்தினவங்களுக்கு பாராட்டா?” ஜெய் கேட்க, வெண்ணிலாவுக்கே சிரிப்பு வந்துவிடும் போல இருந்தது. அவள் கஷ்ட்டப்பட்டு சிரிப்பை அடக்க...

*********************************************************************************************************

மறுநாள் காலை ஜெய் அவன் அறையில் இருந்து இறங்கி வர... வெண்ணிலா மேலேறிக் கொண்டிருந்தாள். அவள் முகம் மிகவும் வாடி இருக்க... நல்லாத்தானே இருந்தா, என்ன ஆனது என யோசித்தபடி ஜெய் வந்தவன், ஹாலில் இருந்த யுவராஜை பார்த்ததும் ஒரு நொடி திகைத்து, வா ராஜ் என்றான்.

சம்ரதாய நல விசாரிப்புகளுக்கு பிறகு... “நீயும் ராஜ்ஜோடு சாப்பிடு.” என அமுதா அழைக்க.. இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.

“அம்மாவையும் வெண்ணிலாவையும் கூடிட்டு போக வந்தேன்.” என ராஜ் சொல்ல... வெண்ணிலாவின் வாட்டத்திர்க்கான காரணம் விளங்கியது. சின்ன வயதிலேயே அப்படித்தான், வெண்ணிலா வரும் போது குஷியாக வருவாள். திரும்ப செல்லும் போது அழுது கொண்டு தான் செல்வாள். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே இன்னும் டூ டேஸ், ஒன் டே தான் என சொல்லிக் கொண்டிருப்பாள்.

ஜெய் சாப்பிடும் போதும் தீவிர சிந்தனையிலேயே இருந்தான். இன்று போக விட்டால் திரும்ப அவளை பார்ப்பதே அரிதாகி விடும் என அவனுக்கு தெரியும். போய் விடுவாளோ என மனம் படப்படத்தாலும் வெளியே அமைதியாக இருந்தான்.



****************************************************************************************************************
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எதுக்கு ஜெய் இப்படி மனசு கஷ்டப்படணும்?
பேசாமல் யுவராஜ் or மகேஸ்வரி அத்தை மூலமாக வெண்ணிலாவைப் பெண் கேட்க வேண்டியதுதானே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top