Epi 8 விண்ணில் உதித்து உன்னில் சேரவா...

#1
விண் 8 :

இருவருமே தன் இணையின் அருகாமையை விரும்பினார்கள்.

இருவர் மனதிலும் அவர்கள் கொண்ட காதலே முதன்மை பெற்று இருந்தது.

இருவரும் கடல் நீர் மீது நடந்து கொண்டிருக்க இஷித் ஆராவை தன் கைகளில் ஏந்தி கடற்கரை நோக்கி நடந்தான்.

அவன் மனதில் அவன் கொண்ட காதல் அவளின் பிரிவை நினைத்து வாட தொடங்கியது.

இன்று அவளை விட்டு அவன் பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவனை வால் கொண்டு அறுத்தது.

அவன் அவளை பிரிந்து மட்டுமா செல்கிறான் அவளுடைய காதலையும் கொன்று அல்லவா செல்ல போகிறான்.

கடற்கரை மணலில் அவளை கிடத்தி அவனும் அவளுடன் சரிந்தான்.

இருவர் இடையில் உள்ள வேறுபாடுகளை அவர்கள் காதல் மறக்க செய்தது.

அவன் காதல் அவனை அவளுள் புதைய செய்ய அவளுடைய காதல் அவனை ஏற்க செய்தது.

அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அவளுடையான உலகில் சஞ்சரிக்க தொடங்கினான்.

இருவரும் அவரவர் வேறுபாடு மறந்து ஒரே உலகில் பிண்ணி பிணைந்தனர்.

அவர்கள் காதல் காலத்தையும் தாண்டி இணைந்தது.

அவளை முழுவதுமாக தன்னவளாக்கி கொண்ட பிறகே அவளை விட்டு நீங்கினான் இஷித்.

ஆரா மனதில் நிறைந்த சந்தோஷத்தில் உறக்கத்தை தழுவினாள்.

இஷித் அவளையே பார்த்து கொண்டு இருந்தான் அவன் மனதில் வலி மட்டுமே வியாபித்து இருந்தது.

ஆராவின் புறம் குனிந்து அவள் இதழில் ஆழ முதமிட்டவன் " சாரி ஆரா " என்று அவள் கழுத்தில் கிடந்த கல் பதித்த சைனை கழட்டி எடுத்தவன்.

அவன் நெற்றியில் முத்தமிட்டு அவளை திரும்பி பார்க்காமல் அங்கு இருந்து சென்றான்.

அவன் கடமையை செய்ய அவள் காதலை கொன்று புதைத்து போனான்.

பேதையவள் உள்ளம் அறிந்தும் அதை வெட்டி வீழ்த்தி சென்றான்.

பாம்புக்கு பால் வார்த்தால் அது ஒரு நாள் அதன் குணத்தை வெளி படுத்த செய்யும்.

பசு தோல் போதினால் மட்டும் புலி பசுவாகது.

அவன் விட்டு சென்றது அறியாமல் பேதையவள் அவனுடன் இருந்த இனிமையான நேரங்களை நினைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அவளை விட்டு வந்தவன் ஜிம்முடன் இணைத்து அந்த க்ரிஸ்டலை எடுத்து கொண்டு கடற்கரை பகுதிக்கு வந்தவன் தங்கள் கருவியின் மூலியம் தகவல் அளித்து அவர்கள் கிரகத்திற்கு செல்ல ஆயத்தமானன்.

செல்லும் முன் ஆராவை பார்க்க அவன் மனம் தவித்தாலும் அவனால் இனி அவள் முகத்தில் எவ்வாறு விழிக்க இயலும்.

கடமையை நிறைவேற்ற காதலுக்கு அவன் செய்தது ஒன்னும் மரியாதை அல்லவே துரோகம் தானே.

இஷித் தங்கள் கிரகத்திற்கு சென்றுவிட இங்கே நாட்டில் அனைவருக்கும் அந்த மந்திர கல் காணமல் போனது தெரிய வந்தது.

அந்த நேரத்தில் இஷித் ஜிம் அங்கு இல்லாதது அவர்களின் மேல் சந்தேகத்தை உண்டு பண்ணியது .

அத்தோடு அவர்கள் அங்கு வந்ததின் நோக்கமே அது தானே இருந்தாலும் அவர்கள் நாட்டை சார்ந்தவள் தவிர அதை வேறு எவராலும் எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

அவர்கள் மந்திர சக்தி கொண்டு இதை யார் செய்தது என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்ய ஆராவின் மந்திர கல் கொண்டே அதை திறந்து உள்ளார்கள். அவர்களுக்கு இதில் உதவி புரிந்தது ஆராதான் என்று அனைவருமே அவளை தவறு இழைத்தவாளாக கருதினர்.

இந்த விடயம் எதுவும் அறியாத ஆரா கடற்கரையில் இஷித்தை காணவில்லை என்று தேடி விட்டு அவனை காண அவன் தங்கி இருந்த இடம் நோக்கி வந்தாள்.

அங்கே அந்நாட்டின் அரசன் ஆராவின் தந்தை நடந்த விஷயத்தை நினைத்து எரிமலையாய் இருந்தார்.

அனைவரும் ஆராவை குற்றம் சுமத்தும் பார்வை பார்க்க அவர்கள் பார்வையின் அர்த்தம் புரியாமல் விழித்தவள் அன்டோவிடம் சென்று என்னவென்று கேக்க அவன் நடந்த அனைத்தையும் கூற ஆராவிற்கு தான் யாரோ தலையில் பாராங்கல்லை தூக்கி போட்ட உணர்வு.

அவளால் இன்னும் இதை நம்ப முடியவில்லை அவளால் இதை ஜீரணிக்க முடியவில்லை.

அவள் நிலை குழைந்து நிற்க அவளின் மனம் ஓட்டம் புரியாமல் அனைவரும் மேலும் அவளை துரோகி என்று சொல்லி கொஞ்சம் நஞ்சம் இருந்த உயிரையும் வதைத்தனர்.

ஆராவின் தந்தை " நீ நம்ம நாட்டுக்கு துரோகம் பண்ணிட்ட உன்னால் நம்ம நாடு அழிய போகுது இனி நீ இங்க இருக்க கூடாது உன்னை இந்த நாட்டை விட்டு ஒதுக்கி வைக்கிறேன் " என்றார்.

அவளின் மந்திர கல் அந்த க்ரிஸ்ட்டல் இருந்த இடத்திற்கு அருகில் இருந்தது.

அதை பார்த்தவளின் உயிர் அங்கே மரித்து போனது.

உயிர் அற்ற நடை பிணமாய் கடற்கரை நோக்கி நடந்து சென்றாள்.

இதற்காக தான் தன்னோடு அவ்வாறு நடந்து கொண்டான அந்த கேள்வியே அவளை ஆயிரம் கூர் வால் கொண்டு கிழித்தது.

அவள் மனதின் நாயகனோ மனம் முழுவதும் வலியை சுமந்து கொண்டு தங்கள் கிரகத்தை நோக்கி பயணித்து கொண்டு இருந்தான்.

ஆரா அந்த கடற்கரை மணலில் விழுந்து ஆற்றுவார் தேற்றுவார் இன்றி கதறி அழுதாள்.

அப்போது ஆராவின் தோளை ஒரு வலிய கரம் தொட நிமிர்ந்து பார்த்தவள் அன்டோ தான் அங்கு நின்று கொண்டிருந்தான்.

அவள் அவனை கட்டி கொண்டு கதறி அழுதாள்.

காதலின் வலி அவளை நிலை குலைய செய்தது. அவன் மேல் அவள் கொண்ட காதலுக்காக அவள் அந்த நாட்டை விட்டு துரத்த பட்டாள்.

அவன் மேல் காதல் கொண்டதை தவிர அவள் வேறு எந்த தவறும் இழைக்கவில்லை.

அதற்கு அவளுக்கு கிடைத்த பட்டம் துரோகி.

தங்கள் கிரகத்திற்கு வந்த இஷித் அனைவர் உதவியுடன் அந்த க்ரிஸ்ட்டல் போல் ஒன்றை உருவாக்கி அதை அவர்களிடம் ஒப்படைக்க முழு மூச்சாய் இறங்கினான்.

அவன் தங்கள் கிரகத்திற்கு சென்ற இரு தினங்களில் அதே மாதிரி க்ரிஸ்ட்டல் உருவாக்கி மீண்டும் பால் வழி மண்டலம் நோக்கி பயணம் செய்தான்.

தான் செய்த தவறை எவ்வாறாது சரி செய்தே ஆக வேண்டும் அவன் மனம் அடித்து கூறியது.

ஆராவிற்கு அவன் செய்தது தவறு அல்லவே மிக பெரிய பாவம் அந்த பாவத்திற்கு அவன் உயிரை அவள் காலடியில் சமர்பித்தாவது பாவவிமோசனம் பெற அவன் மனம் விளைந்தது.

அவன் அந்த நாட்டை அடைந்து அவர்களை சந்திக்க அன்டோ அவன் மேல் தன்னுடைய மந்திர சக்தி கொண்டு தாக்கினான்.

அவனுடைய தாக்குதலில் கீழே விழுந்தவன் தட்டு தடு மாறி எழுந்து நிற்க இஷித்துடன் வந்த அவன் தங்கை ஹானி அன்டோவை தாக்க செல்ல இஷித் தடுத்துவிட்டான்.

இஷித் "நா சொல்றத கொஞ்சம் கேளு அன்டோ நா செஞ்சது தப்பு தான் அதுக்காக நா உங்க எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேட்டுகிறேன் " என்க " எதுக்கு மன்னிப்பு உன்மேல வச்ச நம்பிக்கைக்கா உன்ன நாங்க எவ்வளவு நம்புனோம் நீயும் எங்க கிரகத்தில் உள்ள மனுஷங்க மாறி தான் சுயநலம் உங்க கிரகத்திலும் இருக்கும்னு தெரியாம போச்சு " என்றான் வருத்தம் நிறைந்த குரலில் அன்டோ இஷித்தை உற்ற தோழனாக தான் பார்த்தான் அவனின் இந்த செயல் அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

அத்தோடு இஷித்தால் தான் அவனுடைய சகோதரி துரோகி பட்டம் சுமந்து நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டாள்.

அது அவன் மனதில் எல்லையில்லா கோபத்தை உருவாக்கியது.

இஷித் தான் எடுத்து வந்த க்ரிஸ்ட்டலை அன்டோவிடம் கொடுத்து " இத நா எடுத்துட்டு போனது தப்பு தான் ஆன எனக்கு வேற வழி தெரியல என்ன மனிச்சுருங்க " என்று மனதார மன்னிப்பு வேண்டியவன் கண்கள் தன்னவளை தேடியது.

அவள் எங்கே இங்கு இருக்கிறாள் அவளை தான் நாட்டை விட்டே விலக்கி வைத்தனரே பாவம் அவன் அறியவில்லை அவன் செய்த பாவத்திற்கு அவள் சிலுவை சுமக்கிறாள்.

அன்டோ அவனிடம் இருந்து அந்த க்ரிஸ்டலை பெற்று கொண்டு தன் மந்திர சக்தி கொண்டு இன்னும் பாதுகாப்பான திரையை உருவாக்கி அவர்கள் அதை கடந்து உள்ளே வர முடியாத படி செய்தான்.

இஷித் கண்கள் ஆராவை தேடி ஓய்ந்து மனதின் காதலை அடக்க முடியாமல் " ஆரா நா ஒரே ஒரு தடவ பாக்கணும் ப்ளீஸ் " என்றான்.

அவள் ஒரு முறை அவன் கண்களில் பட்டாலே போதும் தன் காதல் கொண்டு அவளை தன் வசம் இழுத்து விடுவான். அதை விட அவனுக்கு ஆராவின் காதல் மேல் அலாதி நம்பிக்கை அவள் என்றும் அவனை விலக்க மாட்டாள் என்று அவன் உறுதியாக நம்பினான்.

ஆதலால் ஒரு முறை அவளை கண்டுவிட அவன் உள்ளம் துடித்தது.

அவனின் உள்ளத்தின் துடிப்பை உணர வேண்டியவள் தான் அங்கு இருந்து துரத்தப்பட்டாலே.

இஷித்தின் கேள்வி அன்டோவிற்கு கோபத்தை உண்டு பண்ணியது இருந்தும் அவன் தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு ஆராவிற்கு நடந்ததை சொல்ல அங்கே மடிந்து போனான் இஷித்.

அவனுக்கு அங்கு இருந்த அனைவர் மீதும் கோபம் வந்தது தன்னவள் செய்யாத தவறுக்கு தண்டனை அளிக்க இவர்கள் யார் அவள் இப்போது எங்கு எந்த கஷ்டத்தை அனுபவிக்கிறாளோ என்ற எண்ணமே அவனை கொல்ல அவன் சக்திகள் கட்டு படுத்த முடியாமல் விண்ணில் ஆர்ப்பரித்து நின்றது கடலின் நீர் துளிகள்.

கடல் தேவன் ஆக்ரோஷம் கொண்டு பிரவாகம் எடுத்தால் எவ்வாறு இருக்குமோ அப்படி இருந்தது இஷித்தின் சக்திகள்.

இஷித்துடைய ஆக்ரோஷத்தை பார்த்து அவன் தங்கை ஹானி கூட சற்று பயந்து தான் போனாள்.

இஷித் அந்த இடத்தை அழித்து விடும் அளவிற்கு ஆக்ரோஷமாக மொத்த சக்திகளும் ஆர்பரிக்க கடலின் அகோர அரக்கனை போல் நின்றான்.

ஹானி " இஷி நா சொல்றத கேளு உன்னோட பவர்ஸ் கன்ட்ரோல் பண்ணு " என்று சொல்ல அது எதுவும் அவன் காதில் விழுவதை போல் தெரியவில்லை.

இஷித் அந்த இடத்தை அழிக்க முற்பட அந்த நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் மந்திர சக்திகள் கொண்டு அதை தடுத்தனர்.

அவர்கள் என்ன முயன்றும் இஷித்தை அவர்களால் தடுக்க இயலவில்லை.

ஜிம் "இஷி இது ஆராவோட இடம் அவுங்க இந்த இடத்துக்கு திருப்பி வரும் போது அத நீ அழிச்சுட்ட தெரிஞ்ச அவுங்க இருக்கவே மாட்டாங்க நம்ம ஆராவ தேடலாம் " என்று அவன் ஆராவை பற்றி சொல்ல மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பினான் இஷித்.

ஆனாலும் அவன் மனதின் கொதிப்பு அடங்கவே இல்லை.

எதிலோ தொற்று போன உணர்வு அவனை ஆட்கொள்ள எவரையும் காணும் சக்தி இன்றி அந்த கடலை நோக்கி நடந்தான்.

கடல் நீரில் அவர்கள் வாழ்ந்த காதல் வாழ்க்கை நியாபகம் அவன் அவளுடன் இணைந்த தினம் கண் முன் தோன்றி இம்ஸை செய்தது.

உன்னில் சேரவா....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes