E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அனுவை சேர்த்துக்கிறோம்.....அனு ஓடி வா....உன் மேக்கப்பையும் வீணாக்க வேண்டியதியில்லை
ஒரு பையன் மிக வேகமாக ஓடி கடையில் எத முதலில் வாங்குவான்?

உங்களுக்கு தெரியுமா?

வேறென்ன மூச்சைத்தான் [அய்யோ,அய்யோ}
டாடி, நீங்க எகிப்துக்கு எப்ப போனீங்க?”

நான் எகிப்துக்குப் போனதேயில்லையே!

பின்ன, ‘மம்மியை எப்படி பிடிச்சீங்க?
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
நீ தூங்க விடல....உளறல...உண்மை ...விஜி சொன்னது போல...என்னை ஷாலினி போல நம்புவாளான்னு பீல் பண்ணுவார்....அதுக்கு மேலேன்னு வர்ஷூ
நிருபிப்பாள் பாரு
:mad:
சூப்பர்ப், பொன்ஸ் செல்லம்
 

malar02

Well-Known Member
hi friend MM,
மாயமெல்லாம் நானறியேன்

உன் விந்தையும் நானறியேன்
நேற்று வெறுத்தவனை
இன்று விருந்தாக்கினாய்
உன் சிந்தையின் வடிவால்
உன் மந்திர கோலால்
என் விருப்பமாக்கினாய்
மலராத முல்லையை
மலர செய்தாய்
காயப்பட்ட மனதை
காதல் கானம்
பாடவைத்தாய்
உன்னை என்றும்
என் மனம் நாட வைத்துவிட்டாய் MM
 

sindu

Well-Known Member
Hi.....MM
சங்கீத வர்ஷினி அன்றும்......,இன்றும் .....

அன்று....இவளுக்கு முன்னுரையே தேவையில்லை...

நீலக்கண்களுக்கு அடிமையாகி,தீராத மோகம் கொண்டு
முறை தவறி நடந்தவனையே,
அப்பாவின் உடல் நலம் கருதி,
தனது எதிர்பார்ப்புகளை கூறி மணம் செய்துக் கொண்டாள்....


அவள் மீது கொண்ட தனியா தாகத்தைத் தீர்த்துக்கொண்டவன்
அவளைத் தனிமைப் படுத்தியப் போது
ஆரம்பித்தது அவளின் உள்மனப் போராட்டங்கள்...
அவளுக்கு தேவையான அவனின் அருகாமை கிட்டாத காரணத்தால்
அந்த வெறுமையை விரட்ட போதை மருந்தை நாடுகிறாள்..
அவனை குறித்த தன் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துபோன
நிலையில் தனது வாழ்வை முடித்துக்கொள்ள முயற்சிக்கிறாள்...
அவனிடம் பிடித்தம் இல்லாத நிலையில் ,அவனை கொல்ல வேண்டும்
என்ற எண்ணமும் எழுகிறது...
தேவை இல்லா எண்ணங்களையும்,போதை மருந்து
எடுக்கும் பழக்கத்தையும் விட
அவனிடமிருந்து பிரிவை நாடிச் செல்கிறாள்....


இன்று....
தன் உணர்வுகளை கட்டுக்கொள் கொண்டுவந்து
தனிமைத் துயரம் தாங்காமல்,அவனிடமே
திரும்பி வருகிறாள்....
சில பல மனப் போராட்டங்கள்....
தன்னைத் அவனிடம் உணர்த்துகிறாள்.
அவனையும் தன் மனகதவை திறந்து பேசவைக்கிறாள்....
ஒட்டாத உறவுகளிடம் நேசக் கரம் நீட்டி
உறவுகளை சரிப்படுத்திக் கொள்கிறாள்...
தனக்குரிய அடையாளத்தை ,சுயமாக ஏற்படுத்திக்கொள்கிறாள்....
தன்னால் பாதிக்கப் பட்டவர்களுக்கு,
நல்வாழ்வு ஏற்படுத்திக்கொள்ள வழி செய்கிறாள்....
தன்னை பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய
அஷ்வினுடன் நட்பு கொள்கிறாள்...


தன் தீராத வெறுப்புக்குடையவனை
தனக்கு மிகவும், பிடித்தவனாக ஆக்கிக் கொள்கிறாள்...
அவனை கொன்றால் என்ன என்று கோப பட்ட
மனது,இன்று தனது தனிமையை போக்குபவன் அவன் மட்டுமே
என்று உணர்ந்து கொள்கிறது...


அவளின் நிறைவேறிய எதிர்பார்ப்புகள்....இன்று...
அவள் செய்த தப்புக்களோடு ,அவளின் குறைகளோடு...
அவளையே உயிராக காதலிக்கின்றான்,
அவளையே சுற்றி சுற்றி வருகிறான்,
அவளிடம் தன் சுயத்தை இழந்து
அவளுக்காகவே வாழ்கிறான்...


தனது இனிய நல்வாழ்க்கையை தானாகவே செப்பனிட்டுக்
கொண்ட சங்கீத ஜாதி முல்லை....மலர்ந்து
மணம் வீசும் நாட்களுக்காக ஆவலுடன்.....


வாழ்த்துகள் மல்லி....
 

sindu

Well-Known Member
hi friend MM,
மாயமெல்லாம் நானறியேன்
உன் விந்தையும் நானறியேன்
நேற்று வெறுத்தவனை
இன்று விருந்தாக்கினாய்
உன் சிந்தையின் வடிவால்
உன் மந்திர கோலால்
என் விருப்பமாக்கினாய்
மலராத முல்லையை
மலர செய்தாய்
காயப்பட்ட மனதை
காதல் கானம்
பாடவைத்தாய்
உன்னை என்றும்
என் மனம் நாட வைத்துவிட்டாய் MM
Yes Sangeetha mullai malarnthu manam veesa aarambithu vittathu....
 

malar02

Well-Known Member
hi friend MM,
இருவரின் கோடுகள்
நேற்று நீ உனகிட்ட
கோடுகள்
தாண்டவிடவில்லை
உன்னை
இன்று நீ உனகிட்ட
கோடுகள்
உன்னை வழி
நடத்தும் பாதையாய்
கோடுகளும் பாலமாகும்
இருவர்
ஒருவராக்கும் போது

 

Lakshmi sivakumar

Well-Known Member
அந்த அழகான வர்ஷை பூப் போல பாதுகாக்க போகிறவன் ஈஷ்வர் மட்டுமே. அவனை பிடிக்காமல் இருக்குமா.வர்ஷை ஈஷ்வரை விட கொஞ்சம் அதிகம் பிடிக்கும். காரணம் ஈஷ்வர் முறையாக வளர்ந்தவன்.வர்ஷ் தானே வளர்ந்தவள்.தன்னை தானே செதுக்கி கொண்ட சிற்பி. தப்பே செய்தாலும் தன்னுடைய சுய அலசலால் அவளை அவனுக்கு தெரிய வைத்து பார்க்கப் போனால் அவளும் மீண்டு அவனையும் வாழ வைத்திருக்கிறாள்.
 
Last edited:

sindu

Well-Known Member
மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் இருவரை பற்றி இரண்டு முறையும் கதையை துல்லியமாய் MM பார்வையில் புரிந்து கொண்டுள்ளீர்கள்....... எஸ்

நான் என்பதை துலைத்தவரிடம் தான் காதல் முழுமையான பங்குவகிக்கும் தன் முழுப்பரிணாமத்தை காண்பிக்கும்....... இல்லாவிட்டால் அது இருக்கும் ஒரு ஓரமாய் தன் காதலுக்கு துன்பம்வந்தால் பக்கத்தில் நிற்கும் அந்த நேரம்....
இன்பம்வந்தால் மகிழும் அந்த நேரம்.....
சிக்கல் வந்தால் தீர்க்கவும் உதவிடும் அந்த நேரம்.......
இப்படியாக மட்டுமே பங்குவகிக்கும்.....
நான் என்பது தன் காதல் முன் அழியுமானால் அங்கு இடையிராத அமைதி மட்டுமே எல்லாம் சமர்ப்பனமே....... பேசாவிட்டாலும் புரியும்....... சொல்லாவிட்டாலும் அறியும் .......இல்லாவிட்டாலும் காதல் இருப்பது போலவே இருக்கும்


இங்கும் நிகழ்ந்துவிட்டது என்றே நினைக்கிறேன்........
அவர்கள் தனியாக பயணம் போனாலும் ஒருவராகி இருக்கிறார்கள் மனத்தால்......
அதனால் காத்திருப்பு என்பது இயல்பான ஒன்றாகி போனது
எனக்கு நானும் வேண்டாம் நீயே சகலமும் என்று நினைக்க வைத்தது சொல்லவும் வைக்கிறது....... சொல்லாமலே புரியும் நிலைக்கு போவார்கள்.....
இனியென்ன புற வாழ்வு தானே அதுவும் தன்னில் தன்னை காண........

நான் என்பது தன் காதல் முன் அழியுமானால் அங்கு இடையிராத அமைதி மட்டுமே எல்லாம் சமர்ப்பனமே....... பேசாவிட்டாலும் புரியும்....... சொல்லாவிட்டாலும் அறியும் .......இல்லாவிட்டாலும் காதல் இருப்பது போலவே இருக்கும்

Superb
Miga miga azhgana varigal
 

Lakshmi sivakumar

Well-Known Member
சூப்பர் லக்ஷ்மி...
உங்க கருத்துரை பார்த்து மிக்க மகிழ்ச்சி எனக்கு...உங்களுக்கு வர்ஷி ரொம்ப பிடிக்குமே...நீங்க ஈஸ்வர் சைடு கருத்து சொல்வது...மிகச் சிறப்பு...
நன்றி லக்ஷ்மி....:)
எஸ் தல போல துணைவன் ...வருமா..
மணி உங்களுக்கு தான் மேலே reply செய்தேன்.ஆனா சரியா post ஆகலை.மிக்க நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top