E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
முதியவர் ஒரு ஹோட்டலுக்கு
சாப்பிட சென்றார். வெயிலில் வந்த
களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது.
அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து
சர்வரை அழைத்து கேட்டார் " தம்பி
இங்கு சாப்பாடு என்ன விலை"
அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்.
பெரியவர் தனது சட்டை பைக்குள் கை
விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்
"
தம்பி அதற்கும் சற்று குறைவாக
சாப்பாடு கிடைக்காதா.."?
சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க
வந்து எங்க உயிர எடுக்கிறிங்க. இதை
விட மலிவான ஹோட்டல்
எவ்வளவோ இருக்கு அங்க போய்
தொலைங்கயா" என்றான்.
பெரியவர் சொன்னார் "தம்பி
தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்
வெளியே வெயில் வேறு அதிகமா
இருக்கு. நான் இனி வேறு
ஹோட்டலுக்கு செல்வது சற்று
சிரமம்."
சர்வர் "சரி..சரி எவ்வோ பணம்
குறைவா வச்சுயிருக்க?" என்று
கேட்டான்.
பெரியவர் "என்னிடம் 45 ரூபாய் தான்
இருக்கிறது." என்றார்.
சர்வர் "சரி.தருகிறேன். ஆனால்
உனக்கு தயிர் இல்லை சரியா?"
என்றான்.
பெரியவர் 'சரி' என சம்மதித்தார்.
சர்வர் சாப்பாடு கொடுத்தான்.
பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த
சர்வரிடம் 50 ரூபாய் கொடுத்தார்.
சர்வர் மேலும் கோபம் ஆனான்.
"
யோவ் இந்தாதானேயா 50 ரூபாய்
வச்சுயிருக்க. 45 ரூபாய் தான்
இருக்கு'னு சொன்ன..? ஓ..
வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5
ரூபாய் தேவைப்படுதா..? இந்தா..மீதி
5
ரூபாய்." என்று மீதியை
கொடுத்தான்.
பெரியவர் சொன்னார் "வேண்டாம்
தம்பி அது உனக்குத் தான். உனக்கு
கொடுக்க என்னிடம் வேறு பணம்
இல்லை."
சொல்லிவிட்டு வெயிலில் நடந்து
சென்றார்.
சர்வருக்கு கண்களில் நீர் ததும்பியது.
அன்பு நண்பர்களே...
யார் எந்த சூழ்நிலையில் எப்படி
இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது.
யாரையும் ஏளனமாக பார்ப்பதும்
பேசுவதும் தவறு..!!

S

semao

Guest
:D
நான் ரசித்த கமெண்ட்ஸ் :- யானைக்கு கரும்பு தோட்டம் தேவை,எறும்புக்கு கரும்பு சக்கையே தேவை. கரும்பு தோட்டம் கிடைக்கும் போது யானையா இரு.சக்கை கிடைக்கும் போது எறும்பா இரு. வாழ்கையில் திருப்தியில்லை என்ற பேச்சிக்கே இடமில்லை.
super anna

நான் ரசித்த கமெண்ட்ஸ் :-
தோசைக்கும் ஒரு கரண்டி மாவு இட்லிக்கும் ஒரு கரண்டி மாவு ஆனா தோசை
40ரூ இட்லி 10ரூ ஏன்னா இட்லி குறுகலானது. தோசை பெரியது. மனசை பெரியதா வைத்த மதிப்பும் கூட.
correcta sonninga

மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன் : ஒண்ணுமில்ல!
மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!
Ha ha ha:D
 
murugesanlaxmi

Well-Known Member
கதை எழுதுவோருக்கும்,கதை எழுத ஆசை படுவோருக்கும் மிக பெரிய எழுத்தாளர் சுஜாதாவின் 1௦ கட்டளை.
பணப்பெட்டியில் ஒரு காதை வைத்துக்கொண்டுஎழுதாதீர்கள்.காசு குலுக்கும் சப்தம் உங்கள் உரைநடையின் சத்ததை மறைந்துவிடும்
உங்கள் வாசகனை வெறுக்காதீர்கள், சில சமயம் அவன் உமக்கு வழி காட்டலாம்.
வாசகனை உங்களுக்கே புரியாத பெரிய வார்த்தைகளால் குழப்பாதீர்கள்
மற்றவன் வெற்றிக்கு ஆசைப்படாதீர்கள்,அவன் நடையையோ கருத்துக்களையோ பாத்திரப்படைப்பையோ ராயல்டியையோ எதையும் விரும்பாதீர்.
உம் மொழிக்கு மரியாதை கொடுத்து உண்மையாக எழுதுங்கள். உங்கள் வார்த்தைகளை ஒரு தேர்ந்த தச்சன்போல் இணைக்கப்பழகுங்கள்.
புகழை துரத்தாதீர்கள். புகழ் உங்களை தேடி வரவேண்டும். பேராசை இல்லாதவர்களை புகழ் மெல்லத்தான்தேடி வரும், ஆனால் நீண்ட நாள் உடன் வசிக்கும்.
உங்களுக்கு முன் எழுதிய பெரிய எழுத்தாளர்களை வெறுக்காதீர்கள் அவர்களை கண்மூடித்தனமாக உபாசிக்கவும் வேண்டாம்.
இலக்கியத்தை காப்பாற்ற வந்த அவதார புருஷராக நடிக்காதீர்கள்.திறமையின் விதைகள் கடல்மணல்போல பல்லாயிரம் வகையில் மலர்ந்து காளான்களைக் காட்டிக்கொடுத்துவிடும்.
உங்களை சுற்றியுள்ள வாழ்க்கையைப் புறக்கணிக்காதீர்கள் அதில்தான் உங்கள் எழுத்தின் ஊற்று இருக்கிறது.
ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழுதுங்கள். அதன் தரத்திலிருந்து மக்கள் உம்மை அறிந்து கொள்வார்கள்
 
fathima.ar

Thought provoking words from Sujatha sir..
Thanks for sharing bro
 
fathima.ar

Well-Known Member
மழையின் பொருள் கொண்ட
பெயர் போதும் என்று
நினைத்தானோ
இறைவன்..

அன்பு மழை பொழியும்
அன்னை இல்லை

பாச மழை பொழியும்
தந்தை இல்லை..

நேசிக்க தெரிந்தவன்
அதை உணர்த்த மறந்தான்...

வரண்ட நிலத்தில்
மழை பொழியும் ஒலியே
இசையாகும்..
அப்போது ஏற்படும் மனமே
சுகந்தமாகும்...

அன்பு கண்டிறிதா
இதயத்தில்
காதல் மழை பொழியாமல்

மலர்ந்து மணம் வீசுமா
சங்கீத ஜாதி முல்லை...
 
Last edited:

rathippria

Well-Known Member
மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன் : ஒண்ணுமில்ல!
மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!
Hahahaha enjoyed this joke bro:p
 
rathippria

Well-Known Member
மழையின் பொருள் கொண்ட
பெயர் போதும் என்று
நினைத்தானோ
இறைவன்..

அன்பு மழை பொழியும்
அன்னை இல்லை

பாச மழை பொழியும்
தந்தை இல்லை..

நேசிக்க தெரிந்தவன்
அதை உணர்த்த மறந்தவன்...

வரண்ட நிலத்தில்
மழை பொழியும் ஒலியே
இசையாகும்..
அப்போது ஏற்படும் மனமே
சுகந்தமாகும்...

அன்பு கண்டிரிதா
இதயத்தில்
காதல் மழை பொழியாமல்

மலர்ந்து மனம் வீசுமா
சங்கீத ஜாதி முல்லை...
Wow semma da darlu;)
 
rathippria

Well-Known Member
Hi MM mam unga novels ellam supera iruku veelvenendru ninaithayo novel karthiku piragu romba attract pana hero SJM novel vishveswaranthan. Intha novel thirumba thirumba padika thonuthu. Novelthan mindla oditae iruku. Romba disturb aguraen but sweet disturb. I like very much the story. Episode 76 epa varum? Eagerly I am waiting. ....
My all time fav is Karthik​
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top