மாலை சூடும் வேளை -31

Advertisement

laxmidevi

Active Member
மாலை-31

பாடல் வரிகள்.

கட்டிக் கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
ஏன் என்று கேட்க ஆள் இல்லை...

மங்கையும் அவளுடைய அம்மா மகாலட்சுமியும் கிழே அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கு விக்ரமிற்கு தூக்கமோ வருவேனா என்று முரண்டு பிடித்தது. வீடு முழுவதும் ஆட்கள் நிறைந்திருப்பதால் தன் மனைவியையே சந்திக்கவே முடியவில்லை .எப்படியாவது அவளை தனியே பார்க்க வேண்டும் என்று விரும்பினான்.

சரி என்று அவளுடைய அறைக்கே வந்தான் விக்ரம்.அங்கே தன் மனைவி அவளுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவர்கள் வெளியில் வந்ததும் பேசலாம் என்று காத்துக் கொண்டிருந்தான்.

மங்கையிடம் பேசிக்கொண்டிருந்த மகாலட்சுமி சரி நேரமாகிவிட்டது புள்ளதாச்சி ரொம்ப நேரம் விழித்திருக்கக் கூடாது நீ படுத்து தூங்கு.நான் வரேன்.

நீயும் இங்கேயே படுத்துக்க என்றாள் மங்கை .


அப்புறம் மருமகன் எங்க தூங்குவார் . நான் போய் அப்பா கூடவே படுத்துக்கிறன் என்று சொல்லிவிட்டு தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றுவிட்டார் மகாலட்சுமி.

சரியாக அவர் மங்கையின் அறையில் இருந்து தங்கள் அறைக்கு செல்லும் நேரம் விக்ரமிற்கு போன் வந்தது.

அவன் போன் பேசுவதற்காக தோட்டத்திற்கு சென்று விட்டான் திரும்பி வந்தவன் ஹாலில் காத்துக் கொண்டிருந்தான்.ஒரு வேளைய தூங்கி விட்டார்களோ என்று எண்ணியவாறு ஹாலில் அமர்ந்து இருந்தான்.விக்ரமிற்கு தன் நிலையை நினைத்தால் சிரிப்பு வந்தது. தன் வீட்டிலேயே தன் மனைவியை காண்பதற்கு திருட்டுத்தனமாக காத்திருக்க வேண்டியிருக்கிறது.ஏதோ காலேஜ் பசங்க லவ்வர பார்க்க மாதிரி.. பரவாயில்லை இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.இது மட்டும் விஜய்க்கு கார்த்திக்கும் தெரிந்தது ரொம்ப கலாய்ப்பார்கள் என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்

திரும்பவும் தங்கள் அறைக்கு செல்ல அவனுக்கு விருப்பமில்லை .எப்படி இருந்தாலும் மனைவி தன் அருகில் இருக்கிறாள் என்று நினைப்பே அவனுக்கு நிம்மதியாக இருந்தது. இப்போது அவளில்லாத அறைக்கு செல்லவே வெறுப்பாக இருந்தது விக்ரமிற்கு. ஹாலில் இருந்த சோஃபாவிலேயே படுத்துக்கொண்டான். கண்கள் கூச விளக்குகளையும் அணைத்து விட்டான்.

மங்கை நன்றாக தூங்கிக் கொண்டிருந்த வேளையில் விக்ரமின் தோளில் சாய்ந்து மங்கை பீச் மணலில் நடந்து கொண்டிருக்கும் போது குதிரையில் வந்த சாரு விக்ரமை தூக்கிக் கொண்டு குதிரையில் மின்னலென மறந்து விட்டது போல் கனவு வந்தது. மங்கைக்கு அந்த ஏசி அறையிலும் வியர்த்துவிட்டது.பின் அவளுக்கு உறக்கம் வருவேனா என்று ஆட்டம் காண்பித்தது.சரி பூஜையறைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்து தூங்கலாம் என்று அறையை விட்டு வெளியே வந்தவள். ஹால் முழுவதும் ஒரே இருட்டாக இருக்கவே மேலும் பயந்து விட்டால். தூக்கம் வராமல் விழித்துக் கொண்டு இருந்த விக்ரம் தன் மனைவி கதவை திறந்து வெளியில் வந்த உடனே பார்த்து விட்டான் .


யாரோ தன் பின்னால் கை வைக்க அம்மா என்று கத்திவிட்டாள் மங்கை.

மங்கை ஏன் கத்துற? நான் தான் என்று அவளின் இதழினை தன் கரம் கொண்டு அழுத்தி பின்னிருந்து அணைத்து அவளின் கழுத்தில் தன் முகம் புதைத்தான். விக்ரமின் விரல்களோ தன் மனைவியின் வெற்றிடையில் கோலமிட்டன.

கணவனின் அருகாமை மங்கையை வேறு உலகிற்கு இழுத்து சென்றது. நீங்க இங்க என்ன செய்றீங்க என்றால் .

அதுவா சும்மா தான் தூக்கம் வரல இங்க உட்கார்ந்து இருந்தேன் என்றவன் தன் மனைவியின் முகத்தினை பார்த்து உன் முகம் ஏன் இப்படி இருக்கு என்று கேட்டான் விக்ரம்.

தூக்கம் வராமல் இருந்தது .அதனால் சாமி கும்பிட்டு விட்டு வரலாம் என்று வெளியில் வந்தேன் .

சரி அத்தை எங்க நீ மட்டும் ஏன் தனியாக வந்த?

அம்மா அவர்கள் அறைக்கு சென்று சென்று விட்டார்கள்.

நீ மட்டும் தனியாக இருக்கே ?

இல்ல அம்மா நீங்க வருவீங்கனு அவங்க ரூமுக்கு போய் விட்டார் .

சரி வா சாமி கும்பிட்டுவிட்டு
வந்துவிடலாம் என்று அவளை கூட்டிக்கொண்டு சாமி கும்பிட்டுவிட்டு திருநீறு பூசிவிட்டு தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்தான். இன்னமும் அவள் முகத்தில் இருந்த பயம் விலகவில்லை.

என்னமா என்ன ஆச்சு என்று கேட்டான் விக்ரம்.

ஒன்றும் இல்லை என்ற பதில் சொன்னாலும் அவள் முகத்தில் இருந்த பயமும் குழப்பமும் ஏதோ சரியில்லை என்று உணர்த்தியது விக்ரமிற்கு.

அவளுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து விட்டு சரிமா நான் பக்கத்திலேயே இருக்கிறேன். எதை நினைத்தும் மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளாதே நிம்மதியாக தூங்கு என்றான் .தானும் அவளுடன் அருகில் படுத்துக்கொண்டு அவளை அணைத்தவாறு உறங்கிவிட்டான்.


மங்கையும் தன் கணவனின் அருகாமை தந்த பாதுகாப்பில் நிம்மதியாக தூங்கி விட்டாள்.

மகாலட்சுமி மட்டும் மங்கையை கவனித்துக் கொள்வதற்காக இருந்தார்.மற்ற அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர் .வீடு மறுபடியும் பழைய நிலைமைக்கு திரும்பியது .

விக்ரம் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு தன் மனைவியின் அறையிலேயே அவளுடன் படுத்து கொண்டான்.

மகாலட்சுமியும் பத்து நாட்களுக்கு பின் மதுரைக்கு சென்று விட்டார்.

விக்ரம்தான் மங்கையை செக்கப்பிற்க்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவான் .சரியாக மருந்து மாத்திரைகளை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று அவரிடம் மிரட்டி கூறியிருந்தான்.


விக்ரமும் கிட்டத்தட்ட அந்த கொலை சம்பந்தமாக அனைவரையும் பிடித்து விட்டான் ஆனால் கொலைக்கான காரணம் அது மட்டும் என்னவென்று தெரியவில்லை .அவர்கள் கூறிய காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை அது என்னவென்று அதன் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் அவன் .நாட்கள் அதன் போக்கில் சென்றது.



கிஷோர் தன் தங்கை திருமணம் முடிந்தவுடன் தன் சித்தியை அழைத்துக்கொண்டு வந்து சாருவின் இல்லத்தில் பெண் கேட்டான். ஆனால் அவர்கள் பாட்டியும் கண்டிப்பாக முடியாது என்று கூறிவிட்டார். காலம் முழுவதும் சாரு திருமணமே ஆகாமல் இருந்தாலும் பரவாயில்லை. உனக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார் .சாரு எவ்வளவு கெஞ்சியும் யாரும் பாட்டியிடம் பேசவில்லை.

நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டால் சாரோ ஆனால் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது கண்டிப்பாக கிஷோருடன் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.


விக்ரமுக்கும் மனதிற்கு மிகவும் கவலையாக இருந்தது தன் தோழியின் வாழ்க்கைக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று. விக்ரமின் அப்பா முரளிதரன் கூட சாருவின் அப்பாவுடன் பேசி பார்த்துவிட்டார் ஆனால் பயனில்லை.

சாரு ஒருநாள் மங்கையை பார்ப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்.மங்க்கைகு ஒரு புறம் அவஸ்தையாக இருந்தது. சாருவின் வாழ்க்கையைத்தான் தான் பறித்து கொண்டமோ என்ற குற்ற உணர்ச்சி இருந்தது.

தயக்கமாக சாரு விடம் திருமணம் பற்றி விசாரித்தாள்.

அதற்கு சாரு அதை பற்றி பேச வேண்டாம் மா. நடப்பது நடக்கட்டும் என்றால்.

இதைக் கேட்ட மங்கையின் முகம் வருத்தத்தை பிரதிபலித்தது.

சாரு மங்கையிடம் என்னை பற்றி கவலைப்படாதே கண்டிப்பாக நான் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வேன்.ஆனால் அதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும். இனி உன்னையும் உன் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக்கொள் சரியா என்று கூறி சிரித்தாள்.

சாரு எப்படியும் தன் பெற்றோர்கள் தன் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நினைத்து சொல்ல இவளோ விக்ரமை மறந்துவிட்டு நான் இன்னொரு வாழ்வு அமைத்துக் கொள்வேன் என்று கூறுவதாக நினைத்துக் கொண்டாள்.


மங்கைக்கு ஐந்தாம் மாதம் முடிந்து ஆறாம் மாதம் தொடங்கியது .ஸ்கேன் செய்து பார்த்ததில் இரண்டு குழந்தைகளும் முழு ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பதாக தெரியவந்தது. மங்கை மிகவும் மகிழ்ச்சியாக விக்ரமுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

தன் மணி வயிற்றில் தன் இரட்டை குழந்தைகளின் அசைவு தெரியவே முதலில் மங்கை பயந்து போனாள். பின்புதான் டாக்டர் சொன்னது நினைவு வந்தது .முதலில் இதைப் பற்றி தன் கணவனிடம் சொல்ல வேண்டும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தாள்.

தற்போதெல்லாம் நேரத்திற்கு வந்து விடும் விக்ரம் அன்று நேரமாகியும் வரவில்லை. இருந்தாலும் பரவாயில்லை என்று தூக்கத்தை முயன்ற அளவு கட்டுப்படுத்திக் கொண்டு அவனுக்காக காத்திருந்தால் அவன் மனைவி. விக்ரம் 11. 30 போல வீட்டுக்கு வந்தவன் பிரஸ் ஆகிவிட்டு தன் மனைவியை காண வந்தான்.

அவனின் களைத்த முகம் பார்த்து என்னங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க.ரொம்ப அலைச்சலா என்றாள் கரிசனையாக.ஆமாம்மா கொஞ்சம் வேலை ஜாஸ்தி என்றான் விக்ரம்.

உங்களிடம் ஒன்று என்று மங்கை ஆரம்பிக்கும்போதே அவனுடைய போன் சினுங்கியது.


அந்தப்பக்கம் என்ன செய்தி வந்தததோ நான் கிளம்ப வேண்டும் . நீ அம்மாவுடன் தூங்குகிறாயா என்று கேட்டான்.


பரவாயில்லை அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் .நான் இங்கேயே படுத்து கொள்கிறேன் என்று சொன்னாள்.உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று அவனை நிறுத்தினாள்.

எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம் மங்கை கொஞ்சம் அவசரம் என்று கூறிவிட்டு அவளின் பதிலுக்கு காத்திராமல் வேகமாக வெளியே கிளம்பி விட்டான்.

என்ன விஷயம் இவ்வளவு அவசரமாக செல்கிறார் என்று மனதில் யோசித்துக் கொண்டிருந்தாள். வரட்டும் வந்ததும் அவரிடம் பேசலாம் என்று அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தாள். பின் தூக்கம் கண்களை சுழற்றவே சோபாவிலேயே தூங்கிப் போனாள். ஹாலில் யாரோ நடமாடும் அரவம் கேட்டு கண் விழித்து பார்த்தால் மங்கை.

விக்ரம் சாருவை அவர்னுடன் சேர்த்து அணைத்தவாறே வீட்டினுள் கூட்டிக்கொண்டு வந்தான்.

என்னாச்சுங்க என்ன என்று பதற்றமாக கேட்டால் விக்ரமிடம்

என்ன ஆச்சு..பார்ட்டிக்கு சென்று விட்டு குடித்திருக்கிறாள் போல மயங்கி விட்டாள் என்று பதில் கூறினார்.

என்னது குடித்து இருக்காங்களா என்று கேட்டால்.அந்த குரலில் ஒரு வித வெறுப்பு இருந்தது.

என்னங்க சாரு கூட குடிப்பாங்களா ?


மங்கை ஒருத்தரை பற்றி தெரியாமல் நாம் எதுவும் சொல்லக்கூடாது.எல்லாம் அவளுடைய காதல் பிரச்சனை. அதனைத் தாங்க முடியாமல் இருந்திருக்கிறாள். கூட இருந்த இரண்டு பிசாசுகள் ஏதேதோ சொல்லிக் குடிக்க வைத்திருக்கிறார்கள்.
சாருவிற்கு குடிப்பவர்களை கண்டாலே பிடிக்காது. அவளே குடித்திருக்கிறாள் என்றால் பிரச்சனையையும் பெரிது. காலையில் எழுந்தவுடன் விசாரிக்க வேண்டும் .சரி நீ போய் தூங்கு இந்த விஷயம் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தெரியக்கூடாது நான் சாருவை நம்முடைய அறையில் தூங்க வைக்கிறேன்.

விக்ரம் சாருவை தங்களுடைய அறைக்கு கூட்டி செல்கிறேன் என்ற போது மங்கையின் மனதில் பெரிதாக ஒரு வலித்தது.என்னதான் இருந்தாலும் இப்பொழுது மனைவி வந்து விட்ட பின் ஒரு பெண்ணை தங்களுடைய படுக்கை அறைக்கு கணவன் அழைத்து செல்வது மங்கைக்கு விருப்பம் இல்லை . இருந்தாலும் கணவனை ஏதும் கூறாமல் அமைதியாக தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள். ஒரு வேளை அன்று தான் கண்ட கனவு பலித்து விடுமோ என்று அஞ்சினாள். எவ்வளவு ஆசையாக தன் கணவனுக்கு காத்திருந்தாள். கடைசியில் இப்படி முடிந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டாள் மங்கை.அவளின் மனதில் அலையடித்துக் கொண்டு இருந்தது.

எனக்கு என்னுடைய பொருள் கைக்கு வந்தாக வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் . அந்த விக்ரமா நானா என்று பார்த்துவிடலாம் என்று சூளுரைத்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

வரப்போகும் ஆபத்தை பற்றி அறியாமல் தன் கணவனைப் பற்றி மங்கையும் சாருவைப் பற்றி விக்ரமும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

மாலை தொடுக்கப்படும்....

வணக்கம் நண்பர்களே
படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ..

அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top