மாலை சூடும் வேளை -30

Advertisement

laxmidevi

Active Member
மாலை-30

பாடல் வரிகள்

ஒரு கோடி புள்ளி வச்ச
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிட்டுது காலம் காலம்
இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்துவந்து உனக்காகக் காத்திருப்பேன்...
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனும்னா
பொறக்காமல் போயிடுவேன்....


பெங்களூர்

கனி புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த ஷாப்பிங் காம்ப்ளக்சில் உள்ளே இன்டீரியர் டெக்ரேஷனை பற்றி தன்னுடன் இருந்தவர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளுடைய போன் அழைக்கவே எடுத்து பார்த்தாள். சுந்தரின் அன்னை பத்மா தான் அழைத்திருந்தார் .

முகமலர்ச்சியுடன் சொல்லுங்கள் அத்தை என்ன விஷயம் இந்நேரம் போன் செய்து இருக்குறீர்கள் என்று கேட்டால் கனி

எல்லாம் நல்ல விஷயம்தான் இப்போது தான் ஜோசியரை பார்த்துவிட்டு வந்தேன். சுந்தருக்கு குரு யோகம் வந்து விட்டதால் இனிமேல் திருமணம் செய்யலாம் என்று கூறியிருக்கிறார் .அவனிடம் கூட இன்னும் கூறவில்லை உனக்கு தான் முதலில் போன் செய்து கூறுகிறேன் என்று கூறினார்.

சந்தோசமாக சரிங்கத்தை என்றால் கனி.

அப்புறம் இன்னொரு விஷயம் திருமணத்திற்குப் பின் சம்பூவை ஊட்டியில் உள்ள போர்டிங் ஸ்கூலில் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்து இருக்கிறேன் என்றார் பத்மா.

கனிமொழி பதில் ஏதும் கூறாமல் இருகாகவும் என்னம்மா யோசிக்கிறாய் நான் எல்லாவற்றையும் யோசித்து தான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன். நீ வேறு எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் கல்யாணத்திற்கு தேவையான பொருட்களை தம்பியை கூட்டிக்கொண்டு போய் வாங்கு.என்ன சரிதானா என்று அவரே பேசிவிட்டு போனை வைத்துவிட்டார் பத்மா.

கனிமொழிக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை அதிர்ச்சியில்.

சுந்தருக்கு அழைத்து அவன் தாயார் கூறிய விஷயங்களை கூறினாள் கனி.

சுந்தரோ இந்த அம்மா ஏன் புதிதாக பிரச்சனையை கிளப்புகிறார்கள் என்று அவளிடமே கேட்டான்.

தெரியவில்லை சுந்தர் .

நீ வீட்டில் சம்முவை பற்றிய எல்லா விஷயங்களையும் கூறினாயா ?


எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் அப்பொழுது அம்மா எதுவும் கூறவில்லை. இப்போது என்ன திடீரென்று என்று எனக்கு தெரியவில்லை சரி நான் அவர்களிடம் பேசுகிறேன் என்று கூறினான் சுந்தர்.


சுந்தர் கொஞ்சம் பொறுமையாகப் பேசி விஷயத்தை அவர்களுக்கு புரியவை. நீயும் கோபமாக பேசி பிரச்சனையை பெரிதாக்காதே என்றாள் கனிமொழி.

சரி இப்போது ஆபிசில் இருக்கிறேன் வீட்டிற்கு சென்று அம்மாவிடம் பேசுகிறேன் என்றான் சுந்தர்.

சுந்தர் அலுவலகம் முடிந்து வந்தவுடன் தன் அன்னைக்கு அழைத்துப் பேசினான். எதுக்காக சம்முவை கொண்டுபோய் ஹாஸ்டல்ல சேர்க்கனும் சொன்னீங்க?

சுந்தர் உனக்கு ஒரு சில விஷயங்கள் எல்லாம் புரியாது நான் சொல்றத கேளுங்க என்றார் பத்மா கண்டிப்பாக.

என்னாச்சும்மா என்னன்னு சொன்னால் தானே தெரியும் என்றான் சுந்தர்.


இல்லடா இங்க உங்க அத்தை அதான் உன் அப்பாவோட தங்கை என்ன சொல்றாங்க தெரியுமா சம்பூர்ணா உனக்கு கனிக்கும் பொறந்த புள்ளதான் அதான் நாங்க இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தோம்னு சொல்றாங்க.எனக்கு எப்படி இருக்கும் சொல்லு தேவையில்லாம என் பையனும் என் மருமகளும் ஏன் அடுத்தவங்க கிட்ட கெட்ட பேர் வாங்கணும். அதனாலதான் சொல்றேன் சம்முவை கொண்டுபோய் ஹாஸ்டல்ல சேர்க்கனும்.

அம்மா அடுத்தவன் சொல்றாங்கனு பார்த்த நம்ம சந்தோஷமாக வாழ முடியாது.

நாளைக்கு உனக்குகுழந்தை பிறந்ததுக்கு அப்புறம் சொந்தக்காரங்க உன்னோட குழந்தைக்கும் சம்முவுக்கும் வித்தியாசம் காட்டினால் என்ன செய்றது அதனாலதான் சொல்றேன் இப்ப இருந்தே அவளுக்கு அதை புரிய வெச்சுட்டா . அவளும் மனசளவுல ஏத்துக்க பழகிடுவா.

ஏன் நம்ம எல்லாத்துக்கும் உண்மையைசொல்லனும் சம்மு கனியுடைய குழந்தையாக இருக்கட்டும் கணியின் குழந்தை என்னுடைய குழந்தையாகவே வளரட்டும். சம்முவை பற்றிய விஷயம் நமக்கு மட்டும் தெரிந்தால் போதும் . இதை எல்லோரிடமும் சொல்லணும்னு அவசியம் இல்லைம்மா.

சுந்தர் என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா? யாரோ ஒருத்தரோட குழந்தையை எப்படி நம் வீட்டு முதல் வரிசா ஏத்துக்க முடியும் சொல்லு ?உனக்கு கனியை பிடிச்சிருக்கு .அதனால நான் எந்த கேள்வியும் கேட்காமல் கல்யாணத்துக்கு ஒத்துக் கிட்டேன்.எனக்காக நீங்க இது கூட செய்யக்கூடாதா என்றார் சுந்தரின் அம்மா.

நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க என்றான்

சரி இப்ப இத பத்தி பேச வேணாம் நீ கொஞ்சம் யோசிச்சு பாரு நானும் கொஞ்சம் யோசிக்கிறேன் பிறகு இதைப் பற்றி பேசலாம் என்று போனை வைத்துவிட்டார் பத்மா.

பின் சுந்தர் தன் மாமா ராமநாதனுக்கு அழைத்து பேசினான்.

அம்மாவிடம் இதை எதிர் பார்க்கலை மாமா என்றான் ஆற்றாமையில்.

சரி சுந்தர் இப்பொழுது பத்மாவை மறுத்து எதுவும் பேச வேணாம் ஒருவேளை நாம் அவ்வாறு பேசினால் பத்மாவின் பிடிவாதம் அதிகமாகும். எப்படியும் இங்கு மதுரைக்கு தான் கல்யாண தேதி குறிக்க வருவார்கள். அப்படி வரும்போது சமயம் பார்த்து நான் அவரிடம் இதுபற்றி பேசி அவர்களின் முடிவு என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு என்ன செய்வது என்று பார்க்கலாம். நீ எதுவும் கவலைப் படாதே கனியும் கவலைப்படாமல் இருக்க சொல்லு.எதுவாகினும் மாமன் நானிருக்கிறேன் . பார்த்துக் கொள்ளலாம் என்று அவனுக்கு தைரியம் சொல்லி போனை வைத்த ராமநாதன்.

இருந்தாலும் பத்மா சம்முவை உடன் வைத்துக்கொள்வதற்கு ஒத்துக் கொள்வாளா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது

சுந்தர் கனியும் அம்முவையும் பார்ப்பதற்காக அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தான்.

சுந்தர் வந்தவுடன் கதவை திறந்து விட்டு எதுவும் பேசாமல் சோபாவில் போய் அமர்ந்தாள் கனி.

அவள் அருகில் அமர்ந்தான் சுந்தர்.

அம்மு எங்கே என்று கேட்டான் சுந்தர்.

கீழே அங்கிள் கிட்ட விளையாடிட்டு இருக்கா என்றாள் கனிமொழி.





பார்த்தியா கனி இங்க அவ்வளவு சொத்து இருக்கு ஆனா .ஆங்கிள் அவங்க பையனும் மருமகளும் அமெரிக்காவில் தான் இருப்பேன் சொல்லி விட்டு வெந்ததும் வேகாததும் சாப்பிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் வேலை வேலைனு ஓடிட்டு இருக்காங்க .இங்கு இவங்க சொத்தை பாதுகாக்க முடியாமலும் பேரப்பிள்ளைகளின் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கிட்டு இருக்காங்க என்ன கொடுமை பார்த்தியா .
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இல்லை என்றான் விரக்தியாக பேசினான்.
நீ சொல்வது சரிதான். அவர்கள் பிரச்சினையை விடு அத்தை உன்னிடம் என்ன கூறினார்கள் என்று கேட்டாள் கனி.

அன்னை தன்னிடம் கூறியதை பற்றி அவளிடம் கூறினான் சுந்தர்
எதிர்பார்த்தேன் இப்படி எல்லாம் பிரச்சினைகள் வரலாம் என்று மட்டும் கூறினால் கணி .

நீயும் சம்முவும் எனக்கு இரு கண்கள் போன்றவர்கள். இரண்டில் ஒன்றுதான் வேண்டும் என்றால் நான் என்ன செய்வது என்றாள் கனி சுந்தரிடம் கவலையாக.

உனக்கு நானும் சம்முவும் இரண்டு கண்கள் என்றால் எனக்கு நீயும் அம்முவும்(சம்முவின் செல்ல பெயர்) உடலும் உயிரும் மாதிரி ஒன்றிலருந்து ஒன்று இல்லாவிட்டாலும் அதனால் பயன் இராது .எனவே எந்த சூழ்நிலையிலும் உனக்கு நான் வேண்டுமா அம்மு வேண்டுமா என்று கேட்க மாட்டேன். நீயே ஒத்துக் கொண்டாலும் சம்முவை அனுப்புவதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் . அம்மா திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள் அல்லவா அதுபோல
இதையும் அவர்களுக்கு பேசி புரியவைக்கலாம். நீ இதை எதையும் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதே .இப்போதாவது உன் அம்மா அப்பா பற்றிய விவரங்களை என்னிடம் தெரிவிக்கலாம் அல்லவா. நான் அவர்களிடம் நம் திருமணம் பற்றி பேசுகிறேன் என்றான் சுந்தர்.

சொல்கிறேன் உன்னிடம் சொல்லாமலா. முதலில் அத்தை சம்மு நம்முடன் வைத்துக்கொள்வதற்கு சம்மதிக்கட்டும். அதற்குப் பிறகு நாம் மூவரும் என் அம்மா அப்பாவிடம் போய் தன் திருமண பற்றி சொல்லிவிட்டு வரலாம் சரிதானா என்றால் கனக நம்பிக்கையாக .

ஆம் கனிமொழிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது சுந்தரின் மேல். எப்படியும் அவன் அம்மாவை சம்மதிக்க வைத்து விடுவான் என்று நம்பினாள் கனி.

அது அவ்வளவு எளிதல்ல என்பதை அறியாமல்.

மாலை தொடுக்கப்படும்....

வணக்கம் நண்பர்களே
இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.

உங்கள் தோழி
லக்ஷ்மி தேவி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top