மாலை சூடும் வேளை-18

Advertisement

laxmidevi

Active Member
மாலை-18

பாடல் வரிகள்

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்குச் சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கையாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சுதானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே..

விக்ரமின் குடும்பத்தினர் திண்டுக்கல்லுக்கு சென்று இன்றோடு இரண்டு தினங்கள் முடிவடைந்தது வீட்டின் தனிமை ,மங்கையை காணாதது தற்போது அவன் எடுத்துள்ள புதிய கேஸ் வேறு அவனுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருந்தது .எல்லாம் சேர்ந்து சோர்ந்து இருந்தான் விக்ரம். தற்போதைய மனநிலையில் மங்கையுடன் பேசினால் மனம் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று எண்ணினான்.ஆனால் அவளுக்கு அழைத்து பேச தயக்கமாக இருந்தது விக்ரமிற்கு. தன் வீடு சென்றவுடன் வந்துவிட்டேன் என்று மெசேஜ் மட்டுமே அனுப்பினாள் மங்கை.அப்படியிருக்க எப்படி போன் செய்து பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

இவனுடைய எண்ண அலைகளில் நீந்திக்கொண்டிருந்தவளோ தன் தம்பிக்கு கெமிஸ்ட்ரி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அங்கே மதுரையில்

மங்கையின் தம்பி மாதவன் அக்கா நீயும் அம்மாவும் மட்டும் ஜாலியா கலையக்கா ரிசப்சனுக்கு போயிட்டு வந்திங்க அப்பா என்ன மட்டும் நீ வீட்டில் இருந்து படி என்று சொல்லிவிட்டார் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல பக்கத்துல ரிசப்ஷனுக்கு போயிட்டு வர்றதுல்ல என்ன பிரச்சனையாம் அவருக்கு?

டேய் அப்பா பாட்டிக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க. அதனாலதான் நான் அம்மாவுடன் போனேன். அங்கே போறேன் இங்கே போறேன் சொல்லாமா ஒழுங்கா படிக்கிற வழியைப்பாரு மாது. ஒழுங்கா மார்க் வரல அவ்ளோதான். நம்ம அப்பாவை பற்றி தெரியும்தானே என்று தன் தம்பியை மிரட்டினாள் மங்கை.

இருவரும் தங்களுக்கு பேசிக்கொண்டே படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களூடைய ஒன்றுவிட்ட பெரியப்பா சிவநாதன் வந்தார் .

வாங்க பெரியப்பா என்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் மங்கை.

அப்பா எங்கடா மங்கை என்றார் சிவநாதன் .

உள்ள தான் இருக்காங்க பெரியப்பா என்று அப்பா பெரியப்பா வந்திருக்காங்க என்று தன் தந்தை ராமநாதனை அழைத்தாள்.

வாங்க அண்ணா என்று தன் அண்ணனை வரவேற்றார் ராமநாதன் .

ராமநாதா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றார் சிவநாதன்.

மங்கை மாது ரெண்டுபேரும் உங்க ரூம்ல போய் படிங்க என்றார் ராமநாதன்.

இருவரும் உள்ளே சென்று விட்டனர்.

என்னன்னா என்ன விஷயம் என்றார் ராமநாதன்.

தம்பி மங்கைக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறாயா?

ஆமாம் இப்போது சொல்லி வைப்போம்,பிறகு படிப்பு முடியவும் திருமணம் செய்யலாம் என்று இருக்கிறேன் .

நான் நீ சுந்தருக்குத்தான் பெண் கொடுப்பாய் என்று எண்ணியிருந்தேன்.

ஆமாம் அண்ணா.ஆனால் இருவரும் அண்ணன் தங்கை போல தான் பழகுகிறோம் என்று விட்டார்கள். இதற்கு மேல் அவர்களை வற்புறுத்த வேண்டாம் என்று வேறு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா.

நீ என்னிடம் வரன் பார்ப்பதை முன்பே சொல்லியிருக்கலாமே .யாரோ சொல்லித்தான் சுந்தருக்கும் மங்கைக்கும் வரன் பார்க்கும் விஷயம் எனக்கு தெரிய வந்தது என்றார் கோபமாக சிவநாதன்.

இல்லை அண்ணா இப்பொழுது சுந்தருக்கு பெண் பார்க்கும்போது சும்மாதான் சொல்லி வைத்தேன். படிப்பு முடிந்து வரன் பார்க்க ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் .

சரி அதை விடு இன்று காலை கலையின் வரவேற்புக்கு மங்கையும் மகாவும் வந்திருந்தார்கள் . அப்போது வந்திருந்தவர்களில் நமக்கு வேண்டப்பட்ட ஒருவர் மங்கையை பார்த்துவிட்டு என்னிடம் பெண் கேட்டார்கள் .நமக்கு தூரத்து சொந்தம்தான் .பையனின் அம்மா நமக்கு அக்கா முறை வரும் .நல்ல செல்வாக்கான குடும்பம் .பணத்தை விடு அது எல்லோரிடமும் தான் இருக்கிறது .ஆனால் குணத்திலும் அவர்கள் உயர்ந்தவர்களே. கண்ணை மூடிக்கொண்டு அங்கு நம்பெண்ணை கொடுக்கலாம். நான் உன்னிடம் கலந்து பேசி விட்டு செல்வதாக கூறி இருக்கிறேன் .என்ன சொல்கிறாய் ராமநாதா?

இல்லை அண்ணா படிக்கும்போதே எப்படி திருமணம் செய்ய என்று தான் யோசிக்கிறேன் .

அதுவும் சரிதான் ராமநாதா . நாளை அவர்களை என் வீட்டிற்கு அழைத்து இருக்கிறேன் நீயும் மகாவும் வாருங்கள் அவர்களை நேரில் சந்தித்து பேசு உங்களுக்கு பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசுவோம் . என்னை கேட்டால் இது நல்ல சம்பந்தம் நம்மைத் தேடி வந்த அதிர்ஷ்டத்தை வேண்டாம் என்று கூறக்கூடாது அவ்வளவுதான் . எதற்கும் மஹாவுடன் பேசிவிட்டு முடிவெடு நான் வருகிறேன் சரிதானா என்று கூறி விட்டு சிவநாதன் அங்கிருந்து கிளம்பினார்.

ராமநாதனுக்கு ஒரே யோசனையாக இருந்தது சரி நாளை சென்று அவர்களை சந்தித்துவிட்டு பிறகு என்ன செய்வது என்று முடிவு எடுக்கலாம் என்று எண்ணினார் .

அதன்படியே மறுநாள் சிவநாதன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை வீட்டினரை பார்த்துவிட்டு வந்தார்கள் ராமநாதனும் மகாலட்சுமியும்.
உண்மையிலேயே சிவநாதன் சொன்னதுபோல அவரது குடும்பத்தினரை ராமநாதனுக்கு மிகவும் பிடித்திருந்தது .இந்த சம்பந்தத்தையே பேசி முடிக்கலாம் என்று முடிவெடுத்து விட்டனர். அதன்படி இருவரின் ஜாதகத்தை பார்த்த போது ஒன்பது பொருத்தங்கள் அம்சமாக பொருந்தி இருப்பதாகவும் அடுத்த பத்து நாட்களில் வரும் முகூர்த்தத்தில் திருமணம் செய்தால் இந்தப் பெண்ணின் மாங்கல்ய பலம் அதிகமாகும் என்றும் சௌபாக்கியவதியாய் வாழ்வாள் என்றும் அந்த ஜோதிடர் கூறினார்.

இதைக்கேட்டதும் மாப்பிள்ளை வீட்டினர் அந்த நாளிலேயே திருமணம் வைத்துக்கொள்ளலாமா சம்மந்தி என்றனர் ராமநாதனை பார்த்து.

சரிங்க சம்பந்தி.நான் எதற்கும் மங்கையிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு என் முடிவை சொல்ல வா அக்கா என்று சொன்னார் ராமநாதன் .

அதன்படி மங்கைக்கு தெரியாமலேயே அவளுடைய திருமண நாள் குறிக்கப்பட்டது .வீட்டிற்கு வந்த ராமநாதன் தன் மகளிடம் மங்கை சிவநாதன் பெரியப்பாவின் சொந்தத்தில் ஒருவர் வீட்டில் உன்னை பெண் கேட்டார்கள். நானும் அவர்களைப் பற்றி விசாரித்தேன் .நல்ல குடும்பமாக தெரிகிறது .உன்னை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள் கண்ணம்மா. அதைவிட வேறு என்ன வேண்டும். இதில் உனக்கு சம்மதம் தானே டா இல்லை வேறு விருப்பம் ஏதேனும் என்று இழுத்தார் ராமநாதன்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அப்பா உங்களுடைய விருப்பம் தான் என்னுடைய விருப்பம் ஆனால் படித்துக்கொண்டிருக்கும்போது திருமணமா என்று யோசனையாய் இருக்கிறது என்று சொல்லும்போதே மங்கை கண்கள் கலங்கியது விக்ரமின் நினைவில்.

எப்படியும் அடுத்த வருடம் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன் ஆனால் அப்போது இதே மாதிரி நல்ல சம்பந்தம் அமையுமா என்று தெரியவில்லை. அவர்களும் திருமணத்திற்கு பின்னும் உன் படிப்பை தொடர சொன்னார்கள். அதுமட்டுமல்லாது மேற்படிப்பு படித்துவிட்டு அவர்களுடைய தொழிலை நீ பார்த்துக் கொண்டால் அவர்களுக்கு மிக்க சந்தோஷம்தான் என்று கூறினார்கள் .அதனால் படிப்பை பற்றி நீ கவலைப்படாதே .

இதற்கு மேல் என்ன சொல்லி திருமணத்தை மறுப்பது என்று மங்கைக்கு புரியவில்லை .எப்படி திருமணத்தை நிறுத்துவது என்ற யோசனையில் இருந்தாள் .

அவளுடைய அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டு சரி நான் வருகிறேன் என்று கிளம்பிவிட்டார் ராமநாதன் .

இதை எப்படியாவது விக்ரமிற்கு தெரியப்படுத்தி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் மங்கை .

எப்பொழுதும் தன் தாயுடன் தூங்கும் மங்கை விக்ரமிடம் பேசுவதற்காக தன் அறையில் தூங்கினாள்.அதாவது தூங்குவது போல் நடித்தாள் எனலாம்.எல்லாரும் தூங்கி விட்டார்கள் என்று உறுதி செய்துகொண்டு தன் அறையை சாத்திவிட்டு விக்ரமிற்கு கால் செய்தாள். நேரம் நள்ளிரவு 11.40 க்கு .

விக்ரம் அப்போதுதான் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.வீட்டுக்கு சென்று தனியாக இருப்பதை காட்டிலும் அலுவலகத்தில் கொஞ்ச நேரம் வேலை பார்க்கலாம் என்று அங்கேயே இருந்து விட்டு அப்போதுதான் கிளம்பினான். மங்கையிடம் இருந்து கால் வரவும் இந்த நேரத்தில் அழைக்கிறாள் ஏதேனும் பிரச்சினையா?என்று எண்ணியவாறே தன் காரை நிறுத்தினான் விக்ரம்.

சார் என்று அவள் ஆரம்பிக்கும்போதே அவளின் குரல் மாறி அழுகை வந்து விட்டது .

என்னாச்சும்மா ஏன் அழுகிறாய் சொன்னாதானே தெரியும் மங்கை?

மங்கையின் அழுகுரல் கேட்டதும் விக்ரமின் உள்ளம் பதறியது.

சார் எங்க வீட்ல எனக்கு திருமண ஏற்பாடு பண்ணிட்டாங்க. இன்னும் பத்து நாள்ல கல்யாணம்னு சொல்றாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல சார்.

உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் உன் அப்பாவிடம் திருமணம் வேண்டாம் என்று மறுப்பது தானே ஏன் எல்லா பெண்களும் அப்பாவிற்கு பயந்து கொண்டே இருக்கிறீர்கள் என்றான் கடுப்புடன்.

சார் இது என் அப்பாவின் மேலுள்ள பயம் அல்ல மரியாதை.என் அப்பா என்னை கட்டாயபடுத்தி இருந்தால் நான் வேண்டாம் என்று மறுத்து இருந்திருப்பேன் .ஆனால் அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார் .என்னால் மறுக்க இயலவில்லை .உங்களால் முடிந்தால் ஏதாவது செய்யுங்கள் இல்லை விட்டு விடுங்கள் என் விதிப்படி நடக்கட்டும் என்று கோபத்தில் போனை கட் செய்துவிட்டாள் மங்கை .

விக்ரமின் மீது ஒரே கோபம் மங்கைக்கு .நான் உன்னை விரும்புகிறேன் அதனால் இந்தக் கல்யாணம் பிடிக்கவில்லை இதை நிறுத்து என்று கூற மங்கைக்கு தயக்கமாக இருந்தது.அவன் வீட்டின் வளமும் அவனுடைய பதவியும் அவனிடம் தன் காதலை சொல்ல விடாமல் மங்கையை பெரிதும் தடை செய்ததது. அதனால் தான் ஏதாவது செய்து திருமணத்தை நிறுத்துமாறு கூறினாள் .அப்படியாகவது தன் மனதில் இருப்பது என்னவென்று அவன் உணர்ந்து கொள்ளட்டும் என்று எண்ணினாள்.ஒரு பெண் ஒரு ஆணிடம் வந்து என் திருமணத்தை எப்படியாவது நிறுத்து என்று கூறினால் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட புரிந்து கொள்ளாத இவரெல்லாம் எப்படி போலீசில் வேலை பார்க்கிறார் என்று பொரிந்து தள்ளினாள்.

அப்பா சொன்னார் என்று தன்னுடைய விருப்பத்தினையே மறைத்துக் கொண்டாள் மலர் .இவளும் அப்படியே கூறவும் சட்டென கோபம் வந்துவிட்டது விக்ரமிற்கு. அதனால்தான் அப்படி சொல்லிவிட்டான்.
பேசிய பிறகு தான் புரிந்தது ஏற்கனவே பிரச்சனையில் இருப்பவளிடம் தான் வேறு கோபித்துக் கொண்டு விட்டோம் என்று .

மறுபடியும் மங்கைக்கு அழைத்து தைரியமாக இரு மங்கை.உனக்கு பிடிக்காத எதுவும் நடக்காது. நடக்கவும் விட மாட்டேன் சரிதானா மணமேடை வரை சென்றாலும் உனக்கு பிடிக்காத திருமணம் நடக்காது ஓகேவா எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தைரியம் கூறினான் விக்ரம்.

மங்கை விக்ரமிடம் பேசிய பிறகு நிம்மதியாக உறங்கி போனாள் விக்ரம் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு

நேரம் நள்ளிரவு 12 மணியை காட்டியது. இந்த நேரத்தில் அப்பாவுக்கு அழைக்க வேண்டாம் என்று எண்ணினான்
ஆனால் விசயம் கொஞ்சம் பெரியது எனவே அந்த நேரத்திலும் தன் தந்தை முரளிதரனுக்கு அழைத்தான் விக்ரம்.

அப்பா எங்க இருக்கீங்க ஒரு முக்கியமான விஷயம் பேசனும் என்றான்

அம்மா மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகனும் சொன்னாள்.அதனாஷ இங்க மதுரைல இருக்கோம் தம்பி என்ன விஷயம் சொல்லு என்றார் முரளிதரன்

அவரிடம் மங்கை கூறியதை கூறினான் விக்ரம்.

ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள் அப்பா?

சரி ப்பா தம்பி நான் உனக்காக பெண் கேட்கிறேன் என்றார் முரளிதரன்.

சரிப்பா ஆனால் திருமணம் அவள் படிப்பு முடிந்த பிறகு தான் என்றான் விக்ரம் உறுதியாக .

அதை எல்லாம் நானோ,நீயோ மட்டும் தீர்மானிக்க முடியாது அவர்கள் வீட்டில் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லையே. வேண்டுமானால் மங்கை திருமணம் முடித்துக்கொண்டு படிப்பைதொடரட்டுமே என்றார் .

இல்லை அது சரி வராது நீங்கள் பேசி மட்டும் முடியுங்கள் .திருமணத்தை படிப்பு முடிந்ததும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் .

சரிப்பா என்றார் முரளிதரன்.

மங்கைக்கு மாலை சூட போகும் மணவாளன் யார் ?பார்ப்போம்....

மாலை தொடுக்கப்படும்....
 
Nasreen

Well-Known Member

Nice ud
Mangai and Vikram nice pair
Vikram enna seiya poranga
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மிதேவி டியர்
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
விக்ரம் அப்பா காரியம்
சாதிப்பாரா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top