ப்ரியசகியே 10

Preetz

Well-Known Member
#1
சகி-10


காலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு அந்த தூக்கத்தை கலைக்கும் வகையில் முகத்தில் சுளீரென வெயிலடிக்க கண்களை லேசாக கசக்கிக்கொண்டு ஒற்றை கண்ணை மட்டும் திறந்து மணியை பார்த்தவளுக்கு தூக்கிவாரிப்போட்டது காரணம் மணி 8:00 என்றல்லவா காட்டியது. பதறியடித்துக்கொண்டு போனை எடுத்துப்பார்த்தால் அதில் அலார்ம் ஸ்னூஸாகியிருந்ததை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது இவள்தான் தூக்கக்கலக்கத்தில் ஸ்னூஸ் செய்திருந்தாள் அதை. நல்ல வேலை நேற்று இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பியதாலோ என்னவோ திரைச்சீலையை சரியாகப்போடாமல் விட்டிருந்தாள் இல்லையென்றால் என்னவாகியிருக்கும் என்று யோசித்தவள் அதற்கு மேல் தாமதிக்கவில்லை தயாராகிக்கொண்டிருந்தாள். 8:00 மணி என்பது சீக்கிரமே ஆனால் அவளுக்கு அப்படியில்லை எப்பொழுதும் மற்றவர்களைவிடக்கொஞ்சம் சீக்கிரமாகவே சென்றுவிடுவாள். அவளைப்பொருத்தமட்டில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் சிந்து ஒரு “பெர்ஃபெக்ஷனிஸ்ட்” அதனால்தானோ என்னவோ அவ்வளவு நேரமிருந்தும் புயல் வேகத்தில் கிளம்பிக்கொண்டிருந்தாள்.
ரஞ்சனி அவ்வளவு சொல்லியும் கேட்காமல் டேபிளில் வெட்டி வைத்திருந்த ஆப்பிளிலிருந்து ஒரு துண்டை மட்டும் வாயில் போட்டுக்கொண்டு தன்னுடைய ஸ்கூட்டியை நோக்கி ஓடிவிட்டாள்.
அவளது செயல்களைப்பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சனிக்குத்தான் கவலையாகிப்போனது
‘ஏன் வாசு இவ இப்படி இருக்கா?’
‘எப்படி இருக்கா?’ என்று அவ்வளவு நேரம் பார்வையாளராக நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவர் கேட்டார்.
‘மணி 9:00 தானே ஆகுது ஏன் இவ்வளவு அவசரம்? கொஞ்சமாவது சாப்டுட்டு கிளம்பலாம்ல…’என்று அவர் ஒரு தாயாக வருத்தப்பட
‘ சரி விடு ரஞ்சி அவள பத்திதான் உனக்கு தெரியும்ல….’ என்று அவர் சமாதானப்படுத்த
‘என்னவோப்பா நீங்க மட்டும் அந்த ஆப்பிள கட் பண்ணி வைக்கலன்னா அந்த ஒரு துண்டுக்கூட அவ வாயில போயிருக்காது...ஆனாலும் அவ இவ்வளவு பெர்ஃபெக்டா இருக்கவேண்டாம்’ என்று விட்டு அவர் அவருடைய வேளையைப்பார்க்க சென்றுவிட்டார் பின்னே அவரும் அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டுமே.
என்னதான் நேரம்தவறாமை, பொறுப்புணர்ச்சி பற்றியெல்லாம் சிறுபிள்ளையிலிருந்தே அவளுக்கு அவர் சொல்லிக்கொடுத்திருந்தாலும் அவள் செய்வது கொஞ்சம் அதிகப்படியோ என்று அவருக்கு தோன்றாமலில்லை அதுவும் அவள் வேலைக்குச்செல்ல ஆரம்பித்த பிறகு இன்னும் மோசமாகிவிட்டது. அவளை நினைத்து அவர் பெறுமைப்பட்ட ஒரு விஷயம் இப்பொழுது கவலையாக மாறிவிட்டது.

-------------------------------------------------------------

வண்டியை வேகவேகமாக அந்த பார்க்கிங் லாட்டில் நிறுத்திவிட்டு லிஃப்டிற்காக நின்றவள் அது அப்பொழுதுதான் நாலாவது ஃப்ளோர் என்று காட்ட காத்திருக்க மனமற்று படியேறிவிட்டாள் மூன்றாவது தளத்திற்கு. எப்படியோ வியர்க்க விறுவிறுக்க அவளிடத்தில் வந்தமர்ந்தவளுக்கு வாட்ச் 9:20 என்று காட்டவும்தான் ஒரு திருப்தி.

ஐந்து நிமிடத்தில் மாதுரியிடமிருந்து அழைப்பு வரவும்தான் மாதுரி இன்று சீக்கிரம் வந்துவிட்டதே தெரிந்தது.

அந்தக்கதவை லேசாக தட்டிவிட்டு அனுமதி கிடைத்தபின் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றவளுக்கு மற்றவளின் செயல் விநோதமாகப்பட்டது காரணம் மாதுரி அந்த மூலையிலிருந்து இந்தமூலைக்கும் இங்கிருந்து அங்கிற்கும் நடைபயின்றுக்கொண்டிருந்தாள்.
‘இவளுக்கு என்னாச்சு?’ என்று யோசித்துக்கொண்டே ‘எக்ஸ்க்யூஸ்மீ’ என்றழைத்துவிட்டாள்.
‘எக்ஸ்க்யூஸ்ட்’ என்றுவிட்டு அவள் மீன்டும் நடைபயில இவள் இன்னமும் குளம்பிப்போனாள். ஆர்வத்தை அடக்க முடியாமல் ‘மாதுரி என்னாச்சு?’ என்று கேட்டே விட்டாள். அவள் கேட்ட மறுநோடி அவளைப்பார்த்து சிரித்தவள்
‘இப்படி மொதல்லயே கூப்பிடறதுக்கு என்ன?’ என்றாள். பின்ன இவளும் எவ்வளவுதான் சொல்வது இவள் ‘பாஸ்’ ஆம் அதனால் ஆஃபிசில் வா போ என்றழைக்க மாட்டாளாம்.
‘சரி சொல்லு என்னாச்சு’ என்க
‘ஒன்னுமில்லையே’ என்று சொல்லிவிட்டு சிரித்தவள் இப்பொழுது அவள் இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.
சிந்துவும் ‘நீ இருக்கியே….’ என்றுவிட்டு எதிர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.
அதன் பின் சில மணி நேரங்கள் வேலை சம்பந்தமாக கலந்துரையாடிவிட்டு சிந்து எழுந்துக்கொள்ள மாதுரியோ ‘அந்த புது மானேஜர வர சொல்லு சிந்து’ என்க
அவளும் சரியென்றுவிட்டு வெளியேறிவிட்டாள்.
அவள் சொல்படியே அழைத்துவிட்டு அவள் பார்வைக்குச்செல்ல வேண்டிய ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றாள்.
மாது பொறுமையாக அந்த ஃபைலை அலசிக்கொண்டிருக்க ஒரு சிறு தட்டலுக்குப்பின் உள்நுழைந்தான் அவன்.
உள்ளே நுழைந்த கிருஷ்ணாவிற்கு முதலில் கண்ணில் பட்டது மாதுதான். அவளை அங்கு எதிர்பாராததால் முதலில் அதிர்ந்தவன் பின்பு அவளது சிரிப்பைக்கண்டு அவள் வேண்டுமென்றுதான் அவனிடம் விளையாடியிருக்கிறாள் என்று தெரிந்துவிட்டது இல்லையென்றால் நேற்றே சொல்லியிருக்கலாமே.
இந்த விஷயம் எதுவும் அறிந்திராத சிந்துவிற்குதான் எல்லாம் வினோதமாக தெரிந்தது முதலில் ‘இவன் ஏன் இப்போ இவளப்பார்த்து இப்படி ஷாக்காறான்’ என்று பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு மாதுரியின் சிரிப்பு இன்னும் வித்யாசமாகப்பட்டது. அதற்கடுத்து அவர்கள் பேசிக்கொண்ட விதம் அது இன்னும் மோசம்.
‘ஓ….இதுக்குதான் நீ மாதவியாகிட்டியா ?’ அவள் மா… என்று ஆரம்பித்துவிட்டு மாதவி என்று சொல்லியிருந்ததால் அவன் கேட்க.
அவளும் சிரிப்புனூடே ஆம் என்று தலையசைக்க இங்கு நம் சிந்துவிற்குதான் தலைச்சுற்றியது பின்னே அதே கம்பனியில்தான் மாதுவுடன் கல்லூரியில் படித்த ரகுவும் வேலை செய்கிறான் ஆனால் தனிமையில் தவிர மற்றவர்கள் முன் இப்படி இவ்வளவு உரிமையாக பேசமாட்டான். ஆனால் இவனோ இங்கு சிந்து என்று ஒருத்தி நின்றுக்கொண்டிருப்பதே தெரியாததுப்போல் பேசிக்கொண்டிருக்கிறான். இவள் வெளியேறலாம் என்று பார்த்தால் அவள் விடுவதாக இல்லை. ‘என்னடா நடக்குது இங்க?’ என்று விழித்துக்கொண்டிருந்தாள்.

-------------------------------------------------------------

அந்த அறை முழுக்க ஏசியின் உபயத்தால் சில்லென்றிருக்க வள்ளியம்மா கொண்டுவந்துக்கொடுத்திருந்த காபியும் பலகாரமும் ஆறி அவலாகியிருந்தது.
தன்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிந்துவை பார்த்து
‘அரை மணிநேரமா இப்படித்தான் பார்த்துட்டு இருக்க என்னதான் ஆச்சு’ என்று இழுத்துப்பிடித்திருந்த பொருமையை கைவிட்டுவிட்டேன் என்று மாது கேட்க
‘குழப்பமா இருக்குல இப்படித்தான் எனக்குமிருக்கு என்னாச்சு உனக்கு? என்னமோ வித்யாசமாயிருக்கு ஏதாவது பிரச்சணையா ? என்ன நடக்குது இங்க?’ என அவள் கேள்விகளை அடுக்க பேசும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு ஆரம்பித்தாள்….
 

Advertisement

New Profile Posts

Kshipra mam ka mu ka pi epo varum sis
hello friends, waiting for mallika to give link. epi is ready
Neela mam ud yeppo post panringa