பிரிவு : அறத்துப்பால், இயல் : பாயிரவியல், அதிகாரம் : 3. நீத்தார் பெருமை, குறள் எண்: 22.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் :- துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பொருள் :- ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 3. நீத்தார் பெருமை.
குறள் எண்: 22.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
தந்நலம் நீத்தார் பெருமை கூறும் அதிகாரம். மானிட உயர்வை அடையச் செல்லும் பாதையில் உள்ள மேன்மக்கள் பற்றிப் பேசுவது. தனிப்பட்ட விடுதலை நோக்கித் துறவறம் மேற்கொண்டவர்களைக் குறிப்பதல்ல இத்தொகுப்பு; உடற்பற்று விட்டு உடல்வாழ்வை பொதுநலத்துக்காகத் தந்து தொண்டு செய்பவர்களைச் சிறப்பிப்பது. மனித வாழ்வின் உச்சநிலை அடைந்தவர்களைப் போற்றுகிறது. இத்தகைய உயர்ந்தோரின் செயல்பாடுகள்தாம் சமுதாய ஆற்றலை உருவாக்குகின்றன. இதனாலேயே கடவுள் வணக்கம் சொல்லி, இறைவனின் அடையாளம் காட்டும் இயற்கையின் சிறப்பு கூறியபின் நிறைமனிதரின் இன்றியமையாமை கருதி பாயிரத்தின் மூன்றாவது அதிகாரமாக நீத்தார் பெருமை பாடுகிறார் வள்ளுவர். சிறப்பு வாய்ந்தவரில் மிக மேன்மையாளராகக் கருதப்படும் வெவ்வேறு வகைப்பட்ட மாந்தர்களை நீத்தார் என்ற பொதுப்பெயரில் அழைத்து அக்குழாத்து மாந்தர் சிலரை வகைப்படுத்தி இந்த அதிகாரத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் வள்ளுவர்.

வள்ளுவம் காட்டும் நீத்தார், பொதுநலம் நாடித் தவம் செய்பவர்கள். இவர்களது தவம் உடலால் உயிரால் உணர்வால் செய்யக்கூடியது. இவர்கள் தனக்கு என்றின்றி பிறர்க்காக, உயிர்களின் மேம்பாட்டுக்காக பணிபுரிபவர்கள்.

ஒழுக்கத்து நீத்தார் என்பதற்கு தன்னலந்துறந்து அறச்செயல்கள் மேற்கொள்ளும் பெரியார் எனப் பொருள் கொள்ளலாம். மக்கள் நன்மைக்காக உயிர் நீத்தவர்களைக் குறிப்பதாகவும் ஒரு விளக்கம் உள்ளது. தியாகிகள் என்ற பொருளும் நீத்தாருக்குப் பொருந்த வரும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top