நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 28 Final

Advertisement

தரணி

Well-Known Member
அருமையான கதை.... உறவோட அருமை விட்டு கொடுத்தல் சின்ன சின்ன மனஸ்தாபம் சண்டை அழுகை சிரிப்பு னு உறவோட மொத்த பரிணாமத்தை சொல்லிடீங்க கவி.....

அந்த விட்டு கொடுத்தல் அது தான் முக்கியம் அது யாரு எடுத்து வைக்கிறதுனு ..... அதுக்கு முதல் அடி எடுக்கவும் ஒரு மனசு வேணுமே....அந்த விதத்தில் நீலா ரஞ்சி ஜெம் தான்.....

பட பட பட்டாசுயும் அமைதி பூங்காவும் செம காம்போ....

கேரளா சலங்கை சத்தம் என்ன ஆச்சு அதை அப்படியே விட்டாச்சா....
 

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா குகா இவ்ளோ நல்லவனாகிட்டியே :p:p:p
பொண்டாட்டி புள்ளையை ரஞ்சனி கிட்ட விட்டுட்டு போற அளவுக்கு...
அவளுக்கும் குழந்தை ஆசை வந்தாச்சு...

மச்சானுக்கு வழி பண்ணி கொடுத்தாச்சு...

ஓஹோ பேசத்தான் யோசிக்கிறானா...
கலாய்க்கிற வேலை நல்லாவே பண்ணுறானே குகன்...

நீலன் உறவுகளோட இன்னொரு முகத்தை தெரிந்தவன்... எல்லா பொறுப்பையும் சுமந்து அவனுக்குள்ளேயே அவனை வச்சுக்கிட்டான்...
நல்ல performance...

ரஞ்சனி :love::love::love: கதைல ரொம்ப பிடிச்சது ரஞ்சனி தான்...
முகமூடியோட சுத்துன நீலனின் தவத்தை கலைச்சவ...
அவனுக்கும் உலக பற்றை காட்டினவ...
அண்ணனையும் தம்பியையும் சேர்த்துவச்சா...
அவளோட அண்ணனுக்கும் வழிகாட்டினா...
சின்ன பொண்ணா இருந்தாலும் பொறுப்போட எல்லோரையும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டா...

குகன் முதலில் அண்ணனுக்கு அவ்ளோ அனுசரணையா இருந்தான்...
பின்பாதி ரொம்ப ரொம்ப சுயநலவாதி...
ரஞ்சனி பேசலைனா இன்னும் கோபத்தோடு சுத்தியிருப்பான்...
அம்மா இல்லாத குறையை போக்குறா ரஞ்சனி...

ரஞ்சனிக்கு அப்புறம் ரொம்ப மிஸ் பண்ணினது...
அம்மே எண்ட பகவதி மயூரா வை...
சில எபில அப்படியே அம்போ னு விட்டுட்டிங்களே...
பாவம் மயூரா... அவ தேவையில்லாமல் கதைல வந்துட்டா...
ஆனால் எங்களை ரொம்ப கவர்ந்துட்டா :love::love::love:

மாதவன் friend பிரசாந்த்...
அரசியலில் இது சாதாரணமப்பா தான்...
லாபமில்லாமல் நட்பில்லை தான்...
மாதவன் அவன் வாழ்க்கையே போனப்புறம் புரிந்துகொண்டான்...

அம்மா அப்பா இல்லாத பிள்ளைங்களோட நிலை என்ன னு அழகா காட்டினீங்க... இது மாதிரி சில பசங்களோட வாழ்க்கையை பார்த்திருக்கிறேன் நான்...
எல்லா சொந்தமும் ஆதாயம் தான் தேடுதே தவிர அந்த பிள்ளைகளுக்கும் ஒரு வாழ்க்கை அமைச்சு தரணும் னு முன்வருவதில்லை...
ஏதோ நீலன்-ரஞ்சனி கொஞ்சம் அதிர்ஷ்டம் பண்ணியிருக்காங்க...
ரெண்டு பேரோட தனிமையான வாழ்க்கைக்கு இருவரும் சேர்ந்து இனிமை காணுறாங்க...

கதை நல்லா இருந்துச்சு கவி...
ஆனால் அந்த மயூரா-க்கு ஒரு கதை எழுதுங்க ப்ளீஸ்...
இந்த கதைல ரொம்ப புடிச்ச முதல் கேரக்டர் அவ தான் வந்தா...
***
மாதவன் friend பிரசாந்த்...
எபி 9.2 ல பிரசன்னகுமார் னு வந்துச்சு...
எபி 11 ல பிரசாந்த் னு வருது...
செக் பண்ணிக்கோங்க...

 

Saroja

Well-Known Member
ரொம்ப அழகான பதிவு
நீலன் ரஞ்சி இயல்போட
எதார்த்தமான பிடிவாதம் இல்லாத
ஜோடி
அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top