கற்பூர முல்லை Episode 29

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 29
அகிலன்,குமார் ,பவி முவரும் ட்ரெயினில் ஏறி அமர்ந்திருந்தனர். அகிலனுக்கு முழுவதும் தமிழின் ஞாபகமாகவே இருந்தது அவன் முகம் வாட்டமாக இருந்ததை கண்டு குமார் தான் கேட்டான்.
என்னடா....?ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று கேட்டான்.

இல்லை நாம் எல்லோருமே வந்து விட்டோம் தமிழுக்கு ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு. இது மட்டுமே தெரியும் . அவளுக்கு சென்னையில் வேறு யாரையும் தெரியாது அப்படி இருக்க தனியாக விட்டு வந்து விட்டோமோ என்று தோன்றுகிறது என்று கேட்டான்.

பரவாயில்லை அதான் கைலாஷ் இருக்கிறானே அவன் பார்த்துக் கொள்வான் என்று கூறினான். ஆமாம் நானும் அந்த தைரியத்தில் தான் வந்திருக்கிறேன் இருந்தாலும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று கூறினான். சரி விடு பார்த்து கொள்ளலாம் என்றான்.

ஒரு வழியாக மூவரும் ஆகிலன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அங்கு வீடு ஒரே கல்யாண கலை கொண்டு இருந்தது.

அகிலன் வந்ததும் அனைவரிடமும் ஒரிரு வார்த்தை பேசி விட்டு அடுத்த நிமிடமே தமிழுக்கு கால் செய்தான். கொஞ்ச நேரம் பேசிவிட்டு வைத்தான்...

பேசிய பின்பு திரும்பி பார்த்தால் அவன் பின்னாலேயே நின்றிருந்தால் திவ்யா....

என்னண்ணா... அண்ணியை மிஸ் செய்கிறாயா?....... என்று கேட்டாள் அவள்.
ஆமாம் அங்கு அவளுக்கு என்று யாராவது இருந்தால் பரவாயில்லை. ஆனால், அவள் மட்டும் தனியே இருக்கிறாள் அதை நினைத்தால் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறினான்.

இன்னும் கொஞ்ச நாட்கள் தான் அண்ணா அதன் பிறகு அவர்களை உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது என்று கூறினாள் . அதற்கு அவன், கண்டிப்பாக........ என்று கூறிவிட்டு கல்யாண வேலைகளை கவனிக்கலானான். எல்லாரும் கல்யாண
வேலையை கவனித்துக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து மணமகன் ரவியின் அப்பாவும் அம்மாவும் வந்திருந்தனர். கூடவே ஒரு பெண்மணியும் வந்திருந்தாள்.

வந்தவர்கள் மாப்பிள்ளை வீடு என்று தெரிந்ததும் தியாகராஜனும் பார்வதியும் அவர்களின் நன்றாக கவனித்துக் கொண்டனர். ஆனால் கூட வந்திருந்த பெண் யாரென்று அவர்களுக்கு தெரியவில்லை.
அவர்களின் முகமாற்றத்தை கண்டு மாப்பிள்ளையின் அப்பாவே அந்த பெண் யார் என்று கூறினார்.
இவள் தான் ரவியின் அக்கா பைரவி. நீங்கள் ரவியை பார்க்க வந்திருந்தபோது இவள் வெளியூரில் படித்துக் கொண்டிருந்தாள் .இப்பொழுதுதான் படிப்பை முடித்துவிட்டு இங்கு வந்தாள்.
பெண்ணை பார்க்க வேண்டும் என்று கூறியதால் இவளை கூட்டிக்கொண்டு வந்தான் என்று கூறினார் ரவியின் அப்பா.

பைரவி திவ்யாவை கூப்பிடுங்கள் பார்க்கலாம் என்றாள். திவ்யாவை பார்த்ததும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன படித்திருக்கிறாய் என்று அவளிடம் கேட்டு விசாரித்துக் கொண்டிருந்தாள்..

பைரவி அங்கு இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியே அகிலனும் கார்த்திக் ம் வந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் தியாகராஜன் இவன்தான் என் மூத்த பையன் அகிலன் என்றும் இளைய பையன் கார்த்திக்கு என்றும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பைரவிக்கு அகிலனை பார்த்ததும் பிடித்த போனது. அவன் தோற்றம் அவன் கம்பீரம் எல்லாமே அவள் மனதில் ஒரு ஈர்ப்பை கொண்டு வந்தது... சுருக்கமாக சொன்னால் அதுவரை கல்யாணம் என்று ஒன்று வேண்டாம் என்று இருந்தவள் அக்கிலனை கண்டதும் காதல் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

இருவரும் மரியாதைக்கு வணக்கம் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர் ஆனால் பைரவியின் கண்களோ அகிலனையே பின் தொடர்ந்தது.

கல்யாணம் முடிந்து இதை பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். எங்கே சென்று விடப் போகிறாள் ....?எப்படி இருந்தாலும் திவ்யா நாம் வீட்டில் வந்துதானே வாழப் போகிறாள் ......!நம்மை மீது எது நடந்து விடப்போகிறது என்று நினைத்திருந்தாள்.
***************

நிச்சயிக்கப்பட்டவாறு ரவி திவ்யா திருமணம் நன்றாக நடந்தேறியது. தமிழ் அங்கு இல்லாதது மட்டுமே அகிலனுக்கு மிகவும் குறையாக இருந்தது. மற்றபடி எல்லாமே நினைத்ததை விட நன்றாகவே நடந்திருந்தது. திருமணத்தில் ஏதாவது காரணம் சொல்லி ரவியின் அக்கா பைரவி அகிலனையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள். அது அவனுக்கும் பிடிக்கவில்லை ஏன் இப்படி பண்ணுகிறாள் என்றும் தெரியவில்லை.
ஆனால் குமார் மட்டும் அதை நோட் பண்ணி இதில் ஏதோ சரியில்லை என்று தோன்றுகிறது என்று அகிலனிடம் கூறினான். அவனும் ஆமாம் அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது இருந்தாலும் வருவது வரட்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தான்.

ஆனால் அங்கு ரவியின் அக்கா பைரவியோ கட்டினால் இவனை தான் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் .ஆனால் அதை தற்போது வரை யாரிடமும் சொல்லவில்லை.

மலரும்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top