என் மன்னவன் நீ தானே டா...9

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்க்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா...9

கடற்கரையில் கரையை தொட்டு செல்லும் அலைகளையே பார்த்துக்கொண்டு இருந்தாள் திவ்யா.அவளது பக்கத்தில் அவளையே குறுகுறுவேன்று பார்த்துக்கொண்டு நின்றான் கிருஷ்ணன்.அரைமணி நேரமாக தன்னை பார்ப்பதும் கடலை பார்பதுமாக இருக்கும் திவ்யாவை கண்டு குழம்பி போனான் அவன்.ஒரு கட்டதிற்கு மேல் அமைதி காக்க முடியாமல்,

"நான் கிளம்புறேன் மேடாம்..."என்று வெறுப்பேற்றினான்.

"சும்மா..மேடம் மேடம்னு சொல்லி வெறுப்பேத்தாத..."என்றாள் காரமாக.

"சரி சொல்லல..."என்றான் .

திவ்யாவினுள் ஒரு தயக்கம் அவனிடம் பேசவேண்டும் என்று இவ்வளவு தூரம் வந்துவிட்டாள் ஆனால் இப்பொழுது ஏதோ ஒரு தடுமாற்றம் ஒட்டிக்கொண்டது.யாரிடமும் தயக்கமில்லாமல் மனதில் உள்ளதை முகத்திற்கு நேராக பேசிவிடுவாள்,ஆனால் இது தொழில் சம்ந்தப்பட்ட விஷியம் இல்லயே வாழ்க்கை சம்ந்தப்பட்டது அதனால் தான் இந்த தடுமாற்றம்.

அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து ஒருவாறு தன்னை தைரியபடுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தாள்,

"எனக்கு கல்யாணம்.."என்று கூறி முடிக்கும் முன்

" வாழ்த்துக்கள் மேடம்..யார் அந்த அதிர்ஷடசாலி...(பாவபட்ட பிறவி மனதில் நினைத்தான்).."

அவளோ நிதனமாக "நீ தான்..நமக்கு தான் இன்னும் பத்து நாள்ல கல்யாணம்.."என்று ஒருவாறு கூறிமுடித்து அவன் முகம் பார்த்தாள்.அவனோ திக்பிரம்மைபிடித்தது போல் நின்றான்.அவனது நிலைகண்டு அவனை உலுக்கினாள்,

"கிருஷ்ணா..கிருஷ்ணா..."அதில் தன்னிலை பெற்றவன்.

"என்ன..என்ன..சொன்ன.."என்றான் தடுமாற்றமாய்.அவள் மறுபடுயும் அதையே சொல்லி தனது சிக்கலை சொல்லவருமுன்,

"அம்மா தாயே..உன்ன அடிச்சதுக்கு பழிவாங்க இப்படி யோசிச்சியா.."அவள் ஏதோ சொல்லவருமுன் இவன் பட பட வென்று பொரிந்தான்,

"நான் அன்னக்கி தெரியாம அடிச்சுட்டேன் அதுக்காகவேனா மன்னிப்புக்கேட்டுக்கிறேன் அதுக்காக இப்படியெல்லாம் பழிவாங்காத..நான எத்தன சீரியல் பார்த்துருப்பேன்..இப்படி தான் நடிச்சு...."என்று மேற்கொண்டு சொல்லவந்தவனை,

"டேய்... லூசா நீ யாராவது இப்படி யோசிப்பாங்கலா..நான் சொல்றத கேளு..."என்று கத்தியிருந்தாள் திவ்யா.

"ஏன்..ஏன்...கேட்கனும்...முடியாது...முடியாது.."என்று குழந்தை போல கூறுபுவனது கையைபிடித்து உலுக்கி நிறுத்தினாள்.

"இது விளையாடுர நேரம் கிடையாது கிருஷ்ணா.."என்றாள் கோபமாக.இப்பொழுது கிருஷ்ணனும் விளையாட்டைவிட்டு அவளிடம்,

"என்ன..பிரச்சனை தாரணி..."என்றான்.

தாரணி என்ற அழைப்பு அவள் உயிர் வரை தீண்டிச்சென்றது.அவளது தந்தை அவளை அவ்வாறு அழைப்பார் அவருக்கு அடுத்தது இவன் தான் அழைத்திருக்கிறான் அதுவும் ஒரே ஒரு முறைதான்.

"நீ இப்படி லூசுதனமா யோசிக்கமாட்ட...என்ன ஆச்சு..."என்றான் நிதானமாக.அவனை சற்று ஆச்சிரியமாக பார்த்தவள் தன்னுடை நிலையை சுருக்கமாக விவரித்தாள் அனைத்தையும் பொறுமையாக கேட்டவன்.

"இப்ப புரியுது நம்ம கல்யாணம் பண்ணிகிட்ட மாதிரி நடிக்கனுமா.."என்றான். அவளோ இல்லை என்பது போல தலையாட்டினாள்.

"நிஜமான கல்யாணம் தான்..."என்றாள்.அவன் புரியாமல் நோக்கவும் அவனிடம் எவ்வாறு கூறுவது என்று தயக்கமாக இருந்தது.திருமணம் பந்தத்தை வெறுப்பவள் தான் ஆனால் இப்போது இருக்கும் நெருக்கடியில் எதை பற்றியும் யோசிக்கும் மனநிலையில்லை அவள் எப்படியும் திருமணம் நடந்தாக வேண்டும்,யாரோ ஒருவனுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் அது ஏன் கிருஷ்ணனாக இருக்கக்கூடாது என்ற எண்ணம்,அதுமட்டும் இல்லாமல் அவனிடம் இருக்கும் ஏதோ ஒன்று அவளை இழுக்கிறது அதுமட்டும் உண்மை.இதை அவனிடம் சொல்ல சற்று தயக்கம் மற்றும் அவன் தான் சொல்லுவதை நம்புவானா என்ற எண்ணமும் இருந்தது.

அவனோ"என்ன நிஜமான கல்யாணமா??"என்றான்.அவனுக்கு திவ்யா கார்மெண்ட்ஸை காப்பற்றும் பொருட்டு இவ்வாறு உளருகிறாள் என்ற எண்ணம் தான்.

"இப்ப ஏன் இப்படி அதிர்ச்சியாகுர...நீ யாரையாவது விரும்புரியா??"என்றாள் தடுமாற்றமாக.அவன் ஆம் என்று சொல்லிவிட்டால்,அதை நினைக்கும் போதே மனது கனத்தது இருந்தும் மறைத்துக்கொண்டு அவனை கண்டாள் அவனோ,இல்லை என்பதாக தலையாட்டினான் அதில் சற்று ஆசுவாசம் ஆனவள்.

தன்மனதில் உள்ளதை சொல்ல முற்படும் நேரம் கிருஷ்ணன்,

"மேடம் எனக்கு கல்யாணம் பத்தி பெரிய கனவே இருக்கு..எனக்கு தேவதை .."என்று அவன் சொல்லி முடிக்கும் முன்,

"அப்போ நான தேவதை மாதிரி இல்லையா..."என்று கோபமாக கூறியவள் கண்கள் கலங்கி இருந்தது.திமிரான திவ்யாவை பார்த்திருந்தவன் இவ்வாறு கலங்குவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.அவளுக்கோ அவனுக்கு தன்மனது புரியவைக்க முடியவில்லை என்ற எண்ணம்.

அழகிய மாசுமறுவற்ற முகம் எப்பொழுதும் ஒரு திமிர் அவள் கண்களில் தெரியும் ஆனால் இன்று அவளது கலங்கிய முகம் அவனை இம்சித்தது.அவளை தேற்றும் பொருட்டு

"தாரணி அழாத..ப்ளீஸ்..நான அந்த அர்த்ததுல சொல்லல..நான.."என்று கூறவருமுன் அவனை கை நீட்டி தடுத்தவள் முகத்தில் இப்போது அதே திமிர் குடி கொண்டிருந்தது.அதை கண்ட கிருஷ்ணனோ இவ என்ன அந்நியன் மாதிரி முகத்த மாத்துரா என்று பார்த்திருந்தான்.

"நமக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம்.."என்று கூறிவிட்டு கிளம்ப தயாரானாள்.

"என்ன விளையாடுரியா..முடியாதுனு சொன்ன என்ன பண்ணுவ..லூசு மாதிரி பேசாத தாரணி...நம்ம இரண்டு பேருக்கும் ஒத்துவராது.."என்று அவன் அவளது செல்வ நிலையை கருத்தில் கொண்டு கூறினான்.அதுமட்டும் இல்லாமல் அவள் குழம்பி உள்ளாள் அதனால் இவ்வாறு பேசுகிறாள் என்று எண்ணினான். அவள் மனதை தான் பாதித்துள்ளோம் என்கிற எண்ணமெல்லாம் இல்லை.அவன் கூறியதில் மேலும் கடுப்பானவள்,

"ஓ..முடியாதுனு சொல்லுவியா..சொல்லு...சொல்லு..பார்ப்போம்.."என்றாள் ஆவேசமாக.பின்

"நமக்கு கல்யாணம் இன்னும் பத்து நாள்ல ..ஏதாவது செஞ்சு தப்பிக்கலாம் நினைச்ச தொலைச்சிடுவேன்..."என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.

கிருஷ்ணனும் அவள் சொல்லி சென்றதை மனதில் அசைப்போட்டுக்கொண்டே வீடு வந்தான்.அவனுக்கு திவ்யா குழம்பியுள்ளாள் நாளை அவளிடம் நிதானமாக கூறவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தான்.அவளோ அவன் எதிலிருந்தும் தப்பாத மாதிரி அடைத்திருந்தாள்.

காலை எப்பொழுதும் போல் எழுந்தவன் வாசலில் அரவம் கேட்டு அங்கு சென்றான்.அங்கே ஆளையே முழுங்கும் அளவுக்கு இருவர் இருந்தனர்.இவனை பார்த்தவுடன் ஒருவன் ஓடி வந்து கிருஷ்ணாவிடம் ஒரு கடிதத்தை தந்து சென்றான்.அதை படித்த கிருஷ்ணாவோ வாயடைத்து நின்றுவிட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top