என்னில் நிறைந்தவளே - 8

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 8

ஒரு வாரம் கடந்த நிலையில் சரண் தருணிற்கு போன் செய்தான்

தருண் “சொல்லு சரண் நான் கேட்ட விவரம் எல்லாம் சேகரித்துவிட்டாயா”

சரண் “அவங்க பேரு வானதிதேவி, V.D கன்ஸ்ட்ரக்ஷன் MD”

தருண் “அது எனக்கே தெரியும் நான் உன்கிட்டே அவங்க குடும்ப விவரம், அவங்களோட பழக்க வழக்கம் பற்றி கேட்டேன்”

சரண் “சொல்லறதுக்குள் என்ன அவசரம், அவங்க அப்பா விஸ்வநாதன் அரசு ஊழியரா இருக்காரு, அம்மா சுமதி வீட்டை பார்த்து கொள்கிறார். ஒரு அக்கா நிலா அவங்களுக்கு திருமணம் முடித்து கணவர் சுரேஷ்வுடன் சென்னையில்தான் இருக்காங்க.
இவங்க இல்லாமல் அப்பாவுடைய அம்மா ரங்கநாயகி, அம்மாவுடைய அப்பா கணேசன் இருக்காங்க”


தருண் “அவ்வளவு தான அவங்க குடும்ப உறுப்பினர்களா”

சரண் “ஆமா”

தருண் “சரி இதில் வானதிக்கு நெருக்கமானவங்க யாரு”

சரண் “டேய் முதலில் எல்லாத்தையும் சொல்லறவரை பொறுமையா கேளு”

தருண் “சொல்லு”

சரண் “அவங்களுக்கு அவங்க பாட்டி,தாத்தா இவங்க இரண்டு பேரும் ரொம்ப நெருக்கம். அப்புறம் இன்னும் ஒருத்தங்க இருக்காங்க வானதிதேவியுடைய தோழி அனிதா. இவங்க மூன்று பேருக்கும் தெரியாம தேவி எதுவும் செய்ய மாட்டாங்களாம். எது செய்வதாக இருந்தாலும், எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் மூனு பேர்கிட்டையும் எல்லாம் கேட்டுத்தான் எடுப்பாங்களாம்”

தருண் “வானதியோட தாத்தா,பாட்டி சரி அவங்க தோழி அனிதாவையும் கேட்டு ஏன் எல்லாம் செய்யறாங்க”

சரண் “அனிதா தேவியுடைய தொழில் பங்குதாரர் அதுவும் இல்லாமல் இவங்க தொழில் ஆரம்பிக்கும்போது நிறைய வங்கியில் லோனுக்கு முயற்சி பண்ணிருக்காங்க எதுவும் கிடைக்கவில்லை

அனிதா அவங்க கணவர் மூலமா லோன் கிடைக்க ஏற்பாடு செய்ததும் இல்லாமல் தொழில் தொடங்கியதும் வந்த பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிக்க தேவிக்கு பக்க பலமா நின்றிருக்காங்க. ஒரு கட்டத்தில் அனிதா மாமியாருக்கு இவங்க உதவி செய்வது பிடிக்காம வேண்டாம் சொல்லிருக்காங்க அப்பவும் அனிதா வீட்டை எதிர்த்து தேவிக்கு துணையாக இருந்திருக்காங்க. அதனால் தேவி இவங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கின்றாங்க

தருண் “என்ன ஒரு friendship இப்படி ஒரு தோழி கிடைத்தால் என்ன வேணும் என்றாலும் பண்ணலாம் டா அனிதா ரொம்ப கிரேட்”

சரண் “தேவியும் சும்மா இல்லை தருண் அனிதாகாக அவங்க மாமியாரிடம் பேசி எல்லாத்தையும் சரி செய்திருக்காங்க அதோட அனிதா பிறந்த விட்டுக்கு நிறைய செய்திருக்காங்க அனிதா தங்கை கல்யாணத்தில் பிரச்சனை வந்தப்ப தேவி தலையிட்டு அதை சரி பண்ணிருக்காங்க. அனிதாகாக தேவி எதை வேண்டும் என்றாலும் செய்வங்களாம். அதே மாதிரி தேவிக்கு ஒன்னு என்றால் முதல் ஆளாய் அனிதா வந்து நிற்பாங்கலாம் ”

தருண் “ரொம்ப ஆழமான friendship சொல்ல வர தேவிகிட்ட காரியம் ஆகனும்னா அனிதாவை பிடித்தால் போதும் போல அப்படி தானே”

சரண் “ஆமா டா”

தருண் “அவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா”

சரண் “இன்னும் ஒன்னு தேவி இப்ப அவங்க அப்பா அம்மா கூட இல்லை தனியா பாட்டியோட இருக்காங்க”

தருண் “ஏன்”

சரண் “அது மட்டும் தெரியல டா எனக்கு தெரிந்த வரைக்கும் அவங்க தொழில் தொடங்கும் போது ஏதோ பிரச்சனையால வீட்டை விட்டு வெளியே வந்துட்டாங்க என்று கேள்விபட்டேன். தேவிக்கு ரொம்ப கோவம் வருமாம் அவங்க கோவத்தில் இருக்கும் போது யாரு மாட்டரான்களோ ரொம்ப பாவமாம் காய்ச்சி எடுத்திடுவாங்கலாம் இது அவங்க கம்பனியில் வேலை செய்பர்கள் சென்ன ௯டுதல் தகவல்”

தருண் “சரி டா நான் பார்த்துகொள்கிறேன்”

சரண் “எதுக்கு வானதிதேவி பத்தி கேட்ட அதை சொல்லவே இல்லையே”

தருண் “கல்யாணம் பண்ணிக்க”

சரண் “ஏன் டா இவ்ளோ பெரிய வெடிய கொளுத்தி போடுற நான் தங்கமாட்டேன் அப்புறம் நீ சொன்னியே திருமணம் செய்ய என்று அது எளிது இல்லை மச்சான்”

தருண் “ஏன் எப்படியும் கல்யாணம் கட்டிக்குவாங்க தான”

சரண் “அவங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்கிற மாதிரி செய்தி கிடைத்தது அதனால் சொன்னேன்”

தருண் “அதையும் பார்க்கலாம்,அவங்க தொழில் பற்றி சொல்லு அண்ட் வானதியோட கேரக்டர் எப்படி”

சரண்"அவங்களுடையது ஒரு மிடில்கிளாஸ் பேமிலி என்று நான் சொன்னதில் இருந்தே உனக்கு தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் தொழில் ஆரம்பிக்கும் பொது ஒன்றுமே இல்லாமல் ஆரம்பித்து என்னைக்கு best கம்பனியா இருக்கு அதில் இருந்தே அவங்களுடைய முயற்சி
தேவிக்கு பிடிவாத குணம் அதிகம் அந்த குணம்தான் அவங்களை மேல கொண்டுவந்திருக்கு என்று கேள்விபட்டேன். தருண் நீ ஒன்றும் விளையாடவில்லையே சீரியஸ் ஆ தானே சொன்னாய் வானதிதேவியை கல்யாணம் செய்வதாய்

என்னை பார்த்தால் உனக்கு விளையாடுவது மாதிரி தெரியுதா உன்னையாவே நான் அவங்களா கல்யாணம் பண்ணிக்கதான் அவங்க விவரங்களை சேகரிக்க சொன்னேன்

சரண் “இன்னும் ஒரு விசியம் இருக்கு அது உனக்கு இப்பொழுது பயன்படும் என்று தோன்றவில்லை இருந்தாலும் சொல்கிறேன். V.D கன்ஸ்ட்ரக்ஷனுக்கு இப்பொழுது நிறைய போஸ்டிங்கு ஆட்களை தேர்வு செய்கின்றார்கள் அதுவும் தேவி மேம்க்கு PA வேண்டும் என்றும் விளம்பரம் வந்துள்ளது”

தருண் “இது எனக்கு பயன்பட கூடிய தகவல்தான்”

சரண் “உனக்கு தெரிந்தவர்களை அங்கே அனுப்ப போறியா”

தருண் “பார்க்கலாம் சரண், அதை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை”

நிறைவாள்.................


hai friends படித்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லிவிட்டு போங்க friends
 

banumathi jayaraman

Well-Known Member
தருணுக்கு தெரிந்தவர்களை
அவன் அனுப்பலை, சரண்
அவனே பி ஏ வாகப் போவானோ?
என்னமோ?

தருண் மாதிரியே எனக்கும்
இரண்டு கேள்விதான் இருக்கு,
நளினி டியர்

ரொம்ப நாள் கழித்து மகளை
வீட்டுக்கு அழைத்து சென்ற
அப்பா மனைவியின் பேச்சைக்
கேட்டு மகளுக்கு என்ன
கெடுதல் செய்தார்?

தேவியை காதலிப்பதாக
நம்ப வைத்து கழுத்தறுத்த
கயவன் யாரு?
வானதியின் அக்கா
புருஷனா?
அவன் ஏன் அப்படி செய்தான்?
பணத்திற்காகவா?
இல்லை சுமதி ஏதாவது
குள்ள நரி வேலை செய்தாளா,
நளினி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top