இனி மாறவேண்டியது நாம் தான்.! இதை ஏற்க வேண்டியதும், மறுக்க வேண்டியதும் உங்கள் உரிமை !!

Advertisement

Eswari kasi

Well-Known Member
முகநூல் நண்பர்களுக்கு ஓர் முக்கிய செய்தி ...! மாற்றம் நம்மிடமிருந்து...! இனி மாறவேண்டியது நாம் தான்.! இதை ஏற்க வேண்டியதும், மறுக்க வேண்டியதும் உங்கள் உரிமை !!

*2019 முதல் நாமும், நம் குடும்பத்தாரும், பாலிதீன் பைகளில் பொருள் வாங்குவதையும்.... பயன்படுத்துவதையும்... நிறுத்துவோம்* நாம் பங்கேற்கும் ஒவ்வொரு WhatsApp குழுவிலும் இந்த வேண்டுதலை வைக்கலாமே?

*சிலரேனும் செவிமடுத்து மாற வாய்ப்புண்டு அல்லவா?* உதவுங்கள் உறவுகளே!! நாம் விட்டுச்செல்லும் உலகம் நஞ்சாகிவிடாமல் , வரும் சந்ததியும் வாழவேண்டுமல்லவா?

நமது இளமைக்காலம், எவ்வளவு இனிமையானது... இயல்பானது..... நமது முன்னோர்களை வாழ்த்தி வணங்குவோம்.. பாலிதீன் பைகளை ஒவ்வொரு தனி நபரும் எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என சிந்தித்து, சிறு முயற்சியை துவங்குவோம்.

*காய்கறி, மளிகை பொருள்கள், பழங்கள் வாங்க செல்லும் போது துணிப் பைகளை கொண்டு செல்லுங்கள்* *மீன் , இறைச்சி, டீ, காபி, பழச்சாறு, வாங்க செல்லும் போது ஒரு பாத்திரத்தை கொண்டு செல்லுங்கள்*

*நீங்கள் வாகனத்தில் செல்லும் பொழுது ஒரு பொருளை வாங்க நேரிடலாம் அப்போ வேறு வழி இல்லாமல் பாலிதீன் பைகளில் பொருளை வாங்க நேரிடும் அதை தவிர்க்க எப்பொழுதுமே உங்கள் வாகனத்தில் ஒரு துணிப் பையை வைத்து கொள்ளுங்கள்*

*நாட்டின் இயற்கை வளத்தை பாதுகாக்க ஒவ்வொரு தனி நபரும் முயற்சி செய்யுங்கள் உங்களில் இருந்து மாற்றத்தை கொண்டு வாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள்,*

*ஒரு நாளைக்கு ஒரு நபரிடமாவது இந்த நாட்டின் பசுமையை காத்திட விழிப்புணர்வு கொடுங்கள்* வருங்கால சந்ததிகளை நலவாழ்வு வாழ வழி செய்வோம். முதலில் நாம் மாறுவோம்...., இனி துணிப்பையை கையில் எடுப்போம். இந்த பதிவை படித்து உறுதிஎடுத்து மற்றவருக்கும் எடுத்து கூறிவோம். இதை நம் குழு சார்பாக முன்னெடுக்க தன்னளவில் மாற முனைவோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top