ஆபத்துதவி தக்காளி தொக்கு

Advertisement

ThangaMalar

Well-Known Member
எனக்கு long travel க்கு, சப்பாத்தி க்கு தொக்கு அமையாமலே இருந்தது..
இனிமேல் தக்காளி தொக்கு செய்து அசத்திடுவேம்ல...:)
நன்றி மலர்...
அசத்துங்க சுவீ.. :p
Happy and Tasty Journey.. :D
 

Sasikala srinivasan

Well-Known Member
நான் ஒரு கைப்பிடி சின்னவெங்காயம் ஊற வைத்த புளி எலுமிச்சைஅளவு பூண்டு ஒரு கைப்பிடி போட்டு அரைத்து கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து இந்த பேஸ்ட்டை யும் வதக்கி தக்காளி சாறு கலந்து கொதிக்கவிடுவேன் சூப்பரா இருக்கும் புளி இருப்பதால் ஒரு வாரம் வரை கெடாது பிரிட்ஜில் ஒரு மாதம் வரை வைத்திருக்கலாம்
 

ThangaMalar

Well-Known Member
நான் ஒரு கைப்பிடி சின்னவெங்காயம் ஊற வைத்த புளி எலுமிச்சைஅளவு பூண்டு ஒரு கைப்பிடி போட்டு அரைத்து கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து இந்த பேஸ்ட்டை யும் வதக்கி தக்காளி சாறு கலந்து கொதிக்கவிடுவேன் சூப்பரா இருக்கும் புளி இருப்பதால் ஒரு வாரம் வரை கெடாது பிரிட்ஜில் ஒரு மாதம் வரை வைத்திருக்கலாம்
ஓ.. சூப்பர் சசி.. :):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தக்காளி தொக்கு பலவகை.
நான் சொல்ல போற தக்காளி தொக்கு ஆல் இன் அழகு ராணி.

சாதம், சப்பாத்தி, தோசை, பூரி, ரொட்டி எல்லார் கூடவும் ஜாலியா ஜோடி சேரும்.

ஒரு மாதம் கெட்டு போகாதது..
ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காலியாகும்வரை கெட்டு போகாதது.

ஒரு கிலோ தக்காளி
தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள்
கொஞ்சம் வெல்லம்,
பெருங்காயம்.

குக்கரில் கால் டம்ளர் தண்ணி ஊற்றி முழு தக்காளிகளை போட்டு ஒரு சவுண்ட் வர வரை வச்சிக்கலாம். தோல் உரிக்க தான் இந்த டெக்னிக்கு.

ஆறினதும் தோல் உரித்து ( தோல் வேணாம் நமக்கு) தக்காளியை மட்டும் மிக்ஸியில் அரைச்சிக்கலாம்.

ஒரு கடாயில் தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வழக்கத்தை விட கூடுதலாக சேர்த்து வெடித்ததும் தக்காளி சாற்றை அதில் ஊற்றலாம். தக்காளி வேக வைத்த தண்ணீரால் மிக்ஸியை ஒரு கழுவு கழுவி அதையும் கடாயில் ஊற்றினால் தண்ணீரும் வீணாகாது. அதில் இறங்கிய தக்காளி சாறும் வீணாகாது.

சிறிது நேரம் கொதித்ததும் சிம்மில் வைத்துவிட்டு அவ்வப்போது கிண்டி விடலாம். பாதி வற்றியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கலாம்.
பிறகும் இடைவெளி விட்டு கிண்டிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

தக்காளிச்சாறு கடாய் விட்டு தெறிக்க ஆரம்பிக்கும். (கவனம், தள்ளி நில்லுங்கள்.) தண்ணீர் முழுவதும் வற்றி கெட்டியாகும். எண்ணெய் பிரிந்து வரும்.

ஒரு நெல்லிக்காய் அளவு வெல்லம் உடைத்து போடலாம். பிடித்த அளவு பெருங்காயமும் சேர்க்கலாம். வெல்லம் கரைந்ததும், கலந்ததும் அடிபிடிக்க வாய்ப்பு உண்டு.
அதனால் பக்கத்தில் நின்று அடிக்கடி கிண்டி விட வேண்டும்.
தொக்கு பதம் வந்ததும் இறக்கி விடலாம்.

ஒருமணி நேர வேலை இது.
ஆனால் மாதக் கணக்கில் சுவை மாறாது ருசிக்கலாம்.

மதிய உணவு தயாரிக்க துவங்கும் சமயம் ஒரு அடுப்பில் போட்டுவிட்டு சமையலோடு இதையும் கவனித்து கொண்டால் சமையல் முடிக்கும் வேளை இதுவும் ரெடியாகிவிடும்.
எச்சில் ஊறும் சுவை.
இரயில் பயணங்களுக்கு உகந்தது.
சூப்பர் மலர்...மிகவும் உபயோகமானது....இப்ப தக்காளி சீசனும் கூட...வாங்கி செஞ்சு வச்சுக்கலாமே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top