நேச நதி -14

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
இந்த ட்விஸ்ட்........ Didn't expected.
எப்ப நடந்தது இந்த மேஜிக்??
தெளிவா சொல்றானே உங்க குழந்தைன்னு??
இப்போ தான் அரங்கநாதனுக்கு எல்லா பக்கமும் கிடுக்கிபிடி.
இனியும் கங்கா இறங்கி வரலைனா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
மாப்பிள்ளை கூட ஓகே ன்னு சொல்லிடுவாங்க போல??
வைஷ்ணவி -தேவா கல்யாணம் நடந்துடும் போல??
Bavana-vijay கல்யாணம், குழந்தையை காரணம் காட்டி நடந்தா தான் உண்டு.
 

Mathykarthy

Well-Known Member
குழந்தையா.... :oops: இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை.....:eek:

விஜய் இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்லை... அதை விட பாவனா... எதனால இவ்ளோ துன்பம் அவ அனுபவிக்கிறான்னு மறந்து அதையே செஞ்சுருக்கா.... :mad: இதுக்கு அப்புறமும் தாலியை கொடுத்துட்டு போனதெல்லாம்.... இவ செயலை ஏத்துக்கவே முடியல.... குழந்தைக்காக கூட இவ அவனை தேடி வரலை... தன்னை போல குழந்தையும் கஷ்டப்பட கூடாதுன்னு ஏன் இவ யோசிக்கல.... கோபம் தான் வருது இவ மேல....
 

Sugaaa

Well-Known Member
அவனுக்கு அம்மை போட்டுருந்தது அப்போது நடந்ததா. ஆனாலும் பாவனா விஜய்க்கு செய்கிற துரோகத்தோட எண்ணிக்கை அதிகம் ஆகிட்டே இருக்கு.
ஒருத்தன்கிட்ட அவனோட குழந்தை பத்தி எதுவும் சொல்லாமல் பெத்து வளர்ப்பாளாம் அதை அவனாகவே கண்டுபிடிச்சு போய் அவளை ஏத்துக்கணுமா.
இனி என்ன விஜயோட‌ தெய்வீக காதல் பாவனா செய்ததை மன்னிச்சு ஏத்துக்கும். இவளுக்காக குடும்பம் நட்பு எல்லாவற்றையும் தூக்கி எறிஞ்சுட்டு சொந்த நாட்டை கூட விட்டுட்டு எங்கோ போய் அனாதை மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கிறான் அவனுக்கு பாவனா நல்ல பரிசு கொடுத்திருக்கிறார்.
யார் மிரட்டி இருந்தாலும் விஜய்க்கு அவள் செய்தது மிகப் பெரிய துரோகம் தான்.

தகுதி இல்லாத ஒருத்தியை காதலிச்சதுக்கு விஜய்க்கு இன்னும் என்ன என்ன நல்லது எல்லாம் நடக்க போகுதோ தெரியல.
விஜய்க்கு அவன் குழந்தை பத்தி சொல்லாதவள் அவன் பெயரை எப்படி குழந்தைக்கு அப்பான்னு பயன்படுத்திக்கலாம். அவனுக்கே தெரியாத குழந்தைக்கு அவன் பெயர் மட்டும் இன்சியலா
வேணுமா. குழந்தைக்கு அப்பா பெயர் சொல்லாமலே வளர்த்து விடுவாளா அதுக்கு மட்டும் இவளுக்கு விஜய் தேவைபடுகிறானா.
ரமணன் இவளுக்கு செய்ததை விட மோசமான நிலையில் இவள் குழந்தையை வளர்த்துகிட்டு இருக்கிறாள்.

வைஷ்ணவி நல்ல வேலை செய்து இருக்கம்மா . எங்க இருந்துதான் உங்களுக்கு காதல் வந்து தொலையுதோ தெரியல தேவாவோட பேச்சு அருமை.

11481

பாவனாவ எந்த அளவிற்கு திட்றீங்களோ அதே அளவை விஜய்க்கும் கொடுக்கலாம் தப்பே இல்ல....

11482

உங்க விஜய் காதல் தெய்வீக காதலோ...? எனக்கு அப்படியெல்லாம் தெரியவே இல்லை...

11483

தங்கைக்காக மட்டும் ஓடி வரத் தெரியுது... மனைவிக்காக ஈகோவை விட முடியல....

11484

உங்கள் காதல் தெய்வீக காதலாம்... சத்தமா சொல்லிடாதீங்க... உலகமே கைகொட்டி சிரிக்கும்...


11487

எவ்.........ளோ திமிர் இருந்தால் அவளோட வாழ்ந்துட்டு... என்னமோ அவள் கஷ்டத்துல தாலி கட்ற மாதிரி ஸீன் போட்ருக்க...

11485

பாவனாகிட்ட இத எதிர்பார்க்கவே இல்லை... அவங்க அம்மா பற்றி பேசும் பேச்சுக்களை பழகியவள் இந்த மாதிரி நடந்துகொள்ளவே மாட்டாள்... எனக்கென்னமோ எழுத்தாளர் பண்ற சூழ்ச்சி மாதிரி தெரியுது...


11486
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top