E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஐய்யா சாப்பாட்டைக் கண்ணால பார்த்து நாலு நாள் ஆச்சுங்க.. .
ஒரு அஞ்சு நிமிஷம் இரு... இப்ப நான் சாப்பிடப் போறேன்... பார்த்துட்டுப் போய்டு
 

murugesanlaxmi

Well-Known Member
தலைவருக்கு, எதுஎதுக்குத்தான் ஜோசியம் பார்க்குறதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சு...

என்னாச்சு ?

வருகிற தேர்தலில் தனக்கு எத்தனை கள்ள ஒட்டு விழும்ன்னு கேட்குறாரே==========
 

murugesanlaxmi

Well-Known Member
டாக்டர்... உங்களைக் கைராசி இல்லாதவர்னு வெளில பேசிக்கிறாங்களே... உண்மையா...?

ஏன் கேட்கறீங்க ?

என் மாமியாரை உங்ககிட்டே அட்மிட் பண்ணலாம்னு இருக்கேன்
 

murugesanlaxmi

Well-Known Member
என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?


நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்==========
 

murugesanlaxmi

Well-Known Member
டாக்டர்... ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால என் பொண்ணுக்கு ஏன் மயக்கமருந்து கொடுக்கலை ?

உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க
 

murugesanlaxmi

Well-Known Member
நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்
அப்புறம்
? எப்படி கண்டுபிடிச்சிங்க?
களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது.
சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்...=========
 

murugesanlaxmi

Well-Known Member
திருடன்: மரியாதையா பீரோ சாவியைக் கொடு..

.இல்லத்தரசன்: இதையேதாம்ப்பா நான் கல்யாணம் ஆனதுலேர்ந்து என் வீட்டுக்காரிகிட்டே கேட்டுக்கிட்டிருக்கேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top