E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sasideera

Well-Known Member
Seriously Malli mam I am totally crazy in your words and narration.... Epdi iruntha relationship ah sudden ah ipdi change panitinga... Just unga vaarthaila... It has more power... Never imagine Epdi Varshu relationship accept panuva, ellar kudavum mingle aava, eswar kitta Epadi normal ah irupa nu ninaichutu irukum pothu suddenly all thing done.
Totally amazing... Eswar ena Love panalum ungalaku family pinnadi than ponaru nu Varshu solrathu awesome... Ava attitude Superb... I love Varshu... Varshu ku eswar ah iPa romba pidikarathala Enakum pidikuthu... I love this episode... I m totally happy and enjoyed it... Hats off u Malli mam... :)
 

Sasideera

Well-Known Member
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

ஆண் : ஆ...ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண் : தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

ஆண் : வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை

பெண் : எனைத்தான் அன்பே மறந்தாயோ

ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
 

malar02

Well-Known Member
hi friend MM,
போன எபியில் மலர்வனத்தில் நடக்கவிட்டு இந்த எபியில் கண்ணிவெடிகள் வெடித்தன என்று ........
மாற்று கோணம் .....கருத்துக்களை வைக்கிறேன் இங்கே உங்களுடன் மல்லுக்கட்ட போகிறேன்

ஆண்கள் செய்யும் குற்றங்களுக்கு பெண்களே பொதி சுமப்பவர்களா வேண்டுமா ஏன் இப்படி ஈஸ்ஸின் காதலை ஏற்று கொள்ளாத வரை புரியாதவள் நியாயம்மில்லாதவள் ஏன் மனநலம் பிழறி இருக்கலாம் என்றெல்லாம் குற்றம் வாழத்தெரியாதவள் இதே அவள் அவனின் தவறுகளை மன்னித்து ஏற்று கொண்டவுடன் அவள் பேசுவது எல்லாம் நியாமாகிவிட்டது இதுதான் உலகம் ஆண் தான் உலகம்
அன்று தன் காதல் தன் ஈகோ தன் திமிர் இவற்றிக்காக அவளை குற்றவாளி ஆக்கினான் மற்ற்வர்கள் பார்வையில் இன்று அவன் வாழ்வுக்காக,காதலுக்காக மனைவிக்கு நியாயம் செய்ய மற்ற்வர்களை குற்றவாளி ஆகிவிட்டான்
பாவம் அவன் பெற்றோர்கள்..... முதலில் ஒரு மகன் குடும்பத்தை பற்றி கவலையில்லாமல் மானத்தை வாங்க ரெடி ஆனான் .....இனோருமகன் தன் திமிரே பெரிசு கர்வம் பெரிசு தனக்கே எல்லாம் தெரியும் என்று தன் கலயாணம் தனது என்று முடிவெடுத்தான் அதில் ஒரு தங்கையும் மாட்டி கொண்டாள் இவர்கள் தவறுக்கு தன்னை விட்டு கொடுத்தாள் பிரச்சனை சீர்ஆக்க .....
நீங்க ரஞ்சியை முதலிலேயே கெட்டவாள காண்பித்து இருந்தால் இவளவு வருத்தம் இருந்திருக்காது இன்று அவளை குற்றவாளியா காண்பித்தது வருத்தமாக உள்ளது ஒரு பெண்ணுக்கு நியாயம் செய்ய இன்னொரு பெண் கீழ் இறங்க வேண்டுமா .....
அதையும் ஏற்று கொண்டார்கள் பாவம் பிறகு அவனே எல்லா குளறுபடியும் செய்தான் செய்தான் இன்றும் செய்கிறான் வேறொருவிதத்தில்
ஏன் மொட்டை அடிக்கும் சம்பவம் பற்றி இவனுக்கும் 2 நாள் முன்னாடிதான் தெரியுமா மலரம்மா சொல்லாமல் இருந்திருப்பார்களா....... வரஷிக்கு எந்த வருத்தமும் நேர்ந்து வீட கூடாது என்று நினைத்தவன் அவளுக்கு உண்டான மரியாதையை நடக்கவேண்டும் என்று முன்னரே வலியுறுத்தி இருக்கலாம் அம்மாவிடம் தன் நண்பனிடம் குறிப்பு கொடுத்து இருக்கலாம் தங்கையை வழி நடத்தி இருக்கலாம் ஆனால் அவன் செய்ததோ எல்லோரையும் அவமானம் படுத்தி அவளுக்கு சந்தோஷம் கொடுத்தது
இவன் பெற்றோர் பாவம் செய்த்தவர்கள் இப்படிபடட பிள்ளைகள்
கணவன் மனைவிEV இருவரும் தங்களை உயர்ந்தவர்களாக காடடி கொள்ள விட்டு கொடுக்காமல் தன் உண்மை தவறுகளை எல்லாம் மறைத்துவிட்டு மற்றவர்களை கேள்விகள் கேட்கிறார்கள்(அவன் செய்த கீழ்நிலை தவறுக்கு அதையும் இன்றுவரை மறைத்துவிட்டான் ஏன் வர்ஷும் தான் ஏன் இவர்களும் குற்றவாளிகளே காதலர்கள் தவறு செய்ய மாட்டார்களா) ஏன் சொல்லி இருக்கலாமே என் பிரிவுக்கு உண்மை காரணம் உன் அண்ணனின் லவ் என்று........ ராஜாராம் என்றவர் செய்த குற்றத்திற்கு மற்றவர்கள் இன்று பலிகடா ஆனார்கள் பாவம் கமலம்மா
நான் கேட்கிறேன் இந்த நமசிவாயம் எங்கு போனார் வழி நடத்த தெரியவில்லை திட்ட தெரிந்ததோ ......

எல்லோரும் புத்திசாலிகளாக பிறப்பதில்லை அதற்காக அவர்கள் எல்லாம் கெட்டவர்களா....

ரஞ்சி இன்றுவரை வர்ஷின் மீது இருக்கும் மன குழப்பத்திற்கு ஈஸ்ஸின் முன்னாள் காதலேகாரணம் ஒரு பெண்ணாய் தன் தோழிக்காக வருத்தப்படுகிறாள் இன்றுவரை தன் அண்ணனை அதற்காக காட்டி கொடுக்கவில்லை அவன் குற்றத்தை காண்பித்து இருந்தால்???? உன்னால் தனடா என்று குற்றமும் சுமத்தவில்லை அப்படி இருக்க அவளை கிழ் இறக்கிவிட்டீர்கள் இங்கு யார் உயர்ந்தவர் அவளா அவனா .......

கெட்டது செய்த அஸ்வின் வர்ஷால் மன்னிக்க படுகிறான் அவளுக்கு விசுவாசமானவனாகிறான் இருக்கிறான் அவன் வாழ்வுக்காகத்தானே அவன் நல்லவனாகிவிட்டான் தன் தமயனுக்காக தன் வாழ்வாயே முதலில் பணயம் வைத்தவள் கெட்டவள் ஆகிவிட்டாள

எல்லோருரையும் குற்றவாளி என்று சொல்ல தான் முதலில் குற்றமறவர்களாக இருக்க வேண்டும் இங்கு முழு முதல் குற்றம் செய்த்தவனே மற்ற்வர்கள் நோக்கி சுட்டுவிரல் நீட்டுகிறான் .......இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ........ஆனால் நீங்கள் சொல்வது போல் நிறைகுறைகளை கொண்ட மனிதர்கள் தான் எல்லோரும் என்று நீங்க கான்பிக்க நினைத்தீர்கள் என்பதை ஏற்று கொள்கிறேன்
நிஜத்தில் தான் களம் இரங்கி போராட்ட முடியவில்லை:mad: (LIKE THIS) கருத்துகளிலாவது பெண்களுக்கா பேச விரும்புகிறேன்;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top