E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
hi friend MM,
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியலMM முடியல எப்படி இப்படி நிஜமாவே நீங்க செம பிரில்லியண்ட் செம நாட்டியா இருக்கனும் ஹா ஹா ......என்ன டிவிஸ்ட் என்ன டிவிஸ்ட் ஒரு சின்ன பிரி கேப் கொடுத்து தலை சுத்தற மாதிரி குழப்பிவிட்டு இது படிச்சுட்டு இருக்கும் போதே எழுதறேன்.......
வர்ஷ் அவனுடனே யப்பா .....தெளிவா இருக்கா..... இருந்து இருக்கா...... செம ஹீரோயின் MM ......என்னமா அவ பேசுற டைலாக் கொடுத்து இருக்கீங்க எஸ்சலன்ட் !!!
நெத்தியடி ஈஸ்ஸுக்கு அவனின் கர்வம் எல்லாம் பொடி பொடியாக போகும் படி .......ஆனா போக போக அவளின் பேச்சு நெஞ்சை பிழியுது


என்னடா ஹீரோயினை முற்றிலும் மற்றவன் அது கணவனாகவே இருந்தாலும் டிரைவ் செய்யவிட்டுட்டீங்களே ரொம்பநாளா யோசித்து கொண்டு இருந்தேன் இல்லை அவள் தெளிவானவள் என்று காண்பித்துவிட்டீர்கள்
வர்ஷ் செம அவ பக்கம் நிதர்சனத்தின் டைலாக் பெண் என்பவளுக்கு எந்த தனிப்படட ஆசையும் இருக்க கூடாதா என்பதை அவளின் வாய் மொழியாய் நிக்கறீங்க MM


பாவம் தான் ஈஸ் அவனும் தெளிவா தான் பேசுறான் ஆனாலும் என்ன தவறுகள் செய்தான் என்பதை அவள் புட்டு புட்டு வைத்துவிட்டாள் நெத்தியடி திரும்பவும் ஈஸ்ஸுக்கு யாருக்காக யாருக்காக என்ற கேள்வி

எஸ் மீதி எல்லா விஷயத்திலும் அவளையே செய்யவைத்தவன் ஏங்க வைத்தவனிடம் இதையும் நீயே செய்ய வை என்கிறாள் அவனை விரும்புவதையும் செம

ஈஸ் சொல்ல வைடா பாவம் அவள் அவள் இல்லாமல் நீயுமில்லை உனக்கு வாழ்வுமில்லை நீயும் எதுவில்லாமல் ஆகிவிடுவாய் நொந்து போய்விடுவாய் உன் காதல் நிஜமென்றால் நிரூபிக்க உனக்கு பரீட்சை உன் முன்
நல்ல காலம் முரளியை நல்ல நண்பனாகவே காட்டியதற்கு நன்றி
MM
upload_2017-5-9_23-26-59.jpeg
 

umamanoj64

Well-Known Member
மல்லி நான்காவது பார்ட் போக ஐடியா வச்சு இருக்கீங்களா. ..இன்னும் பத்து எபி தான் இருக்கு ..:)

ஐஸ் பத்தி ஓரே வார்த்தை தான் கேட்டா...ஆட்டோ பாம் இல்ல வெடிக்கும்னு நினைச்சேன் :p

வர்ஷ் உணர்வுகளை இன்றைய அப்டேட்ல அருமையாக கொடுத்து இருக்கீங்க. .சூப்பர்ப் வர்ஷ். .
கவலைப்படாதே. . உன்னைய திரும்ப பழையபடி வர வைப்பான் நம்ம தல...பின்ன வீரசபதம் இல்ல எடுத்து இருக்கான் பய புள்ள :p.

ஒரு பாட்டிலில் குப்புற படுத்தாலும் அவளுக்கு போர்வை போர்த்தியே..அட அட..என்னே உன் அளப்பரியம்:D..உன்னைைய ஒருத்தர் கூட்டி
வந்தா இவர்!

ஜகன் அஸ்வின். ..
இன்னா செய்தாரை ஓருத்தல் ...குறளுக்கு எடுத்துக்காட்டு....கிரேட் தல..

மல்லி இன்னைக்கு அத்தியாயம் வசனம் செம சூடு பறந்தது இரண்டு பேர்க்கும நடுவில். .நீங்க சிறந்த வசனகர்த்தா. ..வசனம் கதைக்கு நல்ல ஷேப் கொடுக்குது...போர் அடிக்கல..திட்ட தோணல..கட்டிபிடி வைத்தியம் தான் தோணுது :)
 

aravin22

Well-Known Member
Hi mam


நாவல் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது,எங்களுக்கு நீங்கள் எவ்வளவு பகுதி தந்தாலும் சலிப்பு வராது, நான் உன்னை காதலிக்கறேன் என்பதை இடை விடாமல் கூறும் ஈஸ்வரும்,நான்உன்னுடைய கடந்தகாலத்தை மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன்,நான் ஒரு கெட்ட பெண்ணா என்று கூறும் வர்ஷினியும் , எப்போது இருவரும் காதல் & புரிந்துணர்வு என்னும் நேர் கோட்டில் பயணம் செய்யப்போகின்றார்கள், ஒருவரைப் பார்த்து ஒருவர் திமிராக தங்களுக்குள் சவால் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்,சவால் எப்படி வேண்டுமானாலும் முடியட்டும்,ஆனால் அவர்கள் எவ்வித சஞ்சலமின்றி வாழ்கையை வாழத்தொடங்கட்டும்,இவர்களின் இந்த திமிர்தான் ஒருவரை ஒருவர் நிறைய நேரங்களில் புரிந்து கொள்ளத்தவறியமைக்கு காரணம், இதற்க்குத்தான் சொல்வார்கள்,ஒரே உறைக்குள் இரு வாள்கள் இருந்தால் இப்படித்தான் ஒன்றோடு ஒன்று உரசி அதிக சேதத்தை விளைவித்துக்கொண்டேயிருக்கும்,எது எப்படியோ ஈஷ்வரின் அளவுகடந்த காதலை வர்ஷினி எந்தவித வண்ணமும் பூசாமல் உணரணும்,அதே நேரம் ஈஸ்வர் வர்ஷினியின் கடந்த கால வாழ்க்கையில் கிடைக்காத அனைத்தையும் ஒரு தாயைப்போல இருந்து வாரி வழங்கணும்.


நன்றி
Aravin22
 

ThangaMalar

Well-Known Member
So பெங்களூர் டீம் வாங்குறாங்க..
அவங்க தான் இப்போ சொதப்புறாங்க..
மேனேஜ்மென்ட்டும் சரியில்ல..

பெங்களூர் to சென்னை..
வீட்டுக்கும் சீக்கிரம் வந்துடுறாங்க..
 

Joher

Well-Known Member

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?
என் உயிர் பூவை எரித்தாய்?
முதல் நாள் பார்த்தாய்... உறக்கம் கெடுத்தாய்!
முறையா என்றேன், கண்கள் பறித்தாய்!
என் வலி தீர ஒரு வழி என்ன?
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?
(ஏன்)
நீ சூடும் ஒரு பூ தந்தால்,
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்!
உன் வாயால் என் பேர் சொன்னால்,
உன் காலடியில் கிடப்பேன்!
தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்!
தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்!
இரண்டில் ஒன்று சொல்லிவிடு!
இல்லை நீயே கொள்ளியிடு...!
(ஏன்)
நோகாமல், பிறர் காணாமல்,
உந்தன் ஆடை நுனி தொடுவேன்!
என்ன ஆனாலும், உயிர் போனாலும்,
ஒரு தென்றல் என்றே வருவேன்!
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்!
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!
இமயம் கேட்கும் என் துடிப்பு!
ஏனோ உனக்குள் கதவடைப்பு!
(ஏன்)​
 

MythiliManivannan

Well-Known Member
சூப்பர் பாத்திமா..
முரளி பொறுப்பான அண்ணனும், தோழனும்..
ஜகனுக்கும், அஸ்வினுக்கும் பொறுப்பு, தலயின் பெருந்தன்மை..
இனி நடப்பது எல்லாம் நல்லதை நோக்கியே...
இந்த பொறுப்பான அண்ணனைத்தான் precap-ல் போட்டு வறுத்தது;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top