E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
*ராவணனிடம் பவ்யமாக உபதேசம் கேட்டான் ராமன்.*
*நிஜம்தான்..!!*
*
போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!*
*ராவணன் உபதேசித்தான்...*
*1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.*
*2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.*
*3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.*
*4. நான், அனுமனை சிறியவன் என்று எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.*
*5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.*
*6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.*
*ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.*
*எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு அன்பர்களே..!!*
*பணிவும் அன்பும் எப்போதும் நம்மை உயர்த்தும்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*


 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு அரசர் போதனை வேண்டி புத்தரை காண வந்தார்.அப்போது வெள்ளத்தில் மாட்டிகொண்டு தத்தளிந்தார்.
அவர் அங்கேயே புத்தரை நினைத்தார்.
தூரத்தில் ஆற்று வெள்ளத்தில் ஒரு பிணம் தன்னை நோக்கி வருவதை கண்டார்.
அருகில் வந்த உடன் தான் தெரிந்தது வந்த பிணத்துக்கும் தன் முகம் இருப்பதை கண்டு மிகவும் பயந்து போனார்.
அப்போது அந்த பிணத்துடன் அரசரின் பேரும், புகழும், செல்வமும், படையும், பலமும், அதிகாரமும், அரசாட்சி திறமும்,
வல்லமையும், சேர்ந்து போவதை பார்த்தார்.
அவைகள் யாவும் அழுகிய நிலையில் தன் மேல் மோதி மிகவும் நாற்றத்துடன் சென்றது.
அதை கண்ட அரசர் அங்கிருந்து கரைக்கு வந்தார்.
வந்துடன் தன் ஆணவம், மற்றும் அகம்பாவம், தான் ஒரு அரசன் என்ற நிலை மாறி தான் ஒரு ஞானியாக திகழ்ந்தார்.
புத்தரை காண சென்ற அரசர் புத்தரை காணும் முன்பே ஞானம் பெற்றார்
எதுவெல்லாம் என்னுடையது என்று எண்ணி இத்தனை நாள் அரசர் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தாரோ........
அதுவெல்லாம் என்றோ ஒரு நாள் அழுகி நாற்றமெடுத்து நம்மை விட்டு போகும் என்ற ஞானம் பிறந்தது
அதுவாக போகும் முன் நாமே கலையே வேண்டும் என்ற ஞானம் பெற்று தன்முனைப்பு நீங்கி ஞானியாக மனநிறைவுடன் வாழ்ந்தார்
நமக்கு அதே நிலை தான்
ஆக ஒருவன் ஞானம் அடைய வேண்டும் என்றால்,
ஞானியைக் கண்டு தான் ஞானம் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
தன்னையும், தன் உடமைகளையும் மாயை என்று புரிந்து கொண்டு இழக்க தயாராகும் போதே அவன் ஞான நிலைக்கு தயாராகிவிட்டான்என்பதே உண்மை
மாயையும், பற்றும், ஞானமும் அனைத்தும் நம்மிடத்தே தான் இருக்கிறது
"
விட வேண்டியதை விட்டுவிடாமல் பெற வேண்டியது அங்கேயே இருப்பது தெரிய வரும்"



 

murugesanlaxmi

Well-Known Member
இதை ஒரு பெண்ணின் தகப்பனாக சொல்கிறேன். ஒரு தாயின் மறுபக்கம்.
ஆசை
ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.....
நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது...
திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை
,
இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ...
சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன
அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க....
இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில்
முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள்....எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்.......
அவனுக்கு காபி ஸ்டோராக இருந்தாதாம்மா புடிக்கும் !நான் போட்டுதர்றேன் கொண்டுபோய் கொடு!...
மருமகள் காபியை கொண்டுசென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள
, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்,....
பின் கணவனுக்கு பறிமாறல்,
கை கழுவ தண்ணீர் தருதல்,
அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு,
எப்போதும் மகனுடனே இருப்பது,
மகனும் அவளுடனே இருப்பது
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்....
இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து

காப்பி கொடுப்பதுசாப்பாடு பறிமாறுவது,
துணி துவைப்பது, காத்திருப்பது,
கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??......
அவன் என் மகன்,
முதல் உரிமை எனக்குதான்,
என்று நினைக்கத்துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?.....
என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான பொஸஸிவ்நஸ்ஸை புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமை சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் எதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடிமுதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத்தொடங்கிவிடும்......
அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது

இதை எப்படி சரிசெய்வது?....
இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது,....
திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்......
அப்படி விதைத்தால்
, அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!.....
ஆனால் அப்படி எந்த மருமகளும்
செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது....
இதனால்
25 வருடமாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது...
Possessivenessம்அடிப்படைஅளவுக்கதிகமான அன்புதான்....
அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்....
பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்.......
அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்....
அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன்

அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்....
உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை

உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....
உங்களுக்கு கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!..


 

murugesanlaxmi

Well-Known Member
கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டு விட்டு, ஆசையை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்ட பட்டினத்தாரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது.
ஒருநாள் பட்டினத்தார் வயல் வரப்பில் தலையை வைத்து படுத்திருந்தார்.
அந்த வழியாக இரண்டு பெண்கள் நடந்து வந்தார்கள். அவர்களில் ஒருத்தி
, "யாரோ மகான் போல் உள்ளது" என்றபடி அவரை வணங்கி, வரப்பிலிருந்து இறங்கி கீழே நடந்தாள்.
மற்றொருத்தியோ
, "தலையணை வச்சு தூங்குற சுகம் மாதிரி வரப்புல படுத்து தூங்குறான்.
ஆசை பிடிச்சவன். இவனெல்லாம் சாமியாரா
?" என கடுமையாக தாக்கி பேசினாள்.
அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்தார் பட்டினத்தார்.

"இந்த அறிவு இது நாள் வரை நமக்கு வரவில்லையே!" என நினைத்து வரப்பிலிருந்து இறங்கி, கீழே தலையை வைத்து படுத்தார்.
சற்று நேரம் கழித்து
, மீண்டும் அந்த இரண்டு பெண்கள் அதே வழியில் வந்தனர்.
கீழே படுத்திருந்த பட்டிணத்தாரை பார்த்து
, முதல் பெண் "நீ சொன்னதை கேட்டு, கீழே இறங்கி படுத்துட்டாரு. இவர் பெரிய மகான் தான்" என்றாள்.
ஆனால்
மற்றொருத்தி, "தன்னைப் பத்தி யாரு என்ன பேசுறாங்கன்னு கேட்டு, அதைப் பத்தி கவலைப்படுறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?" என்றாள். இதைக் கேட்ட பட்டினத்தாருக்கு தலை சுற்றியது.
நாம் எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும்.
தரமானவர்களின் விமர்சனங்களை மதிக்க வேண்டும்.
நாம் பாதிக்கப்பட வேண்டும் என்றே பிறர் செய்யும் விமர்சனங்களால் நாம் பாதிக்கப்படக் கூடாது.
அப்படிப்பட்ட விமர்சனங்களை புறக்கணியுங்கள்.



 

murugesanlaxmi

Well-Known Member
நம்மை ஆச்சரியப்பட வைக்கும்
சில மனோதத்துவ உண்மைகள்
குறித்து காண்போம்.

3
நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்

உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.


ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.


சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.


முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.

பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.


இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.


ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.


ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?


உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்












 

murugesanlaxmi

Well-Known Member
உங்களை பிடிக்கவில்லை என்று ஒருவர் சொன்னால், நீங்கள் யார் சொல்வதற்க்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு வாழாமல் நீங்கள் நீங்களாகவே வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.
 

fathima.ar

Well-Known Member
நண்பர்களே, என் மொக்கை ஜோக்குகள், மொக்கை பதிவு இல்லாமால் நிம்மதியாக புதன் கிழமை காலை வரை இருங்கள். ஆத்தா நான்.ஊருக்கு போறேன்

Happy journey bro
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top