வண்ணங்களின் வசந்தம் -20

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_2727756207555081.jpeg


அத்தியாயம் -20

தோழிகள் பேசியதை கேட்ட பூஜாவும் “கண்டிப்பா உங்களுக்கு இல்லாமையா, எனக்காக நீங்க எவ்வளவு பெரிய ரிஸ்க் எல்லாம் எடுத்து இருக்கீங்க, ‘நண்பேன்டா’” என்று வராத கண்ணீரை துடைத்தபடி கூறி கொண்டிருக்கும் போதே அங்கு வந்த அர்ஜுன் “இவங்க என்ன பண்ணுனாங்க” என்று கேட்டான்.உடனே திருதிருவென விழித்து “இல்ல இல்ல…….” என்று திணறியவள் பின் “உன் கூட டான்ஸ் ஆட, அவங்க தான் என்னை என்கரேஜ் பண்ணாங்க அதனாலதான்” என்று சமாளித்தாள்.

அர்ஜுனும் “ அப்படியா அப்ப ட்ரீட் குடுக்க வேண்டியதுதான்” என்றவன் பின் குறுஞ்சிரிப்புடன் பூஜாவை பார்த்து “ட்ரீட் உன் பிரண்டுங்களுக்கு மட்டும்தானா, எனக்கு ட்ரீட் இல்லையா” என்று அவள் இதழ்களை பார்த்து கொண்டே கேட்க, தன்னவனின் பார்வையில் சிவந்தவள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க,

மதுவோ, ம்கூம்…… ஆரம்பிச்சுட்டாங்களா ஒரு சின்ன கேப் கிடைச்சாலும் இதுங்க காதல் படகை ஓட்ட ஆரம்பிச்சுருதுங்க நாலு சின்ன புள்ளைங்க இருக்காங்கங்ற எண்ணம் கொஞ்சமாவது இருக்கா, என்று மனதில் நினைத்தவள் வேகமாக இருமி இருவரையும் நடப்பிற்கு கொண்டு வந்தாள் என்றால்,

ப்ரீத்தியோ, “நோ….. இது ஒன்லி கேர்ள்ஸ் ஹங்கவுட் பாய்ஸ் நாட் அளவுட்” என்ன அபி” என்றாள்.

அவள் கேட்டவுடன் மூவரின் பார்வையும் அபியை நோக்கி திரும்பியது, அவள் மெல்லிய சிரிப்புடன் “ஆமாம்” என்றதோடு முடித்துக்கொள்ள, அடுத்து அவர்களின் பார்வை சூர்யாவிடம் சென்றது.

அவளோ “எனக்கும் இங்கு நடப்பதற்கும் சம்மந்தம் இல்லை” என்ற நிலையில் இருந்தாள். அவளின் அமைதியை அனைவரும் சந்தேகமாக பார்க்க, அவள் காதருகே குனிந்த அபி, “நார்மலா இரு, உன்னை கவனிக்கறாங்க பாரு”என்றாள்.

அபியின் குரலில் மற்றவர்களை நிமிர்ந்து பார்த்தவள் அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து கண்களை எட்டாத சிரிப்பை உதிர்த்து “ஆமாம்” என்னும் விதமாக தலையை ஆட்டி மட்டும் வைத்தாள்.

அர்ஜுனும் “சரி சரி பாத்து பத்திரமா போயிட்டு வாங்க” என்க, பூஜாவோ அவனிடம் கையை நீட்டியவள் “தா” என்பது போல் சைகை செய்ய அவனுக்கு புரிந்து விட்டது அவள் என்ன கேட்கிறாள் என்று. தலையிலடித்துக் கொண்டவன் “இதுக்கு மட்டும் வந்துரு” என்று கூறியபடி தனது பர்ஸில் இருந்து பணத்தை எடுக்க, அவளோ அப்படியே அதை பிடிங்கியவள் தனது கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.

பூஜாவின் செயலில் பதறியவன் “அடியே கொஞ்சமாவது, எனக்கு காசு கொடுத்துட்டு போ, எல்லாத்தையும் நீயே எடுத்துட்டு போயிட்டா, நான் என்ன பண்றது” என்று கேட்க, அவளோ சோகமாக முகத்தை மாற்றியவள் “அப்போ எனக்கு இந்த காசுல உரிமை கிடையாதா.நா யாரோ தானா” என்று கேட்டாள்.

சூர்யாவும் தோழிகளுக்காக யோசித்தவள் தன்னை சாதாரணமாக காட்ட எண்ணி எப்போதும் போல் அர்ஜுனிடம் வம்பிழுக்க ஆரம்பித்தாள் பூஜாவை பாவமாக பார்த்தவள் “இப்படி ஒரு கஞ்சூஸ்கிட்ட மாட்டிக்கிட்டியேடி” என்று வராத கண்ணீரை துடைப்பது போல் நடித்தவள் மேலும் “வானத்துல இருக்கும் மேகம் எங்க பூஜா மனசு முழுக்க சோகம்” என்று சோக கீதம் பாடினாள்.

அதில் கடுப்பான அர்ஜுன் “போதும்” என்பது போல் சைகை செய்தவன் “மொத்தமா பர்ஸை வேணாலும் வச்சுக்கோங்க ஆனா, தயவுசெஞ்சு இந்த மாதிரி டயலாக் எல்லாம் பேசி கொல்லாதீங்க” என்று கூறிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்து சேர்ந்தான் திருனேஷ்.

அவனை கண்டவுடன் சூர்யா கண்களில் அலைப்புறுதலுடன் அவனுக்கு ஏதும் அடி பட்டிருக்கிறதா என்று பார்த்து எதுவும் காயம் இல்லை என்ற பிறகுதான் நிம்மதி பெரு மூச்சு விட்டாள்.

இது எதுவும் தெரியாத பூஜா “அடடே நம்பர் டூ அடிமை வந்தாச்சு” என்று கூறியபடி அவனிடமும் கைநீட்டினாள்.திருனேஷ் ஒன்றும் புரியாமல் விழிக்க, அர்ஜுன்தான் “உன்னோட பர்ஸ்ச கேக்குறாங்க குடு என்றான்.திருவோ “நான் ஏன் கொடுக்கணும் அது எல்லாம் முடியாது” என்றான் .

உடனே அர்ஜுன் தயவு செஞ்சு அப்படி எல்லாம் சொல்லாத அப்புறம் டயலாக் சொல்றேன், பீல் பண்றேன்னு ஏதாவது மொக்கையா ஒரு டயலாக் சொல்லி நம்ம கழுத்த அறுப்பாங்க. அந்த கொடுமைய கேக்கறத்துக்கு நீ பர்ஸ்ச கொடுத்திட்டே போயிடலாம் என்று சொன்னான்.

அபியும் சூர்யாவை கண்காட்டி “எங்க ஹெல்ப் வேணும்னா பர்ஸ்சை குடுங்க,இல்லன்னா போயிட்டே இருங்க” என்றாள்.

திரு இவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் கவனம் முழுதும் கண்களை எட்டா சிரிப்புடன் நின்றிருந்த சூர்யாவை வட்டமிட, தனது பர்ஸை எடுத்தவன் அதை கொடுக்கும் சாக்கில் அவள் அருகில் சென்று யாரும் அறியா வண்ணம் அவள் கைகளை அழுத்தி ஆறுதல் படுத்தியபின், பூஜாவின் கையில் பர்ஸை வைத்துவிட்டு நகர்ந்தான்.

திருவின் ஒற்றை ஆறுதலான தொடுகையே சூர்யாவின் அவ்வளவு நேர அலைப்புறுதலை சரி செய்ய போதுமானதாக இருந்தது.அவன் கையின் அழுத்தத்தில் மனதில் ஏற்பட்ட அமைதியுடன் அவள் பார்க்க அவனோ கண்களை மூடி திறந்து தான் பார்த்து கொள்வதாக சைகை செய்தான்.

அதன் பின் தோழிகள் அனைவரும் சிரித்தபடியே அங்கு அருகில் இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றனர்.கல்லூரியை விட்டு வெளியே வந்த நேரம் அவர்களை ஆதி சென்ற கார் கடந்து சென்றது. அப்போது ஆதியின் கண்கள் தோழிகளுடன் சிரித்து பேசி கொண்டிருந்த அபியின் முகத்தை பார்த்த பின்தான் மனம் லேசானது போல் உணர்ந்தவன், அவளின் சிரித்த முகத்தை மனதில் பதித்து கொண்டு சென்றான்.

அனைவரும் அருகில் இருந்த ஒரு பிரபலமான உணவகத்திற்கு வந்து அமர்ந்து வெகுநேரமாகியும் ஆர்டர் எடுக்க யாரும் வராமல் இருக்க, கோபம் கொண்ட மது “என்னடி இது, சரியான டுபாக்கூர் ஹோட்டலா இருக்கும் போல, நாம வந்து பத்து நிமிஷம் ஆச்சு ஆனா ஆர்டர் எடுக்க எவனும் வரல.இதுக்கு காலேஜ் கேண்டீன்லயாவது ஏதாவது சாப்பிட்டு இருப்பேன்.இங்க வந்து சாப்பிடலாம்னு பார்த்தா எவனையும் காணோம், இப்ப எனக்கு பசிக்குது” என்று சொல்ல,
பூஜாவும் “அட இருடி ஹோட்டல் ஃபுல்லா இருக்கு அதான் டிலே ஆகுது, வருவாங்க வருவாங்க” என்றாள்.மதுவோ சலிப்பான குரலில் “என்னத்த வருவார்களோ போ” என்று திரும்ப ஹோட்டல் சமையல் அறையில் இருந்து ஒருவர் வருவதை பார்த்தவள் “இவங்க வர மாட்டாங்க நாமே களத்துல இறங்கிட வேண்டியதுதான்” என்று முடிவெடுத்தவள், சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு “டேய் தம்பி இங்க வாப்பா”என்றாள்.

அந்த நபரோ யாரை கூப்பிடறாங்க என்ற யோசனையுடன் திரும்பி திரும்பி பார்க்க மதுவோ “எப்பா தம்பி உன்னைதான்ப்பா ப்ளு ஷர்ட் இங்க வா” என்க.அவனும் அவர்கள் அருகில் சென்றான்.அவனை பார்த்த மதுவின் மனதுக்குள்ளோ “பரவாயில்லையே இந்த ஹோட்டல்ல சர்வர் எல்லாம் கூட அழகா இருக்காங்க” என்று எண்ணியபடியே “ஏம்பா தம்பி அதென்ன எல்லாத்துக்கும் ஆர்டர் எடுக்குறீங்க, எங்க டேபிளுக்கு மட்டும் வர மாட்டிக்கிறீங்க,அவங்க மட்டும் தான் பணம் குடுக்கறாங்களா, நாங்க குடுக்கலையா” என்று கேட்க

அந்த நபரோ “இல்ல மேடம்” என்று ஆரம்பிக்கும்போதே மது அவனைப் பேச விடாமல் தடுத்தவள் “பெரியவங்க பேசும்போது இடைல பேசக்கூடாதுனு உனக்கு தெரியாதா மேன், நீயே இப்படி இருக்கியே உன்னை வச்சு வேலை வாங்கற அந்த கூமுட்டை எப்படி இருப்பானோ போ, கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல, சீக்கிரமா ஆர்டர் எடுங்க உங்க ஹோட்டலுக்கு வந்தா இப்படி தான் சாப்பாடு போடாமல் கொடுமைபடுத்துவீங்க போல, நான் அப்பவே இவக்கிட்ட சொன்னேன் இது ஒரு டுபாக்கூர் ஹோட்டல் இங்க வேண்டான்னு கேட்டாளா, இங்கதான் நான் வெஜ் நல்லா இருக்கும்னு கூட்டிட்டு வந்துட்டா” என்று கூற,

அந்த நபரோ “சாரி பார் தே இன்கன்வெனியன்ஸ் மேடம்.நான் போய் சர்வர வர சொல்றேன்”என்று செல்ல முயல அவனை தடுத்தவள், அப்போ நீ சர்வர் இல்லையா, சூப்பர்வைசரா பரவால்லை சூப்பர்வைசரா இருந்தாலும் ஆர்டர் எடு மேன் எங்கள இவளோ நேரம் வெயிட் பண்ண வச்சல, போ மேன் போய் நோட் பேட் எடுத்துட்டு வந்து அக்கா சொல்றதெல்லாம் நோட் பண்ணிக்க பாப்போம்” என்று கூற அந்த நபரும் “சரி மேடம் உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க” என்றான்.

அப்போது வேகமாக அவனிடம் வந்த வேறு ஒரு சர்வர் “சார்….நீங்க போங்க நான் இந்த டேபிள்ள பார்த்துக்கிறேன்” என்று சொல்ல, அவனோ ஹோட்டல்க்கு வந்த கஸ்டமர இப்படிதான் வெயிட் பண்ண வைப்பீங்களா”என்று யாருக்கும் கேட்கா வண்ணம் கடிந்து கொள்ள, அவரோ “இல்ல சார் கும்பல் அதான்… “ என்றான்.பின் அவனே “நீங்க போங்க நானே இவங்கள பார்க்கிறேன்” என்று விட சர்வரோ பயத்துடனேயே அங்கிருந்து சென்றான்.

அந்த சர்வர் சென்ற பின் முதலாமானவனை பார்த்த மது அப்படி என்ன ரகசியம் பேசுனீங்க, சரி ஏதோ பேசுங்க எனக்கு சோறுதான் முக்கியம் எழுதிக்கோப்பா “ரெண்டு பிளைட் மட்டன் பிரியாணி” என்று ஆரம்பித்த உடனேயே, சூர்யா “ஏய் இன்னிக்கு வெள்ளி கிழமைடி உங்க வீட்ல இன்னைக்கு நான் வெஜ் சாப்பிட மாட்டீங்களே” என்று கூற,

அவளை முறைத்துப் பார்த்த மது “அது வீட்ல இது ஹோட்டல்ல இங்க நான் என்ன வேணா சாப்பிடுவேன் எவனும் என்னை எதுவும் கேட்க முடியாது.நீ கொஞ்சம் வாயை மூடு” என்று கூறியவள் அந்த நபரிடம் திரும்பி “என்ன சொன்னேன்” என்று கேட்க அந்த நபரோ “ரெண்டு மட்டன் பிரியாணி” என்று கூறினார்

“ஆமா…ஆமா அப்புறம் கிரில் சிக்கன் ஃபுல், சிக்கன் சுக்கா, மீன் வகைகள்ள பொரிச்சது இருக்கா” என்று கேட்க அந்த நபரும் “இருக்கு” என்பது போல தலையசைத்தான் “அப்ப அது ரெண்டு ப்ளேட் அப்புறம் பட்டர்ன் நான் அதுக்கு சைடிஸ் என்று இழுத்தவள் அவனிடமே ஆமா அதுக்கு எந்த சைடிஸ் உங்க ஹோட்டல்ல நல்லா இருக்கும்” என்று கேட்க அந்த நபரும் “பன்னீர் பட்டர் என்று ஆரம்பிக்கும் போதே வாயில் அடி வாய்ல அடி என்ன வெஜ் பேரு சொல்ற, நான் வெஜ் சொல்லு” என்று கேட்க அவனும் “பட்டர் சிக்கன் நல்லா இருக்கும்” என்றான்.

“ஓகே ரெண்டு நான், ஒரு பட்டர் சிக்கன் கூறியவள் வேற எதுவும் விட்டுட்டன” என்று யோசிக்க பூஜா “அந்த சவர்மா…”என்று இழுக்க, உடனே அவளை பார்த்து சிரித்தவள் “நண்பேன்டா நல்ல வேலை நியாபகபடுத்துன சவர்மா ரெண்டு போதும் அவ்வளவுதான்”என்க, இப்போது ப்ரீத்தி “அந்த முட்டை” என்று கூற “அட ஆமால்ல மறந்துட்டேன்” என்றவள் “தம்பி அந்த மட்டன் பிரியாணில இரண்டு முட்ட இருக்கணும் மறந்துடாத, ரெண்டு” என்று அழுத்திக் கூற அவனும் “மட்டன் முட்டை போடாதுங்க” என்று பொறுமையை இழுத்து பிடித்தபடி கூற, அவளோ அவனை முறைத்தவள் “இல்லனா பக்கத்துல கடன் வாங்கி வை மேன். பட் ஐ நீட் முட்டை” என்க, அவனும் “சரி” என்றுவிட்டு அங்கிருந்த நகர முனைய, அவனை சொடக்கிட்டு அழைத்தவள் “என்ன அவங்ககிட்ட எல்லாம் ஆர்டர் எடுக்காம போறே” என்று கேட்க,

அவனோ “நீங்கதான் எல்லாத்துக்கும் சொல்லிட்டீங்களே” என்று புரியாமல் கேட்க, அவனை நக்கலாக பார்த்த மது “தம்பி நான் சொன்னது எனக்கு மட்டும்தான்” இவங்க நாலு பேரும் என்ன பண்ணுவாங்க நான் சாப்பிடுவதையே பார்த்துட்டு இருப்பாங்களா, அவங்க கிட்டயும் கேளு பா, உன்னை சொல்லி தப்பில்லை உன்னை வேலைக்கு வச்சவன சொல்லணும்” என்று சொல்ல,

அவனோ அவளை முறைத்தவன் இது அத்தனையும் இந்த பொண்ணுக்கு மட்டுமா எவன் இந்த பொண்ண கட்ட போறானோ பாவம் அவன் சமைச்சுப்போட்டே அவன் வாழ்க்கை முடிஞ்சுடும்”என்று நினைத்துக் கொண்டவன் மற்றவர்களிடமும் அவர்களுக்கு தேவையானதை கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.

உள்ளே சென்ற நேரம் அவன் எதிரில் பணிவாக வந்து நின்றான் ஒருவன் அவனை பார்த்து கோபம் கொண்டவன் “என்ன சரவணன் இது, அவங்க ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிட்டு இருந்திருக்காங்க, அதை பாக்கணும் உங்களுக்கு தோணலையா.என்னதான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும், இப்படியே போனா,சீக்கிரம் இந்த ஹோட்டல்ல இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான்” என்று கூற,

சரவணன் என்று சொல்லப்பட்டவனோ “சாரி சார் இனிமேல் இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்”என்று கூற, அவனும் “சரி சரி அந்த டேபில்ல ஆர்டர் எடுத்துட்டேன் இந்தாங்க லிஸ்ட் எல்லாம் எடுத்து வைங்க நானே செர்வ் பண்றேன்.நீங்க அங்க போய் சாங் ப்ளே பண்ணுங்க” என்க,

அவரோ பதறி “சார் நீங்கள் எங்களுக்கு முதலாளி.நீங்க போயி” என்று தயங்க, அதற்கு முதலாமானவனோ சிறு சிரிப்புடன் “கஸ்டமர்ஸ்தான் இங்க முதலாளி அவங்களுக்கு தேவையானது உடனே கிடைச்சாலே போதும்,நம்ம பெயர் என்னைக்கும் நிலையாக நிற்கும் புரியுதா” என்றவன் அங்கிருந்து நகர, அவனையே வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் அந்த ஊழியர். அவன் பிரபாகரன்.அந்த ஹோட்டலின் உரிமையாளன். தமிழ்நாட்டின் பிரபலமான ‘சன்சயின் செயின் ஹோட்டலின்’ ஓனர்.

ஆர்டர் எடுத்தவன் சென்று அடுத்த நிமிடம் ப்ரீத்தியின் முன் குலாப் ஜாமுன் நிறைந்த கிண்ணம் வைக்கப்பட்டது.ஏற்கனவே பசியில் இருந்தவளும் யார் கொண்டு வந்தார்கள் என்பதை கூட பார்க்காமல்”ஹை குலாப்ஜாமுன்” என்று சொல்லி எடுத்து சாப்பிட ஆரம்பிக்க, அவள் சாப்பிடுவதையே ரசனையாக பார்த்திருந்தான் அவன்.

ப்ரீத்தி சாப்பிடுவதை பார்த்த மற்றவர்கள் இவளுக்கு மட்டும் எங்க இருந்து குலாப்ஜாமுன் வந்தது என்று அருகில் பார்க்க அங்கு ஒருவன் ப்ரீத்தி சாப்பிடுவதையேவைத்த கண் எடுக்காமல் ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.

அவனை கண்ட சூர்யா பூஜாவிடம் “என்னடி இந்த ஹோட்டல்ல இருக்கவங்க எல்லாம் ஒரு மார்க்கமா இருக்காங்க” என்று பேசி கொண்டிருக்கும்போதே ப்ரீத்தியை பார்த்த மது “ஹேய் அந்த குலாப்ஜாமுன இங்க குடு, இது ஃப்ரீதானே, இன்னொரு பிளேட் கொண்டு வா மேன்” என்று சொல்ல அவனும் தலையாட்டிவிட்டு சென்றுவிட்டான்.அவன்தான் கிருஷ்ணா சன் ஷைன் ஹோட்டலின் பார்ட்னர்.பிரபாகரனின் நண்பன்.

இப்படியே இவர்களின் ட்ரீட் மதுவின் பசியிலும் ப்ரீத்தியை பார்த்து கிருஷ்ணாவிட்ட ஜொல்லிலும் கலகலப்பாக முடிந்தது.

அடுத்தநாள் சனி கிழமை விடுமுறை என்று அனைவரும் அவரவர் வீட்டில் இருந்தனர்.அபியின் அம்மா அப்பாவிற்கு அன்று திருமண நாள் என்பதால் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினர்.

அபி மற்றும் அவளது தாய், தந்தை கோவிலுக்குள் சென்ற அதே நேரம் ஆதியும் அவனது தந்தை இராமச்சந்திரன் சக்ரவர்த்தியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அவனது தாயின் பிறந்த நாளான இன்று அவர் தற்போது இல்லாவிட்டாலும் எப்போதும் செய்வது, அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான்.

ஆதி தந்தையை மர நிழலில் அமர வைத்துவிட்டு,அன்னதானம் நடக்கும் இடத்தை பார்த்துவிட்டு வருவதாக சென்றான்.செல்லும் அவனை சாமி கும்பிட்டு கொண்டிருந்த அபி பார்த்துவிட, உடனே அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தந்தையிடம் சொல்லிவிட்டு ஓட, “அடியே நின்னு சாமி கும்பிட்டு போ” என்ற அவள் தாயின் குரல் காற்றில்தான் கரைந்து போனது.

ஆதியை தேடி ஓடியவள் அந்த கோவிலையே சுற்றி வர, அவனோ அன்னதானம் நடக்கும் இடத்திற்கு சென்று பார்த்து விட்டு, தந்தையை தேடி வந்த நேரம் அவர் யாருடனோ பேசுவதை கண்டு அருகில் சென்றான்.

இராமச்சந்திர சக்ரவர்த்தி, “என்ன அரவிந்தன் கோவிலுக்கு எல்லாம் வந்துருக்கீங்க, உங்கள காக்கி ட்ரெஸ்லயே பார்த்துட்டு இப்போதான் கலர் டிரஸ்ல பார்க்கறேன்”என்றார்.

அரவிந்த், “என்ன பண்ண சொல்லறீங்க சக்ரவர்த்தி சார், போலீஸையே அரெஸ்ட் பண்ணுன நாள் இன்னைக்குதான் அதனால வந்தே ஆகணும்னு என்னைய இழுத்துட்டு வந்துட்டாங்க” என்று சொல்லி சிரித்தவர் பின், இவங்கதான் என்னை அர்ரெஸ்ட் பண்ணுனவங்க” என்று சொல்லி அபியின் தாய் பிருந்தாவை அறிமுகபடுத்தியவரின் பார்வை மகளை தேடிவிட்டு காணாமல் சக்கரவர்த்தியிடம் பேச ஆரம்பித்தார்.
தந்தையின் அருகில் வந்த ஆதி “அப்பா”என்க, அவனை அருகில் அழைத்தவர் “இவன் என்னோட மகன் ஆதித்ய சக்கரவர்த்தி, இவன்தான் இப்போ கம்பெனியை பார்த்துட்டு இருக்கான்” என்று சொன்னவரின் குரலில் தன் மகனைபற்றிய பெருமிதம் அப்பட்டமாக தெரிந்தது.

ஆதியின் திறமையைப்பற்றி அறிந்த அரவிந்தும் வெற்றிகரமாக அவன் பிஸ்னஸ் செய்வதற்காக கை கொடுத்து தன் வாழ்த்தை சொன்னவர் பொதுவாக பேசி கொண்டிருந்தார்.இவர்கள் பேசட்டும் என்று நினைத்த ஆதி சாமி கும்பிட்டுவிட்டு வருவதாக சொல்லி சென்று பிரசாதமான குங்குமத்தை வாங்கி வந்து தந்தையின் நெற்றியில் வைத்தவன் சிறு பிள்ளை போல் அவரையே தனக்கும் வைக்க சொல்லிவிட்டு மீதியை அருகில் இருந்த தூணில் கொட்டி வைத்தான்.

அந்த தூணின் ஒரு புறம் ஆதி நின்றிருக்க, அவனை தேடி அலைந்த அபி ஆதியை காணாமல் வாடிய முகத்துடன் தந்தையிடம் வந்தாள்.

அவள் வருவதை பார்த்த அரவிந்தன், “இங்க வாம்மா இவ என்னோட பொண்ணு அபி” என்று அருகில் நின்ற சக்கரவர்த்தியிடம் அறிமுகபடுத்தியவர், அவளிடம் திரும்பி “என்னடா யாரையோ அவசரமா பார்க்க போனியே, அவங்கள பார்த்துட்டியா” என்று கேட்டார். அவளோ கவலையான குரலில் “இல்லப்பா அன்னைக்கு மாலுல ஒருத்தர தப்பா நினச்சு திட்டிட்டேன், அவரைதான் பார்த்தேன் சரி போய் மன்னிப்பு கேட்டுடலாம்னு போனா அவரை காணும்.ரொம்ப நாளா அவரை பார்க்க முடியல இன்னைக்காவது சாரி சொல்லிடலாம்னு பார்த்தேன் போய்ட்டாரு போலப்பா”என்றாள்.

அரவிந்த், “என்னமா நீ எத்தன முறை சொல்லி இருக்கேன், பொறுமையா இருனு.கோவம் வந்தா பொறுமை பல மயில் தூரம் போயிடுது” என்றார்.

அபி சொல்வதை கேட்ட ஆதிக்கு இந்த குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே என்ற எண்ணம் வர போனை பார்ப்பது போல் தூணின் பின் புறம் இருந்து லேசாக விலகி பார்த்தவனின் முகம் தவ்சன் வாட்ஸ் பல்பு போல் எரிய ஆரம்பித்தது அங்கு நின்றிருந்த அபியை கண்டு.

பச்சை நிற தாவணி பாவாடையில் கண்ணுக்கு பசுமையாக இருந்தவளை தன்னை மறந்து பார்க்க ஆரம்பித்தான்.அவளின் உச்சி வகிட்டில் இருந்து பிறை நெற்றி, அளவான புருவம், கயல்விழி கண்கள் என்று அணு அணுவாக ரசித்தவனின் பார்வை அவள் இதழ்களில் மையம் கொண்டது.ஒரு நிமிடம் அங்கேயே தேங்கி நின்ற அவனது பார்வை மேலும் கீழ் செல்ல முனைந்த சமயம் அரவிந்தனின் குரல் காதில் விழுந்து அவனை நடப்பிற்கு கொண்டு வந்தது.

உடனே தன் தலை முடியை சமன்படுத்தி கொண்டவன், “வசியக்காரி வாசியக்கரி என்ன கவுக்கவே அந்த கடவுள் இவளை அனுப்பிருக்காரு போல, “ச்ச….. இப்படியா இருக்க இடத்தை மறந்து பார்ப்பேன்” என்று ஒரு பக்க மனம் சொல்ல, மறு பக்க மனமோ “உன் மேல தப்பில்லடா பச்ச பசேல்னு பசுமையா வந்து நின்னா நீ என்ன பண்ணுவ” என்று வாதிட்டு கொண்டு இருந்தது.

அபியிடம் பேசிய அரவிந்த் சக்ரவர்த்தி குடும்பத்திடம் திரும்பி, “இவ என்னோட பொண்ணு அபி.மெடிக்கல் படிக்கறா, ரொம்ப நல்ல பொண்ணுதான் ஆனா கோபம் வந்துட்டா ரொம்ப ரொம்ப கெட்ட பொண்ணு யார இருந்தாலும் லெப்ட் ரைட் வாங்கிடுவா அதே சமயம் தப்பு பண்ணிட்டோம்ன்னு தெரிஞ்சா அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கற வரைக்கும் அவங்களையும் மறக்க மாட்டா, எங்களையும் நிம்மதியா விட மாட்டா புலம்பி புலம்பி ஒரு வழி ஆக்கிடுவா, இன்னைக்கு அந்த புண்ணியவான் கண்ணுல பட்டா நாங்க தப்பிச்சுடுவோம்னு நினைச்சேன் எங்க.இன்னைக்கும் இவ புலம்பல் கேட்கணும்னு இருக்கு” என்று சொல்ல, அபியோ முன்னால் நின்ற இராமச்சந்திரனை பார்த்து வணக்கம் சொன்னவள், தந்தை தன்னை கிண்டலடிப்பதை உணர்ந்து அவரை முறைக்க, அவரோ “இங்க பார்த்து ஒன்னும் ஆக போறது இல்லை போமா போ போய் அந்த ஜீவனை தேடு.தேடி சாரி சொல்லி இன்னைக்காவது எங்களுக்கு லீவு குடு” என்றார்.

இராமச்சந்திரனை பார்த்து அசடு வழிய சிரித்தவள் தந்தையை பார்த்து வாயிற்குள் முணுமுணுத்து கொண்டே மீண்டும் ஆதியை தேடி அந்த கோவிலை சுற்றி வர ஆரம்பித்தாள்.

அரவிந்த் சொல்வதை கேட்ட ஆதி “பார்த்து சாரி சொல்லிட்டா மறந்துடுவாளா இது என்ன புது நோயா இருக்கு, நான் மட்டும் அவளையே நினைச்சுட்டு இருக்க மாறி வசியம் பண்ணிட்டு இவ மட்டும் என்னை மறப்பாளா, எப்படி மறக்கறானு நானும் பார்க்கறேன் கண்ணுல சிக்குனாதானே” என்று நினைத்தவன் அபி அந்த பக்கம் சென்ற உடன் வராத போனை எடுத்து காதில் வைத்து “என்ன அப்படியா ஓகே அங்கேயே வெயிட் பண்ண சொல்லுங்க இன்னும் ஆப் அண்ட் ஹவர்ல நான் அங்க இருப்பேன்” என்று சொல்லி வைத்தவன் தந்தையிடம் திரும்பி “அப்பா நான் உடனே நம்ம ஆபிஸ்க்கு போகணும்”என்றவன் அபியின் தாய், தந்தையிடம் சொல்லிவிட்டு அவள் வருவதற்கு முன் செல்ல வேண்டும் என்று வேகமாக சென்று காரில் அமர்ந்து கொண்டான்.

அபி ஆதியை தேடி கண்களை சுழல விட்ட சமயம் மது அவளுக்கு போன் செய்திருந்தாள்.அவளின் எண்ணை கண்ட அபி போனை ஆன் செய்து காதில் வைத்தவள் “சொல்லுடி என்ன ஆச்சு” என்று கேட்க, அந்த பக்கம் மதுவோ பதட்டமான குரலில் “ஹேய் இப்போ தெளிவா பேச எனக்கு டைம் இல்லை.நம்ம பிரண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு சீக்கிரம் எங்க வீட்டுக்கு கிளம்பி வா.நான் வைக்கறேன்”என்று சொன்ன அடுத்த நிமிடம் போனை கட் செய்து இருந்தாள்.

மது போனை கட் செய்யவும் என்னவோ ஏதோ என்று பயந்த அபி தன் தந்தையிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியே செல்ல முனைய அவள் தாயோ “பொறுமையே இருக்காதாடி உனக்கு கோவிலுக்கு வந்து நெத்தில குங்குமம் கூட வைக்கலை என்று சொல்ல அப்போது அருகில் இருந்த தூணில் யாரோ கொட்டி வைத்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டு “போதுமா ம்மா வச்சுட்டேன் கிளம்பறேன்” என்று சொல்லி ஓடிவிட்டாள்.

அபி வைத்த குங்குமம் சற்று நேரத்திற்கு முன்பு ஆதி கொட்டிய குங்குமம் என்று அறியாமல் போனாள்.இருவருக்குமான முடிச்சை அந்த கடவுளே போட்டுவிட்டார் இனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்.

மது எதனால் தோழிகளை வர சொல்லி இருப்பாள் அதை அடுத்த எபில பார்க்கலாம்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஜ்வந்தி டியர்

ஹா ஹா ஹா
ஏன்மா மதுதுதுஉஉஉஉ
அது என்ன வயிறா? இல்லை வண்ணாந் தாழியா?
உனக்கு ஒருத்திக்கு சாப்பிட இவ்வளவு அயிட்டம்ஸா?
அது சரி ஓட்டல் மொய்லாளியே வந்து சப்ளை பண்ணுறப்போ நீ தின்னும்மா தின்னு

அடேய் ஆதி
என்னடா இப்படி பண்ணுறே
அபி மன்னிப்பு கேட்க வரும் பொழுது ஓடிட்டியே
 
Last edited:

சுதிஷா

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஜ்வந்தி டியர்

ஹா ஹா ஹா
ஏன்மா மதுதுதுஉஉஉஉ
அது என்ன வயிறா? இல்லை வண்ணாந் தாழியா?
உனக்கு ஒருத்திக்கு சாப்பிட இவ்வளவு அயிட்டம்ஸா?
அது சரி ஓட்டல் மொய்லாளியே வந்து சப்ளை பண்ணுறப்போ நீ தின்னும்மா தின்னு

அடேய் ஆதி
என்னடா இப்படி பண்ணுறே
அபி மன்னிப்பு கேட்க வரும் பொழுது ஓடிட்டியே
என்ன பானுமா நீங்க வளர்ர புள்ள சாப்பிடறதை பாத்து கண்ணு வைக்கலாமா. மதுவோட அடுத்த டார்கெட் உங்க பிளேட்தான் பாத்துக்கோங்க பிளேட் பத்திரம்.

ஆதி அபி மறந்துடுவாளோனு ஓடிட்டான். அவன் கவலை அவனுக்கு :love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன பானுமா நீங்க வளர்ர புள்ள சாப்பிடறதை பாத்து கண்ணு வைக்கலாமா. மதுவோட அடுத்த டார்கெட் உங்க பிளேட்தான் பாத்துக்கோங்க பிளேட் பத்திரம்.

ஆதி அபி மறந்துடுவாளோனு ஓடிட்டான். அவன் கவலை அவனுக்கு :love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL:
ஹா ஹா ஹா
என் பிளேட் பக்கம்லாம் அவள் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்
"கொஞ்சம் ரசம் சாதம் கொஞ்சம் மோர் சாதம் ஏதாவது ஒரு பொரியல்" இந்த சாப்பாடு எல்லா ஜீவராசிகளையும் ஒரு கை பார்க்கும் மதுவுக்கு கண்ணுல படுமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top