E14 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
இருதாரம் கொண்ட கண்ணனல்ல
இருதரமும் ஒருவளையே
தாரமாக கொண்ட கண்ணன்..

அவசர திருமணம்...
அலங்கோலமாய் ஆனது...
அவசிய திருமணம்
அதிர்ச்சியில் முடிந்தது..

வாழ்க்கை பயணத்தை
நன்றே தொடங்கிய
இருசக்கர பயணம்..


பேச தயங்கியவள்..
நேசம் கொள்ள துவங்கினாள்...
பாசமும் தெரிந்தது
அவளிட்ட உணவில்..
பசி ருசி அறிந்ததோ இல்லையோ...
அவளது மலரும் நேசம் அறிந்தது..

தயக்கத்தை கடந்தது மயக்கம்
அது ஏக்கமாய் மாறும் முன்..
காதலையும் காத்திருப்பையும்
வெளிபடுத்துமா..
அருமை சகோதரி, பதிவு படித்தவுடன் அடுத்து உங்கள் கவிதை எப்படி இருக்கும் என எதிர்பார்க்க மனசு தொடங்குகிறது
 

murugesanlaxmi

Well-Known Member
Hi mam

சுந்தரியின் மனமாற்றம் கண்ணன் உணரந்துதான் இருக்கின்றார்,எப்போதும் அன்பு கொடுக்கும்போது பன்மடங்காகத்தான் திரும்பி வரும் ,கொடுத்ததின் பலன் இப்போது சுந்தரியிடமும் தெரிகின்றது.


நன்றி
Aravin22
உண்மை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது...
ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...
பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.."
கலெக்டர் தலை குனிந்தார்... படிக்காத மேதை
 

murugesanlaxmi

Well-Known Member
முகநூலில் படித்து, குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!
  1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
  3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
  4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும்.
    மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
    குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
    துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
  5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
    அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
  6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும் போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
  7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
    இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
  1. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
    சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச்
    செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
  2. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
    கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
    எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும்.
    நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.
    ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
  3. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின்
    மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும்
    குடும்பங்களும் அடங்கும்.
  4. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
  5. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக்
    கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள்.
    கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
* மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;
அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி! "
 

fathima.ar

Well-Known Member
நீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாண்டி... ஈ...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
(நீ என்பதே)...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்

ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதல் செய்யும்

இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பொய் பூட்டு போனது

வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்

ஓ... இன்றேனும் நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்

இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே

இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே...
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
மனிதரை மதிக்கும் மனிதநேயமிக்க எடுத்துக்காட்டாக அமைந்த நிகழ்வு
ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள்
, பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்... இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி : முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும்
மகிழ்ச்சியோடு வாங்கிச்செல்கின்றனர்
இப்போது ராதா அவர்கள் விருதுவாங்க செல்லும்போது முதல்வர்
, அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார்.
திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!!
மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!!
குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப்பார்து இன்னும் அதிர்ச்சி ...!!!
திரு. ராதா ஏதோ சொல்லமுயலும் போது...அவரை தடுத்து எம்.ஜி.ஆர் கூறியதாவது :
"நான் ஆரம்பகாலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும். "தங்களன்றோ என்னை ஆசீர்வதுத்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்...
திரு.ராதா உள்பட
அனைவரின் கண்களும் குளமாயின... ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச்செய்து திரு ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது???
திரு MGR பற்றி முகநூலில் படித்து
 

rathippria

Well-Known Member
இருதாரம் கொண்ட கண்ணனல்ல
இருதரமும் ஒருவளையே
தாரமாக கொண்ட கண்ணன்..

அவசர திருமணம்...
அலங்கோலமாய் ஆனது...
அவசிய திருமணம்
அதிர்ச்சியில் முடிந்தது..

வாழ்க்கை பயணத்தை
நன்றே தொடங்கிய
இருசக்கர பயணம்..


பேச தயங்கியவள்..
நேசம் கொள்ள துவங்கினாள்...
பாசமும் தெரிந்தது
அவளிட்ட உணவில்..
பசி ருசி அறிந்ததோ இல்லையோ...
அவளது மலரும் நேசம் அறிந்தது..

தயக்கத்தை கடந்தது மயக்கம்
அது ஏக்கமாய் மாறும் முன்..
காதலையும் காத்திருப்பையும்
வெளிபடுத்துமா..
very nice super da;)
 

murugesanlaxmi

Well-Known Member
மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு உதாரணநிகழ்ச்சி:-
போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.
எனக்கும் பொழுது போகவில்லை
, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு"
அங்கே
ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதலை.எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.
என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார்
அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறிக் கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனதால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி.
மனதில்
யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?
கண்கள் பனித்தன. மனித நேயம் சாகவில்லயை முகநூலில் படித்து
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top